Tuesday, April 12, 2011

இணையத்தில் இஸ்லாத்தை கற்க ஓர் அரிய வாய்ப்பு


Assalamu alaikum
The WP Virtual Islamic School (http://www.witness-pioneer.org/VSchool/index.htm(WPVS) is a project of Witness-Pioneer, an Internet-based Islamic Organization that is dedicated for the study of Islam through authentic sources.

We urge you to inform this news to many others.
Respected Moderators of any e-mail group are humbly requested to publish this e-mail.

WPVS is offering a course to start (April 29, 2011 ~ August 26, 2011) Inshallah. Details are as follows:

Name of the Course:  Visit http://witness-pioneer.org/VSchool/hp101.htm
HP101: International and Interfaith Relations: Islamic Perspectives: In this course, we will cover Classical theory of International relations (darul harb, darul Islam, darul sulh, other aspects), Basis of modern international relations in Islamic perspective (justice, peaceful relations and keeping agreements), Classification of states/territories in present circumstances, Jihad and its implication, Terrorism (definition, difference with Jihad, provisions of Islam about killing of civilians and innocents, its impact on Muslims and international relations), Misinterpretation of Quranic verses regarding war and jihad, Muslim and Non-Muslim relations, Freedom of religion and issue of apostasy, International relations in early Islam - battles during the time of the Prophet, Battles during the Khulafa-e-Rashidun, Political rationale of Prophet's external relations, Action against Banu Qurayza, Time-space factor in the Quran and Sunnah, Reform of usul methodology, etc.

Last Date for Registration:    April 25, 2011.
Registration for the courses can be done directly from the course web page at http://www.witness-pioneer.org/VSchool/registration.htm  

Other Information:
·         No tuition fee for the course.
·         The instructor will notify the lecture plan at the beginning of the course. One lecture per week.  
·         Almost all the materials, including the textbooks, will be available in the online library if those are not protected by the copyright. And lecture materials will be provided.
·         A certificate will be awarded to those who will successfully complete the course.
Ma'assalam

Director,
WP Virtual Islamic School.

Sunday, April 10, 2011

ஜனநாயகம் ஓர் அன்னிய மதமா ?


இன்றைய இஸ்லாமிய வாதிகளிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் உள்ளது மாத்திரமல்லாமல் ஆராதிக்கப்படும் நிலைக்கும் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல. ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர். வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.

இக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஜனநாயகம் என்பது இஸ்லாத்துக்கு முரணான ஒன்று தான், ஆனால் இஸ்லாத்துக்கு முரணான கொள்கை அல்லது மதம் என்று கருத கூடிய அளவு அபாயகரமானது அல்ல, எனவே கால சூழலுக்கேற்ப ஜனநாயகத்தின் அடிப்படையில் வாழ்வது, அதற்காக பாடுபடுவது தவறல்ல என்று வாதிடுவோரின் வாதங்கள் சரி தானா ? ஜனநாயகம் என்பது அந்நிய மதமா என்பது குறித்து குரான் மற்றும் சுன்னாவின் ஒளியில் பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.

குரானினோ, ஹதீஸ் கிரந்தங்களிலோ, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் புத்தகங்களிலோ நாம் ஜனநாயகம் என்ற வார்த்தையை பார்க்க முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஜனநாயகம் என்ற சொல்லாடலோ அல்லது சித்தாந்தமோ இல்லை.

ஜனநாயகத்தின் தன்மையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளங்கி கொள்ள முஸ்லீமின் அடிப்படை கடமையான ஈமானை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவர் ஈமான் எனும் உறுதி மொழியை முழுமையாய் தன் வாழ்வில் கடைபிடிக்கும் போதே அவர் முஸ்லீமாய் கணிக்கப்படுவார். ஈமான் எனும் அம்சமே முஸ்லீமை நிராகரிப்பாளரிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூடிய ஒன்றாய் விளங்குகிறது. ஈமான் இல்லாமல் ஒருவர் எத்துணை நல்ல செயல்கள் செய்தாலும் அவற்றிக்கு மறுமையில் எப்பயனும் இல்லை என்பது நாம் அனைவரும் தெரிந்ததே.
ஒரு முஸ்லீமின் ஈமான் குறித்து விளங்கி கொள்ள கீழ்காணும் குரான் வசனங்களை பார்க்கலாம்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருக்குரான் 51:56)

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூத்துகளை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (திருக்குரான் 16:36)

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் (திருக்குரான் 2 : 256)

எவர்கள் தாகூத்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (திருக்குரான் 39 : 17)

மேற்காணும் திருமறையின் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு முஸ்லீம் ஈமான் கொண்ட பின்னர், அல்லாஹ்வை தவிர மற்றவைக்கு தலை வணங்கவோ, கட்டுபடவோ, அவற்றின் கட்டளைகளுக்கு கீழ்படியவோ கூடாது என்பதை வலியுறுத்துவதை காணலாம். எனவே ஒருவரின் ஈமான் முழுமை அடைய வேண்டுமானால் இஸ்லாம் தவிர அனைத்து கொள்கைகளின் தாக்கங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.
யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறாரோ, அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குகிறாரோ அவரை தாகூத் என அல்லாஹ் வர்ணிக்கிறான். யாரெல்லாம் தங்களை முஷ் அரியாக (சட்டமியற்றுபவர்) கருதுகிறார்களோ, அவர்களும் தாகூத்தின் எல்லைக்குள் வருவார்கள். 

சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்க, அதற்கு மாற்றமான சட்டங்களை வகுப்பவர் ஆட்சியாளராக இருந்தாலும், இயக்க தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ, எம்,பி என மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி அவர்களும் இஸ்லாத்தின் பார்வையில் தாகூத்தாக கருதப்படுவார். ஏனெனில் அவர்களை அல்லாஹ் தன் அடிமைகளாக படைத்து தன்னுடைய சட்டத்துக்கு கீழ்படிய சொல்லி இருக்கும் போது, அதற்கு மாற்றமாக இறைவனின் வரம்புகளை மீறி அல்லாஹ்வை போல் தன்னையும் சட்டம் இயற்றும் தன்மை கொண்டவனாக நினைக்கிறான்.

இறைவன் இயற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கொண்டுள்ள அடிமையான மனிதன் “இலாஹ் முஷ் அரி” எனும் இறைவனின் தன்மைக்கு சவால் விடுகிறான்.  இம்மாதிரி இறைவனின் அதிகாரத்துக்கு நேரடியாக சவால் விடும் இத்தகையவர்கள் நிச்சயமாக தாகூத் என்பது மாத்திரமல்லாமல் தாகூத்தின் முண்ணணி தளபதிகளாகவே கருத வேண்டியதிருக்கிறது. தாகூத்திடம் தீர்வு தேட வேண்டாம் என்று மார்க்கம் தடுத்திருக்கும் போது தாகூத்தின் தளபதிகளாகவே மாறி போனவர்களின் ஈமான் குறித்து என்ன சொல்வது? இவர்களை குறித்து தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்

(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (திருக்குரான் 4 : 60)

இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹீ இது குறித்து கூறும் போது “ தாகூத் என்பது மனித வடிவில் உள்ள ஷைத்தானாகும். அவனுடைய சட்டத்தை ஏற்று கொண்டு மனிதர்கள் தங்கள் பிரச்னையை முறையிடுகின்றனர். அதன் மூலம் ஷைத்தான் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்கிறார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) இது குறித்து கூறும் போது அல்லாஹ்வின் புத்தகம் அல்லாமல் வேறு ஒன்றின் அடிப்படையில் யார் ஆள்கிறாரோ, அவர் தாகூத் ஆவார் என்கிறார்கள்.

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்களோ “ அல்லாஹ் தன் அடிமைகளுக்கு ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறுபவர்கள் எல்லோரும் தாகூத்களே.  அது வணக்கமாக அல்லது பின்பற்றுதலாக அல்லது கீழ்படிதலாக எதுவாக இருப்பினும் வரம்புகளை மீறுபவர்கள் அனைவரும் தாகூத்களே. ஒவ்வொரு சமூகத்தின் தாகூத்கள் யாரெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வகுத்த சட்டத்திற்கு மாற்றமானதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரின் சட்டத்திற்கு முரணானவற்றின் அடிப்படையில் தீர்ப்பு கூறுபவர்களுக்கு அடிபணிபவர்களுமே ஆவார்கள்” என்கிறார்.

மேலும் “ இறைவனின் வேதம், நபிகளாரின் வழிமுறை அல்லாமல் அதற்கு முரண்படும் வேறொன்றிடத்தில் தன் பிரச்னைக்கான தீர்வை தேடினால் அது நிச்சயம் தாகூத்திடம் தீர்வு தேடியதை போன்றதேயாகும் என்றும் இப்னுல் கையூம் (ரஹ்) கூறுகிறார். ஜனநாயகம் இஸ்லாமிய பார்வையில் ஹராம் என்பதை இந்திய அரசியல் ஹராமா ?, ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு உள்ளிட்ட பல கட்டுரைகள் இதர கொள்கைகள் மற்றும் தீனை நிலைநாட்டல் லேபிள்களின் கீழ் தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து சகோதரர்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றாக குரானில் வரும் வசனத்தை நினைவுபடுத்தி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.” (திருக்குரான் 60 : 4)

Monday, April 4, 2011

தமிழக முஸ்லீம் அரசியல் சூழலும் ஆபத்தான இஸ்லாமியவாதிகளின் போக்கும்


              பொதுவாக முஸ்லீம் சமூகத்தில் பல்வேறு வகையான குழுக்கள் இருந்தாலும் நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்ததை போல் 73 க்கும் மேற்பட்ட குழுக்கள் இருந்தாலும் பொதுவாக அவற்றை மூன்று பிரிவாக பிரிக்கலாம். ஒன்று எக்குழுவிலும் இருக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் இருக்கின்ற குழுவுக்கும் இஸ்லாத்திற்கும் பெயரளவிற்கும் சம்பந்தமிருக்காது. ஒரு சாதாரண முஸ்லீமிடத்தில் காணப்படும் தொழுகை, நோன்பு போன்றவற்றில் கூட பலவீனமாக இருப்பார்கள். அவர்களின் குழுக்களோ வெறும் உலக விஷயங்களில் ஈடுபட கூடியவர்களாக, தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.

               இன்னொரு வகையினர் எப்படிப்பட்டவர்கள் என்றால் இஸ்லாத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் போன்று தோற்றமளிப்பார்கள். தாடியின் அளவு குறைந்தது இவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் அதீத முனைப்பு காட்டுவார்கள், நபி ஸல் அவர்கள் இவ்வாறு தான் தொழுதார்கள் என்று கூறுவதோடு நில்லாமல் தங்களுக்கு மாற்றமாக கையை அசைத்தால் அல்லது அசைக்காமல் இருந்தால் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் அளவு வணக்க வழிபாடுகளில் தீவிரமானவர்கள். இவர்களில் வேறு சிலர் இம்மாதிரி தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் அல்ல என்றாலும் தொழுகையோடு திருப்தி பட்டு கொள்பவர்களாக இருப்பவர்கள்.

                 ஆனால் இஸ்லாத்தை முழுமையாய் இம்மண்ணில் நிலைநாட்டுவதில் ஆர்வமிருக்காது மாத்திரமல்ல, இஸ்லாமிய அரசியல் என்றால் தொற்று நோயை பார்த்து விரண்டோடுபவனை போல் ஓட கூடியவர்களாய், இஸ்லாமிய ஆட்சியாய் என்றாலே அலர்ஜியாய் பக்கம் பக்கமாய் விமர்சனம் செய்ய கூடியவர்களாய் உள்ளனர். தொழுகையில் ஜமாத்தின் ஒற்றுமைக்காக சிறிய விஷயங்களை விட்டு கொடுக்காதவர்கள், மாலை போட்டு திருமணம் செய்தாலே இஸ்லாமிய திருமணம் அல்ல என்றும் பத்திரிகை அடித்தாலே பித் அத் என்று கூக்குரலிடுபவர்கள் வரதட்சணைக்கு எதிராக முழக்கமிடுபவர்கள், இஸ்லாமிய ஆட்சி என்றால் மாத்திரம் “அல்லாஹ் யாதோர் ஆத்மாவையும் சக்திக்கு மேல் சோதிப்பதில்லை” (திருக்குரான்  2:286 ) எனும் திருமறை வசனத்தை சொல்லி அவ்வுணர்வை மங்க செய்வதை பார்க்கின்றோம்.

                மூன்றாவது குழு யாரெனில் திருமறை குரானில் சொல்கின்ற மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர் (திருக்குரான் 3:104). படி இருக்கும் இஸ்லாமியவாதிகளே முஸ்லீம் உம்மத்தில் இருக்கும் உன்னதமான குழு. இவர்கள் இஸ்லாத்தை கூறு போட்டு பிரிக்காமல், நுனிப்புல் மேயாமல் இஸ்லாத்தை ஆழமாய் விவாதிப்பதோடு நின்று விடாமல் இஸ்லாத்தை தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிப்பதோடு அதை பிற மக்களுக்கும் சொல்ல கூடியவர்களாய் இருப்பார்கள். மேலும் இஸ்லாத்தை மண்ணில் நிலைநாட்ட போராட கூடியவர்களாய் அல்லாஹ் திருமறை குரானில் சொல்கின்ற படி அழகான வியாபாரம் செய்ய கூடியவர்களாய் இருக்கின்றனர்.

                    ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?  (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (திருக்குரான் 61 : 10,11) என்று சொல்கின்ற படி தீனை மேலோங்க செய்ய, மார்க்கத்தை நிலைநாட்ட போராடுகின்றவர்களாய் இருக்கின்றன. இஸ்லாம் வலியுறுத்தும் இம்மூன்றாம் குழுவில் தற்போது நான்காம் படையாக உருவாகியுள்ளது so called இஸ்லாமியவாதிகள் எனப்படுவோர் ஆவார்கள். ஆம் இஸ்லாமியவாதிகளிலேயே ஒரு புதிய குழுவாய் இந்நவீன இஸ்லாமியவாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தாய் உள்ளனர் என்றால் அது மிகையானதல்ல. 

              இதை விரிவாய் விளங்க தமிழக அரசியலையே எடுத்து பாருங்கள். முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியிடுவதை யாரும் ஆபத்தாய் பார்ப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் இயல்பிலியே தங்களை ஓர் அரசியல் கட்சியாக அடையாளம் காட்டி கொண்டவர்கள். வன்னியர்களுக்கு ஓர் வன்னியர் சங்கம், பா.ம.க போல் அல்லது தலித்களுக்கு ஓர் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் போல் கவுண்டர்களுக்கு ஓர் கொ.மு.க போல் முஸ்லீம்களுக்கான ஓர் கட்சி எனும் அடிப்படையில் அவர்களின் நிலைப்பாடில் குறை காண வாய்ப்பில்லை. ஆனால் குரான், ஹதீஸ் படி தான் நடப்போம் என்று சமூக மறுமலர்ச்சிக்காக ஏகத்துவத்தின் அடிப்படையில் (இது முழுமையான ஏகத்துவம் அல்ல, so called ஏகத்துவம் என்பது வேறு விஷயம்) சமூகத்துக்காக ஆரம்பிக்கட்ட இயக்கங்கள் ஜனநாயக அரசியலில் குதிக்க ஆரம்பித்த போது முஸ்லீம் லீக்கை போல் நேரடியாக குதிக்காமல் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் மக்களுக்கு போராட மட்டுமே அரசியலில் குதிப்பதாகவும் கூறினார்கள்.

          பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட கழகங்களும், ஜமாத்துகளும், ஜனநாயகம் ஹராம், ஜிஹாத் ஒன்றே தீர்வு என இளைஞர்களுக்கு வெளிச்சத்தை காட்டியவர்களும் வெவ்வேறு பெயர்களில் உருமாறி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தின் காவலர்களாய் பரிணாமம் எடுத்தும் அரசியலில் ஈடுபடுவதை பார்க்கின்றோம். ஏன் இவர்களின் அரசியல் ஆபத்தானது என்றால் இவர்களின் அரசியல் முஸ்லீம் லீக்கை போல் அல்லாமல் இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட அரசியலாக சிலரால் இஸ்லாமிய அரசியலாகவே பார்க்கப்படும் ஆபத்து உள்ளதை பார்க்கின்றோம்.

           ஜனநாயக அரசியலில் நுழைந்த பிறகு எந்தளவு மாறி போய் விட்டனர் என்றால் ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்றவர்கள் ஜனநாயகத்தின் காவலர்களாய், நரபலி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மோடியின் தோழிக்கு வக்காலத்து வாங்குபவர்களாய் மாறிய கொடுமையை பார்க்கின்றோம். அது போல் அரசியல் சாக்கடை என்பதால் நாங்கள் போட்டியிட மாட்டோம் ஆனால் முஸ்லீம் வேட்பாளர்களுக்கு எதிராக உடன்பிறப்புகளுக்கு வேட்டையாடும் ஜமாத்துகளும் ஒரு காலத்தில் ஓட்டு போடுவதை ஹராம் என்று சொன்னவர்கள் தாம் என்பதை மறந்து விட கூடாது.

            இவற்றிக்கெல்லாம் மாற்றாய் கிலாபத் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமாக்கியவர்கள், பிக்ஹு பிரச்னைகளுக்குள் மாட்டி கொள்ளாமல் உலகளாவிய அளவில் இஸ்லாத்துக்காக போராடிய இயக்கங்களையும் வீரர்களையும் அடையாளம் காட்டியவர்கள், இன்று அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பதற்கு பதிலாக அதிகாரம் மக்களுக்கே என முழங்க கூடிய நிலையை பார்க்கின்றோம். பயத்திலிருந்தும் பசியிலிருந்தும் விடுதலை என்று சொல்லி கொள்ளும் இவர்கள் தாங்கள் வெளியிடும் மைல்கற்கள் போன்ற புத்தகங்களை படிக்கின்றார்களா என்பதும் தெரியவில்லை. இதே நிலை சென்றால் இஸ்லாத்திலிருந்தும் விடுதலை என்று போய்விடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதிற்கில்லை (அல்லாஹ் பாதுகாப்பானாக).

                  இவர்களால் இஸ்லாத்துக்கு முரணான ஜாஹிலிய்யாவிலிருந்தும் முழுமையாய் விடுபடவில்லை. அதே சமயத்தில் தாங்கள் சுவாசித்த இஸ்லாமிய இயக்கங்களில் தாக்கத்தினால் இஸ்லாத்தையும் மறக்க முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம். இப்படிப்பட்ட நான்காம் படை இஸ்லாமியவாதிகளின் வளர்ச்சி என்பது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாகவே முடியும். இவர்கள் அந்தந்த சமயத்திற்கு தகுந்த மாதிரி பேச கூடியவர்களாக இருப்பது ஆபத்தானது. வெறும் அரசியல் மட்டும் பேசினால் பரவாயில்லை. அவ்வப்போது இஸ்லாத்தையும் பேசுவது தான் பிரச்னை. ஏனென்றால் இவர்கள் பேசுவது, செய்வது அனைத்தும் இஸ்லாமாக கணிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

          அதனால் தான் இவர்களால் சாதாரண சமயங்களில் அன்வர் அல் அவ்லாக்கியை சிலாகித்தும் தேர்தல் சமயங்களில் அதிமுகவை ஆதரித்தும் பேச கூடியவர்களாய் உள்ளனர். செசன்யாவின் போரட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் உள்ளூரில் திமுகவை ஆதரிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். இன்னும் சிலர் திமுக, அதிமுகவை ஆதரிப்பது தான் ஹராம், ஆனால் முஸ்லீம்களை ஆதரிப்பது ஹலால் எனும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர். இது இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை பற்றிய அறியாமையை காட்டுகிறது. அதனால் தான் பேரறிஞர்கள், நவீன இமாம்கள் என கருதப்படுவோர் கூட இஸ்லாத்தின் அரசியல் கொள்கை எவ்வடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதை குறித்து தான் கரிசனை காட்டுகிறதே தவிர யார் பொறுப்பில் இருக்கிறார், தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை உணர மறந்து விடுகின்றனர்.

           ஆனால் இந்நான்காம் படையினர் உலகில் வெற்றி பெற வேண்டுமென்றால் குறைந்தது அரசியலையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். அதற்கு இஸ்லாத்தை பேசாமல் அரசியலை மட்டும் செய்யலாம். இல்லை எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், மார்க்கத்தை நிலைநாட்டுவது தான் எங்கள் நோக்கம் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் இரண்டாங்கெட்டான் நிலையை தவிர்த்து விட்டு இஸ்லாத்தை இஸ்லாமின் மூலமே நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து உண்மையான இஸ்லாமியவாதிகளாய் மாறுவதன் மூலம் ஈருலகிலும் நன்மை பெற்று கொள்ள முடியும். அத்தகைய கொள்கை குன்றுகளாய் மாற அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக.