Saturday, May 17, 2014

தேர்தல் 2014 : முஸ்லீம் அமைப்புகள் இஸ்லாமிய இயக்கமாக மாற வேண்டிய தருணம்

2014ல் நடந்து முடிந்த இந்தியாவின் பொது தேர்தலில் முன்னெப்போதையும் விட அதிக அளவில் முஸ்லீம் அமைப்புகள் பங்கேற்றன. முக நூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோடி எனும் சொல் இந்துத்துவாதிகளை விட அதிகமாக முஸ்லீம்களாலும் முஸ்லீம்களின் நண்பர்கள் என சொல்லப்படும் மதசார்பற்றவர்களாலும் உச்சரிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முஸ்லீம்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மூலமாகவும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் மூலமாகவும் மாநில கட்சிகள் மூலமாகவும் பங்களித்தாலும் இஸ்லாத்தை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய இயக்கங்களால் வார்த்தெடுக்கப்பட்ட கொள்கை கோமேதகங்களும் இருக்க தான் செய்தனர். அவர்கள் இஸ்லாத்துக்கு புறம்பான அரசு அமைப்பில் இருப்பதை ஷிர்க் என்று விளங்கியதோடு அத்தேர்தல் நடைமுறையில் பங்கேற்காமலே சில சாதனைகளை செய்தனர்.

இக்குபர் அரசியல் சாசனத்திற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளை அடிப்படையாக கொண்ட ஒரு அரசை அமைப்பதை இலட்சியமாக கொண்டு செயல்பட்டனர்.  இல்லட்சிய பாதையின் ஊடாக இடைக்கால தீர்வாக குரான் சுன்னா அடிப்படையிலான மாதிரி சமூகத்தை அமைக்கும் முயற்சியில் ஜமாத்தே இஸ்லாமி போன்ற பேரியக்கங்களும் மாணவர் இயக்கங்களும் முடிந்தவரை ஜமாத்தின் வரம்புக்குள்ளே தங்களுடைய பிரச்னைகளை தீர்க்கும் அளவு முன்மாதிரிகளை உருவாக்கினர்.

கிலாபாவை அடிப்படையாக கொள்ளாவிடினும் குறைந்தபட்சம் இத்தேர்தல் நடைமுறையில் பங்கு கொள்ளாமல் தஃவா, பித் அத் ஒழித்தல் போன்ற சீர்திருந்தங்களை தவ்ஹீத் அமைப்பினர் செய்து வந்தனர். ஜாக், அந்நஜாத், அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு, அஹ்லே ஹதீஸ் என பல்வேறு பெயர்களில் இயங்கினாலும் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். இவ்வாறு இருந்த காலகட்டத்தில் முஸ்லீம்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது ஒன்றாக நின்று எதிர்த்தனர் என்பது வரலாறு.

முஸ்லீம்கள் மெல்ல மெல்ல ஒரு சக்தியாக இஸ்லாத்தின் கீழ் பரிணமிப்பது ஷைத்தானுக்கு உறுத்துமல்லவா. எனவே இஸ்லாமிய இயக்கத்தின் பாசறையில் பயின்றவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தினான். அவன் தான் ஆதம் (அலை) உள்ளத்திலேயே அல்லாஹ்வின் வாக்கை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியவனாயிற்றே. நபிகள் (ஸல்) காட்டிய பாதையில் சென்றால் இலக்கை இப்போதைக்கு அடைய முடியாது, மாறாக ஜனநாயக நடைமுறையில் சென்றால் நாமும் அதிகாரத்தில் பங்குதாரர்களாக மாறலாம், அதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரலாம் என்றும் ஷைத்தான் ஊசலாட்டத்தை கொண்டு வந்தான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (The Holy Quran 43:37)

ஷைத்தான் ஏற்படுத்திய ஊசலாட்டத்தால் ஏமாந்து போன முஸ்லீம் அமைப்புகள் அது வரை ஜனநாயகம் ஷிர்க், பாராளுமன்றம் என்பது இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமம் என்றவர்கள் அத்தனையும் மறந்து அல்லது தாங்கள் அது வரை தவறிழைத்ததாக சமாதானம் செய்து கொண்டு அரசியல் பெருங்கடலில் குதித்தனர். அரசியலில் குதித்தனன் மூலம் மமக, எஸ்டி.பி. போன்ற அமைப்புகள் எத்துணை சமரசங்களை செய்ய நேரிட்டது என்பது தனி விஷயம். அரசியலில் ஈடுபடாமல் அரசியல் செய்த அமைப்புகளின் மக்களின் அழுத்தத்திற்கு ஏற்றவாறு தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தேர்தலுக்கு புத்துயிர் ஊட்டினர்.

பிர் அவ்ன், நம்ரூத் போன்றவர்களின் வரலாற்றை கூட சரியாக படித்திறா பாமர மக்களிடையே மோடியை குறித்து விமர்சிப்பதிலும், ஏன் மதசார்பற்றவர்களை ஆதரிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்வதிலும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மீறி நமது அமைப்புகள் தங்கள் சக்தியை செலவிட்டன. முக நூலில் இரண்டு மாதத்துக்கு பிக்ஹு, தஃவா அனைத்தையும் ஒதுக்கி விட்டு டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமியை விட ஆக்ரோஷமாக சக சகோதர அமைப்பினரை திட்டி தீர்த்தனர்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய உடன் "நரேந்திர மோடி வரட்டுமே, நாங்கள் நம்ரூதை எதிர் கொண்ட சமூகம், பிர் அவ்னை வெற்றி கொண்ட சமூகம்" என்று ஆறுதல் படுத்தி கொள்கின்றனர். இல்லையெனில் பிர் அவ்ன் இருந்தால் மூஸா இருப்பார், நம்ரூத் இருந்தால் இப்ராஹிம் நபி இருப்பார். மோடி வந்தால் இன்னொரு நபரை தருவார் என்றெல்லாம் ஆசுவாசப்படுத்தி கொள்கின்றனர்

நம்முடைய வாழ்க்கை, அரசியல், நம்பிக்கை, ஒழுக்கம் இவையெல்லாம் இஸ்லாமாக இல்லாத போது மூஸாவை போன்ற நபிமார்களை எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவராக நமக்கே தோன்றவில்லையா. உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் குப்ர் செட்டப்பின் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்டுவது ஒரு புறம் இருக்கட்டும், உலகாயத வெற்றியை கூட பெற முடியாது என்பதை தான் சம்மட்டி அடியாக தேர்தல் முடிவுகள் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த முஸ்லீம் அமைப்புகள் ஆதரவளித்தும், திமுக ஒரு இடம் கூட வெல்லாததும், முஸ்லீம்கள் அதிகமுள்ள உபியில் பாஜக அசுர வெற்றி பெற்றிருப்பதும் அதை தான் தெளிவாக்குகின்றன.

Blessing in disguise  என்று ஆங்கிலத்தில் சொல்வதை போல் முஸ்லீம் அமைப்புகள் தாங்கள் இக்குப்ர் செட்டப்பில் சென்ற தவறை உணர்ந்து எப்படி காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற பிறகு குப்ருக்கு அர்ப்பணித்ததை விட அதிகமாக இஸ்லாத்துக்கு தம்மை அதிகம் அர்ப்பணித்தாரோ அது போல் முழுமையான இஸ்லாமிய இயக்கங்களாக மாற வேண்டும். ஓரளவுக்கு செல்வாக்கான முஸ்லீம் கட்சியான எஸ்.டி.பி. அதிகமாக ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 14,000 ஓட்டுகளையே பெற முடிகிறது. இதே அடிப்படையில் சென்றால் 7 தேர்தல்கள் அதாவது 35 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு இலட்சம் ஓட்டுகளே வாங்க முடியும். அதுவும் மறுமை வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால் அதே 35 ஆண்டுகளில் இந்திய முஸ்லீம்கள் குப்ர் செட்டப்பில் பங்கேற்காமல் தங்கள் பேச்சு, எழுத்து, சிந்தனை, அறிவு, நேரம், உழைப்பு, செல்வம், உடமை, உயிர் என அனைத்தையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்க முன் வந்தால் - தஃவா செய்வது, தஃவாவுக்கு இடைஞ்சலாக இருக்கும் தடைகளை தகர்தெரிய செய்யும் போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டால் அல்லாஹ் நாடினால் இந்திய மண்ணிலிருந்தே கிலாபாவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கலாம். நாமும் அக்ஸாவை மீட்கும் கறுப்பு படையின் ஒரு அங்கமாக ஆகலாம்.

இறைவன் கொடுத்த இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி சிந்திப்போமோ?

தஃவாவிலும், இரும்பிலும் மாத்திரமே நமக்கு விமோசனம் உள்ளது என்பதை உணர்வோமா?

அதிகாரம் மக்களுக்கல்ல, அல்லாஹ்வுக்கே என்பதை உரக்க சொல்வோமா ?

மார்க்கம் மேலோங்க அனைத்தையும் அர்ப்பணிக்கும் உணர்வு கொள்வோமா?

5 comments:

abubacker said...

தமிழகத்தில் எல்லா இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவை ஆதரிக்கா விட்டாலும் வெற்றி பெற்று வந்து விட்டது.எப்படி? ஒட்டு மொத்த இஸ்லாமியர்,தலித்கள் சிறுபான்மையினர் ஓட்டை அதிமுக பெற்று விட்டது...என்று பத்தரிக்கைகள் தெரிவிக்கின்றனர்.உங்க அமைப்பு உட்பட எல்லா இஸ்லாமிய அமைப்புகளை முஸ்லிம்கள் இன்னும் ஆதரிக்க முன்வராமல் இருப்பதே வேதனைக்குரியது.உபியில் இஸ்லாமியர், உயர் ஜாதியினர் எங்களை கைவிட்டதால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று மாயாவதி கூறுகிறார்.முஸ்லிம்களை இன்னும் ஊரணிக்கு வரவில்லை இதை சரி செய்யும் சமூகப்பணிகள் பெரிய அளவில் நடத்தப்படனும்.எல்லா இந்தியர்களுக்காக உழைக்க கூடிய அமைப்புகளை இந்திய மக்கள் ஏற்று கொள்வார்கள்.யூதர்கள் போன்ற மக்கள் இருந்ததால்தான் மூஸா நபி போன்றவர்களை அல்லாஹ் அனுப்பினான்.அல்லாஹ்வின் உதவி நின்று விடவில்லை.இந்த தேர்தலும் முடிவுகள் பிரதமர் கனவில் இருந்த எல்லா தலைவர்களுக்கும் பெரிய இடி.இனி மதவாதிகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கொடுத்த தேர்தல். மோடி ஒரு பெரிய விஷயம் அல்ல. மோடிகளை உருவாக்கும் rss இன்னும் முஸ்லிம்களால் கவனிக்கப் படவில்லை. அவர்களின் ஒவ்வொரு அடியும் எப்படி எடுத்து வைத்து முன்னேறுகிறார்கள் நாம் ஏன் அதை தடுத்து முன்னேற முன் வருவதில்லை? நம் சிந்தனையில் கோளாறு உள்ளது.அதை சரி செய்து காலத்திற்கேற்ப, எதிரிகளுக்கேற்ப நமது செயல் பாடுகளை அமைக்க முன் வர வேண்டும்.1925-ல் இருந்து rss பயணம் செய்து வருகிறது.நாம் ரெம்ப பின் தங்கி வருகிறோம்.நாமும் உடனே எதிர்ப்பார்ப்பு பார்க்காமல் கடுமையாக உழைத்தால் நிச்சயம் இஸ்லாம் வெற்றி பெரும்.

Adirai Iqbal said...

மாஷா அல்லாஹ் ! மிக அருமையான காலத்தின் தேவைக்கேற்ற பதிவு!

ஜஸாக்கல்லாஹ்!

Adirai Iqbal said...

மாஷா அல்லாஹ் ! மிக அருமையான காலத்தின் தேவைக்கேற்ற பதிவு!

ஜஸாக்கல்லாஹ்!

Adirai Iqbal said...

மாஷா அல்லாஹ் ! மிக அருமையான காலத்தின் தேவைக்கேற்ற பதிவு!

ஜஸாக்கல்லாஹ்!

Adirai Iqbal said...

மாஷா அல்லாஹ் ! மிக அருமையான காலத்தின் தேவைக்கேற்ற பதிவு!

ஜஸாக்கல்லாஹ்!