"எழு, எழுந்தால் உஹதாய் எழு":
=============================
அசத்தியத்தின் எழுச்சி
அதன் முகட்டை
தொடட்டும்.
அடக்குமுறையின் கைகள்
நம் கழுத்தை
நெறிக்கட்டும்.
அதிகாரத் திமிருடையவரால்
நம் குருதி
ஓட்டப்படட்டும்.
ஜாஹ்லிய்ய கொள்கைகள்
தெருக்களில்
உலா வரட்டும்.
சிலைவணக்க சீரழிவுகள்
சிறந்த பண்பாடாக
காட்சி தரட்டும்.
சத்தியத்தின் கொடியைவிட
கட்சிகளின் கொடிகள் முக்கியத்துவம்
பெறட்டும்.
ஆபாசமும் அட்டுழியமும்
மனிதனின் சட்டைபைகள் வரை
நிரம்பட்டும்.
இவையெல்லாம்
எழுச்சியாய் வளர்ச்சியாய்
பார்ப்போர் பார்க்கட்டும்.
இதன்பிறகு
சத்தியம் வீழ்ந்துவிட்டதென்று
எண்ணுவோர் எண்ணட்டும்.
ஈமானிய உள்ளம் உணர்ந்து கொள்ளும்
இது எழுச்சி அல்ல, வீழ்ச்சி
சத்தியம் எழுவதற்கான நீட்சி.
”இறுதி வெற்றி மூஃமின்களுக்கு”
திருக்குர்ஆன் வசனம் ஒன்று போதும்
நாம் நிமிர்வதற்கு.
இது நமக்கான நேரம்…
செயல்படுவதற்கான நேரம்…
எழு, எழுந்தால் உஹதாய் எழு!
வீழ்; வீழ்ந்தால் விதையாய் வீழ்!
ஆனால் சறுகாகி விடாதே!
சறுகுகளால் பயனேதும் இல்லை.
காற்று அடித்துச் செல்லும்
உதாரணத்தை தவிர!
(Thanks to Br. Gulam)
No comments:
Post a Comment