Wednesday, January 25, 2017

வேண்டும் ஷரீ ஆ


இந்தியாவில் முஸ்லீம்களின் ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களின் பேசுபொருள் ஆக இருப்பது பொது சிவில் சட்டம் என்றால் அது மிகையான கூற்றல்ல. இந்தியாவில் முஸ்லீம்கள் தவிர பிற மதத்தவர்கள் அனைத்து விடயங்களில் ஒன்றாக இருப்பது போலவும், முஸ்லீம்கள் மட்டுமே பொது சிவில் சட்டம் கொண்டு வர தடையாக இருப்பது போன்ற சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள வறுமை, இலஞ்சம், ஊழல், தீண்டாமை உள்ளிட்ட அனைத்து சீர்கேடுகளும் பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் ஒழிக்கப்பட்டு இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போன்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலை
இந்தியாவில் தற்போது குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் ஓரே மாதிரி தான் வழங்கப்படுகின்றன. முஸ்லீம் திருடினால் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் கை வெட்டப்படுவதில்லை. மாறாக குறை மதி படைத்த செல்லரித்து போன மனித மூளைகளில் உருவான, 66 வருடங்களில் 101 முறை மாற்றப்பட்டுள்ள இந்திய பீனல் கோட்டின் அடிப்படையிலே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. பின் எதற்கு இந்த வெற்று கூச்சல் என்று பார்த்தால் பெர்சனல் லா எனப்படும் தனி நபர் சட்டங்களில் அதுவும் 1. திருமணம் 2. விவாகவிலக்கு 3. சொத்துரிமை 4. வக்ப் நிர்வாகம் என்று முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே உள்ள நான்கு விடயங்களில் மாத்திரம் முஸ்லீம்கள் ஷரீ ஆவை பின்பற்ற இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. மற்றவர்களுக்கு இவ்வனுமதி இல்லையா என்றால் இந்துக்கள் கூட்டு குடும்பமாக இருந்தால் வருமான வரி சலுகை உள்ளிட்ட ஏராளமான விதிவிலக்குகள் உண்டு. இந்துக்களுக்கு சுமார் 292 விடயங்களில் தனிப்பட்ட சட்டங்கள் உண்டு.

பொது சிவில் சட்டம் – ஆதரவு குரல்கள்
பொது சிவில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்போர் கீழ்காணும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
  • ·         ஒரு மதசார்பற்ற நாட்டில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டம் கூடாது.
  • ·         அனைவரும் மத, ஜாதி வேறுபாடின்றி சமமாக நடத்தப்பட வேண்டும்
  • ·         இந்திய அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ·         போலி மதசார்பின்மைக்கு பதிலாக அனைவரையும் சமமாக பிஜேபி அரசு நடத்துகிறது.


முஸ்லீம் தலைமைகளின் நிலைப்பாடு
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்பதில் ஏறக்குறைய அனைத்து அமைப்புகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். எனவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துதல், பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பொது சிவில் சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரல் என்று பிஸியாக உள்ளனர். பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் தலைவர்கள் பின் வரும் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
  • ·         இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் பிரிவின் கீழே பொது சிவில் சட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பரிந்துரையே அன்றி கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. (உ.ம்) மது விலக்கு, கட்டாய இலவச கல்வி
  • ·         இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை பிரிவில் ஒவ்வொருவரும் தம் மதத்தை பின்பற்ற அளித்துள்ள உரிமைக்கு எதிரானது பொது சிவில் சட்டம்.
  • ·         முஸ்லீம்கள் பின்பற்றும் நான்கு விடயங்களும் முஸ்லீம் சமூகத்தின் உள் விவகாரம். இதனால் பிற சமூகங்களுக்க  எவ்வித பாதிப்புமில்லை.

பிஜேபியின் திட்டம் தான் என்ன ?
பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல என்பது பிஜேபிக்கும் தெரியும். ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வர முடியும் என்பது ஒரு புறம் இருக்க இந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களையே அவர்களால் ஒற்றுமைப்படுத்த முடியாது என்பது தான் யதார்த்தம். பிராமணர்களை போல் எல்லோரும் மந்திரம் ஓதலாம் என்றோ அனைவரையும் பொது சுடுகாட்டில் புதைக்கலாம் என்றோ  சட்டம் இயற்றுவார்கள் என எதிர்பார்ப்பது மடமை. வர்ணாசிரம படித்தரத்தை குலைக்கும் எம்முயற்சியையும் பிஜேபி உள்ளிட்ட எந்த அரசும் செய்யாது.
இப்படி பேசுவதன் மூலம் முஸ்லீம் மக்களின் உணர்வுகளை தூண்டி இந்துக்களின் வாக்குகளை குவிமையப்படுத்தி வாக்கு அறுவடை செய்வது பிஜேபியின் நோக்கமாக இருக்கலாம் அல்லது முஸ்லீம்களுக்கு மட்டும் பாதகமாக இருக்குமாறு மற்ற சட்டங்களில் சமத்துவம் கொண்டு வராமல் பொது சிவில் சட்டத்தை கொல்லைப்புறமாக கொண்டு வரும் முயற்சியாகவும் இருக்கலாம்.

பொது சிவில் சட்டம் – நதி மூலம்

12ம் நூற்றாண்டிலிருந்து 18 நூற்றாண்டு வரை முஸ்லீம்கள் ஆண்ட பொழுது இந்தியா உலகளாவிய கிலாபாவின் விலாயத்தாக இருந்தது என்பது நம்மில் பலர் அறியாத விடயம். அக்பர் ஆட்சி செய்த காலகட்டம் போன்ற சில விதிவிலக்குகளை தவிர இஸ்லாத்தின் அடிப்படையிலேயே இங்கு ஆட்சி நடைபெற்றது. அமுல்படுத்துவதில் உள்ள கோளாறினால் இஸ்லாம் ஆட்சி செய்ததையோ ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் தங்கள் வாழ்வை வழி நடத்தியதையோ மறுக்கவியலாது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது திப்பு சுல்தான், சிராஜ் அத் தெளலா போன்ற முஸ்லீம் மன்னர்களும், சையது அஹமது ஷஹீத், ஷா வலியுல்லா போன்ற முஜாஹித்களுமே. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க போராடிய முஸ்லீம் மன்னரான பஹதூர் ஷா போன்றோர் பிண்ணணியில் இந்துக்கள் அணி திரண்டனர்.

முஸ்லீம்களையும் இந்துக்களையும் பிரிக்க 1857ல் முதலாம் சுதந்திர போரில் முஸ்லீம் வீரர்களின் துப்பாக்கிகளில்பன்றி கொழுப்பை தடவியும், இந்து வீரர்களின் துப்பாக்கிகளில் பசுவின் மாமிசத்தை தடவியும் பிரிவினைஏற்படுத்தியது போன்று பல்வேறு சூழ்ச்சிகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டார்கள். முஸ்லீம்களின் கல்விநிலையங்களை முற்றிலுமாக சிதைத்து மெக்காலேவின் கல்வி திட்டத்தை அமுல்படுத்தினர். நாளடைவில்முஸ்லீம்கள் சாத்தியப்பட்ட இடங்களில் ஷரீயாவை பின்பற்றவும் சில இடங்களில் உள்ளூரில் இருந்த பஞ்சாயத்து சட்டங்களையும் பின்பற்றினர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிலாபத்துக்காக போராடிய முஸ்லீம்கள் கிலாபத் வீழ்த்தப்பட்டதாலும் பாகிஸ்தான் பிரிவினை நோக்கி தள்ளப்பட்டதாலும் இந்தியாவில் சிறுபான்மையினர்  ஆயினர். இச்சூழலில் இஸ்லாமிய சட்டங்கள் தான் இந்தியாவை ஆள வேண்டும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லீம்களை ஆள வேண்டும் என்று உரத்து முழங்க வேண்டிய முஸ்லீம் தலைமைகள் மெளனித்ததன் விளைவே இன்றைய பொது சிவில் சட்ட பூச்சாண்டி. முஸ்லீம்களுக்கு எதிராக காங்கிரஸுக்குள் நடந்த துரோகங்ளும் குறைந்த பட்சம் இந்த நான்கு விஷயங்களில் மாத்திரமாவது இஸ்லாத்தை பின்பற்ற வாய்ப்பு கிடைக்கட்டும் என்ற மனோ நிலைக்கு முஸ்லீம் தலைமைகளை தள்ளியிருக்கலாம்.


பாபரி மஸ்ஜித் ஏன் இடிக்கப்பட்டது

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது நாம் நினைப்பது போன்று வெறுமனே ஒரு பள்ளியை இடிப்பது அன்று. அவ்வாறெனில் யாரும் பார்க்காத நேரத்தில் இரவோடிரவாக பள்ளியை இடித்து விட்டு சென்றிருப்பார்கள். ஆனால் பாபரி மஸ்ஜித் ராமர் பிறந்த இடம் என்றும்  அதை இடித்தே தீர்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவையும் உணர்வூபூர்வமாய் பங்கெடுக்க வைத்து கோடிக்கணக்கான முஸ்லீம்கள் கையாலாகாத நிலையில் இருக்க பள்ளி இடிக்கப்பட்டது முஸ்லீம்களின் ஈமானிய தரத்தை சோதிக்கும் ஏற்பாடே. எனவே அதை வெறும் மண்ணுக்கான போராட்டமாக நோக்காமல் கொள்கை நிலை நிறுத்துவதற்கான போராட்டமாக பார்க்கப்படல் வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட ஆரம்ப புள்ளியாக செங்கல் பூஜைக்கு அனுமதி அளித்ததே பிஜேபியின் பரம எதிரி என  சொல்லப்படும் காங்கிரஸ் தான் என்பதை தெரிந்தால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது புலனாகும்.

நமது எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும்

இந்திய அரசியல் சாசனத்தை புனிதப்படுத்த வேண்டாம்

ஒரு முறை உமர் ரலி அவர்கள் தவ்ராத்திலும் சில நல்ல விடயங்கள் இருக்கிறதே என்று சொன்ன போது நமதுதலைவர் முஹம்மது (ஸல்) கோபப்பட்டவர்களாக " மூஸா அலை உயிரோடு இருந்தாலும் என்னை தான் பின்பற்றவேண்டி இருக்கும்" என்று சொன்னது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. இறைவன் அருளிய வேதமாக தவ்ராத்இருந்தாலும் அதில் மனித கைகள் ஊடுறுவிய காரணத்தால் அதை பின்பற்றல் கூடாது என்று நபிகளார்தடுத்திருக்க நாமோ மனித கைகளால் மனித இச்சைகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தைபுனிதப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

101முறைமாற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு புத்தகத்திற்கு பகரமாக இவ்வுலகை படைத்த படைப்பாளன் அருளிய குரானை கொண்டு மக்கள் வழி நடத்தப்பட வேண்டும்என்று உரத்து முழங்கவேண்டிய நாமோ இந்திய அரசியல் சாசனத்திலேயே எங்களுக்கான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றுஅதன் பின்னாலே ஒளிய கூடாது.

சிவில் மட்டுமல்ல கிரிமினலும் இஸ்லாமிய சட்டமாக இருக்கட்டும்

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் ஹெச். ராஜா போன்ற ஹிந்துத்துவாஆதரவாளர்கள் சிவிலில் இஸ்லாமிய சட்டங்களை கேட்கும் முஸ்லீம்கள் கிரிமினலில் இஸ்லாமிய சட்டங்களைகேட்க மறுப்பதேன் என்று அறிவுரை கூறும் அவல நிலை உள்ளதை மறுக்க இயலாது. புவியில் வசிக்கும் மாந்தர்அனைவருக்கும் பயன் பெறும் அத்துணையும் கற்று கொடுத்த மதரஸாக்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில்நிர்மூலமாக்கப்பட்ட போது அப்போதைய சூழலில் குறைந்தது குரான், ஹதீஸ் கற்றால் போதுமானது என்று திருப்திபட்டு கொண்டு கல்வியை இரண்டாக பிளந்து உலக கல்வியை ஒதுக்கி மார்க்க கல்வியோடு உம்மத் திருப்தி பட்டுகொண்டதை போல் முஸ்லீம்களே முழு மார்க்க சட்டங்களும் வேண்டாம், திருமணம், விவகாரத்தில் மட்டுமாவதுஎங்களுக்கு உரிமை உள்ளதே போதும் எனும் திருப்தி மனப்பான்மையில் உள்ளதை போன்று தோன்றுகிறது.

மேலும் சில அறிவு ஜீவி தலைவர்களோ சிவில் சட்டங்களை சமூகத்தால் அமுல்படுத்த இயலும் என்றும் குற்றவியல்சட்டங்களை ஒரு அரசாலே அமுல்படுத்த இயலும் என்பதாலேயே அக்கோரிக்கையை எழுப்பவில்லை என்றும்கூறுகின்றனர். இன்னும் சிலர் நாமே அக்கோரிக்கையை எழுப்பி நம் சமூகத்தை அழிவுக்குள்ளாக கூடாது என்றுகூறி அவ்வாறான கோரிக்கை கூட எழுப்ப மறுக்கின்றனர். நாம் கோரிக்கை வைத்தால் ஏற்று கொள்வார்களாஎன்பது சந்தேகம் எனினும் அப்படி ஒரு கோரிக்கை வைத்தால் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் அளப்பறியது என்பதைஉணர வேண்டும்.

பிராச்சார்த்திற்கான பெரும் வாய்ப்பு

பொது சிவில் சட்டம் குறித்து பாஜக அரசு பதற்றம் கிளப்பும் இத்தருணத்தை விட இஸ்லாமிய ஷரீயாவை பிரச்சாரம்செய்யும் பொன்னான தருணம் இருக்க முடியுமா. இந்தியாவில் வன்புணர்வுகள் நடக்கும் போதெல்லாம் அத்வானிபோன்ற ஹிந்துத்துவா தலைவர்கள் கூட இந்தியாவில் அரபு நாட்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றுசொல்வர். அவ்வாறு சொல்லும் போது அத்தருணங்களில் இப்போது மட்டுமல்ல. எப்போதும் ஷரீயாவே சிறந்தது என்பதனை பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்திட பெரும்வாய்ப்பாக உபயோகித்திருக்க வேண்டும்.


பொது சிவில் சட்டம் என்னும் நஜீஸை முஸ்லீம்களிடமிருந்து மட்டும் அல்ல, மொத்தமானிடத்திடமிருந்து அப்புறப்படுத்த உழைப்பதில் முஸ்லீம்கள் முண்ணணியில் நிற்க வேண்டும். அதுமாத்திரமின்றி இந்தியாவில் இரட்டை குவளை முறை ஒழிக்கப்படவும், மாட்டை விட கேவலமாகமனிதன் கருதப்படும் நிலை துடைத்தெறியவும், சாமன்யனுக்கு ஒரு நீதி, சங்கராச்சரிக்கு ஒரு நீதிஎனும் பாகுபாடற்ற நிலை நீங்கவும், இந்தியாவை பிடித்திருக்கும் அனைத்து விலங்குகளுக்கும் தீர்வுஇஸ்லாம் சொல்லும் ஷரீயாவை அமுல்படுத்துவதே எனும் உண்மை சொல்லப்படுவதோடு அதை நோக்கி நாம் உழைக்கவும் வேண்டும்.  சாதி, காவி, சமத்துவமின்மை, பசி, பயம், பெண்ணடிமைத்தனம், ஆபாசம், மது, சுரண்டல், இலஞ்சம் என இந்தியாவை கவ்வி பிடித்திருக்கும் விலங்குகளை உடைக்க இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே என்று உரத்து முழங்குவோம். அந்த இலக்கு நோக்கிய பயணத்தின் முதல் படியாக பாபரியை நோக்கிய மீள் எழுச்சி பயணத்தை நோக்கி புறப்படுவோம்.

No comments: