Monday, March 16, 2009

தவ்ஹீத்

  • தவ்ஹீத் எனும் சொல் அரபி மொழியின் வினைச் சொல்லான வஹதாவில் இருந்து எடுக்கப்பட்டதாகும். வஹதா என்ற சொல்லுக்கு ஒருமைப்படுத்துதல் அல்லது ஒன்றாக்குதல் என்பது அர்த்தமாகும்.
  • அல்லாஹ்வை தனித்தவனாக, இணை துணையின்றி அவனுக்கே வணக்கம் செலுத்துவது கொண்டு ஒருமைப்படுத்துதல்
  • அனைத்து நபிமார்களின் கொள்கை
  • ஏகத்துவம் இல்லாமல் எச்செயலும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது
  • அனைத்து நபிமார்களின் கொள்கை
  • ஏகத்துவம் இல்லாமல் எச்செயலும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது
  • உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் சொன்ன அடிப்படை செய்தி ”அல்லாஹ்வையே வணங்குங்கள், ஷைத்தானை விட்டு விலகி இருங்கள்” (திருக்குர் ஆன் 16 :36)

தவ்ஹீதின் வகைகள் குர்ஆனிலோ, சுன்னாவிலோ தவ்ஹீத் வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் தவ்ஹீதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் பொருட்டு மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர்.

அவை

1. தவ்ஹீத் அர் ருபூபியாஹ் – அல்லாஹ்வின் ஆளுமையை (படைப்பாற்றலை) நம்புதல்

2. தவ்ஹீத் அல் அஸ்மாஃவசிஃபத் – அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது குணாதிசயங்களிலும் அவனுக்கு ஈடு இணை இல்லை என்று நம்புதல்

3. தவ்ஹீத் அல் இபாதா – வணக்க வழிபாடுகள் முழுமையாக அல்லாஹ் ஒருவனுக்கே செலுத்துதல்

No comments: