Tuesday, December 28, 2010

தீமை ஒழிப்புப் போராட்டம்: மிகக் கொடிய தீமைகளே முதல் இலக்குகள்

தீமை ஒழிப்பின்போது பெரிய தீமைகளை ஒழிப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அந்தவகையில்இறைசட்டங்கள் அல்லாத இஸ் லாத்திற்கு முரணான மனித சட்டங்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர். இதனை ஷஹீத் ஸெய்யித் குதுப் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: நன்மையை ஏவுகின்றபோது முதலில் பெரிய நன்மைகளையே ஏவவேண்டும். இந்த வகையில் உலூஹிய்யத் (தெய்வீகத்தன்மை) அல்லாஹ்விற்கு மாத்திரம் உரியதென ஏற்றுக் கொள்ளலும் அதன்படி இஸ் லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதுமே முன்னு ரிமை கொடுக்கப்பட வேண்டிய நன்மையாகும்.

அவ்வாறேதீமைகளைத் தடுக்கும் பணியின்போதும் அதிகொடிய தீமை களை ஒழித்துக் கட்டுவதற்கே முதன்மை வழங்க வேண்டும். இந்த வகையில் தாகூத்கள்’ எனப்படும் எல்லைமீறிய அக்கிரமக்காரர்களின் ஆட்சி ஆதிக்கம் செலுத்துவதும்இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முர ணாக இவர்கள் மக்களைத் தமது அடிமைகளாக நடத்துவதும்தான் மிகக் கொடிய தீமைகளாகும்.

நபி (ஸல்) அவர்களை ஈமான்கொண்ட ஆரம்பகால முஸ்லிம்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு ஜிஹாத் புரிந்ததெல்லாம் மக்களை அல்லாஹ் வின் சட்டங்களுக்கு மாத்திரம் கட்டுப்பட வைக்கும் ஓர் இஸ்லாமிய அரசை முதலில் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே. இஸ்லா மிய ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் அந்த அரசு ஆளப்படும். இந்த மகத்தான இலக்கை அடைந்த பின்னர்தான் முஸ்லிம்கள் கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மை தீமைகளில் கவனம் செலுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த இஸ்லாமிய அரசு தோற்றம் பெறுவ தற்கும்முஸ்லிம் சமூக அமைப்பு உருவாவதற் கும் முன்னதாக இத்தகைய கிளை அம்சங்களில் தங்களது முயற்சியை அவர்கள் அறவே செல விடவில்லை.

மார்க்கம் நிலைத்திருப்பதற்கான வலுவான அடிப்படை இடப்பட்டதன் பின்னர் அதன்மீதுதான் இந்தக் கிளை அம்சங்கள் நிலைபெற்று இருக் கும். எனவேநன்மையை ஏவிதீமையைத் தடுக்கும் பணியின்போது நடைமுறை யதார்த்தத்தின் தேவையைக் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற கோணத்தில்தான் தஃவா புரி யப்பட வேண் டும். அப்படியாயின் ஏவப்பட வேண்டிய முக்கியமான பாரிய நன்மை கள்ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என்ற வட்டத்தி லான பணிகள் முதலில் முடிவடைய வேண்டும். அதற்கு முன்பாக ஏவப்படவேண்டிய கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மைகள்அதனோடு தொடர்பான பாதிப்பு குறைந்தஒழிக்கப்பட வேண்டிய தீமை கள் என்ற வட்டத்திலான பணிகள் இத் தகைய தருணத்தில் ஆரம்ப மாக மாட்டாது. இவ்வாறான வழிமுறைதான் இஸ்லாமிய சமுதாயம் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட பொழுது கடைப்பிடிக்கப்பட்டுள்ளது". (பீ லிலாலில் குர்ஆன்: பாகம்: 11, பக்:50)                                                                                          
இதன்மூலம் தாஈக்கள் தங்களையும் தங்களுடனிருப்பவர்களையும் அறிவுரீதியாக வளர்த்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுதல்,இஸ்லா மிய ஒழுக்க மாண்புகளையும் மற்றும் இபாதாக்களின் சட்டங்களையும் அவர்களுக்குக் கற்பித்தல் போன்ற விடயங்களைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றோவிளக்கித் தடுப்பதனூடாக நீக்க முடியுமான கிளை ரீதியான தீமையைத் தடுக்காது தவிர்ந்துகொள்ள வேண்டுமென்றோ கருதலாகாது. இருப்பினும்,மனோ இச்சையின் மாயைக்கு முன்னால் இவர்கள் மயங்கிவிடக் கூடாது என்பதுதான் நாம் விடுக்கும் மிகத் தெளிவான ஓர் அழைப்பாகும்.

சிறிய சிறிய தீமைகளை எதிர்ப்பதோடு போதும் என்ற போலியான மனப்பாலைக் குடிக் கச் செய்து இஸ்லாத்திற்கு முரணான ஆட்சி அதி காரம் செலுத்துதல் என்ற கொடிய தீமையை இட் டும் வாளாவிருப்பது தான் இந்த மாயை ஏற்படுத்தும் பயங்கர நிலையாகும். இக்கொடிய தீமைக் கெதிராக வெகுண்டெழுந்து சத்தியத்தைத் துணி வோடு எடுத் துக்கூறாது நஜீஸை நீக்குதல்,ஸஜதா ஸஹ்வு போன்ற பாடங்களில் மயிர்பிளக்கும் ஆய்வுகளை மக்களுக்கு வழங்கும் வெறும் உபதேசகர்கள் என்ற அளவோடு இவர்கள் திருப்தியடைந்து விடுகின்றனர்.

தாகூத்கள் பற்றியோமுஸ்லிம்களை ஒரு கொடியின்கீழ் ஒன்றி ணைத்துஅவர்களைப் பயிற்றுவித்துமுழு அளவிலான பரிபூரணமான எழுச்சியை நோக்கி அவர்களது முயற்சிகள் சிதறிச் செல்லாது முனைப்புப் படுத்துவதன் அவசியம் குறித்தோ இவர்கள் தங்களது பேச்சுக்களில் சாடையாகத் தொட்டுக் காட்டுவதுகூடக் கிடையாது.

மனித குலத்தை, "அதன்மீது சுமத்தப்பட்டிருந்த பளுவை இறக்கியும்,போடப்பட்டிருந்த விலங்கு களை உடைத்தும்" விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வதற்காகவே அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். போடப்பட்டிருந்த விலங்கு களோ சொல்லும் தரமன்று. இதன்பின்னர் வர லாற்றில் பூமிப் பந்தின் சந்துபொந்துகளில் எல்லாம் இந்த அரசி யல் கட்சிகளை நட்டிவிட்டதன் மூலம் மீண்டுமொருமுறை மனித குலத்தை யூதர்கள் விலங்குகளிட்டு அவல நிலைக்கு இட்டுச் சென்றுள் ளனர். எனவே,இவ்விலங்குகளை உடைத்து மனித குலத்தை மீட்டெ டுப்பதற்கும் இதன் ஒடுக்குமுறைகளால் அவஸ்தைப்பட்டு துன்பப்படும் முஸ்லிம் சமூகத்தின் புத்திரர்களை மீட்டெடுப்பதற்குமான ஒரு காத்தி ரமான இஸ்லாமிய எழுச்சி பீறிட்டு எழுவது தவிர்க்க முடியாத தேவையாகும்.

உண்மையில்இத்தகையதொரு எழுச்சிக்கான முன்னோடியாக தஃவாப் பணியை முன்னெடுத்துச் செல்வது எந்தளவு பாரிய பணி என்பதை ஷஹீத் ஸெய்யித் குத்ப் (றஹ்) அவர்களின் கீழ் வரும் வாசகங்கள் துள்ளியமாகத் தெளிவுபடுத்துகின்றன.

"உண்மையில் அது மகத்துவமானஒரு பாரிய பணியாகும். மனித குலத்தை கண்காணிக்கும் பணியாகும். அவர்களது வாழ்வோடும் மர ணத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களது சுபீட்சத்தோடும் அவலத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களுக்கு நற்கூலி கிடைப்பதோடும்தண்டனை வழங்கப்படுவதோடும் தொடர்பான பணியாகும்.

இந்தவகையில் அல்லாஹ்வின் தூது இம்மனித குலத்திற்கு எத்திவைக் கப்பட்டால் அது அதனை மனப்பூர்வமாக ஏற்று அடியொற்றி உலகிலும் மறுமையிலும் சுபீட்சத்தை அடைந்து கொள்ளும். இல்லையெனில்அதற்கு இந்தத் தூதை எட்டச் செய்யாதிருப்பதன் மூலம் அது தன் ரப்பிடம் நியாயம் காட்டித் தப்புவதற்கு வழி வகுக்கலாம். இந்நிலையில் இறைதூதைப் பின் பற்றாததால் மனித குலத்திற்கு உலகில் நேரிடும் துன்பங்களுக்கும்,அது வழிகேட்டில் சென்ற மைக்குமான பொறுப்பைஇறைதூதை எத்தி வைக்குமாறு பணிக்கப்பட்டும் அதனை செவ்வனே எத்தி வைக்காதவர்கள் சுமந்தே ஆக வேண்டும்.

ஆனால்இறைதூதர்களைப் பொறுத்தமட்டில்தம் மீது சுமத்தப்பட்டி ருந்த பணியை அவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். இறை தூதைப் பூரணமாக ஒப்புவித்தார்கள். இந்தவகையில்கனதியான இந்த அமானிதத்தை திறம்பட செயற்படுத்தி முடித்த தூய நிலையிலேயே அவர்கள் தங்கள் இரட்சகனை நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் இறைதூதை வெறுமனே நாவினால் மாத்திரம் ஒப்புவித்துவிட்டுச் செல்லவில்லை. மாற்றமாக செயற்களத்தில் நடைமுறைப்படுத் திக் காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்கள்.

அவர்களது பிரச்சாரப் பணிக்கு முன்னால் குறுக்கீடு செய்த தடைகளை யும் தடுப்புகளையும் நீக்குவதற்காக அவர்கள் இரவு,பகலாக  அயராது உழைத்தார்கள். புனைந்துவிடப்படும் கட்டுக் கதைகளாகவோ கிளறி விடப்படும் சந்தேகங்களாகவோ,கவர்ச்சிகரமான வழிகேடுகளாகவோ இந்தத் தடைகள் அமைந்தன. அவ்வாறேஇறைத் தூதை செவிமடுக்க விடாது தடுத்து குழப்பிவிடும் எல்லைமீறிய தாகூத்களாகவும் இத்தடை கள் காணப்பட்டன.  இவ்வேளைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஏனைய தூதுவர்கள் போன்றே இத்தடைகளை நீக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்தார்கள்.

இனிநபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்தக் கனதியான பணியை நிறைவேற்ற வேண்டிய கட மைப்பாடு அவர்களது தூதை ஏற்ற முஃமின்கள் மீதுதான் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக பல தலைமுறைகள் வந்தனவந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்ததியும் தனக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு இந்தத் தூதை எத்திவைக்கும் கடமைப் பாட்டைக் கொண் டுள்ளன.

இந்தக் கனதியான கடமைப்பாட்டிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. மக்கள் நியாயம் கூறி அல்லாஹ்விடம் தப்பிக்கொள்ளாமல் இருக்க வும்மறுமையின் தண்டனையிலிருந்து மக்களை மீட்பதற்கும்உலக வாழ்வின் துன்ப துயரங்களி லிருந்து அவர்களைக் காப்பதற்கும்இந்தத் தூதை எத்திவைக்கும் பணியை செய்தேயாக வேண்டியுள்ளது. அதுவும்நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே முறைவழியில் இந்தத் தூதை கச்சிதமாக எத்தி வைப்பதனூடாகவே இது சாத்தியமாகும்.

ஏனெனில்நமக்கு முன்னால் இருப்பதும் நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே ரிஸாலத் தான். மனிதர்களும் அதே மனிதர்கள்தான். வழி கேடுகளும்மனோ இச்சைகளும்கிளப்பப்படும் சந்தேகங்களும்தூண்டப்படும் இச்சைகளும் அங்கும் இருந்தன. அவ்வாறே மக்க ளுக்கும் தஃ வாப் பணிக்கும் தடையாக நிற்கும் எல்லைமீறிய தாகூத் சக்திகள் அங்கும் இருந்தன. இந்த தாகூத்கள் வழிகேடுகளைக் கொண் டும் பலத்தைப் பிரயோகித்தும் மக்களை தீனை விட்டும் குழப்பிக் கொண்டிருந்தன.

சந்தர்ப்பம் - அதே சந்தர்ப்பம். தடைகள் - அதே தடைகள். மக்கள் - அதே மக்கள். அப்படியாயின் இந்தத் தூதை எத்திவைப்பதும் தீனை நிலை நிறுத்துவதும் நிகழ்ந்தே ஆகவேண்டும். எத்தி வைக்கும் பணி விளக்கி வைப்பதாகவும் அமைய வேண்டும். எனவேஇத்தூதை எத்திவைப்பவர்கள்தாம் எத்திவைப்பவற்றின் உயிர்த்துடிப்பான நடமா டும் முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்.

எனவேகட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ள இந்தப் பணியை சுமக்காது தப்பித்துக் கொள்ள எந்த சாட்டுப் போக்கும் கிடையாது. அப்படிப் புறக்க ணித்தால் பாரதூரமான ஒரு பொறுப்புக்கு நாம் ஆளாக வேண்டிவரும். முழு மனித குலமும் வழிகேட்டில் சென்று,இந்த உலகில் அனுப வித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கான பொறுப்பை நாம் சுமக்க வேண்டியிருக்கும். அத்தோடு அல்லாஹ்விடம் மறுமையில் மக்கள் நியாயம் கூறிநரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சந் தர்ப்பத்தை இழக்கச் செய்யாததற்கான பொறுப்பை நாம் முழுமையாக ஏற்க வேண்டி வரும்.
இந்தப் பாரிய பொறுப்பை சுமப்பதற்கான சக்தி யாருக்குத்தான் இருக் கும்! இது முதுகெலும்மை முறித்துஎலும்பு மூட்டுக்களின் பிணைப்பை அகற்றி மெய் சிலிர்க்கச் செய்யும் பாரியகனதியான பொறுப்பல்லவா?" (பீ லிலாலில் குர்ஆன் - பாகம்: 6, பக்: 31                                                                                  ஆக்கம் : அஹமத் முஹம்மத் ராஷித்
தமிழில்: மிஹ்ழார் எம். ரஷீத் நன்றி : மீள்பார்வை

Thursday, December 16, 2010

அரபு மன்னர்களும் ஈரானும் : தொடரும் துரோகம்

மீண்டும் இன்னொரு அரபுலகின் துரோகமா ? முதலாம் உலக போருக்கு முன்னதாக உதுமானிய கிலாபத்துக்கு எதிராக அணி திரண்டு கிலாபத்தை கவிழ்த்த அரபு கிளர்ச்சிக்கும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ள ஈரானை தாக்க அரபுகள் அமெரிக்காவுக்கு கொடுத்த அழுத்தத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.


சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து பிரிட்டனின் கூட்டாளிகளாய் மாறியதன் விளைவு உதுமானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மத்திய கிழக்கு பிரிட்டனின் காலனியாய் மாறி போனது. 3 தசாப்தங்களுக்குள்ளாகவே இஸ்ரேல் மத்திய கிழக்கில் மலர்ந்தது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஜோர்டான் மற்றுமுள்ள வளைகுடா நாடுகள் சுதந்திரமான நாடுகளாக அறிவிக்கப்பட்டாலும் மேற்குலகின் அடியாட்களாய் விளங்கின. லீவாட் சிரியா மற்றும் லெபனானாக பிரிக்கப்பட்டது. பலஸ்தீன் பிரிட்டனின் முழுமையான கட்டுபாட்டில் வந்தது.

உதுமானிய கிலாபத்துக்கு எதிரான அரபுலக கிளர்ச்சியை இயக்கியதில் முக்கிய பங்கு பிரிட்டிஷ் உளவாளி டி.இ.லாரன்ஸுக்கும் வெளியுறவு துறை ஆலோசகர் கெர்டுரூட் பெல்லுக்கும் இருந்தாலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தவர்கள் சவூதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் இப்னு சவூத் எனும் அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூதும் மக்காவின் அன்றைய ஆளுநராக இருந்த ஹூசேன் பின் அலியும் ஆவார்கள்.

பிரித்தானியா அரசாங்கம் இருவரையும் மன்னராக்குவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இருவரும் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பங்காற்றினர். ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க முடியாது எனும் மரபுக்கேற்ப ஹூசைனை தோற்கடித்து தன்னை சவூதியின் மன்னராக இப்னு சவூத் அறிவித்து கொண்டார். பிரிட்டனிடம் தஞ்சமடைந்த ஹூசைனின் இரு மகன்களையும் ஜோர்டான் மற்றும் ஈராக்கின் மன்னர்களாக பிரிட்டன் முடி சூட்டியது. இந்த நன்றி கடனுக்காக மேற்குலகின் அடிவருடிகளாய் அரபு மன்னர்கள் மாறிய நிலை இன்றும் தொடர்கிறது.

உதுமானிய கிலாபத்தை கவிழ்த்த நூறு ஆண்டுகளுக்கு பின் இன்னொரு இஸ்லாமிய சக்தியான ஈரானுக்கு எதிரான அரபுலக சதி வீக்கிலீக்ஸ் உபயத்தால் அம்பலமாகியுள்ளது. இதில் ஆச்சரியமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஈரானின் அழிவை தான் இஸ்ரேலும் ஆவலுடன் நோக்குகிறது. ஈராக்கை போல் ஈரானும் அமெரிக்காவால் தரைமட்டமாக்கப்படுவதை தான் அரபுலகும் விரும்புகின்றது என்றால் அரபுலகும் இஸ்ரேலும் கள்ள கூட்டாளிகளா என்பது தான் அரபுலகம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகின் மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.


ஈரானை ஒழிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, 2006ம் ஆண்டு லெபனானில் இஸ்ரேலிய படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த போராளி இயக்கமான ஹிஸ்புல்லாவையும் ஒழிக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவுடன் அரபு நாடுகளின் படைகள் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சவூதி அரேபியாவின் சிறுமைத்தனமான எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இச்செய்திகள் கேள்விப்பட்ட அரபுலக மக்கள் கொதித்து போயுள்ளனர். அரபுலகம் சவூதியின் தலைமையில் அணி திரண்டு பலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க போர் தொடுத்தியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் சவூதியை மனமார வாழ்த்தியிருக்கும். ஆனால் இவர்களோ இஸ்ரேலின் எதிரியான ஹிஸ்புல்லாவை அழிக்க நாடியுள்ளனர். இதனால் தானோ என்னவோ ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சவூதி எங்களுக்கு நட்பு நாடு என்று கூறினார் போலும்.

ஆனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை. இஸ்லாமின் ஆரம்ப காலங்களில் இருந்த கிலாபத்தை போல் முஸ்லீம் நாடுகளின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடுவதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் தலைமைத்துவம் வழங்கும் தகுதி சவூதி அரேபியாவுக்கு உண்டு. தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.

சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர். சவூதி அரசாங்கம் தன் நிதியை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு செலவழித்து மருத்துவம், பெளதிகம், இரசாயனம் என எல்லா துறைகளிலும் தலை சிறந்த சவூதி / அரபு / முஸ்லீம் விஞ்ஞானிகளை உருவாக்கலாம். இதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இல்லை என்பதல்ல, மாறாக சவூதிக்கு இப்படி உருவாக்க விருப்பமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு மாறாக பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் பாதுகாவலன் அமெரிக்காவுக்கு தன் வளங்களை வாரி இறைத்து பொருட்கள் வாங்கவே விரும்புகிறது.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சவூதி எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆணு ஆயுத பலம் கொண்ட ஈரானால் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை தூண்டி விட முடியும் என்பது தான். ஏற்கனவே மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது சவூதி அறியாத ஒன்றல்ல. அதிருப்தி குரல்களும், எதிர்ப்பாளர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுவதும், அமுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றே. அதனால் தான் விக்கிலீக்கின் இன்னொரு கேபிளில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-காயிதா, லஷ்கர் இ தொய்பா, தாலிபான் போன்றவற்றிக்கு சவூதி அரசு அல்ல சவூதி மக்களே நிதியுதவி செய்கின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.

அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.


அன்பு சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும். ஈரானின் மீது தாக்குதல் நடத்த சவூதி அரேபியா கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதை தொடர்ந்து அஜீஸ் இஜ்ஜத்தீன் எழுதிய கட்டுரையை ஒரு சகோதரர் அவரின் கருத்துடன் அனுப்பியிருந்தார்.  அவரின் கருத்தையும் இத்துடன் மொழியாக்கம் செய்திருக்கின்றோம்
சகோதரரின் கருத்து

சர்வதேச முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவராலும் ஈரானின் மேல் போர் தொடுக்க சவூதி கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது கவனிக்கப்பட கூடிய விஷயமாய் உள்ளது. இஸ்லாமிய விழுமியங்களையும் சுய கெளரவத்தையும் அற்ப உலகியல் இலாபங்களுக்காக பிரிட்டிஷாரிடம் விற்று தான் மன்னராக வேண்டுமென்பதற்காக முஸ்லீம் உலகுக்கு இப்னு சவூது ஏற்படுத்திய பாதிப்புகளை அஜீஸ் இஜ்ஜத்தீனின் கட்டுரை படம் பிடித்து காட்டுகிறது.

முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.

இயற்கையாகவே முஸ்லீம் உலகுக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ள சவூதி அரேபியாவின் மன்னர்கள் தான் இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பாலஸ்தீன விவகாரத்தைஒரு வேளை இதை படிக்கும் யாரும் என்னை ஷியா என்று நினைத்தால் தவறு. செத்து பிழைக்கும் சவுதி மன்னர்களை காட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஈரானின் துணிவு எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சுன்னி தான் அதிலும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இப்னு தைமியா, அப்துல் வஹாபை பின்பற்றுகின்றவன் தான் நான்.

Friday, December 10, 2010

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் இஸ்லாமியப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட்டு, மக்காவில் உருவாக்கிய பத்தரை மாற்று தங்கங்களான, உத்தம தோழர்களைக் கொண்டு உலகம் கண்டிராத ஒரு சமூத்தை உருவாக்கி அதன் மூலம் இறையாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு நிலம் தேடிப் புறப்பட்டு 1431 ஆண்டுகள் கடந்து விட்டன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்திற்காக மக்காவை விட்டு மதீனா நோக்கிச் சென்றார்களோ அந்த நோக்கம், இன்றைக்கும் உணரப்படாத நிலை முஸ்லிம்களிடத்திலே காணப்படுவது வேதனைக்குரியது.


இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாடுவதற்கல்ல:

கிறிஸ்தவர்களும், யூதர்களும் மற்றுமுள்ள மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடுவதற்காக இந்த புத்தாண்டு வருவதில்லை. மாறாக, நம்மீது மிகப் பெரியதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்கள், அல்லது நாம் வசிக்கும் அரபு நாடுகளிலே கூறுவது போல ‘குல்லு ஆம் வ அன்தும் பி ஃஹைர்’ என்று சொல்வதற்காக மட்டும் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் நடைபெறவில்லை.

மாறாக, இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அந்த இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றுகின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படையில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். எந்த நோக்கத்திற்காக அவர்கள் பயணப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். அந்த சாதனையைத் தான் இஸ்லாமிய சமூகம் என்று வரலாற்றின் பக்கங்கள் இன்றளவும் அழைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு அந்தச் சமூகம் எங்கே என்று தேடிப்பிடிக்கக் கூட நாதியற்ற சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் மாறி விட்டது. வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன்னுடைய வேரைத் தொலைத்து விட்டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலைத்து விடும் என்பது மரபு. தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலாற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக்கேற்ப ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாற்றையும் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளையும் பார்வையிடுவோம்.

நபியவர்கள் இப்பூமிக்கு கொண்டுவந்த தீன் வெறுமனே தனி மனிதர்களை உருவாக்குவது மாத்திரமல்ல, மாறாக தனி மனிதர்களையும், அவர்களின் வழியாக குடும்பங்களையும், சமூகத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் சமைப்பதுமே ஆகும். மக்காவில் இருந்து தனிப்பட்ட கிரியைகளை செய்வதற்கு ஓரளவு சுதந்திரம் இருந்த போதிலும் தீன் முழுமையாய் நிலைநாட்டப்பட அச்சூழல் போதுமானதாக இல்லாததால் நபிகள் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நாடினார்கள்.

முதலாவதாக அபூஸலமா (ரலி) அவர்களும், அவரை தொடர்ந்து உமர் (ரலி) உள்ளிட்ட பிற ஸஹாபாக்களும் ஒவ்வொருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மக்காவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் இன்று மதீனாவில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பது குறைஷிகளுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி;, அதனை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது பற்றியும், இன்னும் அதன் மூல வேர் நம்முடன் தான் இருக்கின்றது, இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும் என்பதை மனதில் கொண்டு, இதற்கான சதியாலோசனைக் கூட்டம் ஒன்றை ‘தார் அந்நத்வா’ என்ற இடத்தில் கூட்டினர். இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டுமென்றால், முஹம்மதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவரைக் கொல்வதன் மூலமே நாம் இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானமாகியது. இந்தக் கொலையின் மூலம் வரும் எதிர்ப்புகள் மற்றும் இரத்த இழப்பீட்டுக்குப் பழிக்குப் பழி ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு குலத்தாரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டதொரு கொலைப் படை ஒன்றை உருவாக்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இறைவன் நபிகளாருக்கு இத்திட்டத்தை அறிவித்து கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை உரியவர்களிடம் திருப்பி கொடுப்பதற்காக அலீ (ரலி) அவர்களை தன் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை துறந்து மதீனாவை நோக்கி கிளம்புகின்றார்கள். குறைஷிகள் காவல் காத்து கொண்டிருக்கும் நிலையிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னாலேயே வெளியேறிச் சென்றார்கள். பின் தன் தோழருடன் சில நாட்கள் வேறு பாதையில் பயணம் சென்று கூபாவில் தங்கி பின் மதீனாவை வந்தடைந்தார்கள் என்பது தான் நபிகளாரின் சுருக்கமான ஹிஜ்ரத் வரலாறு. இதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளை ஒவ்வொன்றாய் சுருக்காமாய் நோக்குவோம்.



திட்டமிடல்:

ஹிஜ்ரத் எதேச்சையாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்டமிடலுடன் நடந்தது என்பதை நபியவர்கள் தாம் புலம் பெயரவிருப்பதை அபூபக்கர் (ரலி) தவிர மற்ற யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வைத்திருந்தது, பயணத்தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவிலிருந்து மதீனாவுக்கு வழமையாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தது என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிடலாம். இலக்கில்லாமல் செல்லும் இன்றைய சமூகம் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி:

திட்டமிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ்வின் உதவியை அதிகம் எதிர்பார்த்த நபிகளாரின் ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். உதாரணத்திற்கு தன்னை சுரகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கிறோம் என்று அபுபக்கர் (ரலி) கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற சம்பவங்களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடியவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

மஸ்ஜிதுந் நபவியின் பங்களிப்பு:

இந்தப் பள்ளி அமைதியையும், மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தளமாகவும், போர்ப் பாசறையாகவும், வெற்றித் தளமாகவும் திகழ்ந்தது. இறைத்தூதை பிற மக்களுக்கும், பிற நாட்டவர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வெளியுறவுத்துறைச் செயலகமாகவும், இறைத்தூதைப் பெற்றுச் செல்வதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்க்க வருபவர்களை வரவேற்கின்ற உள்துறைச் செயலகமாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது. இறைத்தூதைக் கற்றறிந்து கொண்டு, அதனைப் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட மாணவர்களைப் பெற்றுக் கொண்ட பல்கலைக்கழகமாகவும், இரவும் பகலும் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக் கூடிய கல்விக் கலாசாலையாகவும் இப்பள்ளி சிறப்புப் பெற்றது. இன்னும் அன்ஸார்களும், முஹாஜிர்களும் தூர தேசங்களில் இறைத்தூதை எடுத்துச் வைக்கச் சென்ற நாட்களில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய இடமாகவும் இப்பள்ளி திகழ்ந்தது. இன்னும் திண்ணைத் தோழர்கள் என்றழைக்கக் கூடிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எதனைக் கற்றார்களோ, அதனை அப்பள்ளிக்கு வரக் கூடியவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்களைப் பெற்ற பள்ளிக் கூடமாகவும் அப்பள்ளி திகழ்ந்தது. இஸ்லாமிய அழைப்பான ஜிஹாதிற்கு மக்களை அழைக்கும் பொழுது, தங்களது அனைத்து அலுவல்களையும் விட்டு விட்டு, உலக வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விட்டு, அந்த மறுமை வெற்றிக்கான அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு, உடனே மக்கள் கூடும் பாசறையாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது

புதிய ஓர் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நாம் மதீனத்து சமூகத்தில் பள்ளிவாசல் வகித்த பங்கை இன்றைய பள்ளிவாசல்கள் வகிக்கின்றனவா என்பது பற்றி சிந்தித்து விடை காண வேண்டும்.

சகோதரத்துவ கட்டுமானம்:

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நபிகளார் தான் கட்டி எழுப்பிய சமூகத்திற்கு முக்கியமான அடிப்படையாக கருதியது சகோதரத்துவமாகும். ஒரு முஃமின் கட்டடத்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும் எனும் ஹதீஸ{க்கு ஏற்ப நபி (ஸல்) உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை.

நபிகளார் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லீம்கள் மத்தியில் புகுத்தப்பட்ட இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. முஸ்லீம்கள் தாங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முதலாவதாக தங்களுக்கிடையான வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்.

எனவே வரும் ஹிஜ்ரா நம்மை எதையும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும், அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர்களாகவும், வெறும் தொழுகைக்காக மட்டுமின்றி முஸ்லீம்களின் எல்லா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கிய கேந்திரமாக மீண்டும் நம் பள்ளிவாயில்களை செம்மைபடுத்துபவர் -களாகவும், ஒரே இறைவன், ஒரே தலைவர், ஓரே மறை, ஓரே கிப்லாவை பின்பற்றும் நாமனைவரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொள்ளாமல், இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒற்றுமையாய், மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண்ணில் அமைய பாடுபடுபவர்களாகவும், அண்ணலார் இம்மார்க்கத்தை இம்மண்ணில் முழுமையாய் நிலை நாட்ட போராடியதைப் போல் நாமும் போராடுபவர்களாகவும் மாற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.