மனித மூளைகளின் மனோ இச்சையின் அடிப்படையிலான ஆட்சியிலிருந்து இறையாட்சியை நோக்கிய பயணத்தின் முதல் படி.....
Saturday, March 26, 2011
Wednesday, March 2, 2011
பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி
முன்னுரை
உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனை குறித்து அவனை அறியாமல் படைப்புகளை வணங்கி கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்து சொல்லும் பணியே அழைப்பு பணி ஆகும். தொழுகை, நோன்பு போல் அழைப்பு பணியும் கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் அடிப்படை கடமை ஆகும். அது போல் முஸ்லீம்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், அவர்கள் மீது இழைக்கப்படும் அனைத்து கொடுமைகளுக்கும் அழைப்பு பணி செய்யாததும் ஓர் முக்கிய காரணம் என்றால் அது மிகையானதல்ல. அந்தளவு முக்கிய பணியான அழைப்பு பணி மற்றும் இயக்க பிரிவுகள் குறித்து சுருக்கமாகவும் அப்பிரிவுகளுக்கு மத்தியில் எவ்வாறு அழைப்பு பணி செய்வது என்பது குறித்து விளக்கமாகவும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் காண்போம்.
அழைப்பு பணி – திருமறையின் பார்வையில்
திருக்குர்ஆனில் அழைப்பு பணி குறித்து “உதூ இலா ஸபீலி ரப்பி”, “வ தவா ஸவ்பில் ஹக்”, “தஹ்முரூன பில் மஹ்ரூப் வ தன்ஹவ்ன அனில் முன்கர்”, “இகாமத்தே தீன்” என பல்வேறு பெயர்களில் இறைவன் குறிப்பிட்டு காட்டுகிறான். திருமறையில் அழைப்பு பணி குறித்து எண்ணற்ற வசனங்கள் இருப்பதால் உதாரணத்திற்கு ஓரே ஒரு வசனத்தை குறிப்பிட்டு காட்டுகிறேன். “எவர் அல்லாஹ்வின் பால் (மக்களை) அழைத்து நல்ல செயல்களை செய்து நிச்சயமாக நான் முஸ்லீம்களில் நின்றும் உள்ளவன்” என்று கூறுகிறாரோ, அவரை விட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33) என அல்லாஹ் இப்பணியை குறித்து சிலாகித்து சொல்லி காட்டுகிறான்.
அழைப்பு பணி – சுன்னாவின் ஒளியில்
முஹம்மது (ஸல்) தன் இறுதி பேருரையில் கூடியிருந்த மக்களிடம் தன்னிடமிருந்து ஓரே ஒரு செய்தி தெரிந்தாலும் பிற மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற கட்டளையை ஏற்று உத்தம தோழர்களான ஸஹாபாக்கள் உலகின் பல்வேறு பாகங்களுக்கு சென்று அழைப்பு பணியாற்றியதை வரலாற்றில் காண்கின்றோம். தனக்கு பிடித்தமானவர்கள் என்றில்லாமல் தன்னை கடுமையாக எதிர்த்த அபூஜஹலும் எரிச்சல் அடையும் வரையில் அழைப்பு பணியை அவரிடமும் நபி (ஸல்) செய்ததை காண்கின்றோம். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! உம்மை கொண்டு ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பது சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது “ என கூறினார்கள் (புகாரி, முஸ்லீம்)
அழைப்பு பணியும் இயக்க பிரிவுகளும்
இஸ்லாத்தை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காகவே போராடுவதாக சொல்லும் இஸ்லாமிய, சமுதாய இயக்கங்கள் போராட்டத்தின் சமகால வடிவமான அழைப்பு பணியை எடுத்து செல்வதில் பிறருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் வேதனைக்குரிய யதார்த்தம் என்னவென்றால் இயக்கங்களின் செயல்பாடுகள் அழைப்பு பணியை வேகப்படுத்துவதற்கு பதிலாக அழைப்பு பணியின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும், இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளன என்றால் அது பிழையான கருத்தல்ல.
பிரிவுகளால் ஏற்ப(ட்ட)டும் பாதிப்புகள்
தமிழகத்தில் 1990களுக்கு முன்னால் இயக்கங்கள் குறைவாக இருந்தாலும் அங்கங்கு சில தன்னலமற்ற தனி மனிதர்கள் மற்றும் சில அமைப்புகளின் தன்னலமற்ற தியாகம் காரணமாக மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறியதை போன்று அழைப்பு பணி ஆராவமின்றி நடைபெறத் தான் செய்தது. ஆனால் 90களுக்கு பிறகு இயக்கங்கள் அதிகரித்த பிறகு அழைப்பு பணி வெகு ஆராவரத்தோடு நடைபெறுவதாக காட்சியளித்தாலும் அதன் பக்க விளைவுகளும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஏனென்றால் ஒரே அடிப்படையில் உள்ள அமைப்புகளே பல் வேறு காரணங்களுக்காக பல அமைப்புகளாக சிதறி கிடப்பதால் ஒவ்வொன்றும் தத்தம் இருப்பை உறுதி செய்யவும், தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதிலுமே அதிக கவனம் செலுத்துவதால் அழைப்பு பணியை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக ஓய்வு நேர / பகுதி நேர பணியாக செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அழைப்பு பணி நிகழ்ச்சிகளை நடத்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி ஸ்லாட்டுகளில் கூட அழைப்பு பணியை விட அதிகமாக பிற சகோதர இயக்கங்களின் மீதான வசைபாடலே அதிகரித்து உள்ளன. இதனால் இயல்பாக அந்த நேரத்தில் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில் தொலைக்காட்சியை பார்க்கும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாம் மீது வெறுப்பு கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இஸ்லாமிய அமைப்புகள் பிரிவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் எந்தளவு வலிமையாக அழைப்பு பணி இருக்கும் என்பதற்கு ஒரு நேரிடையான உதாரணம். சென்னை மண்ணடி, அப்பகுதி முஸ்லீம்கள் நிறைந்து வாழும் பகுதி மட்டுமல்ல, பிற சமூக மக்களும் அதிகமாக கலந்து வாழ்வதால் அழைப்பு பணிக்கு ஏற்ற களமாய் உள்ளது. மண்ணடியில் எத்தனையோ சமுதாய இயக்கங்களின் அலுவலகங்கள் குறுகிய சந்துகளில் இருக்கும். அந்த குறுகிய சந்துகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகளின் அலுவலகங்களில் உள்ள அழைப்பு பணி மையங்களில் எந்த மாற்று மத சகோதரர்கள் ஆர்வத்தோடு வருவார்கள்? எப்படி மக்களை தங்களை நோக்கி அழைக்க முடியும்?. அதே நேரத்தில் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அல்லது குறைந்தபட்சம் அழைப்பு பணிக்காக மட்டுமாவது சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மிகப் பெரும் கட்டிடத்தில் Jesus Calls எனும் பெயரில் மிகப் பெரும் அழைப்பு நிலையம் போல் வைத்திருந்தால் அல்லாஹ் நாடினால் நம் முயற்சிகள் இப்போது இருப்பதை விட பல மடங்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை.
பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புபணி
இன்றைய சூழலில் பிரிவுகள் என்பது யதார்த்தபூர்வமானது. அவற்றை எல்லாம் ஒழித்து ஓரே நாளில் ஓரே அமைப்பாக மாற வேண்டும் என்பது நல்ல இலட்சியமாக இருந்தாலும் உடனடியாக நடப்பதற்கான சாத்தியம் குறைவானது. எனவே அவற்றிக்கு மத்தியில் அழைப்பு பணி எவ்வாறு செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இருக்கின்ற அமைப்புகளில் பெரும்பான்மையானவை அழைப்பு பணி செய்ய கூடியதாக அல்லது அதற்கு உதவி செய்ய கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆர்வப்படக் கூடிய ஒன்றாக உள்ளதை பார்க்கின்றோம். எனவே பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி இரண்டு விதமாக செய்யலாம்.
முதலாவதாக ஒவ்வொரு அமைப்பும் பல பணிகளை செய்தாலும் அவை ஒவ்வொன்றும் மக்கள் சேவை, பத்திரிகையியல் , கல்வி், மருத்துவ உதவி, தற்காப்பு, சமூக சீர்திருத்தம், அமல்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஃபிக்ஹ் என ஏதேனும் ஒரு தளத்தில் பிரதானமாக செயற்படுவதை காண்கின்றோம். அது போல் சில அமைப்புகள் ஒரு சில மாநிலத்தில் மட்டும் அல்லது ஒரு சில பகுதிகளில் செயற்படுவதை காண்கின்றோம். எனவே எல்லா அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் தங்கள் தளத்தில் செயற்பட்டுக் கொண்டு தங்கள் தொண்டர்களில் ஒரு பகுதியனரை, அது போல் தங்கள் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை அழைப்பு பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும். இப்படியாக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து முன்பு சொன்னது போல் சென்னை Jesus calls போன்று முக்கிய நகரங்களில் எல்லா வசதிகளுடன் எல்லாரையும் சென்றடையும் வகையில் மையங்களை நிறுவி கூட்டாக அழைப்பு பணி செய்யலாம்.
எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மேற்கண்டவாறு அழைப்பு பணியில் ஈடுபட முடியா விட்டால் , குறைந்த பட்சம் எல்லா அமைப்புகளும் தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில், பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைப்பு பணியை திறம்பட செய்ய வேண்டும். ஆனால் தங்கள் பிரசார பணியில் எக்காரணத்தை கொண்டு பிற அமைப்புகளை விமர்சித்தல், அதிலும் குறிப்பாக தனி மனித விமர்சனத்தை முழுமையாய் தவிர்க்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முஸ்லீம்களுக்கு மத்தியில் உள்ள பிரிவு பிரச்னைகளை பேசக் கூடாது. இஸ்லாத்துக்கு எதிரான தர்கா வழிபாடு, பித் அத்தான செயல்களை எதிர்ப்பதில் எச்சமரசமும் தேவையில்லை. தங்கள் பகுதியில் பிற அமைப்புகள் நடத்தும் அழைப்பு பணி நிகழ்ச்சிகளுக்கு முடிந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தடைகற்களை ஏற்படுத்தாமலாவது இருக்க வேண்டும்.
எக்குழுவிலும் இல்லாத தனி நபர்களும் தங்களால் முடிந்த அளவு இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்து சொல்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். தாங்கள் ஒரு ஜமாத்தில் இல்லை என்பது இப்பணியை விடுவதற்கான ஒரு காரணமாக இருக்க கூடாது. முடிந்த வரை மஹல்லா போன்ற குறுகிய வட்டத்திலாவது ஒத்த கருத்துள்ள நபர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால் அவர்களின் பணி இன்னும் மிகப் பெரிய பலனை தோற்றுவிக்கும். இஸ்லாத்தை பற்றிய அறிவை புத்தகங்கள் படித்தல், ஒலி – ஒளி பேழைகளை கேட்டல், அறிஞர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
அழைப்பு பணியின் பல் வேறு முறைகள்
எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரே அமைப்பாக செயல்பட்டாலும் அல்லது ஒவ்வொன்றும் தனித்தனியே அழைப்பு பணியை செய்தாலும் அல்லது தனித்தனி மனிதர்கள் அழைப்பு பணியில் ஈடுபட்டாலும் என எல்லோருக்கும் பொதுவான முறைகளில் ஒரு சிலவற்றை விவரிக்கிறேன்.
தனிப்பட்ட மனிதர்கள் அழைப்பு பணி செய்யும் உத்திகள்
இயக்க பின்புலம் இல்லாத தனிப்பட்ட மனிதர்கள் கூட அழைப்பு பணி செய்ய ஏற்ற முறை தனிப்பட்ட முறையில் மக்களை சந்திப்பது. நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று நாம் எப்போதும் அல்லது அடிக்கடி சந்திக்கும் அலுவலக நண்பர்கள், அண்டை வீட்டார்கள், அடிக்கடி போகும் கடை அல்லது உணவகத்தில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள். மற்றொன்று நம் பிரயாணத்தில் சந்திக்கும் நபர்கள், கடைவீதிகளில், டீ கடைகளில் சந்திக்கும் நபர்கள் போன்றோர்கள். இரு வேறு குழுக்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாண்டு அழைப்பு பணி செய்ய வேண்டும்.
நடைமுறையில் கிறித்துவர்கள் செய்வதை போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், கடைகள் போன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இஸ்லாம் குறித்த பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பொதுவாக தங்களை யாரும் விசாரிக்க வர மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். அப்படிபட்ட நிலையில் உள்ள அவர்களிடம் சென்று நோய் விசாரித்து ஆறுதல் மொழி சொல்லி அவர்களுக்காக பிராத்திப்பது அவர்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அது ஒரு சுன்னாவும் ஆகும். ஆனால் வருந்தத்தக்க விதத்தில் நமக்கு இதில் முன்னோடியாக அரபு நாடுகளில் கூட கிறித்துவர்களே உள்ளனர். அது போல் சிறைச்சாலைகளில் குறிப்பாக அமீரகத்தில் உள்ள சிறைகளில் முஸ்லீம்களில் சிலரே அவர்களை எந்த ஒரு சமுதாயச் சொந்தமும் சந்திக்காமல், கிறித்துவர்களின் குழு சென்று சந்தித்து பொருளாதார உதவி செய்ததன் காரணத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் மனப்பான்மையில் உள்ளனர். மாறாக சிறைகளில் நாம் அழைப்பு பணியை செய்தால் இறைவன் நாடினால் அதிலிருந்து வாய்மையான முஸ்லீம்கள் கிடைப்பார்கள்.
குழு ரீதியாக அழைப்பு பணி செய்யும் உத்திகள்
தனிப்பட்ட முறையில் செய்வதை விட ஜமாத்தாக அழைப்பு பணி செய்வது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. குழுவாக செய்யப்பட வேண்டிய அழைப்பு பணி உத்திகளில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை தினங்களில் எல்லா சமய மக்களையும் ஒன்று கூட்டி இஸ்லாம் குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு வரும் மக்களின் இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு தெளிவு தரும் வகையில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம்
- இஸ்லாம் குறித்த தெருமுனை பிரசாரங்கள் சேரிகள் முதல் அக்ரகாரம் வரை நடத்தப்பட வேண்டும். நகரின் மையப்பகுதியில் இஸ்லாம் குறித்த செய்திகளை உதாரணத்திற்கு 112 வது அத்தியாயத்தை இறைவன் யார் அல்லது இறைவனின் பண்புகள் எனும் தலைப்பில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கலாம்.
- பெருநாள் விடுமுறைகளில் பிற சமூக மக்களுக்கு விருந்து கொடுத்து இஸ்லாத்தை எடுத்து சொல்லும் “ஈத் மிலன்” நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
- பொதுவான தலைப்புகளில் அனைத்து மதத்தாரையும் சேர்த்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
- சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது உதவி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்த நல்லபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும்.
- இலவச ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அனைத்து சமூகத்தினரும் வாழும் பகுதியில் நடத்தலாம்.
- முஸ்லீம்கள் தாங்கள் நடத்தும் தங்கும் உணவகங்களில் (Hotels) விருந்தினர் அறைகளில் குரான் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வைக்கலாம்.
- தங்களுடைய திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குத்பா மாற்று மதத்தாரை மையப்படுத்தி பேசலாம். இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் புத்தகங்களையும் விநியோகிக்கலாம்.
ஊடகங்களின் மூலம் அழைப்பு பணி உத்திகள்
இன்றைய உலகில் ஒரு கொள்கையை பிரசாரம் செய்வதில், ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. அவ்வளவு வலிமையான ஊடகங்களை பயன்படுத்தி அழைப்பு பணி செய்யும் உத்திகளில் சில பட்டியலிடப்பட்டுள்ளன.
- இஸ்லாத்தின் கொள்கைகளை எளிமையான நடையில் சொல்லும் புத்தகங்களை மலிவு விலைப் பதிப்பாக வெளியிடலாம்.
- புத்தக கண்காட்சிகளில் ஸ்டால் எடுத்து இஸ்லாமிய புத்தகங்கள், திருகுரான், முஹம்மது (ஸல்) வரலாறு போன்ற புத்தகங்கள் பிற சமூகத்தினருக்கு கழிவு விலையில் கொடுக்கப்பட வேண்டும்.
- அஞ்சல் வழியாக மாற்று சமூகத்தினரின் வீடுகளுக்கு புத்தகங்கள் அனுப்ப வேண்டும்.
- ஒவ்வோர் ஊரிலும் ஒரு பொது நூலகம் ஒன்றை ஏற்படுத்தி அதில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
- முக்கிய செய்திதாள்களில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை அச்சூழலுக்கு ஏற்ற மாதிரி உதாரணத்திற்கு தற்போது ஸ்வைன் ப்ளு நோய் பற்றி குரான் வசனங்கள், ஹதீஸ்களை வெளியிடலாம்.
- கேபிள் டி.வி. நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு, நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
- இணையத்தளங்களிலும் chat groupகளிலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விளக்கங்களை அளிக்கலாம்
- தற்போது தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அமைப்புகள் கைவசம் உள்ள ஸ்லாட்டுகளில் பிற இயக்கத்தினரை விமர்சிப்பதை விட்டு விட்டு அழைப்பு பணி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முடிவுரை
அழைப்பு பணி என்பது ஒரு சில இயக்கங்களின் மீதோ அல்லது ஒரு சில குழுக்களின் மீதோ மட்டும் கடமையானதல்ல. மாறாக அது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லீமின் மீது கடமையானதாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதை தனிப்பட்ட முறையிலும் கூட்டாவும் செய்ய வேண்டும். இயக்கங்களின் பிரிவுகள் அழைப்பு பணியில் பகுதி விளைவுகளை (Side effects) ஏற்படுத்தியிருந்தாலும் அது நாம் அப்பணியை செய்யாமல் இருக்க ஒரு காரணமாய் இருக்க கூடாது. மாறாக பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்பு பணி எவ்வாறு பல்வேறு உத்திகளின் மூலம் செய்வது என்று இது வரை பார்த்தவற்றிக்கு ஏற்ப நம் சக்திக்கு உட்பட்ட வகையில் அழைப்பு பணி செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமல்ல இன்றைய சூழலில் அவசரமானதும் கூட.
முஹம்மது ஃபெரோஸ்கான் , நன்றி : சத்தியமார்க்கம்
Sunday, February 13, 2011
முபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம்
”பிர் அவ்னின் பரம்பரைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று எக்காளமிட்ட ஹோஸ்னி முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வதிகார ஆட்சி அவரே எதிர்பார்க்க முடியா அளவு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் நலனுக்காகவும் இஸ்ரேலின் நலனுக்காகவுமே தன் நாட்டு மக்களை கூட கொடுமைப்படுத்திய முபாரக் கடைசியில் வேறு வழியின்றி அமெரிக்காவாலேயே கை கழுவி விடப்பட்டதற்கு பரிதாப்பட கூட யாருமில்லை.
துனிஷியாவில் புரட்சி வெடித்த போதே சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியதை படித்தாவது முபாரக் திருந்த முயற்சித்திருக்க வேண்டும்.
ஆனால் முபாரக் முந்திய பிர் அவ்ன்களின் வழிமுறையை பின்பற்றுவதில் தான் உறுதியாய் இருந்தார். எகிப்தின் முதல் நவீன பிர் அவ்னான ஜமால் அப்துல் நாசர் அரபுலகின் ஹீரோவாக கருதப்பட்டாலும் இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக மாற்ற நினைத்த இஸ்லாமிய வாதிகளை வேட்டையாடி சித்திரவதை செய்தார். அதை தொடர்ந்து அன்வர் சதாத்தும் அவர்களின் வழியில் முபாரக்கும் இஸ்லாமியவாதிகளை கொடுமைப்படுத்தினர். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாய் இருந்த மன்னர்களை விரட்டியடித்து முஸ்லீம் தேசம் இறை கட்டளை படி வழி நடத்தப்பட வேண்டும் என்று வெறும் 6 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்வானுல் முஸ்லீமின் தொடக்கத்தை பூண்டோடு நசுக்க நினைத்தவர். அல்லாஹ் எமது இறைவன், முஹம்மது எமது தூதர், திருகுரான் எமது சாசனம், போராட்டம் எமது பாதை, வீரமரணம் எமது வேட்கை எனும் முழக்கத்துடன் இறையாட்சிக்கு பாடுபட்ட அவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஷஹீதாக்கினார்கள்.
ஏன் புத்தகங்களை எழுதுவதில்லை என்று ஒரு தடவை ஷஹீத் ஹசன் அல் பன்னாவிடம் கேட்ட போது அவர் சொன்னார் “ நான் மனிதர்களை எழுதுகிறேன். ” என்றார். ஆம் அவர் எழுதிய மனிதர்கள் ஏகாதிபத்தியங்கள் நடுங்கும் புத்தகங்களை எழுதியது மாத்திரமல்ல, மீண்டும் இவ்வுலகில் சத்திய சஹாபாக்களை நினைவுபடுத்தும் அளவு இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யவும் துணிந்தார்கள். நாசர் தன் ஆட்சி காலத்தில் 1954 ல் ஒட்டு மொத்த இஹ்வான்களையும் கூண்டோடு சிறை பிடித்தார் . சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் சையது குதுபை விடுவித்து கல்வி அமைச்சர் பதவி தருகிறோம், அதை மறுத்து விட்டு சொன்னார்கள் “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும். தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்" என்று முழங்கினார்கள். தலைமை நீதிபதியாக இருந்த அப்துல் காதர் அவ்தா இஸ்லாத்துக்கு முரணான மனித சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்குவதை தன் பதவியை ராஜினாமா செய்தார்கள். பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார்கள்.
அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து தான் உலக புகழ் பெற்ற திருக்குரான் விளக்கவுரையான பீ லீலாலில் குரான் (திருக்குரானின் நிழலிலே) புத்தகத்தை சையது குதுப் எழுதினார்கள். ஜைனப் கஜ்ஜாலியின் “ என் வாழ்வின் மறவா நினைவுகளும்” உலகையையே உலுக்கிய குதுபின் “மைல் கற்கள்” உள்ளிட்ட புத்தகங்கள் வெளியாயின. உஸ்தாத் செய்யித் குதுப், யூஸுப் ஹவ்வாஷ், அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “ கபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் ”அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” என்று இறைவன் சூரத்துல் புரூஜில் குறிப்பிடும் படியே நடந்தது.
30 வருட கால ஆட்சியில் முபாரக்கிற்கு அமெரிக்கா கொடுத்த முக்கிய வேலையே இஸ்லாத்தை ஆளுவதிலிருந்து தடுப்பது. அது அவ்வளவு எளிதானது அல்ல. அல் – அஸ்ஹர் விருட்சமாய் இருந்த இடத்தில், இமாம் ஹசன் அல் பன்னாவும் ஷஹீத் செய்யத் குதுப்பும் விதைகளை விதைத்த மண்ணில், பிர் அவ்னிடத்தில் மூஸா (அலை) இகாமத் தீனை பேசிய இடத்தில் அது எளிதான காரியமாக இருந்ததில்லை முபாரக்குக்கு. மேலும் முபாரக் ஆட்சிக்கு வந்த பிறகு எகிப்து மக்களை விட அமெரிக்க மக்களை திருப்திபடுத்துவதில் தான் முனைப்பாக இருந்தார்.
ஒபாமா ஆட்சிக்கு வந்த பிறகு ஒபாமாவின் அரசாங்கம் குறித்து “முந்தைய அரசின் பார்வையில் முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக கருதினார்கள். ஆனால் ஒபாமா முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக எந்நடவடிக்கையும் எடுக்க மாட்டார். நம் மேல் கரிசனையாக இருக்கிறார்” என்றார். பதிலுக்கு பிபிசிக்கு அளித்த நேர்காணலில் ஒபாமா“ முபாரக் அமெரிக்காவின் வலுவான ஆதரவாளர். மத்தியகிழக்கின் ஸ்திரதன்மைக்கும் அப்பகுதியின் நன்மைக்கும் முபாரக் அவசியம்”. எக்கானமிஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமிய தீவிரவாதம் கேன்சர் போன்றது அது அழிக்கப்பட வேண்டும் என்றும் தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் மதமும் அரசியலும் ஒன்று சேராது என்றும் கொக்கரித்தார்.
முபாரக்கின் இன்னொரு பணி இஸ்ரேலை பாதுகாப்பது. 1981 ல் முபாரக் பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம் சதாத்தின் அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். லெபனானை ஆக்கிரமிக்க சென்ற இஸ்ரேலிய போர் வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததற்கு அனுதாபம் தெரிவித்தார் முபாரக். எகிப்து – இஸ்ரேல் ஒப்பந்தத்தை ஹூதைபியா உடன்படிக்கையுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துமாறு அல் – அஸார் பல்கலைகழக உலமாக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 25 காஸாவின் மேல் விமான தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்கள் முன் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி டிஜிப்பி லிவினி கெய்ரோ வந்து முபாரக்கை சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. காஸாவின் மீது இஸ்ரேல் பொருளாதார தடை போட்ட போது இரண்டு நாட்கள் முன் தான் காஸாவின் சில மைல்கள் தொலைவில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில் முபாரக்கை புஷ் சந்தித்து விட்டு எகிப்து மற்றும் காஸாவின் எல்லையை வலுப்படுத்த சொன்னார்.
காஸாவில் பெண்களின், குழந்தைகளின் அழுகுரலுக்கு முபாரக்கின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா? எல்லையை திறப்பதற்கு பதில் , மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு பதில் தன் படைகளை எல்லைக்கு அனுப்பி உணவை கடத்தாமல் இருக்க செய்தார். காஸாவில் உள்ள மக்கள் தடையை உடைத்து எகிப்து உள் நுழைந்த போது நாய்கள் மற்றும் தடிகளை வைத்து பெண்களையும் குழந்தைகளையும் அடித்து விரட்டினார். இதே தஹ்ரிர் சதுக்கத்தில் பலஸ்தீன் மக்களுக்காக போராடிய மக்களை அடித்து விரட்டி கைது செய்தனர். இஸ்ரேலின் போலீஸ் மந்திரி மோஷே ஷால் கெய்ரோவில் காஸா- ஜெரிக்கோ ஒப்பந்தம் 1994 ல் போடப்பட்ட போது சொன்னார் “ இது ஜியோனிஸத்தின் வெற்றி. பல வருடங்களாக அங்கீகாரம் இல்லாமல் இறுதியாக கிடைத்து விட்டது. நிறைய செலவு செய்து போர்கள் பல செய்து இப்போது அப்பலனை அடைந்து விட்டோம். எப்பெயரை முஸ்லீம் நாடுகள் உச்சரிக்க தயங்கினதோ அதை இப்போது அங்கீகாரம் செய்துள்ளன. அது போல் 30 அக்டோபர் 2008ல் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமான் பெரஸ் “ முபாரக்கின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். மத்திய கிழக்கின் அமைதிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு கணம் கூட அமைதியை நிலைநாட்டுவதிலிருந்து பின் வாங்கவில்லை” என்று பாராட்டினார்.
இனியாவது முஸ்லீம் நாடுகள் மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இல்லையென்றால் திருமறை கூறுகின்ற படி இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இவர்களை விட சிறந்த சமூகத்தை கொண்டு அல்லாஹ் இறையாட்சியை நிலைநாட்டுவான்.
ஹூவல்லதிய் அர்சல ரசூலஹூ பில்ஹூதா வ திய்னில் ஹக்கி லி யுல்ஹிருஹு அலத்தீய்னி குல்லிஹி வலவ் கரிஹல் முஷ்ரிகூன் (இணைவைப்பவர்கள் வெறுத்த போதிலும் மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடன் அனுப்பினான் (61 : 9))
Monday, January 17, 2011
துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு
சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழக ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட இது அவ்வளவாக விவாதிக்கப்படாததும் அரபுலகில் நிகழவிருக்கும் மிகப் பெரும் மாற்றத்திற்கு கட்டியம் கூறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து இந்திய முஸ்லீம் தலைமைகளும் மெளனம் காப்பது தான் ஆச்சர்யமளிக்கிறது.
சரி, அப்படி என்ன தான் நடந்தது துனிஷியாவில் ? துனிஷியாவில் பிற அரபு நாடுகளை போல் சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்தது. 1987 அக்டோபரில் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு பின் ரத்தமில்லா புரட்சியின் மூலம் நவம்பர் 1987ல் ஆட்சியை பிடித்த ஜைனுல் ஆபிதின் பின் அலி 23 ஆண்டு காலமாக தன் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து போலி தேர்தல்கள் மூலம் விடாப்பிடியாக ஆட்சி செய்து கொண்டிருந்த பின் அலி மக்களின் பேரெழுச்சியின் காரணமாக பதவி விலகி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் மக்களை ஆட்டி படைத்தாலும் பின் அலி சுகவாசியாய் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எதிர்கட்சிகளை குறிப்பாக ஊழல்மய ஆட்சியை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைத்த இஸ்லாமிய இயக்கத்தினரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா பாணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுபடுத்தவே செய்ததாக நாடகமாடினார்.
பின் அலியின் 23 ஆண்டு கால கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்ட ஏராளமான துனிஷியர்களில் ஒரு இளைஞன் வேலை தர கோரி அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கு அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தன்னை நெருப்பில் பொசுக்கி கொண்டு இறந்து போனான். அவனின் மரணத்தை தியாகமாக சித்தரித்து ஓட்டு மொத்த துனிசியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
இம்மக்கள் எழுச்சி துனிஷியாவை விட மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியை புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்கு பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.
பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “ கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்” எனும் பதாகையை தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஏமனை போலவே தற்போது சவூதியும் உள்நாட்டு குழப்பத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. மன்னர் அப்துல்லாவின் உடல்நலக் குறைவால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவது என்ற வாரிசுரிமை போராட்டத்தால் சவூதி அரச குடும்பம் கலகலத்து கிடக்கிறது. இளவரசர் ஃபைசல் மன்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பானவர் என்பதால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்துள்ள செய்திகள் ஒரு முஸ்லீம் நாட்டின் மன்னராக யார் வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் பொறுப்பை எடுக்க லாயக்கற்ற நிலையை நிதர்சனமாய் காட்டுகிறது.
துனிஷியாவை தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா இப்போராட்டத்திற்கு பின் பட்டும் படாமல் காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது என்றும் இனி மேலாவது ஜனநாயக பாதைக்கு துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஜனநாயக கோஷத்தை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபடுவோரை எல்லாம் நாட்டை விட்டு துரத்தும் அல்லது நாட்டுக்குள்ளே சிறை வைக்கும் சவூதி அரேபியா, முஸ்லீம் உம்மாவின் செல்வங்களை கொள்ளையடித்த ஒரு சர்வதிகாரிக்கு, இஸ்லாம் இம்மண்ணில் மேலோங்க பாடுபட்டோரை சித்ரவதை செய்தவருக்கு தஞ்சமடைய இடம் கொடுத்துள்ளது ஆச்சரியமான ஒன்றல்ல.
சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.
துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
துனிஷியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக இப்புவியில் நிலைநாட்ட பாடுபடுவோரை சித்ரவதை செய்யும் அரசுகள், முஸ்லீம் உம்மாவை சில சட்ட பிரச்னைகளில் மாத்திரம் காலம் முழுக்க உழல வைக்கும் அடிப்படையில் செயல்படும் முஸ்லீம் அரசுகள் பாடம் கற்க வேண்டும்.
இறைவன் தந்த கனிம வளங்களை கொண்டு கொழிக்கும் பொருளாதரத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆடம்பர ஹோட்டல்கள், தீவுகள், விமானங்கள் என சொகுசாகவும், துப்பாக்கியே தூக்க தெரியாத ராணுவத்துக்காக பில்லியன் கணக்கில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யும் அரபு நாடுகள் அப்பணத்தை ஏழை முஸ்லீம் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். தங்களிடம் எஞ்சியுள்ள பணத்தை தானமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகனோ கொடுத்து அவர்களையும் வளப்படுத்த வேண்டும். மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுவதை நிறுத்தா விட்டால், துனிஷியாவிலிருந்து பாடம் கற்காவிட்டால் துனிஷியா உங்கள் வீட்டு கதவையும் தட்டும். அடக்கி வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவின் எழுச்சி வெடித்து சிதறும் போது நிச்சயம் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களே துனிஷியா உங்களுக்கு ஓர் அபாய சங்கு, கிலாபத்திற்கு இது ஓர் எழுச்சி கீதம்.
Tuesday, December 28, 2010
தீமை ஒழிப்புப் போராட்டம்: மிகக் கொடிய தீமைகளே முதல் இலக்குகள்
தீமை ஒழிப்பின்போது பெரிய தீமைகளை ஒழிப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அந்தவகையில், இறைசட்டங்கள் அல்லாத இஸ் லாத்திற்கு முரணான மனித சட்டங்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என இஸ்லாமிய அறிஞர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர். இதனை ஷஹீத் ஸெய்யித் குதுப் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: நன்மையை ஏவுகின்றபோது முதலில் பெரிய நன்மைகளையே ஏவவேண்டும். இந்த வகையில் உலூஹிய்யத் (தெய்வீகத்தன்மை) அல்லாஹ்விற்கு மாத்திரம் உரியதென ஏற்றுக் கொள்ளலும் அதன்படி இஸ் லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதுமே முன்னு ரிமை கொடுக்கப்பட வேண்டிய நன்மையாகும்.
அவ்வாறே, தீமைகளைத் தடுக்கும் பணியின்போதும் அதிகொடிய தீமை களை ஒழித்துக் கட்டுவதற்கே முதன்மை வழங்க வேண்டும். இந்த வகையில் ‘தாகூத்கள்’ எனப்படும் எல்லைமீறிய அக்கிரமக்காரர்களின் ஆட்சி ஆதிக்கம் செலுத்துவதும்; இஸ்லாமிய ஷரீஆ சட்டத்திற்கு முர ணாக இவர்கள் மக்களைத் தமது அடிமைகளாக நடத்துவதும்தான் மிகக் கொடிய தீமைகளாகும்.
நபி (ஸல்) அவர்களை ஈமான்கொண்ட ஆரம்பகால முஸ்லிம்கள் ஹிஜ்ரத் மேற்கொண்டு ஜிஹாத் புரிந்ததெல்லாம் மக்களை அல்லாஹ் வின் சட்டங்களுக்கு மாத்திரம் கட்டுப்பட வைக்கும் ஓர் இஸ்லாமிய அரசை முதலில் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே. இஸ்லா மிய ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் அந்த அரசு ஆளப்படும். இந்த மகத்தான இலக்கை அடைந்த பின்னர்தான் முஸ்லிம்கள் கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மை தீமைகளில் கவனம் செலுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த இஸ்லாமிய அரசு தோற்றம் பெறுவ தற்கும், முஸ்லிம் சமூக அமைப்பு உருவாவதற் கும் முன்னதாக இத்தகைய கிளை அம்சங்களில் தங்களது முயற்சியை அவர்கள் அறவே செல விடவில்லை.
மார்க்கம் நிலைத்திருப்பதற்கான வலுவான அடிப்படை இடப்பட்டதன் பின்னர் அதன்மீதுதான் இந்தக் கிளை அம்சங்கள் நிலைபெற்று இருக் கும். எனவே, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியின்போது நடைமுறை யதார்த்தத்தின் தேவையைக் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற கோணத்தில்தான் தஃவா புரி யப்பட வேண் டும். அப்படியாயின் ஏவப்பட வேண்டிய முக்கியமான பாரிய நன்மை கள், ஒழிக்கப்பட வேண்டிய மிகக் கொடிய தீமைகள் என்ற வட்டத்தி லான பணிகள் முதலில் முடிவடைய வேண்டும். அதற்கு முன்பாக ஏவப்படவேண்டிய கிளை அம்சங்களுடன் தொடர்பான நன்மைகள், அதனோடு தொடர்பான பாதிப்பு குறைந்த, ஒழிக்கப்பட வேண்டிய தீமை கள் என்ற வட்டத்திலான பணிகள் இத் தகைய தருணத்தில் ஆரம்ப மாக மாட்டாது. இவ்வாறான வழிமுறைதான் இஸ்லாமிய சமுதாயம் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட பொழுது கடைப்பிடிக்கப்பட்டுள்ளது". (பீ லிலாலில் குர்ஆன்: பாகம்: 11, பக்:50)
இதன்மூலம் தாஈக்கள் தங்களையும் தங்களுடனிருப்பவர்களையும் அறிவுரீதியாக வளர்த்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுதல்,இஸ்லா மிய ஒழுக்க மாண்புகளையும் மற்றும் இபாதாக்களின் சட்டங்களையும் அவர்களுக்குக் கற்பித்தல் போன்ற விடயங்களைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றோ, விளக்கித் தடுப்பதனூடாக நீக்க முடியுமான கிளை ரீதியான தீமையைத் தடுக்காது தவிர்ந்துகொள்ள வேண்டுமென்றோ கருதலாகாது. இருப்பினும்,மனோ இச்சையின் மாயைக்கு முன்னால் இவர்கள் மயங்கிவிடக் கூடாது என்பதுதான் நாம் விடுக்கும் மிகத் தெளிவான ஓர் அழைப்பாகும்.
சிறிய சிறிய தீமைகளை எதிர்ப்பதோடு போதும் என்ற போலியான மனப்பாலைக் குடிக் கச் செய்து இஸ்லாத்திற்கு முரணான ஆட்சி அதி காரம் செலுத்துதல் என்ற கொடிய தீமையை இட் டும் வாளாவிருப்பது தான் இந்த மாயை ஏற்படுத்தும் பயங்கர நிலையாகும். இக்கொடிய தீமைக் கெதிராக வெகுண்டெழுந்து சத்தியத்தைத் துணி வோடு எடுத் துக்கூறாது நஜீஸை நீக்குதல்,ஸஜதா ஸஹ்வு போன்ற பாடங்களில் மயிர்பிளக்கும் ஆய்வுகளை மக்களுக்கு வழங்கும் வெறும் உபதேசகர்கள் என்ற அளவோடு இவர்கள் திருப்தியடைந்து விடுகின்றனர்.
தாகூத்கள் பற்றியோ, முஸ்லிம்களை ஒரு கொடியின்கீழ் ஒன்றி ணைத்து, அவர்களைப் பயிற்றுவித்து, முழு அளவிலான பரிபூரணமான எழுச்சியை நோக்கி அவர்களது முயற்சிகள் சிதறிச் செல்லாது முனைப்புப் படுத்துவதன் அவசியம் குறித்தோ இவர்கள் தங்களது பேச்சுக்களில் சாடையாகத் தொட்டுக் காட்டுவதுகூடக் கிடையாது.
மனித குலத்தை, "அதன்மீது சுமத்தப்பட்டிருந்த பளுவை இறக்கியும்,போடப்பட்டிருந்த விலங்கு களை உடைத்தும்" விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வதற்காகவே அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். போடப்பட்டிருந்த விலங்கு களோ சொல்லும் தரமன்று. இதன்பின்னர் வர லாற்றில் பூமிப் பந்தின் சந்துபொந்துகளில் எல்லாம் இந்த அரசி யல் கட்சிகளை நட்டிவிட்டதன் மூலம் மீண்டுமொருமுறை மனித குலத்தை யூதர்கள் விலங்குகளிட்டு அவல நிலைக்கு இட்டுச் சென்றுள் ளனர். எனவே,இவ்விலங்குகளை உடைத்து மனித குலத்தை மீட்டெ டுப்பதற்கும் இதன் ஒடுக்குமுறைகளால் அவஸ்தைப்பட்டு துன்பப்படும் முஸ்லிம் சமூகத்தின் புத்திரர்களை மீட்டெடுப்பதற்குமான ஒரு காத்தி ரமான இஸ்லாமிய எழுச்சி பீறிட்டு எழுவது தவிர்க்க முடியாத தேவையாகும்.
உண்மையில், இத்தகையதொரு எழுச்சிக்கான முன்னோடியாக தஃவாப் பணியை முன்னெடுத்துச் செல்வது எந்தளவு பாரிய பணி என்பதை ஷஹீத் ஸெய்யித் குத்ப் (றஹ்) அவர்களின் கீழ் வரும் வாசகங்கள் துள்ளியமாகத் தெளிவுபடுத்துகின்றன.
"உண்மையில் அது மகத்துவமான, ஒரு பாரிய பணியாகும். மனித குலத்தை கண்காணிக்கும் பணியாகும். அவர்களது வாழ்வோடும் மர ணத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களது சுபீட்சத்தோடும் அவலத்தோடும் தொடர்பான பணியாகும். அவர்களுக்கு நற்கூலி கிடைப்பதோடும், தண்டனை வழங்கப்படுவதோடும் தொடர்பான பணியாகும்.
இந்தவகையில் அல்லாஹ்வின் தூது இம்மனித குலத்திற்கு எத்திவைக் கப்பட்டால் அது அதனை மனப்பூர்வமாக ஏற்று அடியொற்றி உலகிலும் மறுமையிலும் சுபீட்சத்தை அடைந்து கொள்ளும். இல்லையெனில், அதற்கு இந்தத் தூதை எட்டச் செய்யாதிருப்பதன் மூலம் அது தன் ரப்பிடம் நியாயம் காட்டித் தப்புவதற்கு வழி வகுக்கலாம். இந்நிலையில் இறைதூதைப் பின் பற்றாததால் மனித குலத்திற்கு உலகில் நேரிடும் துன்பங்களுக்கும்,அது வழிகேட்டில் சென்ற மைக்குமான பொறுப்பை, இறைதூதை எத்தி வைக்குமாறு பணிக்கப்பட்டும் அதனை செவ்வனே எத்தி வைக்காதவர்கள் சுமந்தே ஆக வேண்டும்.
ஆனால், இறைதூதர்களைப் பொறுத்தமட்டில், தம் மீது சுமத்தப்பட்டி ருந்த பணியை அவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். இறை தூதைப் பூரணமாக ஒப்புவித்தார்கள். இந்தவகையில், கனதியான இந்த அமானிதத்தை திறம்பட செயற்படுத்தி முடித்த தூய நிலையிலேயே அவர்கள் தங்கள் இரட்சகனை நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் இறைதூதை வெறுமனே நாவினால் மாத்திரம் ஒப்புவித்துவிட்டுச் செல்லவில்லை. மாற்றமாக செயற்களத்தில் நடைமுறைப்படுத் திக் காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்கள்.
அவர்களது பிரச்சாரப் பணிக்கு முன்னால் குறுக்கீடு செய்த தடைகளை யும் தடுப்புகளையும் நீக்குவதற்காக அவர்கள் இரவு,பகலாக அயராது உழைத்தார்கள். புனைந்துவிடப்படும் கட்டுக் கதைகளாகவோ கிளறி விடப்படும் சந்தேகங்களாகவோ,கவர்ச்சிகரமான வழிகேடுகளாகவோ இந்தத் தடைகள் அமைந்தன. அவ்வாறே, இறைத் தூதை செவிமடுக்க விடாது தடுத்து குழப்பிவிடும் எல்லைமீறிய தாகூத்களாகவும் இத்தடை கள் காணப்பட்டன. இவ்வேளை, தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஏனைய தூதுவர்கள் போன்றே இத்தடைகளை நீக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்தார்கள்.
இனி, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்தக் கனதியான பணியை நிறைவேற்ற வேண்டிய கட மைப்பாடு அவர்களது தூதை ஏற்ற முஃமின்கள் மீதுதான் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக பல தலைமுறைகள் வந்தன, வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்ததியும் தனக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு இந்தத் தூதை எத்திவைக்கும் கடமைப் பாட்டைக் கொண் டுள்ளன.
இந்தக் கனதியான கடமைப்பாட்டிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. மக்கள் நியாயம் கூறி அல்லாஹ்விடம் தப்பிக்கொள்ளாமல் இருக்க வும், மறுமையின் தண்டனையிலிருந்து மக்களை மீட்பதற்கும், உலக வாழ்வின் துன்ப துயரங்களி லிருந்து அவர்களைக் காப்பதற்கும், இந்தத் தூதை எத்திவைக்கும் பணியை செய்தேயாக வேண்டியுள்ளது. அதுவும், நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே முறைவழியில் இந்தத் தூதை கச்சிதமாக எத்தி வைப்பதனூடாகவே இது சாத்தியமாகும்.
ஏனெனில், நமக்கு முன்னால் இருப்பதும் நபி (ஸல்) அவர்கள் எத்தி வைத்த அதே ரிஸாலத் தான். மனிதர்களும் அதே மனிதர்கள்தான். வழி கேடுகளும், மனோ இச்சைகளும், கிளப்பப்படும் சந்தேகங்களும், தூண்டப்படும் இச்சைகளும் அங்கும் இருந்தன. அவ்வாறே மக்க ளுக்கும் தஃ வாப் பணிக்கும் தடையாக நிற்கும் எல்லைமீறிய தாகூத் சக்திகள் அங்கும் இருந்தன. இந்த தாகூத்கள் வழிகேடுகளைக் கொண் டும் பலத்தைப் பிரயோகித்தும் மக்களை தீனை விட்டும் குழப்பிக் கொண்டிருந்தன.
சந்தர்ப்பம் - அதே சந்தர்ப்பம். தடைகள் - அதே தடைகள். மக்கள் - அதே மக்கள். அப்படியாயின் இந்தத் தூதை எத்திவைப்பதும் தீனை நிலை நிறுத்துவதும் நிகழ்ந்தே ஆகவேண்டும். எத்தி வைக்கும் பணி விளக்கி வைப்பதாகவும் அமைய வேண்டும். எனவே, இத்தூதை எத்திவைப்பவர்கள், தாம் எத்திவைப்பவற்றின் உயிர்த்துடிப்பான நடமா டும் முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்.
எனவே, கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ள இந்தப் பணியை சுமக்காது தப்பித்துக் கொள்ள எந்த சாட்டுப் போக்கும் கிடையாது. அப்படிப் புறக்க ணித்தால் பாரதூரமான ஒரு பொறுப்புக்கு நாம் ஆளாக வேண்டிவரும். முழு மனித குலமும் வழிகேட்டில் சென்று,இந்த உலகில் அனுப வித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கான பொறுப்பை நாம் சுமக்க வேண்டியிருக்கும். அத்தோடு அல்லாஹ்விடம் மறுமையில் மக்கள் நியாயம் கூறி, நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சந் தர்ப்பத்தை இழக்கச் செய்யாததற்கான பொறுப்பை நாம் முழுமையாக ஏற்க வேண்டி வரும்.
இந்தப் பாரிய பொறுப்பை சுமப்பதற்கான சக்தி யாருக்குத்தான் இருக் கும்! இது முதுகெலும்மை முறித்து, எலும்பு மூட்டுக்களின் பிணைப்பை அகற்றி மெய் சிலிர்க்கச் செய்யும் பாரிய, கனதியான பொறுப்பல்லவா?" (பீ லிலாலில் குர்ஆன் - பாகம்: 6, பக்: 31 ஆக்கம் : அஹமத் முஹம்மத் ராஷித்தமிழில்: மிஹ்ழார் எம். ரஷீத் நன்றி : மீள்பார்வை
Thursday, December 16, 2010
அரபு மன்னர்களும் ஈரானும் : தொடரும் துரோகம்
மீண்டும் இன்னொரு அரபுலகின் துரோகமா ? முதலாம் உலக போருக்கு முன்னதாக உதுமானிய கிலாபத்துக்கு எதிராக அணி திரண்டு கிலாபத்தை கவிழ்த்த அரபு கிளர்ச்சிக்கும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ள ஈரானை தாக்க அரபுகள் அமெரிக்காவுக்கு கொடுத்த அழுத்தத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து பிரிட்டனின் கூட்டாளிகளாய் மாறியதன் விளைவு உதுமானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மத்திய கிழக்கு பிரிட்டனின் காலனியாய் மாறி போனது. 3 தசாப்தங்களுக்குள்ளாகவே இஸ்ரேல் மத்திய கிழக்கில் மலர்ந்தது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஜோர்டான் மற்றுமுள்ள வளைகுடா நாடுகள் சுதந்திரமான நாடுகளாக அறிவிக்கப்பட்டாலும் மேற்குலகின் அடியாட்களாய் விளங்கின. லீவாட் சிரியா மற்றும் லெபனானாக பிரிக்கப்பட்டது. பலஸ்தீன் பிரிட்டனின் முழுமையான கட்டுபாட்டில் வந்தது.
உதுமானிய கிலாபத்துக்கு எதிரான அரபுலக கிளர்ச்சியை இயக்கியதில் முக்கிய பங்கு பிரிட்டிஷ் உளவாளி டி.இ.லாரன்ஸுக்கும் வெளியுறவு துறை ஆலோசகர் கெர்டுரூட் பெல்லுக்கும் இருந்தாலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தவர்கள் சவூதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் இப்னு சவூத் எனும் அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூதும் மக்காவின் அன்றைய ஆளுநராக இருந்த ஹூசேன் பின் அலியும் ஆவார்கள்.
பிரித்தானியா அரசாங்கம் இருவரையும் மன்னராக்குவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இருவரும் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பங்காற்றினர். ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க முடியாது எனும் மரபுக்கேற்ப ஹூசைனை தோற்கடித்து தன்னை சவூதியின் மன்னராக இப்னு சவூத் அறிவித்து கொண்டார். பிரிட்டனிடம் தஞ்சமடைந்த ஹூசைனின் இரு மகன்களையும் ஜோர்டான் மற்றும் ஈராக்கின் மன்னர்களாக பிரிட்டன் முடி சூட்டியது. இந்த நன்றி கடனுக்காக மேற்குலகின் அடிவருடிகளாய் அரபு மன்னர்கள் மாறிய நிலை இன்றும் தொடர்கிறது.
உதுமானிய கிலாபத்தை கவிழ்த்த நூறு ஆண்டுகளுக்கு பின் இன்னொரு இஸ்லாமிய சக்தியான ஈரானுக்கு எதிரான அரபுலக சதி வீக்கிலீக்ஸ் உபயத்தால் அம்பலமாகியுள்ளது. இதில் ஆச்சரியமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஈரானின் அழிவை தான் இஸ்ரேலும் ஆவலுடன் நோக்குகிறது. ஈராக்கை போல் ஈரானும் அமெரிக்காவால் தரைமட்டமாக்கப்படுவதை தான் அரபுலகும் விரும்புகின்றது என்றால் அரபுலகும் இஸ்ரேலும் கள்ள கூட்டாளிகளா என்பது தான் அரபுலகம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகின் மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.
ஈரானை ஒழிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, 2006ம் ஆண்டு லெபனானில் இஸ்ரேலிய படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த போராளி இயக்கமான ஹிஸ்புல்லாவையும் ஒழிக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவுடன் அரபு நாடுகளின் படைகள் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சவூதி அரேபியாவின் சிறுமைத்தனமான எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இச்செய்திகள் கேள்விப்பட்ட அரபுலக மக்கள் கொதித்து போயுள்ளனர். அரபுலகம் சவூதியின் தலைமையில் அணி திரண்டு பலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க போர் தொடுத்தியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் சவூதியை மனமார வாழ்த்தியிருக்கும். ஆனால் இவர்களோ இஸ்ரேலின் எதிரியான ஹிஸ்புல்லாவை அழிக்க நாடியுள்ளனர். இதனால் தானோ என்னவோ ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சவூதி எங்களுக்கு நட்பு நாடு என்று கூறினார் போலும்.
ஆனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை. இஸ்லாமின் ஆரம்ப காலங்களில் இருந்த கிலாபத்தை போல் முஸ்லீம் நாடுகளின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடுவதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் தலைமைத்துவம் வழங்கும் தகுதி சவூதி அரேபியாவுக்கு உண்டு. தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.
சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர். சவூதி அரசாங்கம் தன் நிதியை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு செலவழித்து மருத்துவம், பெளதிகம், இரசாயனம் என எல்லா துறைகளிலும் தலை சிறந்த சவூதி / அரபு / முஸ்லீம் விஞ்ஞானிகளை உருவாக்கலாம். இதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இல்லை என்பதல்ல, மாறாக சவூதிக்கு இப்படி உருவாக்க விருப்பமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு மாறாக பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் பாதுகாவலன் அமெரிக்காவுக்கு தன் வளங்களை வாரி இறைத்து பொருட்கள் வாங்கவே விரும்புகிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சவூதி எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆணு ஆயுத பலம் கொண்ட ஈரானால் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை தூண்டி விட முடியும் என்பது தான். ஏற்கனவே மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது சவூதி அறியாத ஒன்றல்ல. அதிருப்தி குரல்களும், எதிர்ப்பாளர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுவதும், அமுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றே. அதனால் தான் விக்கிலீக்கின் இன்னொரு கேபிளில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-காயிதா, லஷ்கர் இ தொய்பா, தாலிபான் போன்றவற்றிக்கு சவூதி அரசு அல்ல சவூதி மக்களே நிதியுதவி செய்கின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.
அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.
அன்பு சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும். ஈரானின் மீது தாக்குதல் நடத்த சவூதி அரேபியா கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதை தொடர்ந்து அஜீஸ் இஜ்ஜத்தீன் எழுதிய கட்டுரையை ஒரு சகோதரர் அவரின் கருத்துடன் அனுப்பியிருந்தார். அவரின் கருத்தையும் இத்துடன் மொழியாக்கம் செய்திருக்கின்றோம்
சகோதரரின் கருத்து
சர்வதேச முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவராலும் ஈரானின் மேல் போர் தொடுக்க சவூதி கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது கவனிக்கப்பட கூடிய விஷயமாய் உள்ளது. இஸ்லாமிய விழுமியங்களையும் சுய கெளரவத்தையும் அற்ப உலகியல் இலாபங்களுக்காக பிரிட்டிஷாரிடம் விற்று தான் மன்னராக வேண்டுமென்பதற்காக முஸ்லீம் உலகுக்கு இப்னு சவூது ஏற்படுத்திய பாதிப்புகளை அஜீஸ் இஜ்ஜத்தீனின் கட்டுரை படம் பிடித்து காட்டுகிறது.
முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.
இயற்கையாகவே முஸ்லீம் உலகுக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ள சவூதி அரேபியாவின் மன்னர்கள் தான் இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பாலஸ்தீன விவகாரத்தைஒரு வேளை இதை படிக்கும் யாரும் என்னை ஷியா என்று நினைத்தால் தவறு. செத்து பிழைக்கும் சவுதி மன்னர்களை காட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஈரானின் துணிவு எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சுன்னி தான் அதிலும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இப்னு தைமியா, அப்துல் வஹாபை பின்பற்றுகின்றவன் தான் நான்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து பிரிட்டனின் கூட்டாளிகளாய் மாறியதன் விளைவு உதுமானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மத்திய கிழக்கு பிரிட்டனின் காலனியாய் மாறி போனது. 3 தசாப்தங்களுக்குள்ளாகவே இஸ்ரேல் மத்திய கிழக்கில் மலர்ந்தது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஜோர்டான் மற்றுமுள்ள வளைகுடா நாடுகள் சுதந்திரமான நாடுகளாக அறிவிக்கப்பட்டாலும் மேற்குலகின் அடியாட்களாய் விளங்கின. லீவாட் சிரியா மற்றும் லெபனானாக பிரிக்கப்பட்டது. பலஸ்தீன் பிரிட்டனின் முழுமையான கட்டுபாட்டில் வந்தது.
உதுமானிய கிலாபத்துக்கு எதிரான அரபுலக கிளர்ச்சியை இயக்கியதில் முக்கிய பங்கு பிரிட்டிஷ் உளவாளி டி.இ.லாரன்ஸுக்கும் வெளியுறவு துறை ஆலோசகர் கெர்டுரூட் பெல்லுக்கும் இருந்தாலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தவர்கள் சவூதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் இப்னு சவூத் எனும் அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூதும் மக்காவின் அன்றைய ஆளுநராக இருந்த ஹூசேன் பின் அலியும் ஆவார்கள்.
பிரித்தானியா அரசாங்கம் இருவரையும் மன்னராக்குவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இருவரும் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பங்காற்றினர். ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க முடியாது எனும் மரபுக்கேற்ப ஹூசைனை தோற்கடித்து தன்னை சவூதியின் மன்னராக இப்னு சவூத் அறிவித்து கொண்டார். பிரிட்டனிடம் தஞ்சமடைந்த ஹூசைனின் இரு மகன்களையும் ஜோர்டான் மற்றும் ஈராக்கின் மன்னர்களாக பிரிட்டன் முடி சூட்டியது. இந்த நன்றி கடனுக்காக மேற்குலகின் அடிவருடிகளாய் அரபு மன்னர்கள் மாறிய நிலை இன்றும் தொடர்கிறது.
உதுமானிய கிலாபத்தை கவிழ்த்த நூறு ஆண்டுகளுக்கு பின் இன்னொரு இஸ்லாமிய சக்தியான ஈரானுக்கு எதிரான அரபுலக சதி வீக்கிலீக்ஸ் உபயத்தால் அம்பலமாகியுள்ளது. இதில் ஆச்சரியமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஈரானின் அழிவை தான் இஸ்ரேலும் ஆவலுடன் நோக்குகிறது. ஈராக்கை போல் ஈரானும் அமெரிக்காவால் தரைமட்டமாக்கப்படுவதை தான் அரபுலகும் விரும்புகின்றது என்றால் அரபுலகும் இஸ்ரேலும் கள்ள கூட்டாளிகளா என்பது தான் அரபுலகம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகின் மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.
ஈரானை ஒழிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, 2006ம் ஆண்டு லெபனானில் இஸ்ரேலிய படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த போராளி இயக்கமான ஹிஸ்புல்லாவையும் ஒழிக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவுடன் அரபு நாடுகளின் படைகள் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சவூதி அரேபியாவின் சிறுமைத்தனமான எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இச்செய்திகள் கேள்விப்பட்ட அரபுலக மக்கள் கொதித்து போயுள்ளனர். அரபுலகம் சவூதியின் தலைமையில் அணி திரண்டு பலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க போர் தொடுத்தியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் சவூதியை மனமார வாழ்த்தியிருக்கும். ஆனால் இவர்களோ இஸ்ரேலின் எதிரியான ஹிஸ்புல்லாவை அழிக்க நாடியுள்ளனர். இதனால் தானோ என்னவோ ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சவூதி எங்களுக்கு நட்பு நாடு என்று கூறினார் போலும்.
ஆனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை. இஸ்லாமின் ஆரம்ப காலங்களில் இருந்த கிலாபத்தை போல் முஸ்லீம் நாடுகளின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடுவதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் தலைமைத்துவம் வழங்கும் தகுதி சவூதி அரேபியாவுக்கு உண்டு. தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.
சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர். சவூதி அரசாங்கம் தன் நிதியை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு செலவழித்து மருத்துவம், பெளதிகம், இரசாயனம் என எல்லா துறைகளிலும் தலை சிறந்த சவூதி / அரபு / முஸ்லீம் விஞ்ஞானிகளை உருவாக்கலாம். இதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இல்லை என்பதல்ல, மாறாக சவூதிக்கு இப்படி உருவாக்க விருப்பமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு மாறாக பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் பாதுகாவலன் அமெரிக்காவுக்கு தன் வளங்களை வாரி இறைத்து பொருட்கள் வாங்கவே விரும்புகிறது.
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சவூதி எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆணு ஆயுத பலம் கொண்ட ஈரானால் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை தூண்டி விட முடியும் என்பது தான். ஏற்கனவே மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது சவூதி அறியாத ஒன்றல்ல. அதிருப்தி குரல்களும், எதிர்ப்பாளர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுவதும், அமுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றே. அதனால் தான் விக்கிலீக்கின் இன்னொரு கேபிளில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-காயிதா, லஷ்கர் இ தொய்பா, தாலிபான் போன்றவற்றிக்கு சவூதி அரசு அல்ல சவூதி மக்களே நிதியுதவி செய்கின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.
அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.
அன்பு சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும். ஈரானின் மீது தாக்குதல் நடத்த சவூதி அரேபியா கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதை தொடர்ந்து அஜீஸ் இஜ்ஜத்தீன் எழுதிய கட்டுரையை ஒரு சகோதரர் அவரின் கருத்துடன் அனுப்பியிருந்தார். அவரின் கருத்தையும் இத்துடன் மொழியாக்கம் செய்திருக்கின்றோம்
சகோதரரின் கருத்து
சர்வதேச முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவராலும் ஈரானின் மேல் போர் தொடுக்க சவூதி கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது கவனிக்கப்பட கூடிய விஷயமாய் உள்ளது. இஸ்லாமிய விழுமியங்களையும் சுய கெளரவத்தையும் அற்ப உலகியல் இலாபங்களுக்காக பிரிட்டிஷாரிடம் விற்று தான் மன்னராக வேண்டுமென்பதற்காக முஸ்லீம் உலகுக்கு இப்னு சவூது ஏற்படுத்திய பாதிப்புகளை அஜீஸ் இஜ்ஜத்தீனின் கட்டுரை படம் பிடித்து காட்டுகிறது.
முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.
இயற்கையாகவே முஸ்லீம் உலகுக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ள சவூதி அரேபியாவின் மன்னர்கள் தான் இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பாலஸ்தீன விவகாரத்தைஒரு வேளை இதை படிக்கும் யாரும் என்னை ஷியா என்று நினைத்தால் தவறு. செத்து பிழைக்கும் சவுதி மன்னர்களை காட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஈரானின் துணிவு எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சுன்னி தான் அதிலும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இப்னு தைமியா, அப்துல் வஹாபை பின்பற்றுகின்றவன் தான் நான்.
Subscribe to:
Posts (Atom)

