Monday, March 25, 2013

சுஹைப் (ரலி) அல்லாஹ் பொருந்திய வியாபாரத்தின் முன்மாதிரி


பாலைவன விழுதுகள்  விழுது-4

ஈமான் கொண்டவர்களேநோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒருவியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (சூரா ஸப் 61:10)

மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் மனிதர்களை மறுமையின் தண்டனையிலிருந்து காப்பாற்ற கூடியவியாபாரத்தை அறிவிப்பதாக கூறி அதற்கு பதிலாக அல்லாஹ் மற்றும் அவனின் தூதர் மீதும் ஈமான் கொண்டுநமது உயிர்கள் மற்றும் பொருள்களை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே என்று கூறுகிறான்.

நாம் பார்த்த இவ்வசனத்தில் உள்ள பொருளை செலவு செய்வது குறித்த இன்றைய சமூக சூழலை கொஞ்சம்உற்று பார்த்தால் சமூகத்தின் நிலை  நன்கு விளங்கும்மார்க்கத்தை அதிகம் பேசுபவர்கள் கூட பொருளாதார ரீதியான தியாகம்என்றால் தங்கள் பர்ஸை இறுக்க பிடித்து கொள்வதை பார்க்கின்றோம்காற்று வீசுவதை விட வேகமாக தர்மம்செய்ய கூடிய காலத்திலிருந்து கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டிய ஜகாத்தே விவாத பொருளாக மாறி விட்டசூழலில் வாழும் நமக்கு மிக தேவையான படிப்பினை சுஹைப் (ரலிஅவர்களின் வாழ்வில் உள்ளது.

சுஹைப் (ரலிஈராக்கில் செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும் ஈராக்ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட போது அடிமையாக கொண்டு வரப்பட்டு மக்கத்து வீதிகளில் விற்கப்பட்டார்மக்கத்து மக்களிடத்தில் அதிகமாக இருந்த தங்கத்தை உருக்கும் சிறந்த பொற்கொல்லராக திகழ்ந்தசுஹைப் (ரலிசத்திய இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்று கொண்டார்.

ஹிஜ்ரத்
இஸ்லாத்தை ஏற்று கொண்ட சுஹைப் (ரலிமக்காவிலிருந்து மதீனாவுக்கு நபி (ஸல்அவர்கள் அபுபக்கருடன்ஹிஜ்ரத் செல்லும் போதே செல்ல நினைத்தாலும் சில காலம் கழித்தே ஹிஜ்ரத் செல்ல நேரிட்டதுசுஹைப் (ரலி)ஹிஜ்ரத் செல்வதை அறிந்த குறைஷிகள் அவரை பின் தொடர்கின்றனர்குறைஷிகள் தம்மை பின் தொடர்வதைஅறிந்த சுஹைப் (ரலி) ஓரிடத்தில் தம் குதிரையை நிறுத்தி அவர்களை நோக்கி கூறினார்கள் “ நான் அம்பெய்வதில் வல்லவன் என்பது உங்களுக்கு தெரியும்என்னிடத்தில் உள்ள அம்புகூட்டில் உள்ள அனைத்து அம்புகளையும் ஏவிஉங்களை கொல்வேன்அதுவும் தீர்ந்து போனால் என்னிடம் உள்ள கத்தியை கொண்டு அனைவரையும்கொல்வேன்” என்று கூறுகிறார்.

உம்முடைய வியாபாரம் வெற்றி அளித்து விட்டது
இவ்வாறு குறைஷிகளை பயமுறுத்திய சுஹைப் (ரலி) தன்னை பிடிக்க முயற்சிக்கவில்லை என்றால் தான் இளம் வயதிலிருந்து வியர்வை சிந்த பாடுபட்டு உழைத்த அத்துணை செல்வத்தையும் அக்குறைஷிகளுக்கு கொடுத்து விடுவதாக சொல்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா, நம்முடையை ஆடம்பர செலவுகள் போக குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் இருந்தால் அச்சொத்தில் 97.5% விட்டு விட்டு எஞ்சிய 2.5% அல்லாஹ்வுக்கு கொடுக்க சொல்வதையே விவாத பொருளாக்கிய நமக்கு குறைஷிகளுக்கு 100% ஜகாத் கொடுக்க முன் வந்த சுஹைப் (ரலி) செயல் நிச்சயம் வியப்பை அளித்திருக்கும்.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சுஹைப்பின் வாக்கின் மீது அவரின் எதிரிகளுக்கு கிஞ்சிற்றும் சந்தேகமும் ஏற்படவில்லை. தன் அத்துணை செல்வத்தையும் எதிரிகளுக்கு தாரை வார்த்தாலும் பெருமானாரை சந்திக்க போகிறோம், அவரின் நிழலில் வாழப் போகிறோம் எனும் ஆவலில் மதீனா விரைந்தார் சுஹைப் (ரலி).
சுஹைப் ரலி மதீனா செறடைந்தவுடன் அவரை பார்த்து சந்தோஷத்துடன் முஹம்மது (ஸல்) “ ஓ அபூ யஹ்யாவே ! உம்முடைய வியாபாரம் வெற்றி அளித்து விட்டது” என்று உரக்க கூறினார்கள். மேலும் அல்லாஹ்வும் சுஹைபின் செயலை பாராட்டி திருக்குரானின் கீழ்காணும் வசனத்தை அருளினான் " இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (2:207).

ஆம்அல்லாஹ் பாராட்டுவதை போல் தன் அத்துணை செல்வத்தையும் அல்லாஹ்வுக்காக செலவு செய்தாலும் சுஹைப் (ரலிஅவர்களை பொறுத்த வரை மிக பெறுமானமான வியாபாரமாக தான் கருதினார்கள்.அல்லாஹ் இப்படிப்பட்ட மனிதர்களின் தியாகங்களை குறித்து தான் பின்வருமாறு குறிப்பிடுகிறான் 

ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
   تُؤ (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
(61:10,11)


சுஹைபும் நபிகளாரும்
சுஹைப் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் நேசித்ததோடு பல சமயங்களில் விளையாட்டாய் பேசுவார்கள். ஒரு முறை சுஹைப் (ரலி) ஒரு கண்ணில் கட்டியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது பேரீத்தம் பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கண்ணில் கட்டியோடு எப்படி பேரீத்தம் பழம் சாப்பிடுகிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிண்டலாய் கேட்க தன் இன்னொரு கண்ணை சுட்டி காட்டி பேரீத்தம் பழம் சாப்பிட ஒரு கண் போதுமே என்று சொல்லும் அளவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுஹைபுடன் அந்நியோன்மாய் இருந்தார்கள்.

சுஹைபும் உமரும்

சுஹைப் (ரலி) ஏழைகளுக்கு தர்மம் செய்வதில் எந்தளவு தீவிரமாய் இருந்தார்கள் எனில் உமர் (ரலி) ஏழைகளுக்கு தர்மம் செய்வதில் சுஹைப் ஊதாரித்தனமாய் இருக்கிறார் என்று சொல்லும் அளவு சுஹைப் (ரலி) தர்மம் செய்பவராய் இருந்துள்ளார்.

உமர் (ரலி) பஜ்ர் தொழுகையை தொழ வைத்து கொண்டிருக்கும் நிலையில் கத்தி குத்துபட்டு இறக்கும் நிலையில் யாரை மக்களுக்கு இமாமாக தொழ வைப்பது என்று யோசனை செய்கிறார்கள். பொதுவாக கலீபா தான் மக்களுக்கு இமாமத் செய்வது வழக்கம். அடுத்த கலீபா தேர்ந்தெடுக்கப்படு வரை மக்களுக்கு இமாமத் செய்ய உமர் (ரலி) தேர்ந்தெடுத்தது யாரை தெரியுமா? சுஹைப் (ரலி) அவர்களை தான்.
ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவராக இருந்தார்.
அதனால் தான் அவர் ரலியல்லாஹு அன்ஹு.
Published in Iqrah magazine

No comments: