Monday, December 16, 2013

ஷஹீத் அப்துல் காதர் முல்லா - விதைக்கப்பட்ட இன்னோர் போராளி

12.12.13 அன்று வங்காளதேச ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவரான அப்துல் காதர் முல்லா வங்கதேச அரசால் அவசர அவசரமாய் தூக்கிலிடப்பட்டார். அவரது ஜனாஸாவின் போது கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் திரள் அந்த போராளி புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார் என்ற நம்பிக்கையை நமக்கு வழங்குகிறது.
1971ல் இந்தியாவின் துணையுடன் வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிய நினைத்த போது ஜமாத்தே இஸ்லாமி அதை கடுமையாய் எதிர்த்தது. பஞ்சாபியர்கள், பெங்காலிகள் என்ற அடிப்படையில் ஓர் இஸ்லாமிய தேசம் துண்டாடப்பட கூடாது என்று ஜமாத்தே இஸ்லாமி வாதாடியது. அப்போது நடந்த போர்குற்றங்களில் உடந்தையாக இருந்ததாக ஜமாத்தே இஸ்லாமி தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

அப்படி குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களில் ஒருவரான அப்துல் காதர் முல்லாவுக்கு பிப்ரவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போதும் பின் அது மரண தண்டனையாக மாற்றப்பட்டது அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையினாலும் இஸ்லாமிய இயக்க எதிர்ப்பு மனோபாவத்தாலுமே என்பது வெளிப்படையான ஒன்று. அப்துல் காதிர் முல்லா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணம் கூறப்படாமல் நிராகரிக்கப்பட்டதோடு வழக்கு அவசர கதியில் நடத்தப்பட்டு அயோக்கியத்தனமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்படுவதற்கு முன்னால் பேசிய கடைசி வார்த்தைகள்  ஷஹீத் என்பவன் யார் தெரியுமா?. இறைவனின் சட்டங்கள் தனது வாழ்வினை விடவும் பெறுமதியானது என்பதனை தனது மரணத்தின் மூலம் நிரூபணம் செய்பவன்எனும் சையது குதுப் (ரஹ்) அவர்களின் வார்த்தைகளை மெய்ப்பித்து காட்டுகின்றன.
ஆம். அல்லாஹ்வின் திருப்திக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட ஒரு தியாகியால் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். நீங்களே அவரின் இறுதி வார்த்தைகளை கேட்டு பாருங்களேன்.

நான் அநியாயமாக கொல்லப்பட்டால் இறைவனிடத்தில் அவனது மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணித்த தியாகியாக ஏற்றுக்கொள்ளப்படுவேன். இதில் கவலைகொள்ள எந்தவொரு காரணமும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை அநியாயமாக கொலை செய்யவுள்ளனர். எனது கொலைக்கு காரணம், நான் இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளில் முனைப்பாக இருந்ததும், எனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பியதுமாகும். இது தான் நான் செய்த குற்றம். இது குற்றம் என்றால் இந்த குற்றத்தை நான் எனது சுவாசம் இருக்கும் வரை திரும்ப திரும்ப செய்வேன். ”

எனது உடலில் இருந்து சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் இஸ்லாமிய இயக்கத்திற்கு உரம் ஊட்டுவதாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும். நான் எனது வாழ்நாள் முழுவதையும் பங்களாதேஷ் இஸ்லாமிய இயக்கத்தின் செயல் நடவடிக்கைகளிற்காகவே அர்ப்பணித்தேன். நான் தவறான ஆட்சியாளர்களின் இஸ்லாமியவிரோத அரசியல் முடிவுகளிற்கு ஆதரவாக பேசவில்லை. அதனை கடுமையாக எதிர்த்தேன். விமர்சித்தேன். 1971-ல் நான் எதை செய்தேனோ அதனைத்தான் 2013-இலும் செய்து கொண்டிருக்கின்றேன். இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஜனநாயகத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தான் ஆட்சியாளர்களிற்கு என் மேல் கோபம் ஏற்படவும், என் கருத்துக்களின் மேல் அச்சம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனது மரணம் எனது சிந்தனையின், எனது செயலின், எனது பிரச்சாரத்தின் சத்தியத்தன்மைக்கு சான்று பகர்வதாக அமைவதையிட்டு நான் திருப்தி அடைந்தவனாகவே உள்ளேனன். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

பார்த்தீர்களா இஸ்லாமிய இயக்கத்தில் வார்த்தெடுக்கப்பட்ட ஒருவரின் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (திருக் குர் ஆன் 61:10,11) என்ற திருமறை வசனத்திற்கேற்ப சிறந்த வியாபாரத்தை செய்த அப்துல் காதர் முல்லாவின் மரணம் நிச்சயம் பல அப்துல் காதர்களை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


எகிப்தின் ஹசனுல் பன்னா, சையது குதுப், அப்துல் காதர் அவ்தா முதல் செசன்யாவின் ஷாமில், கத்தாப் வரை உயிர்தியாகம் செய்து காட்டிய தியாகத்தின் பாதையில் மேலும் ஒரு இஸ்லாமிய இயக்க வீரர் தியாகம் செய்து சற்றே தூசு தட்டியிருந்த அப்பாதையை நமக்கு துப்பரவு செய்து காண்பித்துள்ளார். ஜனநாயம் எனும் நவீன இணைவைப்பு கொள்கையின் மூலம் மக்களை அடக்கி ஆளும் தாகூத்திய சக்திகளின் கொள்கைக்கு அடிபணியாமல் தீனை நிலைநாட்டும் பணியில் கலிமாத்துஹி இயல் உழ்யா அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கும் பணியில் ஈடுபட்ட ஒரு சத்திய அழைப்பாளன் தன் உடல், பொருள், ஆவி அத்துணையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து இறந்து போனார். அன்னாரின் பர்ஸக் மற்றும் மறுமை வாழ்விற்காக பிராத்திப்பதோடு அல்லாஹ் நம்மையும் இப்பணியில் ஈடுபடுத்தி இதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையை கொடுத்து ஷஹீத்களாக மரணிக்க வைப்பானாக.