#கேள்வி:- ஜனநாயகம் குஃப்ர் என்றால் அந்த குஃப்ரை பின்பற்றித் தானே வாழ்கின்றீர்கள். அதன் சட்டங்கள் தானே உங்களை ஆள்கின்றது. நீங்கள் பெறும் மின்சாரம், உணவு பொருட்கள் என அனைத்தும் குஃப்ரு அரசாங்கத்தின் மானியம் தானே? ஜனநாயக தேர்தல்களில் பங்கேற்பது குஃப்ர் என்றால் அதன் ஆட்சியின் கீழ் வாழ்வதும் குஃப்ர் தானே! நாங்கள் செய்வது குஃப்ரும் ஷிர்க்கும் என்றால் நீங்கள் செய்வதும் அது தானே!??
#பதில்:- இந்தக் கேள்வியின் அடிப்படையே தப்பானது! ஒரு அரசின் சிந்தனை, அந்த சிந்தனையின் இலக்கு, அந்த சிந்தனையை அடைவதற்கான வழிமுறை என்பவற்றுக்கும் சிவிலியன்களுக்கு ஒரு அரசு செய்யவேண்டிய அடிப்படை உரிமைகள் பற்றிய சராசரி நடத்தையை சிவிலியன்கள் புறக்கணிப்பது என்பதும் தவறான அரசியல் பார்வை! *ஒரு தவறான சிந்தனையும் *தவறான நியதிகளும் தம்மை ஆதிக்கப் படுத்துவதை எதிர்ப்பது சராசரி புரட்சியின் வடிவம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் தாருந் நத்வா சார் குப்ரிய சிந்தனா ஆதிக்க வாதிகளுக்கு எதிராக இத்தகு போராட்ட மரபையே முன்வைத்தார்கள் என்பது இங்கு பிரதானமாக அவதானிக்க தக்கது!
குப்ரை எதிர்க்கும் அதே சூழலில் சமகாலத்தில் #அளவை நிறுவையில் மோசடி செய்தோர்க்கு கேடுதான்! என்ற குர்ஆன் வசனத்தை ஓதியவாரே அதே சந்தையில் வியாபாரம் செய்தார்கள்! பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்க எடுத்துச் செல்வதை எதிர்த்தவாறே அதே சமூகத்தின் முன் வாழ்ந்தார்கள்! சிலை வணக்கத்தை எதிர்த்த வாறே 366 விக்ரகங்களுக்கு முன் தொழுதார்கள்! இதன் அர்த்தம் தான் என்ன!? மனித அடிப்படை உரிமைகளை, தேவைகளை, சேவைகளை தமது தவறான சிந்தனை மூலம் கட்டுப்படுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள் தவிர அந்த அடிப்படை உரிமைகளை, தேவைகளை, சேவைகளை அல்ல!
#இஸ்லாம் எனும் புதிய சிந்தனையின் ஆதிக்க நியாயத்தை, ஷரீஆ எனும் அதன் அடிப்படை விதிகள் ஊடாக உரிமைகள், தேவைகள், சேவைகளை கட்டுப்படுத்துவது பற்றிய அரசியலை பிரகடனம் செய்தார்கள்! இதுதான் முதற்கட்டம் புரியப் படனும். பூச்சியத்தில் இருந்து தொடங்கும் எந்த எதிர் புரட்சியும் ஆதிக்க நியதியால் நிர்ப்பந்திக்க படுவதை வைத்து அதற்கு உடன்படுவதாக ஆகிவிடாது. குறைஷிகளின் சராசரியான விருந்துபசார செயலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயன் படுத்தினார் என்பது #தாருந்நத்வாவை ஏற்றார்கள் என்பதாக ஆகிவிடாது. அதே போல மின்சாரத்தை, குடிநீரை, இதற சேவைகளை பயன்படுத்துவது அதை நிர்வகப் படுத்தும் அரசை அங்கீகரிப்பதாக ஆகிவிடாது!
இந்தியாவில் மோடியின் அரசை முக்கால்வாசி முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள் வெறுக்கிறார்கள்; அதே நேரம் அந்த அரசின் அடிப்படை வழங்குகளை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் மோடி அரசின் சிந்தனையை ஏற்பதாக ஆகிடுமா!? அதுபோலவே அல்லாஹ் அருளாத ஒரு சிந்தனையின் கீழான ஜனநாயக அதிகார ஒழுங்கை நாம் எதிர்க்கிறோம்! தற்போது தவிர்க்க முடியாத அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவைகளை பயன்படுத்துகிறோம்!
#ஒரு முஸ்லிமின் வாழ்வியல் ஒழுங்கு என்பது ஹறாம் ஹலாலை அடிப்படையாக கொண்டது. அவன் எந்த இடத்தில வாழ்ந்தாலும் இதுவே அவனுக்கான முடிவு. அந்தவகையில் மனித மனோ இச்சையை, தான் தோன்றித் தனத்தை அடித்தளமாக கொண்ட முதலாளித்துவ ஜனநாயகத்தில் தீர்வுள்ளது என நம்புவதும் ஜாஹிலியத்தான ஒரு ஈமானிய கோளாறு என்பதில் சந்தேகமில்லை. சிந்தனை வீழ்ச்சியில் இருந்தே மேற்படி அடிப்படையற்ற கேள்விகள் பிறக்கின்றன.
As received from.
சகோதரர்.. Abdur Raheem
No comments:
Post a Comment