Saturday, May 12, 2018

ஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள்
மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய நிகழ்வு என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. ஆனால் இச்சம்பவத்தை எங்கோ காஷ்மீரிலே ஒரு எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என்று ஒரு தனிப்பட்ட சம்பவமாக கருதி எதிர்ப்பு பேரணிகள் நடத்துவதோடு , மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்துவதோடு , முகநூலில் ஆவேசமாக பதிவிடுவதோடு கடந்து செல்லல் இதற்கான தீர்வல்ல. ஆசிஃபாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பது இந்தியாவில் பாசிசவாதிகளால் தினந்தோறும் நடத்தப்படும் அநீதிகளின் ஒரு மாதிரியே என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.மேலும் இச்சம்பவத்தின் மூலம்உடைபடும்புனிதங்கள் குறித்த தெளிவை பெறுவதும் நிகழ்வுகளின் அரசியலை புரிந்து கொள்ள உதவும்.

          ஜனவரி 10ம் தேதி காணாமல் போன ஆஃசிபா எட்டு நாட்கள் கயவர்களின் வெறித்தனத்தால் நார் நாராக கிழிக்கப்பட்டு பின் கிடைக்கப் பெற்றாள். ஆனால் மூன்று மாதங்களாக இச்சம்பவம் எந்த தேசிய ஊடகத்திலும் துணுக்கு செய்தியாக கூட வரவில்லை. ரஜினி இமயமலை போவதை எல்லாம் தலைப்பு செய்தியாக போடும் தமிழ் ஊடகங்களுக்கு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. அவ்வழக்கை விசாரித்த அரிதிலும் அரிதான சில நேர்மையான காவல் துறை அதிகாரிகள் உள்ளூர் நிர்வாகத்திலிருந்து பாஜக அமைச்சர்கள் வரை கொடுத்த அத்துனை அழுத்தங்களையும்  மீறி வழக்கு பதிவு செய்ததால் ஆஃசிபாவின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதிலும் ஒரு வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகள் மீது FIR பதிவதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொண்டது தான் ஆஃசிபா ஊடக வெளிச்சம் பெறுவதற்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. இல்லையென்றால் காஷ்மீரில் தினந்தோறும் காணாமல் போகும் நூற்றுக்கணக்கான நபர்களில் ஒருவராக ஆஃசிபாவின் வழக்கும் காணாமல் போயிருக்கும்.          காணாமல் போன மகளை கிராமமெங்கும் எட்டு நாட்களாக தேடிய ஆஃசிபாவின் தந்தை புனிதமான இடம் என்பதால் கோயிலில் மட்டும் தேடவில்லை என்று சொன்னது கோயில் என்பது புனிதமான இடம் , அங்கு எந்த ஒழுக்க மீறலும் நடைபெறாது என்ற பொதுபுத்தியின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகும். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பார்ப்பனர்கள் இந்தியாவில் நீண்ட கலாசார பெருமையுடன் வளமாய் வாழ்ந்து கொண்டிருந்த திராவிடர்களை அடிமைப்படுத்த கண்டு பிடித்தவை தான் கோவில்களும் வேதங்களும்.  கோவில்களின் கருவறைக்குள் சிலைகளை நிருவி புனிதத்தை ஏற்படுத்திய பிராமணர்கள் தாங்கள் மட்டுமே கருவறை செல்ல முடியும் என்று தங்களது ஆளுமையை நிலைப்படுத்தினார்கள். இவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்குண்ட அப்பாவி மக்களும் தங்கள் பொருளாதாரம் மற்றும் உழைப்பினால் உருவாக்கப்பட்ட கோவில்களில் தாங்களே உள்ளே நுழையவிடாமல் அவமதிப்பதை அறியாமல் கோவில்களை புனிதமாக கருதும் அவலம் தொடர்கிறது. மேலும் தெய்வம் நின்று கொல்வான் , அரசன் அன்று கொல்வான்என்று பழமொழிகளை உருவாக்கி ஆண்மிகத்திற்கும் அதிகாரத்திற்கும் கள்ள உறவை ஏற்படுத்தியதில் கோவில்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

       எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த காரணத்தால் , நேரடியாக ஆட்சி புரியாமல் சூத்திர மன்னர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களாக பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். தங்கள் ஆதிக்கம் வலுப்பெற மக்களிடமிருந்து வரியாக சுரண்டிய செல்வத்தினால் மிகப் பெரும் கோவில்களை கட்ட வைத்தனர். கோவில்களில் குறிப்பாக கருவறைகளில் பிராமணர்களை தவிர பிறர் உள் நுழையாதவாறு கட்டுப்பாடுகளை விதித்தனர். ஏனெனில் வரலாற்று குறிப்புகளின் படி கருவறை என்பது மன்னர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டக அறையாக இருந்தது. இச்சூழலை கருத்தில் கொண்டே காசி விஸ்வநாதர் ஆலயத்தை மாமன்னர் ஒளரங்கசீப் இடித்ததையும்  ஏன் சோமநாதர் ஆலயத்தை மஹ்மூது பின் கஜ்னவி இடித்ததையும் பார்க்க வேண்டியுள்ளது.

       பாபரி மஸ்ஜித் குறித்து பேசும் போதெல்லாம் ஹிந்துத்துவாக்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் மதுராவில்உள்ள கிருஷ்ணஜென்ம பூமியும் முஸ்லிம்களால் இடிக்கப்பட்டது என்றும் அவற்றை மீட்பதை தமது இலக்காக கூறுவர். காசி விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்பட்டது ஒளரங்கசீப்பால் என்பது உண்மையே . ஏன் இடித்தார் என்பதை ஆய்வு செய்தால் வெளிவரும் உண்மை இவர்களின் பக்தியை தோலுரித்து காட்டுகிறது. காந்தி தர்ஷன் சமிதி தலைவரும் , ஒரிசா முன்னாள் ஆளுநராகவும் பதவி வகித்த வரலாற்றாசிரியர் பி.என்.பாண்டே பின்வருமாறு தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.

        முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் ன் ஆளுகையின் கீழிருந்த ஹிந்து மன்னர்களோடு வங்காளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வாரணாசியை நெருங்கிய போது அங்கு அன்றிரவு தங்கினால் தங்கள் மனைவிமார்களான ராணிகள் கங்கையில் குளித்து காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்வர் என் ஹிந்து ராஜாக்களின் வேண்டுகோளை ஏற்று ஒளரங்கசீப் வாரணாசியில் தங்கினார். வாரணாசிக்கு வெளியே படைகள் தங்கி கொள்ள எல்லா ராணிகளும் கங்கையில் குளித்து பின் விஸ்வநாதர் ஆலயத்திற்குள் வழிபட்டு அனைவரும் திரும்பி வர , கட்ச் ராணியை மட்டும் காணாமல் வாரணாசி பரபரப்பானது.

           கோவில் உள்ளும் கோவிலை சுற்றியும் தேடியும் கட்ச் ராணியை காணாமல் கடும் கோபமடைந்த ஒளரங்கசீப் தீவிர பரிசோதனைக்கு உத்தரவிட்டார். கோவிலின் உள்ளே தேடிய போது சுவற்றில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்ட சாமி சிலை அசைய கூடியதாக இருந்ததை கண்ணுற்று அதிர்ச்சியுற்றனர். சிலையை நகர்த்தினால் அதனுள்ளே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் வழியாக கீழ் தாழ்வாரத்திற்குள் இருந்த பாதாள அறையை சென்றடைந்தது. சரியாக ஜெகன்னாதர் சாமி சிலை கீழே கட்ச் ராணி ஆபரணங்களின்றி , ஆடைகள் அலங்கோலமாக வன்புணர்வு செய்யப்பட்டு அழுது அரற்றி கொண்டிருந்தார். மிகப் பெரும் குற்றச்சம்பவம் நடைபெற்றதால் அத்தீட்டு அகற்றப்பட முடியாது என்பதால் அக்கோவிலை இடித்து வேறொரு இடத்தில் கட்டி தரவும் வன்புணர்வு செய்த தலைமை பூசாரியை தண்டிக்குமாரும் ஹிந்து ராஜாக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றே அக்கோவில் இடிக்கப்பட்டது.

     
எனவே காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஃசிபாவை வன்புணர்வு செய்த தலைமை பூசாரி சஞ்சி ராமுக்கும் , காஞ்சிபுரம் கோவிலின் கருவறைக்குள்ளே காம களியாட்டம் செய்த பூசாரி தேவநானுக்கும் முன்மாதிரிகள் வரலாற்று காலம் தொட்டு உள்ளது. கோவிலின் மீது சாதாரண மக்களுக்கிருந்த பக்தியை மூலதனமாக கொண்டே கொடியவர்களின் கூடாரமாக கோவிலை பயன்படுத்தியுள்ளனர். சுரண்டப்படும் ஏழைகளை கடவுளின் பெயரால் மேலும் சுரண்ட அந்தரத்தில் தனியே நின்ற சாமி சிலையை பயன்படுத்தியதால் சோமநாதர் கோவிலையே இடித்து மக்களை பொய் கடவுளர்களிடமிருந்தும் , மூட நம்பிக்கைகளிலிருந்தும் மஹ்மூது பின் கஜ்னவி காப்பாற்றியதில் நமக்கு படிப்பினை உள்ளது. இதற்கான தீர்வை  நேரடி ஆதாரம் இல்லை என்றாலும் முஸ்லிம் என்றால் தூக்கும் , தானே குற்றத்தை ஒத்து கொண்டாலும் அசீமானந்தாவையும் ,  மாயா  கோட்னியையும் விடுதலை செய்யும் உச்சி குடுமி மன்றங்களிடம் எதிர்ப்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

                 ஆஃசிபாவை இழந்தது தான் இறுதியாக இருக்க வேண்டுமெனில் பார்ப்பனியத்தின் அடிமடியில் கை வைப்பதாக நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஆம் இனி நம் குறிக்கோள் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேரான சிலை வணக்கத்திற்கு எதிராக , பொய் கடவுளர்களிடமிருந்தும் மக்களை காப்பதாக நம் போராட்டம் அமைவதே நாம் ஆஃசிபாவின் மரணத்திற்கு செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். இனி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆசிபாக்களும் நிர்பயாக்களும் பாதிக்கப்படா சமூகத்தை உருவாக்க முஸ்லீம்களால் மாத்திரமே இறையாட்சியால் மாத்திரமே முடியும். அதை நோக்கி நம் எல்லா முயற்சிகளும் தொடருமானால் இறுதி வெற்றி நமக்கே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(நன்றி -   பொறியாளர் ஃபெரோஸ்கான், தோழன் மாத இதழ் ஏப்ரல் 2018)