Monday, May 9, 2016

கட்சி - பணம் - சாதி - எது ஜெயிக்கும்?

ண்ணா அறிவாலயம் உள்ளே பொன்விழாவையும் தாண்டிய பொதுவாழ்வு கண்ட கருணாநிதியும் அன்பழகனும் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளராக உள்ளே அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ‘நீங்க என்ன சாதி?' என்ற முதல் கேள்வியை, மூன்று முறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வீசுகிறார். கறுப்பு-சிவப்பு நிறங்களை மட்டுமே உணர்ந்த தொண்டன், வெட்கத்தைவிட்டு சாதியைச் சொல்கிறான். `அந்தச் சாதிதான் உங்க தொகுதியில பெரும்பான்மையா இருக்கா?' என அடுத்த கேள்வியைப் போடுகிறார்கள். இவர்கள் இதைக் கேட்பார்கள் என்பதால், அளவு எடுத்துவிட்டு வந்திருந்த தொண்டன் அதைச் சொல்கிறான்.
அடுத்த கேள்வியைப் போடுகிறார், அடுத்து தலைவராக வரப்போகும் ஸ்டாலின். ‘எவ்வளவு செலவு பண்ணுவீங்க?'. `ஐந்து கோடி' என்கிறார் ஒருவர். `மூன்று கோடி' என்கிறார் இன்னொருவர். இப்படியே ஒவ்வொருவரும் விரல் வீக்கத்துக்கு ஏற்ப சொல்கிறார்கள். ‘பணத்தைக் கட்டுவீங்களா?' என்கிறார் ஸ்டாலின். ‘தளபதி சொல்லிட்டா, உடனே கட்டுகிறேன்' என்கிறார் படைவீரர். `உடனே கட்டுங்கள்' என ஒருவரிடம் சும்மா சொல்கிறார்கள். உடனே அந்த ஆள் ஓடிப்போய், அண்ணா சிலைக்கு அருகில் நின்றுகொண்டி ருக்கும் காரில் இருந்து ஒரு கோடி ரூபாயை எடுத்துவருகிறார். நடமாடும் கறுப்பு-சிவப்பு கருணா வங்கியாக அந்த நபர் வலம்வந்துள்ளார்.

இப்படித்தான் ஒரு வேட்பாளர் வந்து உட்கார்ந்ததும் அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் பார்த்துச் சிரித்த கருணாநிதி, அன்பழகன் பக்கமாகத் திரும்பி கண்ணைக் காட்ட, பேராசிரியர் தனது பார்வையாலேயே அவை மொத்தம் எத்தனை பவுன் இருக்கும் என அளவெடுக்க... அந்த இடமே மணப்புரம் ஃபைனான்ஸ் மாதிரி ஆகிவிட்டது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

போயஸ் கார்டனில் கொஞ்சம் வித்தியாசம்... இந்தக் கேள்விகளை எல்லாம் வேட்பாளர்களிடம் கேட்க, ஜெயலலிதாவுக்கு நேரம் இல்லை. உடலும் மனநலமும் இடம் கொடுக்கவில்லை. இவை அனைத்தையும் உளவுத்துறையை வைத்தே உரசிப்பார்த்து வேட்பாளர்களை நியமித்து விட்டார். சாதியும் பணமும்தான் இதற்கு ஒரே அளவுகோல். ‘இத்தனை மந்திரிகள் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள், இவர்களுக்கு ஸீட் கொடுத்தால் ஜெயிக்க முடியாதுஎன உளவுத்துறையே அறிக்கை தந்தபோது, ‘இவர்கள்தான் தேர்தலில் ஒழுங்காகச் செலவுசெய்வார்கள். மற்றவர்கள் செலவுசெய்ய மாட்டார்கள்என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதனால்தான், பணம் இல்லாதவரைவிட கெட்டபெயர் இருந்தாலும் பணம் உள்ள ஆட்களையே தேர்ந்தெடுத்துவிட்டார் ஜெயலலிதா.

தேர்தலுக்கு முன்னதாக, சிலர் கையும் களவுமாக மாட்டினார்கள். இவர்கள் மீதான குற்றச்சாட்டு, `.தி.மு.-வில் போட்டியிட ஸீட் வாங்கித்தருகிறேன் என இவர்கள் பணம் வசூல் செய்தார்கள்' என்பதுதான். மன்னார்குடி திவாகரன் பெயரை இவர்கள் சொல்லி வசூல் செய்தார்களாம். தோட்டத்துக்கும் திவாகரனுக்கும் ஆகாது என்பது பலரும் அறிந்த கதை. தோட்டத்துக்குப் பிடிக்காத திவாகரன் பெயரைச் சொல்லியே வசூலிக்க முடியும் என்றால், தோட்டத்திலேயே இருக்கும் இளவரசி பெயரைச் சொல்லி எவ்வளவு வசூலிக்கலாம்? `வேட்பாளர் பட்டியலில் பெயரை நுழைக்கிறோம்' எனச் சொல்லி, பெரும் வசூல் நடந்தது .தி.மு.-வில்.

இரண்டு கோடி ரூபாய் கொடுத்து தன் பெயரை வேட்பாளராக வரவழைக்க முயற்சித்தவரிடம் அவரது நண்பர், ‘என்ன தைரியத்துலண்ணே ரெண்டு கோடி ரூபாய் கொடுத்தீங்க? தோத்துட்டீங்கன்னா என்ன ஆகும்? வாழ்க்கையே போயிடுமே!' எனக் கேட்டுள்ளார். ‘ரெண்டு கோடி ரூபாய் கொடுத்தேன்னா சும்மா கொடுத்துடல. என்னை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்கன்னா தலைமையில இருந்து செலவுக்கு பத்து கோடி ரூபாய் கொடுப்பாங்க. முதல்ல கொடுத்ததை இதுல இருந்து எடுத்துக்கவேண்டியதுதான்' என்றாராம்.

அரசியல் என்பது கொடுத்து எடுக்கும் குலத்தொழிலாக மாறிப்போன சூழலில், இதோ இன்னும் ஒரு தேர்தல். முன்னர் எல்லாம் ஏதாவது ஒரு தொகுதியில் பணக்கார, கோடீஸ்வர வேட்பாளரை நிறுத்துவார்கள். இன்று எல்லா தொகுதிகளுக்கும் பணக்கார, கோடீஸ்வர தொழில் அதிபர்களையே தேடுகிறார்கள். ‘செலவு பண்ணணும், அதனாலதான் உங்களுக்குத் தரலேஎனச் சமாதானம் சொல்வது சாதாரணமாக ஆகிவிட்டது. இன்னும் சிலர், வேறு பண முதலைகள் கட்சிக்குள் வந்து தங்களுக்குத் தொல்லை கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அப்பாவிகளை நிறுத்தி தாங்களே செலவுசெய்கிறார்கள். அந்த அளவுக்குத் தாராளமாகவே பணம் விளையாடுகிறது அரசியலில். அதனால்தான் அன்புநாதன்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்; ஆம்புலன்ஸில்  பணம் கடத்துகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போலீஸ் வாகனத்திலேயே பணம் கொண்டுசெல்வதாகச் சொல்லப்பட்டது. இந்த சப்ளையைச் செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் சிலருக்கே கமிஷனும் தரப்பட்டது.

எவ்வளவு பணத்தை இடம் மாற்றுகிறார்களோ, அவ்வளவு கமிஷன். போலீஸ் உடுப்பில் இருக்க வேண்டும்; போலீஸ் வாகனம் வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு கட்டுப்பாடு அந்தத் தேர்தலில் இருந்தது. நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதால் தமிழ்நாட்டை உன்னிப்பாகக் கவனிக்க மாட்டார்கள் என்பதால் சளைக்காமல் நடந்தது. இப்போது சட்டமன்றத் தேர்தல் என்பதால் சல்லடை போட்டுப் பிடிப்பார்கள் என நினைத்து ஆம்புலன்ஸில் பணம் கடத்தும் பாவத்தைச் செய்தார்கள். அன்புநாதனிடம் ஐந்து கோடி ரூபாய்தான் சிக்கியது. சிக்காதது எத்தனையோ கோடி. சிக்காத அன்புநாதன்கள் அதிகம்.

`
அன்புநாதனுக்கு எப்படி இந்த வேலை தரப்பட்டது?' எனக் கேட்டபோது அமைச்சர் ஒருவர் சொன்னாராம், ‘பார்லிமென்ட் தேர்தல்ல பக்காவா டெலிவரி பண்ணினது அவர்தான். அதனாலதான் அவர்கிட்ட தந்தோம்' என்றாராம். அந்த அளவுக்கு கஜானாவைப் பங்கிட்டுத் தருவதே தேர்தல் வேலையாக ஆகிவிட்டது.
ஆளும் கட்சியில் இப்படி என்றால், ஆளும் கட்சியாக வரத் துடிக்கும் தி.மு.-வில் வேறு மாதிரி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் செலவுக்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் மாவட்டங்களில் வசூல்செய்தார்கள். போய் பணம் கேட்டவர்களிடம், ‘இது நாடாளுமன்றத் தேர்தல்தானே. அதிகமாகச் செலவுசெய்ய வேண்டாம். சட்டமன்றத் தேர்தலுக்குத் தருகிறோம்என்றார்கள். இப்போது இன்னமும் பணப்பட்டுவாடா நடக்கவில்லை. ‘இது கட்சி செலவுக்கு. உங்கள் செலவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்எனச் சொல்லிவிட்டார்கள். பெரும்பாலான வேட்பாளர்கள் பண மலைகள் என்பது தலைமைக்குத் தெரியும். தாங்கள் வெற்றிபெறுவது மட்டும் அல்ல, பக்கத்துத் தொகுதியையும் சேர்த்து வெற்றிபெறவைக்கும் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களாகப் பார்த்து தொகுதிகள் தாரைவார்க்கப்பட்டன. அந்த வட்டாரத்தில் செல்வாக்கு படைத்த, ஆனால் பைசா இல்லாத தொண்டன் என யாருக்கும் தொகுதி தரப்படவில்லை.

சோழவந்தான் தொகுதிக்கு, ஒரு வேட்பாளரை அறிவித்தது தலைமை. அவரிடம் மறுநாள் காலையில் இருந்தே நிர்வாகிகள் பணம் கேட்டு தொல்லை தர ஆரம்பித்துவிட்டார்கள். உடனே தலைமைக்குக் கடிதம் எழுதிவிட்டார் வேட்பாளர். ‘எனக்கு இந்த அளவுக்குப் பணம் செலவுசெய்யும் சக்தி இல்லை. என்னால் செலவு செய்ய முடியாது. என்னை விட்டுவிடுங்கள்எனச் சொன்னார் அவர். உடனே அவரை எடுத்துவிட்டு வேறு ஒருவரைப் போட்டுவிட்டார்கள். அதாவது செல்வாக்கு படைத்தவர் என தலைமையால் அறிவிக்கப் பட்டவரிடமே பணம் இல்லாததால், `வேண்டாம்' என முடிவெடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்குப் பணம் பிரதான அங்கம்வகிக்கிறது. .தி.மு.-வில் செந்தில்பாலாஜிகள் நிலைப்பதற்கும், தி.மு.-வில் கே.சி.பழனிச்சாமிகள் நிலைப்பதற்கும் இதுதான் காரணம். இருவரும் வேறுவேறு கட்சிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்க்க மாட்டார்கள். இது இரண்டு தலைமைகளுக்கும் தெரியும். அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுதான் பணநாயக அரசியலின் உண்மையான முகம்!

இன்னொரு இருண்ட முகம்தான் சாதி. அதன் கோரம் தேர்தலுக்குத் தேர்தல் அதிகமாகி வருகிறது. யார் எந்தக் கெடுதல் செய்தாலும் என்ன, எல்லா சாதிக்காரன் ஓட்டும் வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகள் அனைவரின் ஒட்டுமொத்த ஓட்டு முகம். இவர்கள் எந்த பவுடரைப் போட்டு மறைத்தாலும் அது பச்சையாகத் தெரியும். பெரும்பான்மை சாதி எதுவோ, அந்தச் சாதியைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்துவது தேர்தல் வெற்றியின் முதல் அடிப்படையாகக் கருதப்படுகிறது. சுயசாதிக்காரர்களால்தான் பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் காமராஜரும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. அதை உணர்வது இல்லை. ஒரு குறிப்பிட்ட பாக்கெட் வாக்குகள் மொத்தமாக விழுந்தால், அதன்பிறகு கூடுதல் வாக்கை பணத்தின் மூலம் பெறலாம் என்பதுதான் இன்றைய தேர்தல் அரசியலில் சக்சஸ் ஃபார்முலா.

எல்லா மாவட்டப் பிரச்னைக்காகவும் போராடிய வைகோ, எதற்காக கோவில்பட்டியைத் தேடிப்போக வேண்டும்? அண்ணாநகரில் நின்று இருக்கலாமே? ‘நான் நின்றால் நாயக்கர் - தேவர் சமூகப் பிரச்னை உருவாகிவிடும்எனச் சொன்ன வைகோ, இன்னொரு நாயக்கரை எதற்காக நிறுத்த வேண்டும்?  ‘எனக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் போட்டிஎனச் சொல்லும் அன்புமணிக்கு பென்னாகரம்தான் கிடைத்ததா? பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்துவதை பாவம் என நினைக்கிறார்களே ஏன்? முதல் மாதம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்துவது, அடுத்த மாதம் இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்றால் என்ன பாலிசி அது? இரண்டு சமூகங்களையும் ஏமாற்றுவதுதானே? பாட்டாளி மக்கள் கட்சி எனப் பெயர் வைத்துவிட்டு, `குறிப்பிட்ட சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடைய சாதியே அழிந்துவிடும்' எனப் பிரசாரம் செய்வது எதற்காக?

இப்படி ராமதாஸ் தன் சாதி உணர்ச்சியைத் தூண்டி தன் சாதி வாக்குகளை வாங்கிவிடுவார் என்றதும், 50-க்கும் மேற்பட்ட வன்னியர்களுக்கு .தி.மு. வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியதற்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் வரும் ஐந்து ஆண்டு காலத்தில் முழுக்க முன்னேறிவிட வேண்டும் என்ற அக்கறை எனச் சொல்ல முடியுமா?
ஜெயலலிதாவுக்கும் சரத்குமாருக்கும் என்ன பிரச்னை என யாருக்கும் தெரியாது. நடிகர் சங்கத் தேர்தலில்கூட அவருக்கு ஆதரவைக் காட்டவில்லை. கட்சியே இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன், தனி `அம்மா கட்சியே ஆரம்பித்தார். `என்னைக் கறிவேப்பிலைபோல் பயன்படுத்தினார் ஜெயலலிதா' என ஆவேசப்பட்டார் சரத்குமார். ஆனால், திடீரென கறிவேப்பிலைக்கு கார்டனில் விருந்து கிடைத்தது. ‘நாடார் சமூகத்து வாக்குகள் இதனால் போய்விடும் சூழல் இருக்கிறதுஎன்றது உளவு. உடனே சரத்குமார் வேண்டியவர் ஆனார். எர்ணாவூர் எங்கேயோ போனார். நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிராகக் களறி சுற்றியவர் கருணாஸ். அவருக்கு தேவர் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்றது உளவு. உடனே அவருக்கு ஒரு ஸீட். திட்டங்குளத்தில் வைகோவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது இந்த கருணாஸ் ஆதரவாளர்கள் தானாம். அரண்ட வைகோவுக்கு இருண்டது எல்லாம் தி.மு.. அதனால்தான் கருணாஸ் முகம் கருணாவாகத் தெரிகிறது.

திராவிட இயக்கத்தவர் சாதி பார்க்கிறார்கள்எனக் குற்றம்சாட்டிய தேசியக் கட்சியாம் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள், சாதியை ஒழிக்கும் அழகு அசிங்கமானது. பிரகாஷ் ஜவடேகரை முதன்முதலில் இவர்கள் அழைத்துப்போனது பாரிவேந்தர் வீட்டுக்கு. இன்று பாரிவேந்தரும் தேவநாதனும்தான் இவர்களது தேசியக் கூட்டாளிகள். நல்லவேளை .சி.சண்முகம் வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால், அவருக்கு 40 தொகுதிகள் கொடுத்திருப்பார்கள். தமிழகத் தலைவராகத் துடிக்கும் ஹெச்.ராஜா, அவருடைய சாதி அதிகமாக இருக்கும் இடம் தேடியும், தமிழக டி.ஜி.பி-யாகவே இருந்தவிருமாண்டிநட்ராஜ் அவருடைய சாதி அதிகமாக இருக்கும் இடம் தேடியும் போட்டிபோடுகிறார்கள். மயிலாப்பூர் எப்போதும்கபாலிகோட்டையாக இருந்தது என்பதை நட்ராஜ் அறிய மாட்டார். இப்படி உலகத் தலைவர்களாக இருந்தாலும் உள்ளூர் தலைவர்களாக இருந்தாலும் சுயசாதி பார்த்து, சுயஇனம் பார்த்துத்தான் தேர்தலைச் சந்திக்கிறார்கள். அதன் பிறகு இவர்கள்பொதுவானவர்களுக்காகப் போராடுவார்கள்; பாடுபடுவார்கள்!

ஒரு காலத்தில் கட்சி செல்வாக்குத்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்தது. காங்கிரஸா... கம்யூனிஸ்ட்டா என்பது ஆரம்ப காலம். காங்கிரஸா... தி.மு.-வா என்பது அடுத்து வந்த காலம். தி.மு.-வா... .தி.மு.-வா என்பது தொடர்ந்த காலம்; தொடரும் காலம். ஆனால், இந்தத் தேர்தலில் சாதியும் பணமும் கட்சி செல்வாக்கை மீறிய அழுத்தம் உள்ளதாக, வேட்பாளரின் நற்பெயரைவிட கூடுதல் செல்வாக்கு பெற்றதாக மாறிவிட்டன. சொந்த சாதிக்காரன் நின்றால் அவன் எந்தக் கட்சியில் நின்றாலும் வாக்களிப்பது என்ற முடிவுக்கு மக்களைக் கொண்டுபோய்த் தள்ளுகிறார்கள். அந்த  அளவுக்குச் சாதி உணர்வைத்  தூண்டுகிறார்கள்.

பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காரனுக்கும் எந்தச் சாதிக்காரனுக்கும் வாக்களிக்கலாம் என்ற பணத்தாசை பச்சையாகத் தூண்டப்படுகிறது, பலியிடப்படும் ஆட்டுக்கு முன்னால் பசையான செடி காட்டப்படுவதைப்போல. எனவே கொள்கையா, கோட்பாடா, கடந்த ஐந்து ஆண்டுகள் நல்லது செய்தாரா, முந்தைய ஐந்து ஆண்டுகள் கொள்ளை அடித்தவரா என எதையும் பார்க்காமல் சாதியும் பணமும் முன்னுக்கு வருகின்றன.

நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?' என பெரியாரிடம் கேட்டபோது, ‘இது ஜனநாயகம் அல்ல, பணநாயகம், ஜாதிநாயகம்எனச் சொன்னார். அதை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டது அரசியல். தேர்தலின் இரண்டு கண்களாக சாதியும் பணமும் ஆகிப்போனால் ஜனநாயகம் குருடு ஆகும். ஆகவிடாமல் தடுக்க வேண்டாமா?

பணம் பார்க்காதீர்கள்... குணம் பாருங்கள்! சாதி பார்க்காதீர்கள்... நீதி பாருங்கள்
!

(குப்ரிய செட்டப் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்பதை நம் வார்த்தைகளால் சொல்வதை விட அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தினால் ஆனந்த விகடனில் வெளியான இக்கட்டுரையே அப்படியே இங்கு பதிகிறோம். நன்றி : திருமாவேலன் / ஆனந்த விகடன்)

Thursday, May 5, 2016

"எழு, எழுந்தால் உஹதாய் எழு"

"எழு, எழுந்தால் உஹதாய் எழு":
=============================

அசத்தியத்தின் எழுச்சி
அதன் முகட்டை
தொடட்டும்.

அடக்குமுறையின் கைகள்
நம் கழுத்தை
நெறிக்கட்டும்.

அதிகாரத் திமிருடையவரால்
நம் குருதி
ஓட்டப்படட்டும்.

ஜாஹ்லிய்ய கொள்கைகள்
தெருக்களில்
உலா வரட்டும்.

சிலைவணக்க சீரழிவுகள்
சிறந்த பண்பாடாக
காட்சி தரட்டும்.

சத்தியத்தின் கொடியைவிட
கட்சிகளின் கொடிகள் முக்கியத்துவம்
பெறட்டும்.

ஆபாசமும் அட்டுழியமும்
மனிதனின் சட்டைபைகள் வரை 
நிரம்பட்டும்.

இவையெல்லாம்
எழுச்சியாய் வளர்ச்சியாய்
பார்ப்போர் பார்க்கட்டும்.

இதன்பிறகு
சத்தியம் வீழ்ந்துவிட்டதென்று
எண்ணுவோர் எண்ணட்டும்.

ஈமானிய உள்ளம் உணர்ந்து கொள்ளும்
இது எழுச்சி அல்ல, வீழ்ச்சி
சத்தியம் எழுவதற்கான நீட்சி.

”இறுதி வெற்றி மூஃமின்களுக்கு”
திருக்குர்ஆன் வசனம் ஒன்று போதும்
நாம் நிமிர்வதற்கு.

இது நமக்கான நேரம்…
செயல்படுவதற்கான நேரம்…

எழு, எழுந்தால் உஹதாய் எழு!
வீழ்; வீழ்ந்தால் விதையாய் வீழ்! 
ஆனால் சறுகாகி விடாதே!

சறுகுகளால் பயனேதும் இல்லை.
காற்று அடித்துச் செல்லும்
உதாரணத்தை தவிர!
(Thanks to Br. Gulam)

ஜனநாயகம் குப்ர் என்போர் இந்தியாவை விட்டு வெளியேறலாமே ?

#கேள்வி:- ஜனநாயகம் குஃப்ர் என்றால் அந்த குஃப்ரை பின்பற்றித் தானே வாழ்கின்றீர்கள். அதன் சட்டங்கள் தானே உங்களை ஆள்கின்றது. நீங்கள் பெறும் மின்சாரம், உணவு பொருட்கள் என அனைத்தும் குஃப்ரு அரசாங்கத்தின் மானியம் தானே? ஜனநாயக தேர்தல்களில் பங்கேற்பது குஃப்ர் என்றால் அதன் ஆட்சியின் கீழ் வாழ்வதும் குஃப்ர் தானே! நாங்கள் செய்வது குஃப்ரும் ஷிர்க்கும் என்றால் நீங்கள் செய்வதும் அது தானே!??

#பதில்:- இந்தக் கேள்வியின் அடிப்படையே தப்பானது! ஒரு அரசின் சிந்தனை, அந்த சிந்தனையின் இலக்கு, அந்த சிந்தனையை அடைவதற்கான வழிமுறை என்பவற்றுக்கும் சிவிலியன்களுக்கு ஒரு அரசு செய்யவேண்டிய அடிப்படை உரிமைகள் பற்றிய சராசரி நடத்தையை சிவிலியன்கள் புறக்கணிப்பது என்பதும் தவறான அரசியல் பார்வை! *ஒரு தவறான சிந்தனையும் *தவறான நியதிகளும் தம்மை ஆதிக்கப் படுத்துவதை எதிர்ப்பது சராசரி புரட்சியின் வடிவம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் தாருந் நத்வா சார் குப்ரிய சிந்தனா ஆதிக்க வாதிகளுக்கு எதிராக இத்தகு போராட்ட மரபையே முன்வைத்தார்கள் என்பது இங்கு பிரதானமாக அவதானிக்க தக்கது!

குப்ரை எதிர்க்கும் அதே சூழலில் சமகாலத்தில் #அளவை நிறுவையில் மோசடி செய்தோர்க்கு கேடுதான்! என்ற குர்ஆன் வசனத்தை ஓதியவாரே அதே சந்தையில் வியாபாரம் செய்தார்கள்! பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்க எடுத்துச் செல்வதை எதிர்த்தவாறே அதே சமூகத்தின் முன் வாழ்ந்தார்கள்! சிலை வணக்கத்தை எதிர்த்த வாறே 366 விக்ரகங்களுக்கு முன் தொழுதார்கள்! இதன் அர்த்தம் தான் என்ன!? மனித அடிப்படை உரிமைகளை, தேவைகளை, சேவைகளை தமது தவறான சிந்தனை மூலம் கட்டுப்படுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள் தவிர அந்த அடிப்படை உரிமைகளை, தேவைகளை, சேவைகளை அல்ல!

 #இஸ்லாம் எனும் புதிய சிந்தனையின் ஆதிக்க நியாயத்தை, ஷரீஆ எனும் அதன் அடிப்படை விதிகள் ஊடாக உரிமைகள், தேவைகள், சேவைகளை கட்டுப்படுத்துவது பற்றிய அரசியலை பிரகடனம் செய்தார்கள்! இதுதான் முதற்கட்டம் புரியப் படனும். பூச்சியத்தில் இருந்து தொடங்கும் எந்த எதிர் புரட்சியும் ஆதிக்க நியதியால் நிர்ப்பந்திக்க படுவதை வைத்து அதற்கு உடன்படுவதாக ஆகிவிடாது. குறைஷிகளின் சராசரியான விருந்துபசார செயலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயன் படுத்தினார் என்பது #தாருந்நத்வாவை ஏற்றார்கள் என்பதாக ஆகிவிடாது. அதே போல மின்சாரத்தை, குடிநீரை, இதற சேவைகளை பயன்படுத்துவது அதை நிர்வகப் படுத்தும் அரசை அங்கீகரிப்பதாக ஆகிவிடாது!

இந்தியாவில் மோடியின் அரசை முக்கால்வாசி முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள் வெறுக்கிறார்கள்; அதே நேரம் அந்த அரசின் அடிப்படை வழங்குகளை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதன் அர்த்தம் மோடி அரசின் சிந்தனையை ஏற்பதாக ஆகிடுமா!? அதுபோலவே அல்லாஹ் அருளாத ஒரு சிந்தனையின் கீழான ஜனநாயக அதிகார ஒழுங்கை நாம் எதிர்க்கிறோம்! தற்போது தவிர்க்க முடியாத அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவைகளை பயன்படுத்துகிறோம்!

#ஒரு முஸ்லிமின் வாழ்வியல் ஒழுங்கு என்பது ஹறாம் ஹலாலை அடிப்படையாக கொண்டது. அவன் எந்த இடத்தில வாழ்ந்தாலும் இதுவே அவனுக்கான முடிவு. அந்தவகையில் மனித மனோ இச்சையை, தான் தோன்றித் தனத்தை அடித்தளமாக கொண்ட முதலாளித்துவ ஜனநாயகத்தில் தீர்வுள்ளது என நம்புவதும் ஜாஹிலியத்தான ஒரு ஈமானிய கோளாறு என்பதில் சந்தேகமில்லை.  சிந்தனை வீழ்ச்சியில் இருந்தே மேற்படி அடிப்படையற்ற கேள்விகள் பிறக்கின்றன.

As received from.
சகோதரர்.. Abdur Raheem

இந்தியாவின் புதிய 'எதிரிகள்'(?)

நரேந்திர மோடி தலைமையிலான பாசிச அரசு பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஆரவாரம் இல்லாமல் நிறைவேற்றி வருகிறது. அவற்றில் பால் மக்களின் கவனம் செல்லாமல் வேறு வேறு பிரச்னைகளை ஊடகங்களின் மூலம் வெளியிட்டு கவனத்தை திசை திருப்புவதில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது மோடி அரசு.

கல்வி துறையை காவிமயமாக்கல், நேரடியாக வங்கி கணக்கில் வைப்பு தொகை செலுத்தப்படும் என்று சொல்லி மானியத்தை ஒழிக்க முயல்வது, உலக வங்கியின் கட்டளைக்கேற்ப பாதுகாப்பு துறையிலும் தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பது என தொடரும் மோடி அரசு சத்தமில்லாமல் ஒரு சதியை நிறைவேற்றுகிறது. ஆம் நாட்டு பிரிவினையின் போது பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம் என்று இந்தியாவிலேயே தங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை இந்தியாவின் எதிரியாக்க முயல்கிறது.
பிரிவினையின் போது பல குடும்பங்களில் சிலர் பாகிஸ்தானை தாய் நாடாக தேர்ந்தெடுக்க சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுவது என்று முடிவெடுத்தனர். 1968ல் நிறைவேற்றப்பட்ட எதிரி சொத்து சட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை பாகிஸ்தானில் குடியேறியோர் அனுபவிக்க முடியாது என்றாலும் அவர்களின் சட்ட பூர்வ வாரிசுதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அனுபவிக்கும் உரிமை இருந்தது. சட்டப்படி அவ்வாறு அனுமதி இருந்தாலும் அவ்வுரிமைகளை பெறுவதற்கும் பலர் பல தசாப்தங்களை நீதிமன்றத்தில் வழக்காடியே பெற முடிந்தது.
ஏற்கனவே தங்கள் உரிமைகளை பெற பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் சூழலில் அதற்கு முழுமையாக ஆப்பு வைக்கும் முகமாக 1968 எதிரி உடைமை சட்டத்தை திருத்தி மோடி அரசு பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக வைத்திருக்கிறது. 2016 திருத்தத்தின் படி எதிரிகள் என்பதற்கான வரைவிலக்கணம் மாற்றப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் எதிரிகள் என்போர் பாகிஸ்தானுக்கு குடியேறியவர்களை குறிக்கும் சூழலில் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவில் பாகிஸ்தானில் குடியேறியோரின் வாரிசுதாரர்களும் எதிரிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இம்மண்ணில் வாழும் இந்திய பிரஜைகளாக இருந்தாலும்.
 இச்சட்டத்தின் மூலம் மோடி அரசு ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடும்பங்களின் வாழ்வாதரத்தை பறித்து 70 வருடமாக அனுபவித்து வரும் உடைமைகளை ஒரே இரவில் அரசுடமையாக்கும் அபாயம் கொண்டது என்பதை உணர்ந்தோமென்றால் எவ்வளவு பெரிய சதி வேலை சத்தமில்லாமல் அரங்கேறி கொண்டிருக்கிறது என்பது புலனாகும். ஒரே சட்டத்தின் மூலம் பில்லியன் கணக்கான முஸ்லீம்களின் சொத்துக்கள் பறிக்கப்படும் அபாயம் குறித்து தேர்தல் பரபரப்பில் எந்த கட்சியும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பில்லியன் கணக்கான வக்ப் சொத்துக்கள் மீட்பது குறித்து எவ்வித விழிப்புணர்வு இல்லாத போது இது குறித்து நேர்பட பேசவும், அக்னி பரிட்சையும் எந்த ஊடகத்திலும் நிகழாது என்பது மட்டும் நிச்சயம்.  ((நன்றி - இந்நேரம்.காம்)

Saturday, December 5, 2015

பாபரி மஸ்ஜிதும் தேசியவாதமும்


இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் அதிர்ந்தனர். ஒட்டு மொத்த உலகமும் 14 ஆண்டுகளாக அதை நினைவு நாளாக அனுஷ்டிக்கின்றனர். பிறக்கப் போகும் குழந்தைக்கும் தெரியும் அளவு ஊடகங்கள் அதை பிரஸ்தாபித்தன. அதன் பொருட்டு ஆப்கானிஸ்தான் சிதைக்கப்பட்டது.

பாரீஸில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் காரணத்தால் வெகுண்டெழுந்த பிரான்ஸ் 100 உயிர்களுக்கு பகரமாக 430க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிரியாவில் கொன்று தீர்த்தது. எஸ் எஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய தேசத்தை நிர்மூலமாக்காமல் விட மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் உதாரணங்களே. அவற்றிலாவது மனித உயிர்கள் பலியாகின.

ஆனால்

ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட போதும்

சிரியாவில் பழங்கால சிலைகள் பாமிராவில் சேதப்படுத்தப்பட்ட போதும்

கூட உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன. யாரும் வழிபடாத சிலைகள் என்றாலும், அங்கு அதை வணங்குபவர்கள் இல்லை என்ற போதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அரசவை உலமாக்களே அதை வீறு கொண்டு எதிர்த்தனர்.

ஆனால்

மேற்கண்ட அத்துணை சம்பவங்களை விட இலட்சக்கணக்கில் முஸ்லீம் உயிர்களை பலி வாங்கியும் அதனினும் மேலாக முஸ்லீம்கள் இந்திய தேசத்தின் மீது வைத்திருந்த அத்துணை நம்பிக்கையும்

சுக்கு நூறாக்கிய சம்பவம் தான் பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டது.

ஆனால் 56 முஸ்லீம் நாடுகள் இருந்தும் ஏன் எதிர் வினை வலிமையாக இல்லை ?

பட்டப்பகலில் பகிரங்கமாக அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் ஆலயம் இடிக்கப்பட்ட போது அதை அனுமதித்த இந்திய அரசுடனான ராஜ்ஜிய உறவை துண்டிக்க எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

இடிக்கப்பட்ட இடத்தில் பாபரி கட்டி தரப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய இந்தியாவுக்கு பெட்ரோல் தர முடியாது என்று சொல்ல எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

சிரியாவிலும் பாகிஸ்தானிலும் முஸ்லீம் மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து சென்னையின் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்ற போதும் இந்திய முஸ்லீம்களின் இதயத்தில் ஈட்டியை குத்திய அத்துயர சம்பவம் குறித்து உலகளாவிய இஸ்லாமிய இயக்கங்கள் கூட அமைதியாக இருப்பதேன் ?

இதே சம்பவம் மத்திய கிழக்கிலோ அல்லது ஆப்பிரிக்க முஸ்லீம் நாடுகளிலோ அல்லது கிழக்காசியா நாடுகளிலோ நடந்திருந்தால் அந்தந்த நாடுகளில் எதிர்ப்பலைகள் எழுந்திருக்காதா என்றால் நிச்சயம் எழுந்திருக்கும்.

அடிப்படை பிரச்னை என்னவென்றால் இன்னமுல் முஃமினூன இஹ்வா என்பதற்கேற்ப ஆஸ்திரேலியா முதற்கொண்டு அமெரிக்கா வரை வாழும் அனைத்து முஸ்லீம்களும் ஓரே உம்மா எனும் சர்வதேச கோட்பாட்டை மறந்து மனிதர்களை பிறந்த இடத்தை அடிப்படையாக கொண்டு பிரித்து போடும் முட்டாள்தனமான கொள்கையான தேசியவாதம் எனும் மாயையில் முஸ்லீம்கள் வாழ்வதே இதற்கான காரணம்.

அன்றைய அரபுகளோடு ரோமாபுரியை சேர்ந்த சுஹைபும், பாரசீகத்தை சரந்த சல்மான் பார்ஸியும் எத்தியோப்பியாவை சேர்ந்த பிலாலும் (அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக) ஓரணியில் எல்லா வித நிற, குல, தேசிய, மொழி வேறுபாடுகளை களைந்து ஓரணியில் நிற்க முடிந்தது. ஆனால் இன்று இன்று இந்திய முஸ்லீமுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் விரோதியாகவும் தமிழக முஸ்லீமுக்கு கேரளத்து முஸ்லீம் அந்நியனாகவும் தமிழ் பேச கூடிய முஸ்லீமுக்கு உருது பேச கூடிய முஸ்லீம் பகைவனாகவும் மாற்றப்பட்டிருக்கிறான்.

சென்னையில் பெய்த பெரு மழையால் இவ்வருட போராட்டங்கள் நடைபெறவில்லை எனினும் வரும் காலங்களிலாவது தேசியவாத தடைகளை தகர்ந்தெறிந்து உலகளாவிய உம்மத்தின் அங்கத்தினராகிய முஸ்லீம்கள் அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழ அயோத்தியை நோக்கி அணி வகுப்போம் இன்ஷா அல்லாஹ்.