Saturday, May 9, 2009

இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
முன்னுரை :
இறை நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் “ (அல்குர்ஆன் 2:208) . ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாத்தின் அரசியல் கொள்கை
அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்” (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர். ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது. வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.

இந்திய அரசியல் கொள்கை
நமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பாகும். ஜனநாயகத்தின் ஆங்கில வார்த்தையான Democracy என்பது கிரேக்க சொல்லாகும். Demo என்றால் மக்கள் என்றும் Cracy என்றால் ஆட்சிமுறை என்றும் பொருள். எனவே ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சிமுறை என்று அர்த்தப்படும். ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் “மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆட்சி” (For the people, of the people, by the people). “ஜனங்களே அதன் நாயகர்கள்” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.

ஜனநாயகத்துக்கு முரணான ஜனநாயகம்
பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆதரவாக சொல்லப்படும் வாதமாகும். நடைமுறையில் நம் தேர்தல்களை பார்த்தால் மொத்த வாக்குகளில் 60% - 70% தான் பதிவாகும். பதிவான வாக்குகளில் சுமார் 30% - 35% வாங்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். எனவே சுமார் 30% மக்களின் அபிமானத்தை பெறும் ஒரு கட்சி 100% மக்களை ஆளுவது எப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக ஆக முடியும்?. உதாரணமாக இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்கள் இந்தியாவை ஆள்வதும், யூதர்கள் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் சக்தியாக விளங்குவதையும் பார்க்கலாம்.

(இந்திய) அரசியல் குறித்த அரசியல்வாதிகளின் பார்வை
ஜனநாயகம் தோன்றிய கிரேக்க நாட்டிலே அதை உருவாக்கிய தத்துவஞானிகள் கூட அதை “பலவீனமான ஊழல் நிறைந்த ஆட்சி முறை” என்றே குறிப்பிட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணா அவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது “ஜனநாயகம் எண்ணிக்கைக்கு மட்டுமே மதிப்பளிக்கும். திறமைக்கோ, தகுதிக்கோ மதிப்பளிக்காது. ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இந்தியாவின் தேசிய மிருகமாக புலிக்கு பதில் சொறி நாயையும் தேசிய பறவையாக மயிலுக்கு பதில் காகமும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்” என்றார். நமது பாரத முதல் பிரதமர் நேரு அவர்கள் கூட “அரசியல் என்பது கிரிமினல்களின் கடைசி புகலிடம்” என்று சொன்னார்கள். 60 ஆண்டுகள் கடந்தும் நிலை மாறவில்லை. வேண்டுமென்றால் கிரிமினல்களின் முதல் புகலிடமாக அரசியல் உள்ளது என கூறலாம். அதனால் தான் அறிஞர் காண்டேகர் சொன்னார் “ஜனநாயகத்தில் நீங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்களை விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது”.

இஸ்லாமுக்கும் இந்திய அரசியலுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பது ஜனநாயகத்தின் அடிப்படை நாதமாகும். “இறை தீர்ப்பே மக்களின் விருப்பம்” என்பதே இஸ்லாமின் கொள்கை. ஜனநாயகம் தனது சட்டங்களை மனித மூளையிலிருந்து பெறும் அதே வேளையில் இஸ்லாமோ வஹி மற்றும் தூதரின் வழிகாட்டலிருந்து மட்டுமே பெறுகிறது. ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை மக்களின் மனோ இச்சையிடம் ஒப்படைத்திருக்கும் போது இஸ்லாமோ இறைசட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை மட்டுமே மனிதனிடம் ஒப்படைத்திருக்கிறது. ஜனநாயகம் மதத்தையும் அரசியலையும் பிரித்து மதத்தை மனிதனின் தனிப்பட்ட வாழ்வுடன் முடக்கிவிடுகிறது. ஆனால் இஸ்லாமோ மனிதனின் முழு வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாய் மாறி விடுகிறது. ஜனநாயகம் எண்ணிக்கையை மட்டும் பிரதானமாக கருதும் போது இஸ்லாமோ நீதி வழங்குதலை பிரதானமாக வலியுறுத்துகிறது. எனவே மேலோட்டமாக தெரியும் ஒரு சில ஒற்றுமைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்று என்பதோ ஜனநாயகத்தை ஹலாலாக்குவதோ கொக்கும் பாலும் வெண்மை நிறம் என்பதற்காக கொக்கும் பாலும் ஒன்று என்பதற்கு ஒப்பானதாகும்.

பெரும்பான்மை குறித்து இந்திய அரசியலும் இஸ்லாமும்
இந்திய அரசியல் சட்டம் அல்லது ஜனநாயகம் பெரும்பான்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. 100 பேர் உள்ள சட்டமன்றத்தில் 51 பேர் ஒரு விடயத்தை ஆதரித்தால் அது சட்டமாகி விடும். அது நன்மை x தீமை, நியாயம் x அநியாயம், சரி x தவறு என்றெல்லாம் பிரித்து பார்ப்பதில்லை. மாறாக பெரும்பான்மையினர் ஆதரிப்பதால் இன்று நம் நாட்டில் மதுவும், விபசாரமும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதை பார்க்கின்றோம். இஸ்லாமோ மதுவை தீமைகளின் தாய் என்றும் விபசாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றது. ஏனென்றால் இஸ்லாம் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை x பெரும்பான்மை என்று பிரிப்பதில்லை. அதனால் தான் திருமறை “பெரும்பான்மையினரின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் வழி தவறி போவீர்கள் (அல் குர்ஆன் 6:116 ) என்று எச்சரிக்கின்றது. இந்த பெரும்பான்மை தான் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈராக்கில் கொன்றொழித்த புஷ்ஷையும், குஜராத் இனப்படுகொலை நடத்திய மோடியையும் அங்கீகரித்து மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறும் முறையும் இலட்சியமும்
எத்தகைய முஸ்லீம் தலைவராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் கூட இன்றைய சூழலில் குறைந்த பட்சம் சில இலட்சங்களை வாரி இறைக்க வேண்டியதுள்ளது. யாரும் சொந்த பணத்தை செலவு செய்து வெறும் சம்பளத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பதவியை கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்காதீர்கள்” (அபு மூஸா (ரலி) – புகாரி 2261). அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு நேர் முரணாக தனிநபர்கள் தங்களை வேட்பாளராக்க கட்சியை நெருக்குவதும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து வெற்றி பெறல் முஸ்லீம்களுக்கு ஹராமான ஒன்றே. நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் வாதத்திற்காக இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் இவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வேதத்தின் படி பைஅத் (உறுதிமொழி) செய்வதற்கு பதில் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற இறை நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் படியே பைஅத் செய்ய முடியும். இஸ்லாமிய அமைப்பில் “பைஅத்” செய்வதை விமர்சிக்கும் நாம் எப்படி இந்த பைஅத்தை சரி காண முடியும்?.

நடைமுறை உதாரணங்கள்
ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முடியும் என்று சொல்வோர் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளதை பார்க்கலாம். துருக்கி பிரதமர் எர்டகானின் மனைவியால் தலை முக்காடு அணிந்து பாராளுமன்றத்துக்கு வர முடியா நிலை தான் இன்றும் உள்ளது. அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சமூகத்தை மாற்றாமல், அடிப்படைகளை மாற்றாமல், வெறும் முகங்களை மாற்றுவது கொண்டு எம்மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். “யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் இவரின் கல்வி ஞானத்துக்காக துஆ செய்த திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வசனத்துக்கு கருத்து தெரிவித்த போது தன் தப்ஸீரிலே “ யார் இறைவனுடைய ஆட்சியை அமுல்படுத்த தேவையில்லை என்று கருதுகிறார்களோ, யார் மனித ஆட்சி இறையாட்சியை விட மேலானது எனக் கருதுகிறார்களோ, யார் இறையாட்சி போல் மனித ஆட்சியும் நன்மை பயப்பது என கருதுகிறார்களோ அவர் நிராகரிப்பாளர்” என்று சொன்னார்கள். மேலும் இன்று நம்மில் பலர் இறையாட்சியை தான் விரும்புகிறோம், ஆனால் இறைவன் இறக்காத சட்டத்தின் படியும் ஆட்சி செய்யலாம் என கருதுகிறோம். இப்படிப்பட்டவர்களையும் காபிர் (இறைநிராகரிப்பாளர்) என்றே குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவன் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை மறுக்கிறான். அவன் இறையாட்சியை மனித ஆட்சியை விட மேலானது என கருதினாலும் சரியே என குறிப்பிடுகிறார்கள்.

இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்
நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில் இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன் 9:31)எனும் வசனத்தை ஓதிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாங்கள் மஸீஹை வணங்கியது உண்மை. ஆனால் எக்காலத்திலும் தங்கள் பாதிரிமார்களை வணங்கியதில்லை என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன பதில் நாம் ஆழமாக யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.
இன்ஜீலில் ஒன்றை ஹலால் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹராமாக்கினால் ஹராமாக்கிக் கொண்டீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். இன்ஜீலில் ஒன்றை ஹராம் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹலாலாக்கினால் ஹலாலாக்கி கொண்டீர்களா ? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். உடனே நபி (ஸல்) தெளிவாக சொன்னார்கள் “ அப்படியென்றால் நீங்கள் அவர்களை உங்களுடைய இலாஹ்வாக எடுத்து கொண்டீர்கள் என்றார்கள்(திர்மிதி). மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் கிறித்தவர்களை இணைவைப்பாளர்கள் என்று சொன்னதற்கு காரணம் அவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கு சுஜுது செய்தார்கள் என்பதற்காகவோ, பிராத்தனை புரிந்தார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக இறைசட்டத்துக்கு மாற்றமான மனித சட்டத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதற்காகவே. பாதிரிகளின் சட்டங்களுக்கு அடிபணிதல் ஷிர்க் என்றால் நம் நிலை என்ன?. உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) எனும் வசனத்திற்கேற்ப பரிபூரணத்துவம் பெற்ற குர்ஆனை வைத்துக் கொண்டு அதற்கு மாறான சட்டங்களை நிலைநாட்ட போராட முனைந்தால் அது தெளிவான ஷிர்க்கேயாகும்.

இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது “குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்

இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
சமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது “அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானி அவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அறிஞர் அப்துர் ரஹீம் கீரின் அவர்கள் 2004-ல் சென்னையில் நடைபெற்ற PEACE கருத்தரங்கில் “இஸ்லாமும் ஜனநாயகமும்” எனும் தலைப்பில் பேசும் போது “இஸ்லாம் சொல்லும் கடமையை ஒருவர் செய்யத் தவறினால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் அவரது செயலை நியாயப்படுத்தினால் அவர் இஸ்லாத்தின் வரையறையை விட்டு வெளியேறியவராக கருதப்படுவார். உதாரணமாக ஒருவர் தொழவில்லையானால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் தொழுவது தேவையில்லை என்று வாதிட்டால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார். அது போல் ஒருவர் இஸ்லாத்துக்கு முரணாண மனித சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ நேரிட்டால் அவர் பாவியாக கருதப்படுவார். அவர் அந்த மனித சட்டங்களை ஆதரித்தால் அதை நியாயப்படுத்தினால் அதற்காக போராடினால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார்” என்றார். மேலும் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் “ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்று என்று யாராவது சொன்னால் ஒருவர் திருமணம் செய்யும் போது மஹராக பணம் கொடுக்கிறார், விபசாரத்துக்கும் பணம் கொடுப்பதால் இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கு சமமாகும்” என்று விளக்கினார்.

தீர்வுக்கான பாதை – இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை புரிந்து கொள்ளல்
நம்மில் இஸ்லாமிய அடிப்படையில் வாழ தலைப்படும் மனிதர்கள் கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் போது நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் கடமைகளை நிறைவேற்றினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கா வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக முஸ்லீம்கள் இருந்த போது பனூ அம்ரு பின் ஷாஷா எனும் ஒரு கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து “உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்கிறேன். ஆனால் நீங்கள் ஆட்சியை கைப்பற்றும் போது உங்களுக்கு பிறகு ஆட்சியில் எங்களுக்கு பதவியில் பங்கு வேண்டும்” என்று கூறுகிறார். ஆட்சியை கைப்பற்றுவது இருக்கட்டும் அடி விழுந்தால் கூட தடுப்பதற்கு ஆளில்லா நம்முடைய நிலையை விட மிக பலவீனமான அச்சூழலிலும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று சொன்னார்கள் (அத்தபரி, பிதாயா வன் நிஹாயா) என்றால் இஸ்லாம் ஆட்சி பீடம் ஏறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை உணரலாம்.

அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.

தியாகமும் மறுமை நம்பிக்கையும்
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.

முடிவுரை
”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக ஹராமான ஒன்றே என்பதை குர்ஆன், சுன்னா, ஸலபுகள், சமகால அறிஞர்கள் கூற்று படி பார்த்தோம்.
”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.
ஒவ்வொரு கற்களாய் கொண்டு
வந்து மாளிகை செய்வோம்
நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்
மார்க்கத்துக்கு உரமிடுவோம்
அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்
ஒன்று சேரும் போது
இன்ஷா அல்லாஹ் இறையாட்சி
எனும் கனவும் நனவாகும்.

ஆக்கம் : முஹம்மது ஃபெரோஸ்கான்

உறுதுணை நின்ற நூல்கள், இணையத்தளங்கள், குறுந்தகடுகள்
அல் குர்ஆன், குறிப்பிடப்பட்ட ஹதீஸ் நூற்கள் மற்றும்
1. இஸ்லாத்தின் அரசியல் கொள்கை – மெளலானா மெளதூதி – IFT, சென்னை.
2. அழைப்பின் நிலம் – ஹஜ்ஜுல் அக்பர் – அல்ஹஸனாத், கொழும்பு.
3. தவ்ஹீத் இஸ்லாத்தின் அடித்தளம் – பிலால் பிலிப்ஸ் – IIM, சென்னை.
4. http://www.islamicnetwork.com/
5. http://www.brothermahdi.tripod.com/
6. http://www.scribd.com/
7. http://www.themodernreligion.com/
8. http://www.adduonline.com/
9. http://www.khilafah.com/
10. Peace Conference CD 2004 – Islam and Democracy – Abdur Rahim Green, U.K.

Wednesday, May 6, 2009

அரசியல்

கதர்ச் சட்டையால்
மறைக்க முடியாத
அரசியல் நிர்வாணத்தை
இவர்கள்
கரை வேட்டியால்
மறைக்க முயன்று தோற்று
இறுதியில்…..
முந்தானையாலும்
மூடி மறைக்க
முடியாமல் போன சோகம்
ஆட்சியின் அவலம்.

வந்தாரை வாழவைக்கும்
தமிழகமே!
உடன் பிறவா பாசமும்
உடன் பிறப்பு பாசமும்
உன்னை உலுக்கும் வேகத்தில்
சராசரி மனிதனின் கனவு
சமாதி கட்டப்படுகிறது.

முத்தமிழ் வளர்த்த
மூத்த இனமே!
உனக்கு
மூன்றாம் தமிழின் மேல் மட்டும்
மீளாத மோகம்!
இல்லையெனில்
நடிப்பவருக்கு மட்டுமே
நாடாள அனுமதி கிட்டுமா?

திராவிட காய்ச்சலுடன்
தடுமாறிய நீ
வடக்கு வைத்தியத்தில்
விருந்தும் மருந்துமாய்
ஊசிப் போனதையே
உண்டு மகிழ்ந்து
வீசிப் போனாய்!
இனி உன்னிடம்
வீரத்தைப் பற்றி பேசுவது
வீண் வேலை!

அன்று-
புறமுதுகு காட்ட வைத்த
உன் போர் வாள்களையெல்லாம்
இன்று அவாளிடம்
கத்தரிக்காய் நறுக்கக் கொடுத்து
காத்திருக்கின்றாய்
துருப்பிடித்த பின்னாவது
தூக்கியெறிவார்களா என்று
பத்திரிக்கை அனைத்தும்
பாதங்களுக்கு அடியில்!
தொலைக்காட்சி வானொலி
தோப்பனார் சொத்து!
துயிலும் உனக்கு மட்டும்
தொடர்ச்சியாய் தாலாட்டு!

விழித்து விடாதே!
விழித்து விட்டால்
விபரங்கள் புரிந்துவிடும்
புரியாதவரை
எல்லாம் இலவசம்!

சேலை
வேட்டி
பானை
சத்துணவு
சாராயம்
திருமணம்
தீக்குளிப்பு
அனைத்தும் இலவசம்!

ஆனால்....
உன் ஓட்டுக்கு மட்டும்
கரும்பு தின்ன கூலி!

ஜனநாயகத்தில்
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்

வாழ்க ஜனநாயகம்!
வெல்க அரசியல்
பாவம் மக்கள்

நன்றி : அஹ்மது கபீர் பார்வை மே 2006

ஆகவே தங்கள் பொன்னான வாக்குகளை…

மீண்டும் ஒரு தேர்தல்.

யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது நாம் என தெளிவாக தெரிந்திருந்தும் திருவாளர் பொதுஜனத்தின் மனதில் ஒரு பரவசம். ஜனநாயகத்தில் நீங்கள் விரும்புபவர் ஆட்சிக்கு வரலாம். ஆனால் உங்களை விரும்புபவர் ஒரு போதும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற உண்மையை உணர்ந்திருந்தாலும் தெருக்கூத்தை பார்ப்பது போல் தேர்தல் கூத்தை பார்ப்பதிலும் நமக்கு ஒரு அலாதி பிரியம்.

ஆனாலும் இந்த ஜனநாயகத் தேர்தல் முறைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை தொடர்ந்து சரிந்து வரும் வாக்குப் பதிவின் மூலம் விளங்கி கொள்ள முடிகிறது.

1984 73.57
1989 69.44
1991 63.83
1996 62.17
2001 59.07

இவ்வாறு 73.57 சதவிகிதமாக 1984ல் இருந்த வாக்குப்பதிவு 2001ல் 59.07 சதவிகிதமாக குறைந்திருப்பதிலிருந்து மக்கள் எந்தளவுக்கு (ஏ)மாறி இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இந்த ஜனநாயக தேர்தல் முறையில் நல்லவர்கள் நிற்க முடிவதில்லை. நின்றாலும் வெல்ல முடிவதில்லை. வென்றால் அவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். காண்டேகர் சொன்னது போல் ஒரே ஒரு அயோக்கியனை சமாளிக்க நேர்ந்தால் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிக்க நேர்ந்தால் அது ஜனநாயகம் என்பது உண்மையாகி விடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். நயவஞ்சகனின் அடையாளத்தை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், அமானிதத்தை மோசடி செய்வான் என்றார்கள். முஸ்லிம்களிடையே இருக்கும் நயவஞ்சகர்களை பற்றி கூறி இருந்தாலும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தி வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் முஸ்லிம்களின் பணி என்னவாக இருக்க முடியும்? இந்த ஜனநாயக முறையில் மக்களின் சட்டங்கள்தான் அலங்கோலமாக அரங்கேறும். வலுத்தவனுக்கு ஒரு நீதி, இளைத்தவனுக்கு ஒரு நீதி இங்கு சாதாரணம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தந்த வழிமுறையில் நம்மை படைத்;த இறைவனின் சட்டங்கள்தான் நம்மை ஆள வேண்டும். இந்த இறைச்சட்டங்கள் கோலோச்சும்போது அனைத்து மனிதர்களுக்கும் நீதி கிடைக்கும், நிம்மதி கிட்டும்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை கூறினார்: ஜனநாயகம் என்பது மோசமான ஒன்று. ஆனால் மற்ற கொள்கைகள் அதைவிட மோசமானவை. இஸ்லாமிய வழிகாட்டுதலை அவர் அறிந்திராத காரணத்தால் இவ்வாறு கூறியிருப்பார். இறைவனால் அருளப்பட்ட சிறந்த மார்க்கமான இஸ்லாத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இதனை நாம் அரசியல் உட்பட வாழ்வின் அனைத்து துறைகளிலும் பின்பற்றினால் வாழ்வில் ஏற்படும் ஒளிமயமான வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

புராக் நதிக்கரையில் ஒரு ஆடு தொலைந்து போனாலும் நான் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என அஞ்சுகிறேன் என இறை நம்பிக்கையால் வார்க்கப்பட்ட உமர் (ரழி) அவர்களின் ஆட்சி வேண்டுமா? நிவாரணம் வழங்கும்போது நெரிசலில் சிக்கி மக்கள் இறந்த போதும் ஒருவருக்கொருவர் பழியை மாற்றி போட்டு அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் தேவையா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். நாளுக்கொரு கொள்கை, ஆளுக்கொரு வேஷம் என மக்களை ஏமாற்றும் நயவஞ்சக அரசியலை மக்கள் தெளிவாக விளங்கி வருவதால், நாம் இறைச் செய்தியை எடுத்துரைக்கும்போது இன்ஷா அல்லாஹ் மக்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள்.

எனவே இனியும் ஸாமிரிக்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்காமல் சத்திய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம். அல்லாஹ் உதவி செய்வானாக.

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். – 29:69

நன்றி : அபூஹாரித், பார்வை மே 2006

நடு வீதி கண்ட நடுநிலை சமுதாயம்

அங்கங்கே ஒலி பெருக்கிக் குழாய்கள்
கருப்பும், சிகப்பும்,
வெள்ளையும், பச்சையும்,
புலியும், பிறையுமாய்
கொடிகளின் கோலாகலங்கள்
எங்கு நோக்கினும்
கேளுங்கள் தரப்படும் என்ற கோஷமும்
சில திக்குகளில் கேட்காமலே தரப்படும் என்ற சப்தமும்..
கேட்பதற்க்கு வேறென்ன இருக்கிறது
என்பதாய் ஆன்ந்த வெள்ளத்தில் அழுத்திப் பிடித்தது..

திடீரென்று ஒரே சமயத்தில்
பாரினில் அனைவருமே பாரி வள்ளலானார்கள்..
கரை வேட்டிகளின் அக்கறை..
பார்டர் புடவைகளின் பரிவு
அம்மாக்களின் அனுசரனை
ஐயாக்களின் அதிரடி அறிவிப்பு..
திடீரென்று ஒரே சமயத்தில்
பாரினில் அனைவருமே பாரி வள்ளலானர்கள்..

தடுமாறித்தான் போனோம்..
அன்பும்.. ஆறுதலும்
அறிவிப்பும் ஆர்ப்பரிப்பும்
சுனாமி அலையாய் சுருட்டிப் போட
தடுமாறித்தான் போனோம்.

நமக்குள்ளே பட்டி மன்றம்..
தொலைக்காட்சியா.. தாலிக்கொடியா..
ரெண்டு ரூபாயா.. ஒன்னேமுக்கால் ரூபாயா
சிங்கமா.. புலியா
மூஞ்சில் குத்தா..? முதுகில் குத்தா..?

திடீரென்றோ.. தேர்ந்தெடுத்தோ..
முடிவெடுத்தொம்.. இனி இவருக்குத் தானென்று
நாம் தான் நடுநிலை சமுதயமயிற்றே
நடு நிலையின் நடுவே
நடு நிலையோடு நம்மை
கூறு போட்டு பிளந்து
ஆளுக்கொரு கூட்டணியை
அணைத்துக் கொண்டோம்..

எனக்கு தொலைக்காட்சி..
உனக்கு தாலிக்கொடி..
எனக்கு இரண்டு ரூபாய்
என்க்கு முதுகு.. உனக்கு மூஞ்சி

அன்று முதல்..
நாம் அரும்பாடு பட்டு உழைத்து கிடைத்த
அத்தனைத் தொலைக்காட்சி ஸ்லாட்டுகளும்
தூள் கிளப்பத் தொடங்கியது..

உன்னை தெரியாதா எனக்கு..
உன் வண்டவாளம் தெரியாதா..?
அவன் ஏன் மாலை போட்டான்..
நீ ஏன் ஆதரவு கொடுத்தாய்
இரவு பகலாக உழைக்கவும் தயார்..
இன்னுயிரைக் கொடுக்கவும் தயார்..

இந்த சகோதரனுக்கு..
அம்மா வந்தால்..
காயல் பட்டினத்து முஸ்லிம்களை
சித்திரவதை செய்தது சரி தான்..
கோவையில் அப்பாவிகளை
தடாவில் போட்டு உருட்டியது சரி தான்..
கரசேவைக்கு தன் கட்சி
ஆட்களையே அனுப்பியது சரி தான்..
தலித் முஸ்லிம் என்று
தனி முத்திரை தந்தது சரி தான்..
மோடிக்கு போர்வை போர்த்தி
பாராட்டியது கூட
சரிதான்.. சரிதான்.. சரியேதான்..



அந்த சகோதரனுக்கு..
ஐயா வந்தால்..
தாம்பரத்தில் பள்ளி இமாம் மீது
தடியடி நடத்தியது சரி தான்..
கோவையில் போலீஸ்காரர்களுக்கு
துணை போனது சரி தான்..
முஸ்லிம் தீவிரவாதிகளென்று
முத்திரை குத்தியது சரி தான்..
குஜராத் அரசைக் கலைக்காமல்
ஒத்தாசையாய் இருந்தது கூட
சரிதான்.. சரிதான்.. சரியேதான்..

தேர்தல் முடிந்து விட்டது..
முடிவும் தெரிந்து விட்டது..
ஜனநாயக நாயகன் தேர்வாகி விட்டான்..
எதிரி.. எதிர்கட்சியில் அமர்ந்து விட்டான்..
கோஷம் போட்ட மனிதன்
ஓய்ந்து விட்டான்..
ஒலிப்பெருக்கியும், கலர் கொடிகளும் கழன்று
அடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு
அடுக்கி வைக்கப்பட்டன..

அல்லாஹ் அனுமதித்த சட்டம்..
அவன் தூதர் காட்டித்தந்த வாழ்க்கை..
நமக்கு எட்டாக்கனி.. கஷ்டக்கனி..
நமக்குத் தான்
இரண்டாம் அத்தியாயத்தின்
இருநூற்றி ஐம்பத்தறாம் வசனம் போதுமே..


இழிவாம் ஜனநாயக அசிங்கத்தைக் காக்க
இன்னுயிரையும் மாய்த்து மகிழ்வோம்.

சகோதர மாமிசத்தோடு நம் படைப்பின்
நோக்கத்தையும்
சேர்த்துச் சுவைப்போம்..
ஏப்பம் எக்காளம் ஊதும் வரை
சப்தமாய் வரும்..!!

நன்றி : பார்வை மே 2006

Sunday, May 3, 2009

அதிகாரம் அல்லாஹ்வுக்கே

நம்மையும் இந்த உலகத்தையும் ஒரே இறைவன் தான் படைத்துள்ளான். இந்த உலகம் தானாகவே தோன்றியது என்று சொல்வது அறிவுக்குப் பொருந்தாத செயல். யாராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகத்தில் எந்தப் பொருளும் தானாக உண்டாகிவிட முடியாது. அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய உலகமும் அதில் உள்ள கோள்களும் கிரகங்களும் தானாகவே உண்டாகிவிட்டன என்று சொல்வது உண்மைக்குப் மாற்றமானது.
இந்த உலகத்தையும் இதில் உள்ள பொருள்களையும் உண்டாக்கிய ஒரு சக்தி இருக்கின்றது. அது மாபெரும் சக்தி. அந்த சக்தியைத்தான் அந்த ஆற்றலைத்தான் நாம் 'இறைவன்' என்று சொல்கிறோம்.

இறைவன் என்ற சொல்லைத் தான் அரபி மொழியில் 'அல்லாஹ்' என்று சொல்கிறார்கள். இந்த உலகம் எப்படி உண்டாகியிருக்கும்? இந்த உலகத்தை யார் படைத்திருப்பார்கள்? என்ற கேள்வி உலகத்தில் வசிக்கின்ற எல்லா மனிதர்களுடையு உள்ளத்திலும் எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலை உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவனுக்கு தருகின்றன.
'உன்னையும் எங்களையும் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான்'என்று அவை அனைத்தும் சொல்லிக் கொண்டுள்ளன. இந்தக் கேள்விக்கான பதிலை மனிதன் வெளியே தேட வேண்டிய அவசியமேயில்லை. அவனுடைய உடம்பிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. அவனுடைய உள்ளமே இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிக் கொண்டு உள்ளது.
ஊலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களும் நீதியை நேசிக்கிறார்கள். நேர்மையை விரும்புகிறார்கள். உண்மையே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மனிதனுடைய மனம் இவற்றை எல்லாம் இயல்பாகவே விரும்புகின்றது. அதைப் போலத்தான் மனிதனுடைய மனதில் ஓர் இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்றது. எல்லா மனிதர்களுடைய உள்ளமும் 'ஒரே இறைவனையே வணங்கு' என்று சொல்லிக் கொண்டே உள்ளது.

குழந்தைகளைப் பாருங்கள், அவர்கள் பொய் பேசுவதில்லை. யாரையும் ஏமாற்ற நினைப்பதில்லை. உண்மையான மனிதனைப் பார்க்க ஆசைப்பட்டால் குழந்தைகளைத்தான் பார்க்க வேண்டும். 'பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளுடைய தாய் - தந்தையர்தாம் அக்குழந்தைகளை யூதர்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ மாற்றுகிறார்கள்' என்று இறைவனின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒரே இறைவனையே வணங்கு

நம்மையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும் படைத்து பாதுகாத்து வருகின்ற ஒரே இறைவனை வணங்குவது நம் அனைவரின் மீதும் கடமையாகும். நும்மைப் படைத்ததோடு நின்று விடாமல் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். இந்த உலகத்தையும் இதில் உள்ள அனைத்துப் பொருள்களையும் நமக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைத்துள்ளான். அப்படிப் பட்ட இறைவனை ஒரே அல்லாஹ்வை வணங்கி வழிபடுவது நம்மீது கட்டாயக் கடமையாகும்.
இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம்நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா?படைத்தவன் என்ற அடிப்படையில் நம்மையும் மற்ற எல்லா ஜீவராசிகளையும் உணவு கொடுத்து காப்பாற்றுவது இறைவன் மீது கடமையாகும். அதை அவன் தனக்குத்தானே கடமையாக ஆக்கிக் கொண்டுள்ளான்.
அதைப் போலவே அவனை மட்டுமே வணங்குவதும் அவனைத் தவிர வேறு யாரையும் இறைவனாக நினைக்கதமல் இருப்பதும் நாம் அவனுக்கு செய்தாக வேண்டிய கடமையாகும்.

இறைவனுடைய வழிகாட்டுதல்

மனிதனைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அவன் இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்றும் இறைவன் வழிகாட்டியுள்ளான். அந்த வழிகாட்டுதலைத் தான் நாம் 'இஸ்லாம்' என்று சொல்கிறோம். அவனையே இறைவனாக ஏற்றுக் கொண்டு அவன் காட்டிய வழிமுறைப்படி இந்த உலகத்தில் நாம் வாழவேண்டும். அந்த வழிகாட்டுதலைச் சொல்லி கொடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், இறைவனுடைய தூதர்கள் வந்துள்ளார்கள். தம்மோடு இறைவனுடைய வேதத்தையும் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
தான் படைத்த மனிதன் வழிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தொடர்ந்து தன்னுடைய தூதர்களை அனுப்பிக் கொண்டே வந்துள்ளான். இறைவனுடைய மிக்பெரிய கருணையாகும் இது‚

ஓர் அடிமை எப்படி இருக்கவேண்டும்?

நாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள். அவனுடைய அடிமைகள். அவன் என்ன சொல்கிறானோ அதனை அப்படியே செய்யக் கடமைப்பட்டவர்கள்.
துன்னுடைய எஜமானன் சொல்வதை அடிமை செய்ய வேண்டும். எஜமானனுக்கு எதிராக தன்னுடைய இஷ்டப்படி செயல்படுபவன் நல்ல விசுவாசமான அடிமையாக இருக்க முடியாது. அவன் துரோகியாகவே கருதப்படுவான். நுல்ல அடிமை தன்னுடைய எஜமானனுடைய மனம் கோணாமல் நடந்துகொள்வான். அவன் விரும்பிய படியே எல்லா காரியங்களையும் செய்வான். அவனை சந்தோஷப் படுத்துவதையே தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருப்பான்.

அடிமை என்பதை அரபி மொழியில் 'அப்து' என்று சொல்கிறார்கள். நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள். அதாவது 'அப்துல்லாஹ்கள்', அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் என்ற பெயர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும் என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
ஓர் அடிமை தன்னுடைய எஜமானனுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருக்கவேண்டும். அதனை நாம் 'அடிமைத்தனம்' என்று சொல்கிறோம். அரபியில் அடிமைத்தனம் என்பதை 'இபாதத்' என்று சொல்கிறார்கள்.

இபாதத் என்றால் என்ன?

இபாதத் என்றால் அடிமைத் தனம். ஒரு அடிமை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி நாம் இருந்தால் தான் உண்மையான அடிமைகளாக நம்மை அல்லாஹ் அங்கீகரிப்பான். நாளெல்லாம் பொழுதெல்லாம் அவனுக்கு கட்டுப்பட்டு அவன் சொன்னதைக் கேட்டு நடக்க வேண்டும். நாமாக நம்முடைய மனம் சொல்கிறபடி நடக்க முயற்சி செய்யக் மூடாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவன் தான் உண்மையான அடிமை. அவனிடம்தான் முழுமையான அடிமைத்தனம் இருக்கின்றது.
அல்லாஹ்வின் வேதமான குர்ஆனில் இது தான் சொல்லப்பட்டுள்ளது.
'மனிதர்களையும், ஜின்களையும் என்னை 'இபாதத்' செய்வதற்காக அன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை‚' (அல்குர் ஆன். 51:00)
இபாதத் என்பதை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம்.
தொழுவது, நோன்பு வைப்பது, ஜகாத் கொடுப்பது போன்றவற்றையே நாம் இபாதத் என்று நினைக்கிறோம். இந்த குர்ஆன் வசனத்தில் 'இப்hதத் செய்வதற்காகத்தான் நான் மனிதனை படைத்துள்ளேன்' என்று இறைவன் சொல்கிறான். இந்த மாதிரி தொழுவது, நோன்பு வைப்பது மட்டும் தான் இபாதத் என்றால் இதை 24 மணிநேரமும் செய்து கொண்டிருக்க முடியுமா? அன்றாடம் 24 மணிநேரமும் தொழுது கொண்டிருக்க முடியுமா? வாரம் ஏழு நாளும் மாதம் முப்பது நாளும் நோன்பு வைக்க முடியுமா? சம்பாதிக்கின்ற பணத்தை எல்லாம் ஜகாத் கொடுக்கமுடியுமா? கண்டிப்பாக நம்மால் இவ்வாறு செய்ய முடியாது. அப்படி என்றால் இபாதத் என்று பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்று புரிகிறது.

சரி, இபாதத் என்றால் என்னதான் பொருள்?
நம்மைப் படைத்த இறைவன் நாம் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டியுள்ளான் என்று முதலிலேயே பார்த்தோம். நாம் எப்படி தூங்குவது, எப்படி எழுவது, எப்படி கழிப்பிடம் செல்வது? எப்படி பல் துலக்குவது என்று தொடங்கி எப்படி சம்பாதிப்பது? எப்படி செலவு செய்வது? எப்படி தொழில் நடத்துவது? எப்படி குடும்பம் நடத்துவது என்று எல்லாவற்றையும் இறைவன் கற்றுக் கொடுத்துள்ளான்.
அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் இறைவனின் தூதர்கள் வந்துள்ளார்கள்.
நம்முடைய வாழ்க்கையில் அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் தான் நாம் உண்மையான அடிமைகளாக இருக்கமுடியும்.

ஷைத்தான் எனும் விரோதி

முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுத்து சிறப்பித்த போது அதை சகித்துக் கொள்ள முடியாத ஷைத்தான் ஆதமுடைய விரோதியாக மாறினான். ஆதமுக்கு மட்டுமல்ல, முழு மனித குலத்திற்கே விரோதியாக மாறினான். 'உன்னுடைய அடியார்களை உனக்குக் கட்டுப் படாதவாகளாக ஆக்குவேன். அவர்களை வழிதவற வைப்பேன். ஊன்னுடைய கோபத்துக்கு ஆளாக்குவேன். நரகத்திற்கு கொண்டு போய் சேர்ப்பேன்‚' என்று அவன் அல்லாஹ்விடமே சவால் செய்தான். அதற்கான கால அவகாசத்தை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொண்டான.
'உங்களை நேர்வழியில் செல்லவிடாமல் ஷைத்தான் தடுப்பான். வுழிதவற வைப்பான். எனக்கு மாறு செய்யுமாறு தூண்டுவான். அவனுடைய பேச்சைக் கேட்டு நடந்தால் வழிகெட்டுப் போவீர்கள். நரகத்திற்கு போய் விடுவீர்கள்' என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை எச்சரித்துள்ளான்.

சிலைகள் பிறந்த கதை

நம்மை எப்படியாவது வழிகெடுக்க வேண்டும், அல்லாஹ்சுடைய கோபத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பது தான் ஷைத்தானடைய குறிக்கோள். நேராக நம்மிடம் வந்து 'இஸ்லாமைப் பின்பற்றாதீர்கள் ‚ அல்லாஹ்வுடைய அவனுடைய தூதர்களுடைய பேச்சைக் கேட்காதீர்கள்‚' என்று சொல்லமுடியுமா? சொன்னால் தான் நாம் கேட்போமா? கேட்க மாட்டோம் அல்லவா?
ஆதற்காக ஷைத்தான் ஒரு திட்டம் தீட்டினான். மனிதர்களிடம் வந்து சுற்றி வளைத்துப் பேசினான்.
மனிதர்களில் சான்றோர்களாக வாழ்ந்த நல்லடியார்கள் இறந்தவுடன், பிற மனிதர்களிடம் வந்து அவர்களைப் பற்றி விசாரித்தான். அ'அவர்கள் அனைவரும் இறையடியார்கள். இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் சம்பாதித்துக் கொண்ட தூயவர்கள்' என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
'அப்படியென்றால், நீங்கள் அத்தகைய நல்லவர்களை அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அல்லவா?' என்ற கேள்வியை எழுப்பினான்.
'ஆம், நாங்கள் அடிக்கடி அவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்கள் அவர்கள்.
'உங்களுடைய பிள்ளைகளிடம் அவர்களைப்பற்றி சொல்வது இல்லையா?' என்று கேள்விக்கு தாவினான்.
'கண்டிப்பாக சொல்கிறோம். அவர்களைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறி அவர்களைப் போன்றே வாழவேண்டும் என்று போதிக்கிறோம்' என்றார்கள் மக்கள்.
'வெறுமனே வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அவர்களுடைய உருவங்களை சித்திரங்களாக தீட்டி வைத்துக் கொண்டு அவற்றை எடுத்துக் காட்டி கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? என்று ஒரு ஆலோசனையை முன் வைத்தான்.
அவனுடைய ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். உருவப்படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். அவற்றைச் சுட்டிக் காட்டி தம்முடைய பிள்ளைகளிடம் அந்த நல்லடியார்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள்.
அந்த சித்திர சீலைகள் கொஞ்ச நாட்களுக்குள் சாயம் மாறிப் போய் அழியத் தொடங்கின. மறுபடியம் வரைய வேண்டியிருந்தது. இப்படி அடிக்கடி அவற்றை வரையவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப் பட்டார்கள்.
'நான் ஒரு நல்ல ஆலோசனையை தருகிறேன்' என்று சொல்லியவாறு ஷைத்தான் மறுபடியும் வந்து சேர்ந்தான். 'சித்திரங்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் சிலைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது?' என்று அற்புதமான ஆலோசனையை வழங்கினான். 'அவை சீக்கிரத்தில் அழியாது. சாயம் போய் விடுமோ என்று கவலைப்படவேண்டியதில்லை. சிறிய அளவில் செய்து வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்' என்று செய்முறையையும் சொல்லித் தந்தான். மதிகெட்ட மக்கள் அவனுடைய பேச்சை நம்பி சிலைகளைச் செய்தார்கள்.
கொஞ்ச நாள் கழித்து மறுபடியம் 'வழிகாட்ட' வந்தான். 'வீடுகளில் வைப்பதைவிட சிலைகளைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தால் இன்னும் சிறப்பு. அடிக்கடி அவற்றைப் பார்க்க முடியும். பார்க்கும் போதெல்லாம் அவர்களுடைய ஞாபகம் நெஞ்சில் நிழலாடும். அவர்களைப் போன்றே மாறவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்' என்றான். ஆவ்வாறே மக்கள் அவற்றைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தார்கள். அந்தச் சிலைகளுக்கு முன்னால் நின்று அவர்களுடைய அருமைபெருமைகளை தம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
சிலைகள் பிறந்த கதை இதுதான் ‚ இப்படித்தான் மனிதர்களிடையே சிலைவணக்கம் பரவியது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களடைய காலத்தில் நடந்தது இது. அந்த மக்களை வழிப்படுத்த நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன்னுடைய தூதராக அனுப்பி வைத்தான்.
நம்முடைய நாட்டில் இன்றும் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்க முடியும். சுpலைகளை வணங்காதே என்று சொன்ன பெரியாருக்கும் சிலை உள்ளது. பிறந்த நாள், இறந்த நாளின் போது பூக்களைச் சாற்றி 'அஞ்சலியும்' செலுத்தப்படுகின்றது.

இஸ்லாமும் ஜாஹிலிய்யது;தும்

மனிதன் உலகத்தில் இரண்டு விதங்களில் வாழலாம். ஒன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது. அதற்குப் பெயர் இஸ்லாம். இன்னொன்று இறைவனுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய இஷ்டப்படி வாழ்வது. அதற்குப் பெயர் ஜாஹிலிய்யத்.
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுதான் நேர்வழி. ஆதன் மூலம் சொர்க்கம் கிடைக்கும். கட்டுப்பட்டு வாழாவிட்டால் வழிகேட்டுப் பாதையில் சென்றால் நரகம் கிடைக்கும்.
நேர்வழிக்கு வாருங்கள் என்றுதான் அனைத்து இறைத்தூதர்களும் அழைத்துள்ளார்கள். அவ்வழியில் போகாதே என்று ஷைத்தான் தடுத்துக் கொண்டே உள்ளான்.
நேர்வழியின் பக்கம் அழைப்பது மு‡மின்களுடைய வேலை‚ அவ்வழியில் இருந்து விலக்குவது ஷைத்தான்களுடைய வேலை‚

ஒன்றா, இரண்டா சிலைகள்

மனிதனை நேர்வழியில் செல்லவிடக்கூடாது என்பதுதான் ஷைத்தானுடைய நோக்கம். எப்படியாவது எதையாவது செய்து மனிதர்களை நேர்வழியிலிருந்து வெளியே இழுத்துவிட வேண்டும் என்று அவன் கடும் முயற்சி செய்கிறான்.
மனிதர்கள் சிலைகளை வணங்குமாறு ஷைத்தான் செய்தான் என்று பார்த்தோம். எப்போதும் ஒரே சிலையை வணங்கச் செய்ய முடியுமா? வுத், ஸுவா‡,யஊஸ் என்பன நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் மக்கள் வணங்கிய சிலைகளின் பெயர்கள். ஆந்த மக்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடன் அந்த சிலைகளும் அழிந்துவிட்டன. கொஞ்சகாலம் கழித்து வேறு பகுதிகளில் வசித்த மக்களிடம் போய் ஷைத்தான் சிலைகளை அறிமுகப்படுத்தினான். அவை வெறு சிலைகள்.
இந்த குறிபிபட்ட சிலைகளையே மக்கள் வணங்கவேண்டும் என்படிதல்லாம் ஷைத்தானுடைய நோக்கம் கிடையாது. மனிதர்கள் அல்லாஹ்வுடைய வழியில் போகக் கூடாது என்பது ஒன்றுதான் ஷைத்தானுடைய நோக்கம்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் மக்கள் 'நன்னார்' என்ற சிலையை வணங்கினார்கள். முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற சிலைகளை வணங்கினார்கள். இந்தியாவில் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினார்கள். அப்புறம் காளியை வணங்கினார்கள். ஆப்புறம் சிவனுக்கு கணேஷ் என்ற மகன் பிறந்தான். அவனை வணங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள சிவனுக்கு முருகன் என்ற மகனும் பிறந்தான். அவன் பிறந்ததே வடநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வேனை வணங்கினார்கள். சிலைகளை வணங்காதீர்கள். அது மூடநம்பிக்கை என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரச்சாரம் செய்தார். அவருக்கும் மக்கள் சிலை வைத்தார்கள். கொஞ்சநாளில் அவருடைய பிறந்த நாளன்று மாலைகளை சூட்டத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அவரையும் வணங்குவார்கள்.
நேர்வழி எது? வழி கேடு எது? என்பதை முஹம்மது நபி ஸல்லலாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு முறை வரைபடம் ஒன்றை வரைந்து காட்டி விளக்கினார்கள்.
நேர்க்கோடு ஒன்றை வரைந்தார்கள். அதன் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு குறுக்குக் கோடுகளை வரைந்தார்கள். நேர்க்கோடு என்பது நேர்வழி. இறைவனின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வழி. குறுக்குக் கோடுகள் அனைத்தும் நேர்வழியை விட்டும் வெளியே இழுக்கின்ற ஷைத்தானுடைய முட்டுச் சந்துகள்.
இறைவனும் இறைத்தூதர்களும் காட்டிய முறைப்படி சற்றும் மாறாமல் இங்கும், அங்கும் விலகிவிடாமல் நேர் இலக்கில் தொடர்ந்து செல்வது தான் நேர்வழி. இது சொர்க்கத்திற்கு போய்ச் சேருகின்றது. இந்த வழியில் செல்லவிடாமல் தடுப்பது தான் ஷைத்தானுடைய வேலை. நீங்கள் பயணத்தை ஆரம்பித்த இடத்திலிருந்து உங்களை வழிகெடுக்க அவன் முயற்சிக்கிறான்.
ஒரு சிலரை ஆரம்ப கட்டத்திலேயே வழி கெடுத்து விடுகிறான். கொஞ்சம் பேரை சற்று தூரம் போகவிட்டு வழிகெடுக்கிறான். இன்னும் கொஞ்சம் பேர் உறுதியோடு பயணத்தைத் தொடருகிறார்கள். ரொம்ப தூரம் போனபிறகு அதையும் இதையும் செய்து அவர்களை வழிகெடுத்து விடுகிறான். இன்னும் கொஞ்சம் பேரோ கடைசிவரை வெற்றிகரமாக போய் விடுகிறார்கள். எல்லையைத் தொட்டு விடுவார்கள் என்ற நிலைமையில் அவர்களை ஷைத்தான் வென்றுவிடுகிறான்.

சிலைகளின் நவீன வடிவங்கள்

'அல்லாஹ்வை வணங்காதே‚ சிலைகளை வணங்கு‚' என்று சொன்ன போது அந்தக் கால மக்கள் கேட்டார்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை வணங்கத் தொடங்கினார்கள். இந்தக் காலத்தில் போய் முருகனை வணங்கு. முனியம்மாவை வணங்கு என்று சொன்னால் யாராவது வணங்குவார்கள? கல்லால் ஆன சிலைகளை வணங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஏறக்குறைய எல்லா மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். சிலைகளை தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்ற இந்துக்கள் கூட அவற்றின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. தங்களுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் சிலைகளை கைவிட்டு விடுகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து மனிதனுடைய அறிவு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. காக்கின்ற தெய்வம் முருகன் என்றால் அவன் உலக மக்கள் எல்லோரையும் காக்க வேண்டுமில்லையா? பழனியிலேயே குடி யிருந்தால் எப்படி? விஷ்ணு பகவான் அமெரிக்காவில் ஏன் அவதாரம் எடுக்கவில்லை? அங்குள்ள மக்களை எல்லாம் பிரம்மா படைக்கவில்லை? வேறு ஏதேனும் கடவுள் அவர்களை படைத்திருக்கிறாரா? அப்படி என்றால் அவர் யார்? என்றெல்லாம் இன்றைய இந்துக்கள் யோசிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்களிடம் போய் 'சிலைகளை வணங்குங்கள் ‚' என்று ஷைத்தானால் சொல்ல முடியுமா? முடியாதல்லவா? ஆகையால், காலத்திற்கு ஏற்ற மாதிரி ஷைத்தான் வேறு ஒரு புதிய கொள்கையைக் கண்டு பிடித்தான்.
'உலகத்தையும் உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளையும் யாருமே படைக்கவில்லை‚' என்பதே அந்தக் கொள்கை‚ கடவுள் மறுப்புக் கொள்கை. சிலைகளை வணங்குவது மடத்தனம். அறியாமை என்று சொன்னவர்களும் அதைத் தீவரமாக எதிர்த்தவர்களும் கடவைள மறுத்தார்கள். நுpராகரித ;தார்கள். கடவுளைப் படைத்தவன் அயோக்கியன்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
'இந்த உலகத்தை யாருமே படைக்கவில்லை. அது தானாகவே தோன்றி விட்டது. உலகத்தில் உள்ள உயிரினங்களும், ஜீராசிகளும் சுயமாகத் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று பரிணாமம் அடைந்து மனிதன் போன்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளன. கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம்‚' என்று கடவுள் மறுப்புக் கொள்கைக்காரர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடவுளை நம்பினால் வீட்டோடு வைத்துக் கொள்'

கடவுள் நம்மைப் படைக்கவில்லை என்றாகிவிட்ட பிறகு, கடவுளுடைய வேதம், கடவுளுடைய தூதர் என்று சொல்லி பிதற்றிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் வணங்கும் கடவுளை உங்களுடைய வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்‚ வீதிக்கு கொண்டு வராதீர்கள்‚ கடவுளுடைய சட்டம், கடவுளுடைய கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்‚' எனறு அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஷைத்தான் சொல்கிறான்.
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை வளர்த்தால் தான் இறைவனுடைய வழியில் செல்லாமல் மக்களைத் தடுக்கமுடியும் என்பது ஷைத்தானுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், இந்த இறை மறுப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மக்களை ஆக்குவதில் அவன் பெருமளவு வெற்றி பெற்றுள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படியும் மக்கள் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றால், அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு முன்வைக்கப்படுகிறது. 'கடவுள் நம்பிக்கை என்பது தனிபநர் சார்ந்த விஷயம்‚ நீங்கள் கடவைள நம்புகிறீர்கள் என்றால், உங்களது நம்பிக்கையை வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். வீதிக்கு கொண்டு வராதீர்கள். மக்களோடான கூட்டு வாழ்க்கையில் சமூக வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விரும்பாதீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், சம்பாத்தியம், வருமானம், நாட்டு நிர்வாகம் போன்ற விஷயங்களில் கடவுளுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. இவற்றை எல்லாம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம் ‚' இதுதான் முன்வைக்கப்படுகின்ற வாதம்.
இந்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகத்தில் உள்ள எல்லா கொள்கைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. மக்கள் பெரிதும் போற்றிக் கொண்டாடுகின்ற கொள்கைகளான ஜனநாயகம், தேசிய வாதம், மக்களாட்சி, பொது உடைமை என்று அனைத்து கொள்கைகளுக்கும் இது ஒன்றே அடிப்படை‚.
முஸ்லிம்களுடைய தவறான புரிதல் முஸ்லிம்களும் இதனை விளங்கிக் கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். நாம் தான் சிலைகளை வணங்குவதில்லையே‚ தர்காக்களும் போவதில்லையே‚ என்று முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள்.
சுpலைகளை கும்பிடாமல் இருந்தால் 'ஷிர்க்' செய்யவில்லை என்றாகிவிடுமா? தர்காவுக்கு போகவில்லை என்றால் 'ஷிர்க்' செய்யவில்லை என்றாகி விடுமா? 'ஷிர்க்' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

'ஷிர்க்' என்றால் என்ன?

'ஷிர்க்' என்றால் அரபி மொழியில் 'பங்கு' என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை 'குழுமம்' என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை 'ஷிர்க்கா' என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை 'ஷரீக்' என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யு{னிஸக் கொள்கையை) அரபியில் 'இஷ்திராகிய்யா' என்கிறார்கள்.
ஷரீஅத்தில் 'ஷிர்க்' என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது. . . . .

1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்'

2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது 'ஷிர்க்'

3) நன்மையையும் தீமையையும் தரக்ககூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது 'ஷிர்க்'

4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தி இருப்பதாக நம்பி அல்லது இன்னொருவருக்கு சக்தி இருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப் படுத்த முயற்சி செய்தால் அது 'ஷிர்க்'

5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது 'ஷிர்க்'

6) அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் இது 'ஷிர்க்'

7) இறந்து போன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது 'ஷிர்க்'அதே போன்று

8) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் 'ஷிர்க்'

9) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் 'ஷிர்க்'

10) அல்லாஹ்வுடைய ஆணைகளையும் கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு இன்னொரு பொருளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அதனுடைய கட்டளைகளுக்கு செவி சாய்த்தால் அதுவும் 'ஷிர்க்'

11) அல்லாஹ்வுடைய கட்டளைகளை இப்போது கடைப்பிடிக்க முடியாது என்று ஒதுக்கிவிட்டு இன்னொரு பொருளின் கட்டளையை கடைப்பிடிக்க முன்வந்தால் அதுவும் 'ஷிர்க்'

12) இறைவனின் தூதர் எடுத்துரைத்த இறைவனுடைய சட்ட திட்டங்களை இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியாது. அவை இந்தக்காலத்துக்கு பொருந்தி வராதவை என்றுமுடிவு கட்டிவிட்டு வேறுவேறு கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினால் அதுவும் 'ஷிர்க்'



முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி?

ஓட்டு மொத்த மக்கள் அனைவரையும் இறைவனுக்கு கட்டுப்படாமல் ஆக்கவேண்டும். இறைவனை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் வாழ்கின்ற மக்களையும் வழிகெடுத்து வெளியில் கொண்டுவர வேண்டும்.. . . இதுதானே ஷைத்தானுடைய திட்டம். குறிக்கோள்.
முஸ்ரிம்களிடம் போய் சிலைகளை வணங்குங்கள் என்று சொல்ல முடியாது. வேறுவகையில் அவர்களை 'டீல்' பண்ண வேண்டும். ஆகையால், கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களிடையே ஷைத்தான் 'தர்கா' வழிபாட்டைப் புகுத்தினான். சிலைகளுடைய இடத்தில் அவ்லியாக்களைக் கொண்டுவந்து வைத்தான்.
ஒரு சில நாட்களிலேயே தர்கா வழிபாடு கூடாது ன்று நல்லடியார்கள், நல்ல முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தர்காவுக்கு போவது மிகப்பெரிய தீமை என்பதையும் இதை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதனையும் அந்த இறையடியார்கள் முஸ்லிம்களுக்கு தெளிவாக உணர்த்தினாhகள். இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் செய்து வந்த தீமையை உணர்ந்து நேர்வழிக்கு திரும்பினார்கள்.

நவீன சிலைகள்

முஸ்லிம்கள் சிலைகளையம் வணங்குவதில்லை, தர்காக்களுக்கும் போவதில்லை. அவ்வளவுதான் இனிமேல் அவர்களை வழிகெடுக்கவே முடியாது என்று ஷைத்தான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டானா என்றால் அதுதான் கிடையாது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல, சிலைகளுடைய பெயர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளன. சிலைகளுக்கு பதிலாக மக்கள் தர்காக்களுக்கு போய் அவ்லியாக்களிடம் கையேந்தத் தொடங்கினார்கள். ஏதேனும் ஒருவகையில் அல்லாஹ்வை விட்டும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் மக்களை அப்புறப்படுத்தவேண்டும் என்பது தான் ஷைத்தானுடைய நோக்கம்.
தர்க்காக்களுக்கு போவதை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் ஷைத்தானும் தன்னுடைய முயற்சிகளை நிறுத்திவிடுவானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் முயற்சி செய்து அல்லாஹ்வுடைய பாதையில் இருந்து அவர்களை அகற்ற நினைப்பானா? நாம் கொஞ்சம் அக்கறையோடு யோசித்துப் பார்க்கவேண்டும்.
இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கொள்கைகளான மக்களாட்சி, ஜனநாயகம், முதலாளித்துவம் போன்றவற்றை முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக, ஷைத்தான் திறமையாக பயன்படுத்தி வருகிறான. 'நிலப்பரப்பில் இன்று வணங்கப்படும் சிலைகளிலேயே கேடுகெட்ட சிலை தேசியவாதம் தான் ‚'என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறியுள்ளார் என்பதனையம் நினைவில் கொள்ளவேண்டும்.

வழிபாடு என்றால் என்ன?

வழிபாடு என்றால் வழியில் செல்வது என்று அர்த்தம். ஒரே இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு அவனுடைய வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் 'இறைவனுடைய வழியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நாங்கள்' என்று நம்மை நாம் சொல்லிக் கொள்ளலாம்.
இறைவனுடைய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்றால் குடும்பம், தொழுகை, ஜகாத், சொத்து பகிர்மானம் போன்ற நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் மட்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனுடைய வழியில் வாழ்ந்தால் போதுமா?
அல்லது நம்முடைய கூட்டு வாழ்க்கையிலும் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டுமா? என்றொரு கேள்வி இங்கே எழுகின்றது.
அதாவது வியாபாரம் பொருளாதாரம், இஸ்லாமிய அழைப்பு பணி, அரசியல், பண்பாடு போன்ற துறைகளிலும் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டுமா?
வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் எனக்கு கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானா? இல்லை ஒரு சில காரியங்களை மட்டும் நான் சொன்னபடி செய்துவிட்டு மற்ற விஷயங்களில் உங்களுடைய இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளுங்கள் என்று பரிபூரண அனுமதியை அளித்துள்ளான என்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் இறைவனுடைய வழிகாட்டுதலின்படியே வாழ்ந்தாக வேண்டும், இறைவன் அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்றால் அதற்கு வழிகாட்டுகின்ற அதை செயல்படுத்துகின்ற 'கூட்டமைப்பு' ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா?
இறைவனை ஏற்றுக் கொள்ளாத இறைவனே இல்லை என்று நிராகரிக்கின்ற ஒரு அமைப்பின் கீழாக ஒன்று திரண்டால் ஏக இறைவனான அல்லாஹ்வுக்கு எப்படி கட்டுப்பட்டு வாழமுடியும்?


இஸ்லாமும் ஜனநாயகமும் இரண்டு துருவங்கள்

இஸ்லாம் என்றால் ஒரே இறைவனையே வழிபடவேண்டும். முழுக்க முழுக்க இறைவனுக்கே கட்டுப்பட வேண்டும். அவன் விரும்பிய வழியில் தான் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இப்படி கீழ்ப்படிபவனையே 'முஸ்லிம்' என்ற சொல் குறிப்பிடுகின்றது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல அவனை மட்டுமே வழிபடுவதோடு அவனுக்கு மட்டுமே அடிமைப்பட்டு இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை தொடர்பான எல்லா காரியங்களிலும் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். வீட்டில் மட்டுமல்லாமல் வீதியிலும் நாட்டிலும் நிர்வாகத்திலும், சமூகத்திலும் சட்டசபைகளிலும் தொழிற்கூடங்களிலும் சந்தைப்பேட்டைகளிலும் அவனுடைய சட்டதிட்டங்களின் படியே நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்.


ஜனநாயகம் என்றால்,

அதிகாரம் மக்களுக்கே‚ என்பது ஜனநாயகத்தின் மையக் கொள்கை.
தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களே இயற்றிக் கொள்வார்கள். அந்த சட்டங்களை நிறைவேற்ற ஒரு அரசாங்கத்தையு; நிறுவிக் கொள்வார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் அந்த சட்டங்களை அமுல்படுத்தும். சட்டங்களில் மாற்றங்களையோ கூடுதல் குறைவையோ அவர்கள் செய்து கொள்வார்கள்.
இந்தக் கொள்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றர்.

இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால்,

1. ஒரு பொருளைப் படைத்தவனுக்குத் தான் அதைப்பற்றி முழு விபரங்களும் தெரியும். அதற்கு என்ன தேவை? அதை எப்படி இயக்கவேண்டும்? அதை எங்ஙனட் பயன்படுத்த வேண்டும்? என்கிற முழு விபரங்களும் உருவாக்கியவனுக்குத்தான் தெரியும்.
தங்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்ற அறிவும், ஆற்றலும், மக்களுக்கு கிடையாது. மனிதனைப் படைத்தவன் அல்லாஹ். ஆகையால், அவன் ஒருவனுக்குத்தான் மனிதனுக்கு எது தேவை? எது தேவையில்லை? என்பது தெரியும்.

'படைப்பாற்றலம், அதிகாரம் செலுத்துகின்ற வல்லமையும் அவனுக்கு மட்டும்தான் உள்ளது. இல்லையா? (அல்குர்ஆன் 7ஃ54)

2. சட்டங்களை இயற்றக்கூடிய அருகதை மனிதர்களுக்கு இல்லை என்பதால் தான் அவர்கள் தான் தோன்றித்தனமாக கண்டபடி எல்லாம் சட்டங்களை இயற்றுவார்கள்.

இறைவனுடைய வழிகாட்டுதல் தேவையில்லை, நமக்கு நாமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மனிதன் தீர்மானித்தால் கண்டிப்பாக அவன் மனோ இச்சைகளின்படி செயல்படுவான். அதாவது, தன்னுடைய மனம் சொல்கின்றபடியே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வான்.

'நிச்சயமாக மனிதனுடைய மனது தீமையானவற்றையே தூண்டுகின்றது' என்று அல்குர்ஆன் கூறுகின்றது (அத்தியாயம் 12ஃ53).

ஏனென்றால் உலகத்தினுடைய கவர்ச்சியும் ஷைத்தானுடைய தூண்டுதலும் அவனை அவ்வாறு செய்யவைக்கின்றன.
அதன்படி செயல்பட்டு தன்னுடைய மனோயிச்சைகளின்படி நடப்பவனைப் பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது தெரியுமா? மனோ இச்சைகளை கடவுளாக ஆக்கிக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றது. மனோ இச்சைகளை கடவுளாக ஆக்கிக் கொண்டவனைவிட கேடுகெட்டவன் யாருமே கிடையாது என்றும் குறிப்பிடுகின்றது.

3. சட்டமியற்றும் அதிகாரமும் ஹலால், ஹராம் போன்வற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளன.

அந்த அதிகாரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பவன் அல்லா1ஹ்வுடைய அதிகாரத்தை பங்கு வைக்கிறான். அதாவது 'ஷிர்க்' செய்கிறான். இறைவனுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை மற்றவர்களுக்கு வழங்கினால் அதற்குப் பெயர்தான் 'ஷிர்க்'.
எப்படியாவது முஸ்லிம்களை இறைவனுக்கு எதிரான திசையில் திருப்பிவிட வேண்டும் என்று ஷைத்தான் அந்த கொள்கைகளை அழகானவையாகவும் பயனுள்ளவையாகவும் நமக்கு காட்டுகிறான். இன்னொரு பக்கம் இவற்றை பின்பற்றவில்லை என்றால் நம்மை அடியோடு ஒழித்துவிடுவார்கள் என்று பயமுறுத்துகிறான்.

'இதைச் செய்யுங்கள் ‚ இதனால் உங்களுக்கு மிகவும் பயன்கள் உண்டாகும் ‚' என்று தான் ஒவ்வொரு முறையும் ஷைத்தான் சொல்கிறான். சொர்க்கத்தில் குடியிருந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையம் அவர்களுடைய மனைவியையும் அங்கிருந்து வெளியேற்ற நினைத்த ஷைத்தான் அவர்களிடம் போய் 'இந்த மரத்தினுடைய பழங்களை சாப்பிட்டால் இங்கேயே நிரந்தராமாக இருப்பீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் வானவர்களைப் போன்று ஆகிவிடுவீர்கள் ‚' என்று சொன்னான். வானவர்களைப் போன்று மாற யாருக்குத் தான் ஆசை இருக்காது?

ஆதமும், ஹவ்வாவும் அந்த மரத்தின் பழங்களை சாப்பிட்டார்கள். அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளானார்கள்.
எந்தக் காரியமாக இருந்தாலும், இதைச் செய்யுங்கள்‚ இதைச் செய்தால் நன்மை விளையும் என்று சொல்லித்தான் ஷைத்தான் நம்மை அழைக்கின்றான். 'லாஜிக்'காக பல ஆதாரங்களை அடுக்கிக் கூறுகிறான். அவற்றை நாம் நம்பினால் அப்புறம் அவ்வளவுதான், தொலைந்தோம். எதுவாக இருந்தாலும் குர்ஆன் சொல்கின்றபடித் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றினால், பெரிய பெரிய பயன்கள், நல்விளைவுகள் கிடைப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கூடவே, அல்லாஹ்வுடைய கோபத்தையும் சாபத்தையும் அவை பெற்றுத் தருமே‚ அல்லாஹ்வுடைய கோபத்தையும், அவனுடைய சாபத்தையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு திராணியிருக்கின்றதா?
முஸ்லிம் உம்மாவின் உலகியல் நலன்களுக்காகவும் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவதாக நம்முடைய அமைப்புகள் சொல்லிக் கொள்கின்றன. இஸ்லாத்தை பணயம் வைத்துவிட்டு ஈமானை பலி கொடுத்துவிட்டு அப்புறம் எந்த முஸ்லிம்களுக்காக நாம் பாடுபடப் போகிறோம்?
ஒன்று, இஸ்லாமை நடைமுறைப்படுத்துவதற்காக முஸ்லிம்கள் கஷ்டப்படவேண்டும். இல்லையென்றால், முஸ்லிம்கள் உலகத்தில் நன்றாக வாழ்வதற்காக இஸ்;லாத்தைக் கண்டபடி வளைக்க வேண்டும். எதை நாம் செய்யப் போகிறோம்?
இரண்டாவதாக இந்த நவீன கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தால் நாம் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். இது மட்டுமல்ல, நம்முடைய வாழ்வியல் உரிமைகள் எல்லாம் பறி போய் விடும், என்றும் சொல்லப்படுகின்றது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் கண்டிப்பாக கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். இதை குர்ஆனே சொல்கின்றது.

'ஆற்றலுக்கம் புகழுக்கும் உரிய அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அவர்கள் கொடுமைப்படுத்தப் படவில்லை' (அத்தியாயம் 85ஃ8).

நாம் மேலே சொன்னபடி உண்iமான முஸ்லிம்களாக வாழ்ந்தால் லைசென்ஸ் கிடைக்காது. ரேஷன் கார்டு கிடைக்காது. அது கிடைக்காது, இது கிடைக்காது என்றெல்லாம் சில சகோதரர்கள் பயப்படுகிறார்கள். இவையெல்லாம் கிடைக்காது என்பதற்காக ஈமானை இழந்துவிட முடியுமா? இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?


'உங்களை உயிரோடு எரித்தாலும் கண்டந்துண்டமாக வெட்டினாலும் படுபயங்கராமாகச் சித்ரவதை செய்தாலும் ஈமானை – ஓரிறைக் கொள்கையை மட்டும் இழந்து விடாதீர்கள் ‚' என்று அண்ணல் எம்பெருமானார் (ஸல்) எச்சரித்து உள்ளார்களே‚ அதற்கு என்ன தான் அர்த்தம்?
அல்லாஹ்விடத்தில் கெடுகெட்டவன் ‚'மற்றவர்களுடைய உலக வாழ்க்கைக்காக தன்னுடைய ஆ‡கிரத்தை அழித்துக் கொண்டவன்தான் மறுமை நாளினல் அல்லாஹ்விடத்தில் மிகவும் கேடுகெட்ட அடியான் ஆவான்‚' என்று இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) சொல்லியுள்ளார்கள்.
மறுமைக்காக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டு இந்த உலக வாழ்க்கையை அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும். அதுதான் புத்தசாலித்தனம்‚ அதற்குப் பதிலாக, இந்த உலக வாழ்க்கை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு இறைவனும் இறைவனுடைய தூதரும் சொன்ன திசைக்கு நேர் எதிரான திசையில் நாம் பயணம் செய்யக் கூடாது.
நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள், அவனை மட்டுமே வணங்கவேண்டும். அவனுடைய புகழ் ஒன்றையே நம்முடைய நாவுகள் போற்ற வேண்டும். அவனுடைய திருப்பெயரையும் அவனுடைய மார்க்கத்தையும் மேலோங்கச் செய்வது ஒன்றே நம்முடைய வாழ்க்கiயின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நாம் முறைப்படி அவனை வணங்கினால் தான் நம்முடைய உலகியல் பிரச்சனைகளுக்கு அவனிடத்திலிருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியும்.


அவனுக்காக, அவனுடைய தீனுக்காக எந்த தியாகத்தையும் செய்யலாம். ஆனால், எதற்காகவும் இஸ்லாத்தை பலி கொடுத்து விடக்ககூடாது.

சிந்திக்க வைப்பதற்கும் நேர்வழி காட்டுவதற்கும் வல்ல இறைவன் போதுமானவன். வஸ்ஸலாம்.
நன்றி : அப்துர் ரஹ்மான் உமரி

உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!

எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

”யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.” (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)

வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.
நன்றி: பி.ஜே., அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989

ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு

ஜனநாயகம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கொள்கையாகும். முஸ்லிம்கள் கூட ஜனநாயகத்தை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் அமுலில் இருக்கும் மதசார்பற்ற ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு கோட்பாடாகும். இஸ்லாம், ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாது” என்று கட்டளை இட்டுள்ளான். (அல்குர்ஆன்12:40) ''
எனவே அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மை குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களை துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் பிறகு ஜாஹிலியத்தின் (அறியாமைக்காலத்தின்) தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றார்கள்? ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களை பொறுத்தவரை அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்குபவன் யார்?"(அல்குர்ஆன் 5 : 49,50)
எனவே இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆட்சிஅதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் அவனுக்கு இணை துணை யாருமே கிடையாது. ஆனால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஜனநாயகம் ஆட்சி அதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கே உரியது என்று கூறுகின்றது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பமே அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படும். இறைவனது வழிகாட்டுதல்களை குறித்து சிந்திக்க மத சார்பற்ற ஜனநாய முறையில் சிறிதளவும் வாய்ப்பில்லை.''பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் இறைவனின் பாதையிலிருந்து உம்மை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்."(அல்குர்ஆன் 6 : 116)எனவே இஸ்லாமும், ஜனநாயகமும் எதிரும் புதிருமான கொள்கைகளாகும். இறைவனுக்கு இணைவைக்கும் அரசியல் வடிவமே ஜனநாயகமாகும். அது மனிதனை கடவுள் ஆக்குகின்றது. ''தமது மனோ இச்சையை தெய்வமாக கொண்டோரை.. .." (25:43) (M.Pமற்றும் MLA க்கள்) கண்ணியப்படுத்தி அவர்களது தவறுகளுக்கெல்லாம் நியாயம் கற்பிக்கும் நிறுவனங்களை (பாராளுமன்றம், சட்டமன்றம்) உற்பத்தி செய்கின்றது ஜனநாயகம்.மதசார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வது இந்த அமைப்பை உருவாக்க தேர்தலில் போட்டியிடுவது, அல்லது போட்டியிடுவோரை ஆதரிப்பது இணைவைத்தல் மட்டுமின்றி, பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் வடிவில் இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமமாகும்.
எனவே லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த எவரும் ஓட்டுப் போட்டு நவீனகால தாஃகூத்தான பாராளுமன்றத்தை உருவாக்க முன்வரக் கூடாது.இன்றைய இந்தியாவில் அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதும், அல்லாஹ் ஹலால் ஆக்கி இருப்பதை ஹராம் ஆக்குவதும் பாராளுமன்றம், சட்டமன்றங்களின் பணிகளாக இருந்து வருகின்றன. உதாரணமாக : எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் ஹலால் ஆக்கியுள்ளான். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான், ''நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;, அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்."(அல்குர்ஆன் 17 : 3)
ஆனால் இன்றைய சட்டமியற்றும் பாராளுமன்றம், சட்டமன்ற அவைகள் தமது கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொண்டு மனித இன உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமுல் படுத்தி வருகின்றன. இதேபோல் சென்ற 1988ல் நாடாளுமன்றத்தில் மத ஆலயங்கள் துஷ்பிரயோக தடைசட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் மதத்தையும் அரசியலையும் பிரிப்பதுதான். தீனின் பிரிக்க முடியாத பாகமாக அரசியல் விளங்கும்போது, இறைவன் தனது அடிமைகளுக்கு கொடுத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பறிக்க சட்டமியற்றும் மன்றங்களுக்கு எங்கே உரிமை இருக்கின்றது? அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதிலும் சட்டம் இயற்றும் கூடாரங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கும் சட்டம், விபச்சாரம் செய்வதற்கு கூட லைசென்ஸ், லாட்டரி எனும் சூதாட்டத் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி. ஆனால் அல்லாஹ் கூறுகின்றான் ''இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். ஆவற்றை தவிர்த்து கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்."(அல்குர்ஆன் 5 : 90,91 )

இப்படி அல்லாஹ் ஹராம் ஆக்கியிருப்பதை ஹலாலாகவும், அல்லாஹ் ஹலால் ஆக்கியிருப்பதை ஹராமாக்கி வைக்கும் அவைகளே சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும். இப்படி அல்லாஹ் விதித்துள்ள விதி முறைகளுக்கு நேர் எதிரான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாக்களிக்க முடியும்?நாம் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனங்களில் இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருப்பினும் குஃப்ரை (இறை நிராகரிப்பை) அழித்து விட்டு அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க பாடுபட வேண்டிய முஸ்லிம்கள் இன்று மதசார்பற்ற ஜனநாயக தேர்தலில் பங்கு கொள்வதில் பெரும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் இன்னொரு இலாஹ்வை (இறைவனை) பாரளுமன்றத்தின் வடிவில் உருவாக்குகின்றோம் என்பதை உணர்வதில்லை. ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள், (யூதர்களும், கிருத்தவர்களும்) அல்லாஹ்வை விடுத்து மார்;க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் (கடவுள்) ஆக ஆக்கிக் கொண்டார்கள் (9:31) என்ற இறை வசனத்தை ஒரு கூட்டத்தார் முன்நிலையில் ஓதிக் காட்டினார்கள். அப்போது அந்த அவையிலிருந்த அதீ பின் ஹாத்திம் என்ற இஸ்லாத்தை தழுவிய கிருத்தவர், கிருத்தவர்கள் தங்கள் மதகுருமார்களை வணங்காதிருக்கும் போது அவர்கள் எப்படி கடவுளராக ஆக முடியும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) பதில் சொன்னார்கள்,அந்த அறிஞர்களும் துறவிகளும் எதனை ஹராம் என்று கூறினார்களோ அதனை ஹராமாகவும் எதனை ஹலால் என்று கூறினார்களோ அதனை ஹலால் என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். இதுதான் அவர்களை கடவுளராக ஆக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
ஓட்டுப் போட்டு சட்டமியற்ற பாராளுமன்றம் சட்டமன்றம் அமைப்பது மற்றொரு கடவுளை உருவாக்குவதுதான் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பதிலுரையில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகின்றது. இருப்பினும் எல்லா வகையான சமாதானங்களையும் கூறி முஸ்லிம்கள் அவ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அல்லாஹ் இவ்வாறு செயல்படுவோரை இவ்வாறு எச்சரிக்கின்றான்.''மேலும் தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், யார் இறைத் தூதரிடத்தில் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறை நம்பிக்கையாளர்களின் போக்கிற்கு மாறான பாதையில் செல்கின்றானோ அவனை அவன் திருப்பி விட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம், பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம். அது மிக்க கெட்ட தங்குமிடமாகும்." (அல்குர்ஆன் 5: 44,45,47)''திண்;ணமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்து பாவங்களையும் தான் நாடுபவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் திண்ணமாக பெரும் பொய்யை புனைந்தவராவர். மேலும் பாவத்தை புரிந்தவராவர்." (அல்குர்ஆன் 4 : 48 )முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றி மறுமையில்தான். அந்த இறுதி வெற்றிக்கு பங்கம் விளைவிக்கவல்லது மதசார்பற்ற ஜனநாயக முறையில் பங்கு கொள்வது. எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இந்த அமைப்பினை புறக்கணிப்போம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம்.
நன்றி : அருட்ச் செல்வன்(M.H.J) - சிம் செய்திமடல் - டிச.'95