Thursday, June 25, 2015

மல்ஹமா


மல்ஹமா என்பது சண்டை, போர் ஆகும். ஆனால் நாம் நினைப்பது போல் அது ஓர் சிறிய சண்டை அல்ல, தொடர்ச்சியாக நடக்க கூடிய போர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய சண்டை. நீண்ட கால மோதல். சிறிய போரிலிருந்து தொடரக்கூடிய பெரிய போர். மூன்றாம் உலக போர் என்றே சொல்லலாம்.

 
சமகால முஸ்லீம்களை பொறுத்த வரை மிக முக்கிய நிகழ்வான மல்ஹமா கடுமையான குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நடைபெறும். இமாம் மஹதி (அலை), ஈஸா (அலை), கிலாஃபா எழுச்சி மற்றும் தஜ்ஜால் வருகை சம்பந்தப்பட்டது. பத்ர் போரை போல் திருப்புமுனையை உண்டாக்கும் போர் என்று சொன்னாலும் மிகையாகாது.

முஸ்லீம்களுக்கும் ரோமர்களுக்கும் மத்தியில் மல்ஹமா நடைபெறும்


ரோம் என்பது அரசியல் ரீதியான அடையாளம் அல்ல. இனம் அல்லது கலாச்சாரம் ரீதியான அடையாளம். ஒரு நேரத்தில் ரோமர்கள் ஐரோப்பாவில் இருந்தார்கள். ஆனால் தற்போது வட, தென் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இன்னும் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அதனையும் உள்ளடக்கும்.


பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கு தகுந்ததுபோல், மேற்குலகம் தன்னை இஸ்லாத்திற்கு எதிராக, சத்தியத்திற்கு எதிராக கட்டமைத்து வருகின்றது. இது இன்றோ நேற்றோ இருக்ககூடிய உருவாக்கம் அல்ல. பல நூற்றாண்டுகளாக அவர்கள் தங்களை கட்டமைத்து வந்திருக்கின்றார்கள். இன்னொரு பக்கம் முஸ்லிம் உலகத்தை பார்ப்போம் என்றால், முஸ்லிம் தலைமைகள் ஏமாளிகளாகவும், பெரும் உறக்கத்திலும், ஏமாற்று பேச்சுவார்த்தை / அமைதி ஒப்பந்தம் என்ற பெயரிலும், மேற்கத்தியர்களின் அடிமைகளாகவும் உள்ளனர். புனித தலங்களின் காப்பாளர்களே அமெரிக்காவின் கம்யூனிஸத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை விட அதிகம் முஸ்லீம் உம்மத்தின் பொருளாதரத்தை செலவழித்திருக்கிறார்கள் என்றால் பிற நாடுகள் குறித்து கேட்கவே வேண்டாம்.


ஓர் கட்டத்தில் ரோம் கிறித்தவத்தை தழுவுகின்றது. கிறித்துவத்தின் பெயரால் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். கிறித்துவ மதத்தையே மாற்றிவிட்டார்கள். கிழக்கில் இருந்த கிறித்துவர்களும் அரபு கிறித்தவர்களும் உண்மையில் சாந்தமான மார்க்கத்தை தான் பின்பற்றினார்கள். திரித்துவ கொள்கை உள்ளிட்ட ஷிர்க்கான விஷயங்களை பின்பற்றினாலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற அடிப்படையே அவர்களின் இயல்பாக இருந்தது. சாந்தமான மதம் என்று பெயர் எடுத்த கிறித்தவத்தை, மனித வரலாற்றில் கிறித்தவத்தை விட மனித இரத்தத்தை ஓட்டாத மதம் இல்லை என்ற நிலைக்கு ரோமர்கள் ஆக்கிவிட்டார்கள். சிலுவை போரில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் / நிலத்துவ பிரபுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்கள் / ஐரோப்பாவில் கிறித்துவ பிரிவுகளுக்கு மத்தியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்கள் / வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டத்தில் பூர்வகுடிகளை ஒட்டுமொத்த இனபடுகொலை செய்தவர்கள் (ஆராய்ச்சிக்காக விட்டுவைத்த ஒரு சிலரை தவிர) என ஆரம்பித்து பொருளாதர தடையின் மூலம் இலட்சக்கணக்கான ஈராக்கிய குழந்தைகளை கொன்றது, இஸ்ரேலின் மூலம் பலஸ்தீன் இளங்குருத்துக்களையும் அகதிகளையும் கொன்றது, ஆப்கான், சோமாலியா, ஷாம் வரைக்கும் அவர்களின் கொலைப்பட்டியல் நீண்டது. நீண்ட காலமாக சத்தியத்தின் வாடையே இல்லாமல், சத்தியத்திலிருந்து தொலைதூரம் வாழக்கூடிய ஓர் சமூகமாக ரோமர்கள் இருந்த காரணத்தால் ஷைத்தான் அவர்களை தேர்ந்தெடுத்து கொண்டான் தன்னுடைய நாச வேலையை அரங்கேற்றுவதற்கு.  இஸ்லாத்துக்கு எதிரான தன்னுடைய போரில் போரிட ஷைத்தானுக்கு சிறந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.


ஷாமில் உள்ள அல் அமக் / தாபிக்கில் ரோமர்கள் முஸ்லீம்களை தாக்குவார்கள் 


போரின் தொடக்கத்தில் முஸ்லீம்களின் நிலை பலவீனமானதாகவும் இறுதியில் வெற்றியானதாகவும் மாறும். பித்னா உச்சத்தில் இருப்பது போல் நன்மையும் அதிகமாக இருக்கும். தஜ்ஜால் வருவதை போல் ஈஸாவும் மஹ்தி (அலை) வருவார்கள். மதீனாவிலிருந்து முஸ்லீம்களின் ராணுவம் ரோமர்களை எதிர்கொள்ள செல்லும். அன்றைய காலகட்டத்தின் உலகின் மிகச் சிறந்த நம்பிக்கையாளர்களாக அவர்கள் இருப்பார்கள் என்பது அவர்களின் சமூகத்தில் நாம் இருக்க மாட்டோமா என்று நம்மை ஏங்க வைக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த ரோமர்களும் இஸ்லாத்துக்கு எதிராக இல்லை. அவர்களிலும் சத்தியத்தை தேடுபவர்களின் உள்ளங்களை இஸ்லாம் வெல்லும். இறைவனால் சபிக்கப்பட்ட சமூகமான யூத சமூகத்திலேயே அப்துல்லா பின் ஸலாம் (ரலி) முதல் லியோபால்டு முஹம்மது அஸத் வரை இஸ்லாத்தை ஏற்று கொண்டது இதற்கான தெளிவான உதாரணம். இஸ்லாத்தை ஏற்று கொண்ட ரோமர்களான தங்களது சகோதரர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு முஸ்லீம்களிடம் கோரிக்கை விடுப்பார்கள்.


ஆனால் அவர்களுக்கு தெரியாது போலும் இஸ்லாம் எத்தகைய நிலப்பரப்புக்கும் கட்டுப்படாது, அல்லாஹ்வின் பெயர் உயர்த்தப்படும் இடமெல்லாம் முஸ்லீமின் தேசம் என்பதும் இறைவனின் வாக்கு நிலைநாட்டப்படும் இடமெல்லாம் நம் நாடே எனும் உண்மையும். எத்தகைய உறவை விடவும் ஈமானிய உறவு பலம் வாய்ந்தது என்பதற்கு அபுபக்கர் ரலி மகனை நோக்கி சொன்ன சொல்லாடலிருந்து அரபுலகில் பிறந்த அப்துல்லாஹ் அஸ்ஸாமிலிருந்து உசாமா வரை ஆப்கன் மண்ணில் இரத்தம் சிந்தியது வரை தெளிவான வாழும் சாட்சிகள். எங்களது சகோதரர்களை நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் என்று முஸ்லீம்கள் கூறியவுடன் போர் தொடங்கும். முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பங்கினர் புறமுதுகிட்டு ஓடுவர். அவர்கள் அது வரை செய்த நல்லமல்கள் அழிக்கப்படுவதோடு அவர்களின் தவ்பாவும் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படாது. இவர்களுக்கும் கிலாபாவை மீள் கட்டமைக்க போகிறோம், புதிய விடியலை காண்பிக்க போகிறோம், ஏகத்துவத்தின் அடிப்படையிலான சமூகத்தை சமைக்க போகிறோம் என்று கூறிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணையான தாகூத்களை உருவாக்கும் இஸங்களுக்கு சாமரம் வீசி கொண்டு அதிகாரம் மக்களுக்கே என்று கீழிறிங்கியவர்களுக்கும் என்ன வித்தியாசம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. (“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். (3:8)).
 

 மூன்றில் இன்னொரு பங்கினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த ஷஹீதுகளாக கணிக்கப்படுவர். மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினருக்கு அல்லாஹ் வெற்றியை கொடுப்பான். கான்ஸ்டன்டிநோபிலை (துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்) வெற்றி கொள்ளும் வரை அவர்களை எதுவும் ஒன்றும் செய்ய இயலாது. கனீமத் பொருட்களை பங்கிடும் போது தஜ்ஜால் வந்து விட்டான் என்று செய்தி கேட்டு ஷாமுக்கு செல்வர். பின்பு அது வதந்தி என்பது புலனாகும். சில காலம் கழித்து தஜ்ஜால் ஈஸா (அலை) அவர்களால் கொல்லப்படுவான் என்பது தனி விடயம்.


ஈராக், ஷாமின் மீது பொருளாதார தடை
 

"ஒரு காலம் வரும். அச்சமயம் ஈராக் மீது தடை விதிக்கப்படும். எவ்வித உணவு பொருளோ அல்லது பொருளாதார உதவியோ உள்ளே நுழையாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய போது யார் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என கேட்கப்பட்ட போது அல் அஜம் (முஸ்லீமல்லாத அரபி அல்லாதவர்கள்) என்று கூறினார்கள். ஷாமின் (பாலஸ்தீன், சிரியா, ஜோர்டான், ஈராக்) மீதும் அவ்வாறே தடை ஏற்படுத்தப்படும் என்றும் கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அர்ரூம் அத்தடையை ஏற்படுத்துவார்கள் என பதிலளித்தார்கள். ஈராக்கின் மீது ஏற்படுத்தப்பட்ட பொருளாதார தடையும் ஈராக்கில் கிளம்பிய தீ இன்று ஷாம், ஏமன் என விரிவடைவதும் இந்நபிமொழி உயிர்ப்பிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஏமனை பற்றி குறிப்பிடும் போது ஏமனின் இருந்து கிளம்பும் 12,000 நபர்கள் கொண்ட படை தனக்கு பிறகு சிறந்த படை என்றும் ஈமான் ஏமனில் இருக்கிறது என்று சிலாகித்து கூறியுள்ளார்கள். மேலும் எப்படையை கைக்கொள்வது என்பது பற்றிய கேள்விக்கு ஷாமில் உள்ள படையை கைக்கொள்ளுங்கள் என்றும் பதிலளித்துள்ளார்கள்.


30 வருடங்களுக்கு முன் எவ்வித ஊடகத்திலும் முஸ்லீம் உம்மத் குறித்து விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரியாகவோ தவறாகவோ இஸ்லாம் விவாதப்பொருளாகி உள்ளதை தெளிவாக உணரலாம். அதனால் தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பார்வையாளர்களாக இருந்த முஸ்லீம்கள் நிச்சயம் இறைவன் நாடினால் மூன்றாம் உலக போரில் கதாநாயகர்களாக விளங்க போகின்றனர் என்பதை நாம் தெளிவாக உணரலாம். ஆனால் அதற்கு நாம் சில விலைகளை கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு பிரசவத்துக்கும் வலி இருப்பதை போல் மீண்டும் அந்நிலையை அடையை இச்சமூகத்துக்கு ஒரு மீள் பிரசவம் தேவைப்படுகிறது என்ற ஷஹீத் சையது குதுப் (ரஹ்) அவர்களின் வார்த்தையை நம்மால் புறந் தள்ள இயலாது.

 

தனித்துவமானவர்கள் ஸஹாபாக்கள்


ஸஹாபாக்களை நாம் எத்தலைமுறையோடும் ஒப்பீடு செய்ய முடியாது. அவர்கள் இஸ்லாத்தை நிலைநிறுத்த தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த காரணத்தால் தான் அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள், தபோ தாபியீன்களால் குரானுக்கு விளக்கவுரைகளும் ஹதீதுகளுக்கு தெளிவுரைகளும் எழுத முடிந்தது. ஏனென்றால் சமூகத்தின் ஓட்டத்தோடு அல்ல, சமூகத்தின் ஓட்டத்துக்கு எதிராக இயங்கியவர்கள் ஸஹாபாக்கள். அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு. குளிரூட்டப்பட்ட அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாடம் பயிலவில்லை. இளைப்பாறலே வாளின் கீழ் தான் இருந்தது. அதனால் தான் கனீமத்தாக 40,000 திர்ஹம்கள் கிடைத்த போது குப்பார்களின் சித்ரவதையால் சதை கிழிந்த கப்பாபால் மனமாற ஏற்று கொள்ள முடியாமல் தலையை மறைக்க துணி இல்லாமல் மரணித்த முஸ் அப்பை நினைத்து கவலைப்பட்டார்கள். தன் உயிர் நபியுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒட்டு மொத்த செல்வத்தையும் ஜகாத்தாக கேட்ட போது தர்க்கிக்காமல் சுஹைப்பால் கொடுக்க முடிந்தது. தன் தலைவரின் பாதத்தில் முள் தைப்பதை விட தான் கழுவில் ஏற்றப்படுவது குபைப் ரலிக்கு சுகமாக இருந்தது. அதனால் தான் அண்ணலாரால் அம்மாரின் எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவி இருக்கிறது என்றும் அவர் படும் துன்பம் சகிக்க முடியாமல் அம்மாரை சுவனம் பார்க்க ஆசைப்படுகிறது என்று சொல்ல முடிந்தது.


நம்முடைய உம்மத் உண்மையில் மிகச் சிறந்த உம்மத்தாகும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் " என்னுடைய உம்மத் மழைக்கு ஒப்பானது. அது எப்போது வெடிக்கும் என சொல்ல இயலாது, ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ அல்லது இறுதியிலோ இருக்கலாம்" (திர்மிதி, முஸ்னத் அஹ்மத்). முஹம்மது (ஸல்) அவர்களிலிருந்து ஆரம்பித்த உம்மத் ஈஸா (அலை) அவர்களோடு முடிவுறும் பாக்கியம் நிறைந்தது.


ஸஹாபாக்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாம் இன்று இடிந்து கிடக்கும் சூழலில் அதை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய மகத்தான பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்காக நாம் தயாராவதோடு நம் பிள்ளைகளையும் தயார்படுத்த வேண்டும். இறைவன் நாடினால் ஸஹாபாக்கள் சமூகம் போல் நம்மாலும் கிலாபா மீள் கட்டமைக்கப்படுவதில் பங்கு செலுத்தும் பாக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விட கூடாது.மதீனத்து சமூகம் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல நாம் நிஜமாகவே பார்க்க இயலும். கஃபதுல்லாஹ்வில் தொழும் பாக்கியம் மக்காவில் வசிப்பவனுக்கு. அவன் தொழாதவனாக இருந்தால் அதை விட பெரும் நஷ்டம் இருக்க முடியாது. முடியாதோ அது போல் அப்பொற்காலத்தில் வாழ்ந்து அதன் பலன்களை அறுவடை செய்ய முடியா விட்டால் நம்மை விட துரதிருஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.


உமர் என்று நம் குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் போதாது. அப்பெயருக்கு உரித்தானவனாக நாம் அவனை வளர்த்தோமா என்று அல்லாஹ்விடத்தில் எப்படி பதில் சொல்ல போகிறோம் என்று நினைத்து பார்த்திருக்கிறோமா. நாம் உமராக, அபூபக்கராக, உஸாமா பின் ஜைதாக, காலித் பின் வலீதாக ஆக வேண்டும் அல்லது அவர்களின் தந்தை என்றாவது அல்லாஹ்விடத்தில் அழுது சொல்ல வேண்டும். நாம் அத்தகைய வாய்ப்பை நழுவ விட்டோமெனில் நம்மை விட கைசேதத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஸஹாபாக்கள் இஸ்லாத்துக்கு ஒரு நாள் முன்னமேயே வந்திருக்க கூடாதா என்று ஏங்குவார்கள். அதை ஈடுகட்ட வியாபாரத்தையே துறந்து திண்ணை தோழர்களாக மாறி போனார்கள்.


இரண்டு விஷயங்களுக்கு தயாராக வேண்டும்


1.   தாபாத் - மலை போன்ற உறுதி. பூமிக்கு கீழேயும் வேர்களை கிளப்பி உறுதியாய் நிற்கும் மலைகளை போல் எல்லா சூழலிலும் உறுதியாய் இருக்க வேண்டும். குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க உறுதியாய் இருப்பவர்களுக்கு பரக்கத்தும் அதிகம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

2.   தத்கியா - தியாகம் செய்வதற்கான ஆவல்.குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நமக்கு மிக முக்கிய தேவை அனைத்தையும் தியாகம் செய்யும் பக்குவம். தூங்கும் போது முஸ்லீமாக தூங்குபவன் விழித்திருக்கும் போது முஷ்ரிக்காக எழும் குழப்ப காலத்தில் நமது உடைமை, பொருளாதாரம், நேரம், உயிர், நமக்கு பிடித்த தலைவர்கள், நாம் சரந்த இயக்கம் அனைத்தையும் அவை பாதகமாக இருப்பின் தூக்கி எறிய தயாராக இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பது மாத்திரம் போதாது, மாறாக இஸ்லாத்தை நபிகளார் காட்டிய அடிப்படையில் நிலை நாட்டுபவர்களாக இருப்பதை கொண்டே ஒரு அமைப்பில் நீடிக்க வேண்டுமே தவிர வெறுமனே அதன் வரலாற்றை கொண்டோ அதை தோற்றுவித்தவர்களை கொண்டோ அல்ல.

 

குழப்பத்தின் தன்மை


கரிய இரவின் நடுவே ஒரு பொருளை பார்ப்பது எவ்வளவு கடினமோ அது போல் இக்குழப்பம் பனிக்காலத்து பனியை போல் தெளிவின்றி இருக்கும். இவ்விருளுக்கு உள்ளே பயணிக்க ஈமானிய ஒளி இருக்க வேண்டும். குழப்பம் முடிந்து தெளிவான பிறகு ஈமான் கொள்வதில் எவ்வித பயனுமில்லை. சில போது உங்கள் பாதையில் யாருமே துணைக்கு இல்லாமல் தனியாக செல்ல நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும். (6:158)

 
யூதர்களுடனான மோதல்

 

யூதர்களுடன் முஸ்லீம்கள் போரிடாத வரை மறுமை நாள் வராது. ஜோர்டான் நதியின் வடபுறத்தில் அவர்கள் இருப்பார்கள். இப்போரில் முஸ்லீம்கள் வெல்வர். ஒவ்வொரு கல்லும் மரமும் " ஓ முஸ்லீமே. என் பின்னால் ஒரு யூதன் ஓளிந்து கொண்டிருக்கிறான். அவனை கொல்" என காட்டி கொடுக்கும். அப்போதும் அக்கல்லும் மரமும் முஸ்லீம் என நம்மை ஒரு உம்மத்தாக அழைக்குமே அன்றி நம் பிரிவு அல்லது அமைப்பு பெயர்களை கொண்டு அழைக்காது.

 

பலஸ்தீனை மீட்போம்,

              அல் அக்ஸாவை காப்போம்,

அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கும் சிறைகளுக்கும்

                 எதிராய் போர் தொடுப்போம்.

                     இன்றைய தோல்விகள் தோல்விகள் அல்ல,

                                 நாங்கள் கற்கின்ற பாடம்,

      நபி ஈஸாவும் விரைவில் வருவார்,

                  அது வரை ஓய்ந்திட மாட்டோம்.

 

(அன்பு சகோதரர்களே ஒரு உரையினால் ஈர்க்கப்பட்டு உரை நிகழ்த்தி பின் அவ்வுரை கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டதால் எழுத்து நடை சில இடங்களில் பேச்சு நடையில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.)

Monday, June 15, 2015

கொடூர சதிவலைகளின் தொகுப்பு!

ஹாலிவுட்டில் பல்வேறு திகில் படங்களை எடுத்து ரசிகர்களை பயமுறுத்திய ஆல்பிரட் ஹிட்ச்காக்கே பயந்திருப்பார் இப்புத்தகத்தை படித்திருந்தால். அந்தளவுக்கு நினைத்து பார்க்கவியலா, ஒட்டு மொத்த மனித குலத்தைப் பூண்டோடு அழிக்கும் நாசகார சதிகளின் தொகுப்பே "ப்ரோட்டோகால்ஸ் - யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" எனும் இப்புத்தகம்.

ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ரீமேஸன்கள் எனப்படும் இரகசிய சமூகத்தைப் பற்றி தமிழில் அரிதாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், சாத்தானான லூசிபரை வழிபடும் யூதர்கள் "பிறப்பின் அடிப்படையில் உலகை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளது" எனும் மமதையால் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த போதிலும் உலகை வெல்ல அவர்கள் தொலை நோக்கோடு போட்ட நீண்ட கால திட்டங்களை இப்புத்தகம் விவரிக்கிறது. யூத சியோனிஸ்டுகளின் இரகசிய அறிக்கை எனும் இப்புத்தகத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்ட பாதிரியார் செர்கி நிலஸ்ஸும் ஆங்கிலத்தில் வெளியிட்ட விக்டரும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டதும் பின் அக்கைதின் போது ஏற்பட்ட சித்ரவதைகளின் காரணத்தாலேயே இறப்புற்றதும் இப்புத்தகம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதும் இப்புத்தகம் அணு குண்டைவிட வீரியமான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதற்குச் சான்றுகள்.

இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார். இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது.

தாங்கள் கனவு காணும் சாத்தானின் அரசை உடனே நிறைவேற்றும் மனித வளம் இல்லாததால் அவ்விலக்கை நோக்கிய பயணத்தில் அவர்கள் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. குறிப்பாக "கட்டற்ற சுதந்திரம்" எனும் பெயரில் மக்களைக் கட்டுப்பாடற்றவர்களாக உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறித்து பேசுகிறது. பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் போர்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கப்படும் இப்புத்தகத்தில் உறுதியான அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தும் கம்யூனிசத்தை ஆதரிக்க வேண்டியது குறித்து பேசும் போது, "தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் கம்யூனிஸம்" என்று இதுகாறும் நினைத்திருந்தது பொய்யோ என்ற எண்ணம் எழுந்து அதிர வைக்கிறது.

மேலும் தற்போதுள்ள ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து சித்தாந்தங்களையும் உருவாக்கியதன் பின்னணியில் இலுமினாட்டிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்புத்தகம், இவை உடைந்து நொறுங்கும்போது பலவீனப்படும் உள்ளங்களைச் சர்வதிகார ஆட்சிக்குத் தயார்படுத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் சதித்திட்டம் விவரிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கல்வி அமைப்பையும் ஊடகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருதல் என்று கூறும் இப்புத்தகம், பிஞ்சு உள்ளங்களின் மனத்தில் வன்மத்தையும் சேர்த்து மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டுமே குழந்தைகளை உருவாக்கி, புதிய தலைமுறையின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் நவீன கல்வி திட்டத்தின் அவலத்தைக் கண்களில் விவரித்து காட்டுகிறது.

தங்களுடைய அரசை அமைக்க வசதியாக தமக்கு எதிரான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்துதல், பொம்மை அரசுகளை ஏற்படுத்துதல், அறிவியலின் பெயரால் மதத்தின்மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துதல், ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்தல், வளர்ச்சியின் பெயரால் நாட்டைச் சுரண்டுதல், தீவிரவாத பிரமையின் மூலமாக மக்களைப் பீதிக்குள்ளாக்குதல் என்று நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் விசயங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியான இப்புத்தகத்தில் அட்சரம் பிசகாமல் வெளிவந்துள்ளது உலகை ஆட்கொள்ள மறைமுகமாக இயங்கிவரும் இலுமினாட்டிகளின் சக்தி எத்தகையது என்ற பீதியை அடிவயிற்றில் கிளப்புகிறது.

மேலும் இப்புத்தகம் இறுதியாக, சாத்தானின் சாம்ராஜ்யத்தை அமைத்தபின் மக்களை அடக்கியாள்வது குறித்தும் யூத அரசர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும் அவர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்று அவருக்காக வரையறுக்கப்படும் தகுதிகளும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இயங்கும் ஃபாசிஸ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸை நினைவுக்குக் கொண்டுவருகிறது.
Better Late than Never எனும் அடிப்படையில்  Eye opener  ஆக வெளிவந்துள்ள இப்புத்தகத்தை மொழிபெயர்த்த ஆளூர் சலீம் மற்றும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தார் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, இதில் சொல்லப்பட்டுள்ள சூழச்சிகளை முறியடிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியத்தையும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை.

வெளியீடு : அடையாளம் பதிப்பகம்

பக்கங்கள் : 124 விலை : 100
- இனியவன் Thanks to Inneram.com

Saturday, March 28, 2015

தொலைக்காட்சி விவாதங்கள் எனும் நவீன காமெடி ரியாலிட்டி ஷோக்கள்

தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கு தொலைக்காட்சிகள் என்ற நிலையில் இருந்த மக்களை செய்தி சானல்களின் பக்கம் மக்களை இழுக்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டன.

தேர்தல் நேரங்களின் போது சிறப்பு பேட்டிகள், சர்வேக்கள், எக்ஸிட் தேர்தல்கள் என அனைத்தையும் தாண்டி குழு விவாதங்கள் வரை விரிவடைந்தன. ஒரு தலைப்பு அல்லது செய்தி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் அறிவார்ந்த நிகழ்ச்சிகள் தற்பொழுது தரம் தாழ்ந்து கோமாளித்தனமான ரியாலிட்டி ஷோக்களாக மாறி வருகின்றன என்பது யதார்த்தமான உண்மை.

செய்திகளை கொன்றவர்

அறிவார்ந்த நிகழ்ச்சிகளாக போய் கொண்டிருந்த விவாதங்கள் இன்று தொகுப்பாளர்கள் தங்களை திறமையானவர்களாக பறை சாற்ற முயலும் நிகழ்ச்சிகளாக மாறியுள்ளது கிரிக்கெட் நடுவரே துவக்க ஆட்டக்காரராக மாறி சிக்சர் அடிக்க ஆசைப்படுவது போன்றதாகும். இத்தகைய மாற்றத்திற்கு வழிகோலியவர்களில் ஒருவரான டைம்ஸ் நவ் நியூஸ் ஹவரின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி குறித்து பிரபல ஆங்கில நாளிதழான அவுட்லுக் " செய்தி நிகழ்ச்சிகளை கொன்றவர்" என்றே அட்டைபட கட்டுரை வெளியிட்டது பொருத்தமான ஒன்றே. கேரவானோ "சத்தத்தை உணர்வீர்" என்று அர்னாபின் நிகழ்ச்சியில் ஏற்படும் காட்டுக்கூச்சலை விமர்சித்திருந்தது.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " எனும் சொல்வடைக்கேற்ப அர்னாப் கோஸ்வாமி தன்னிடத்தில் பேட்டி எடுத்த போது அவரை குறித்து சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி "முட்டாள், கோழை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதற்கு சற்றும் தகுதியில்லாதவன். மூளையை சற்றாவது உபயோகி. அமைதியாக இருப்பது உன் மரபணுவிலேயே கிடையாதா" என்று கூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பதை அர்னாபின் நிகழ்ச்சியை தொடர்ந்து காணும் அனைவரும் ஒத்து கொள்வர்.

டைம்ஸ் நவ்வின் நகைச்சுவை காட்சிகள்

ஆம். இந்தியாவின் மிக அதிகமான மக்களால் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து பார்க்கப்படும் ஆங்கில செய்தி சானலான டைம்ஸ் நவ்வில் ஒளிபரப்பாகும் "நியூஸ் ஹவர்" நிகழ்ச்சியை நீங்கள் தொடர்ந்து பார்த்தால் கீழ்கண்ட காட்சிகளை நிச்சயம் காணலாம்.

 ·        நிகழ்ச்சி தொகுப்பாளர் விருந்தினர்களை நோக்கி காளையை போல் மூர்க்கத்தனமாக பாய்வது

·         டாபர் மேன் போல் விருந்தினர் தொகுப்பாளரை நோக்கி குரைப்பது

·         ஒரே நேரத்தில் அனைவரும் பேசி கொண்டிருப்பது, என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது

·         தொகுப்பாளர் விருந்தினரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பது

·         விருந்தினரின் தேசப்பற்றை தொகுப்பாளரே அளவிடுவது (இந்திய நிறுவனங்களின் மீதோ, அரசியல் சாசனம் மீதோ, நீதித்துறை மீதோ உங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சிபிஎம் (எம்.எல்) பொலிட்பீரோ உறுப்பினர் கவிதாவை பார்த்து பாண்டே பொரிந்தது)

·         இரண்டு தரப்பையும் அரவணைத்து செல்ல வேண்டியவர்  இப்படி தான் பேச வேண்டும் என்று கட்டளையிடுவது

·         போலி தேசியவாத வெறியை தூண்டுவது

இது போன்று பல்வேறு கோமாளித்தனமான நிகழ்ச்சிகளை நிச்சயம் நம்மால் பார்க்க முடியும்.

தேசிய வெறியும் டி.ஆர்.பி ரேட்டிங்கும்

ஈராக் மீதான அமெரிக்க போரின் போது அல் ஜஸீரா வெளியிட்ட நேரடி கள செய்திகள் செய்தி சானலுக்கான தேவையை வளரச் செய்தது.  பின்னர் சர்வதேச அளவில் இரட்டை கோபுர தாக்குதலும் இந்திய அளவிலும் மும்பை தாக்குதலும் செய்தி சானல்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாக அமைந்தன என்பதை மறுக்க இயலாது. பரபரப்பு பத்திரிகையியல் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதையும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றி கொள்வதுமே இவர்களின் நோக்கம்.

குறிப்பாக கடந்த சில வாரங்களில் நியூஸ் ஹவரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை பார்த்தால் போலி தேசிய வெறியை அர்னாபே தூண்டி விடுவதை தெளிவாக காணலாம். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடும் க்ரீன் பீஸ் செயற்பாட்டாளர் பிரியா பிள்ளை இந்தியாவில் காலடி வைக்க அனுமதி மறுத்து தில்லி விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்பப்பட்டது குறித்த விவாதத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்காமல் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதை கண்டிக்கும் விதமாக 1947ல் நம் நாட்டை வெளியேறியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்தினார்.

இந்தியாவின் மகள் எனும் பெயரில் தில்லி நிர்பயா வன்புணர்வு குறித்து ஆவணப்படம் போட்டியாளரான என்.டி.டி.வியில் ஒளிபரப்பாக இருந்த நிலையில் அப்படம் ஒளிபரப்பாவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனும் கருத்தில் அர்னாப் விவாதம் நடத்தியது அப்படம் இந்திய அரசால் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது நம்மில் பலருக்கு தெரியாது. அது போல் காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது சையதின் சில கருத்துக்களுக்காக பாகிஸ்தான் ஆதரவு முதல்வர் என்றே ஹேஷ்டேக் போடுமளவு தேசிய வெறி அர்னாபிடம் உள்ளதை உணரலாம்.

அரசின் கொள்கை பரப்பு செயலகங்களா ஊடகங்கள்?

சுருங்க சொன்னால் இரண்டு தரப்புக்கும் மத்தியில் நடுவராக இருந்து தேவையான தகவல்களை பெற்று மக்களுக்கு செய்தியை கொடுப்பதற்கு பதில் உச்சபட்ச தொனியில் தேசியவெறியுடன் சூடேற்றி தன் கருத்துக்கு உடன்படா விருந்தினர்களை தேசப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி டி.ஆர்.பியை ஏற்று தொலைக்காட்சி உரிமையாளர்களான ஜெயின் சகோதரர்களை நன்கு குளிர்விக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. தற்போது அவரின் விவாத தலைப்புகளில் உண்மையாகவே தீப்பிழம்பை காண்பிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். காஷ்மீரில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல் குறித்தோ அரசு பயங்கரவாதம் குறித்து எவ்வித நிகழ்ச்சியையும் நடத்தாமல் அரசின் கொள்கை பரப்பு செயலகங்களாகவே திகழ்கின்றனரோ என்ற அச்சத்தையும் புறம் தள்ள முடியவில்லை. கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்த அரசால் முண்ணணி பத்திரிகை ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பெரும் நிதியையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூறலாம்.

விருந்தினர்களை தரக்குறைவாக நடத்தும் அர்னாபின் போக்கால் வெறுப்புற்றுள்ள அருணா ராய் போன்ற பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இனி நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பங்கு பெற மாட்டோம் என்றே பகிரங்கமாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ஜியோ டிவி ஆசிரியர் ஹமீது மிர் "ஒவ்வொரு பிரச்னையையும் இந்தியா பாகிஸ்தான் போராக அர்னாப் மாற்றுகிறார்" என்று கூறி தாம் இனி இந்நிகழ்ச்சியில் பங்கு பெற போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதை மனதில் கொண்டோ என்னவோ பிரசார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ் " செய்தி வேண்டுமெனில் நீங்கள் தூர்தர்ஷனை பாருங்கள். ஷோ பார்க்க வேண்டுமெனில் தனியார் தொலைக்காட்சிகளை பாருங்கள்" என்கிறார் போலும்.

குளோனிங்குகள் உருவாகும் அபாயம்

இந்நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதின் அபாயம் இதை போலவே பிற தொலைக்காட்சிகளும் அடாவடி ஷோக்களை நடத்த ஆரம்பிக்கும் என்பதே. ஏற்கனவே நியூஸ் எக்ஸ், ஜீ பிஸினஸ், ஹெட்லைன்ஸ் டுடேவின் நிகழ்ச்சிகள் அர்னாபின் குளோன்களால நடத்தப்படுபவை போலவே இருக்கின்றன. தமிழகத்தில் நன்கு காலூன்றியிருந்த புதிய தலை முறையை விட அதிக டி.ஆர்.பி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே அர்னாப் ஸ்டைலில் நிகழ்ச்சி நடத்துவதை நாம் பார்க்கின்றோம். தங்களின் சித்தாந்த போக்கை பொது புத்தியில் திணிக்கும் இவர்களின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மிகப் பெரும் ஆபத்தை உருவாக்கும். தீவிரவாதத்தை எதிர்கொள்வது எனும் பெயரில் அர்னாப் எழுதிய புத்தகத்தையும் ஆர்.எஸ்.எஸ் குறித்து பாண்டே தினமலரில் எழுதிய கட்டுரையும் அவர்கள் எவ்வகை சித்தாந்தத்தை மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக புரியும்.

நடுவராக நடுநிலைமையாக செயல்படாமல் ஒரு பக்க சார்பாக தனக்கு பிடிக்காத தரப்பை கார்னர் செய்து கேள்விகளுக்கு பதில் அளிக்க விடாமல் கிடுக்கி பிடி போட்டு சென்ஷேஷனிலஸம் செய்யும் போக்கு உண்மையில் ஆபத்தான போக்கு. இப்படிப்பட்ட நியூஸ் ஷோக்கள் சூப்பர் சிங்கர் போன்ற அரசியல் ஷோக்களாகவே மாறும், செக்கு மந்தை சமூகத்தையே உருவாக்கும் என்பதில் மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை.

-ஃபெரோஸ்கான்

நன்றி - இந்நேரம் 
http://inneram.com/opinions/politics/1928-tv-debates-are-modern-comedy-reality-shows.html

Saturday, January 17, 2015

சார்லி ஹெப்டோ - முஸ்லீம் உம்மாவுக்கான சோதனை

உலகெங்கும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லீம்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறை தூதரான முஹம்மது (ஸல்) அவர்களை நையாண்டி செய்து கார்டூன் வெளியிட்டதற்காக சார்லீ ஹெப்டோ எனும் அங்கதப் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 நபர்களும் அதை தொடர்ந்த காவல்துறை வேட்டையில் 5 நபர்கள் என 17 நபர்கள் இறந்து போனர். இதை கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என மேற்குலகம் சித்தரிப்பது உண்மை தானா?. இஸ்லாம் சகிப்புத்தன்மை அற்ற மார்க்கமா ? என்பதை பார்க்கும் முன் சார்லீ ஹெப்டோவை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

முன் வரலாறு :
1960ல் பெர்னியர் மற்றும் ப்ரன்கோஸ் ஆகியோரோல் ஆரம்பிக்கப்பட்ட மாதாந்திர பத்திரிகையான ஹரா கிரி பத்திரிகை 1961லும் 1966லும் இரு முறை சிறிது காலம் தடை செய்யப்பட்டது. 1969ல் ஹர கிரி ஹெப்டோ எனும் பெயரில் வாராந்திர பத்திரிகை புதிதாக தொடங்கப்பட்டது. 1970ல் முன்னாள் ப்ரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டீ கல்லே இறந்ததை கிண்டல் செய்ததை தொடர்ந்து அப்பத்திரிகை தடை செய்யப்பட்டது. தடையிலிருந்து தப்பிக்கும் முகமாக சார்லீ ஹெப்டோ என பெயர் மாற்றம் செய்து மீண்டும் வெளியானது. காமிக்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சார்லி ப்ரெளனை அடிப்படையாக கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டது.
2006 - 2007 :
2006 பிப்ரவரி 9 அன்று "அடிப்படைவாதிகளால் ஆட்கொள்ளப்பட்ட முஹம்மது " என்று தலைப்பிட்டு வந்த இதழில் டென்மார்க் பத்திரிகையில் வெளிவந்த சர்ச்சைக்குரிய 12 கார்டூன்களை மறுபதிப்பு போட்டதோடு வேறு சில கார்டூன்களையும் நபிகளாரை இழிவுபடுத்தி வரைந்தது.

வழக்கமாக 1 இலட்சம் பிரதிகள் விற்கும் சார்லி ஹெப்டோ நபிகளாரை இழிவுபடுத்தி கார்டூன் வரைந்த காரணத்தால் 3 இலட்சத்துக்கும் மேல் விற்பனையானது. அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக்கூஸ் சிராக் மத உணர்வுகளை புண்படுத்தும் இப்போக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் உலகெங்கும் உள்ள பல்வேறு இஸ்லாமிய குழுக்களும் இப்போக்கை கண்டித்தன.
இக்கார்டூன்களை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கார்டூனிஸ்டுகளுக்கு ஆதரவாக பிரான்ஸில் பின்னால் அதிபர்களான நிக்கோலஸ் சர்கோசியும் பிரான்கோஸ் ஹாலந்தேவும் கார்டூனிஸ்டுகளாக ஆதரவு தெரிவித்தனர். மேலும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் நீதிமன்றத்தில் படித்தும் காட்டப்பட்டது விசித்திரமானது. 2007லும் இப்பத்திரிகை இறுதி தூதரை குண்டை டர்பனில் கட்டியவராக நிறவெறியை அப்பட்டமாக பிரதிபலிக்கும் கார்டூனையும் வெளியிட்டது.

2011
2011 நவம்பர் 3ல் முகமது நபியை சிறப்பு ஆசிரியர் என குறிப்பிட்டு வெளி வந்த இதழில் “ சிரிக்காமல் இறந்தால் சவுக்கால் 100 அடிகள் கொடுக்கப்படும்” என இறை தூதர் சொன்னதாக அப்பத்திரிகை நையாண்டி செய்திருந்தது. அச்சூழலில் சார்லி ஹெப்டோவின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதோடு அலுவலகம் மீதும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

2012
செப்டம்பர் 2012ல் மீண்டும் சார்லி ஹெப்டோ அங்கதப் பத்திரிகை உலகை உய்விக்க வந்த உத்தம தூதர் நிர்வாணமாக இருப்பதை போன்ற கார்டூன்களை பதிப்பித்தது முஸ்லீம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது தான் “இன்னோசண்ட் ஆப் முஸ்லீம்கள் “படம் வெளியாகி பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய பிரான்ஸ் அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த லாரெண்ட் ஃபேபியஸும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றும் செயல் என சார்லி ஹெப்டோ பத்திரிகையை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இச்சூழல்களின் பிண்ணணியில் பார்க்கும் போது சார்லி ஹெப்டோ அறியாமையால் ஏதோ முதல் தடவை தெரியாமல் இறைதூதரை இழிவுபடுத்தவில்லை. மாறாக இப்பத்திரிகை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தெளிவாக திட்டமிட்டே இழிவுபடுத்தியுள்ளார்கள் என்பதை நடைபெற்ற சம்பவங்களை ஆழ்ந்து நோக்கினால் உணர்ந்து கொள்ள முடியும். உலக முஸ்லீம்களின் கண்டனங்கள், பேரணிகள், அரசின் எச்சரிக்கைகள், நேரடியான தாக்குதல்கள் என பல்வேறு விதத்தில் நெருக்கடிகள் வந்தாலும் பெருமானாரை இழிவுபடுத்துவதில் கண்ணும் கருத்துமாக இக்கயவர்கள் இருந்துள்ளனர் என்பது கண்கூடு.

எதிர்வினையா ? சதி வலையா ?
இதற்கு எதிர்வினையாக ஆயுதம் தாங்கிய இரு சகோதரர்கள் சார்லி ஹெப்டோவின் அலுவலகத்தில் நுழைந்து கார்டூனிஸ்டுகள் உள்ளிட்ட 12 நபர்களை சுட்டு கொன்றனர். பாலஸ்தீன் விஷயத்தில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து பிரான்ஸுக்கு நெருக்கடி கொடுக்க ஏற்படுத்தப்பட்ட மொஸாத் தாக்குதல் என்றும் லிபியாவின் உள்ளே நுழைய பிரான்ஸே போட்ட திட்டம் என்று சொல்லப்படுவதையும் நம்மால் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க முடியாது. இத்தாக்குதலில் சில அப்பாவிகளும் பலியானாது தவிர்க்க முடியா சோகம்.

நகை முரணான எதிர்ப்புகள்
இத்தாக்குதல் நடத்தப்பட்டது சரியா, தவறா, சயீத் மற்றும் செரீப் கவுச்சி பயங்கரவாதிகளா, பலியாடுகளா என்பதை தாண்டி இச்சம்பவத்திற்கு எதிராக எழுந்த கூக்குரல்கள் முதல் தடவையாக இப்பூமிப்பந்தில் இது போன்ற சம்பவம் நடப்பதை போன்ற உணர்வை கூட சாமான்யனுக்கு தரலாம். பொருளாதார தடை எனும் பெயரில் இலட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றவர்கள், ஷாப்ரா ஷத்தீலா அகதி முகாமில் அகதிகள் என்றும் பாராமல் அபலைகளை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களை தாங்கள் சுகமாய் வாழ சுரண்டி கொழுத்தவர்கள் என உலகின் அனைத்து சர்வதிகாரிகளும் தீவிரவாதத்திற்கு எதிராக பாரீஸ் பேரணியில் ஒன்று கூடியது நகை முரண். குஜராத் நரவேட்டை மோடியையும் அப்பேரணிக்கு அழைத்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இப்பேரணியில் கலந்து கொண்டு பிரான்ஸில் நடந்ததை கண்டித்தவர்கள் பாலஸ்தீனத்தில் 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதையோ இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் பிஞ்சுகளும் கொல்லப்பட்டதையோ கண்டிக்கவில்லை என்பது நம்மனைவருக்கும் தெரிந்த ரகசியமே. ஆனால் முஸ்லீம்களே அத்தகைய மனோ நிலையில் இருந்தது தான் வேதனையளிக்கும் உண்மை.

வினையா? எதிர்வினையா?
தொலைக்காட்சி விவாதங்களில் சூடு கிளப்பிய நம் சமூக தலைமைகளோ ஒரு உயிரை கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொல்வதற்கு சமம் என்று அப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக முழங்கினார்கள். ஆனால் எதிர்வினையை கண்டித்த தலைவர்கள் வினையை கார்டூனிஸ்டுகளை கண்டிக்காமல் ஏதோ அவர்கள் புனித ஆத்மாக்களை போல் கருத்து கூறினார்கள். இன்னும் நம் முக நூல் போராளிகளோ நபிகளாரே தம்மை இழிவுபடுத்தியவரை மன்னித்து இருக்கும் போது நாம் எப்படி தண்டிக்கலாம், அதிகாரம் கைவரப்பெற்றவர் தானே தண்டிக்க வேண்டும் என்று பிக்ஹு விவகாரத்தில் மூழ்கி போயிருந்தனர்.

இப்படி சாத்வீக அவதாரம் எடுத்து சார்லீ ஹெப்டோவுக்காக வக்காலத்து வாங்கிய நவீன மார்க்க அறிஞர்கள் சல்மான் ருஷ்டிக்கும் தஸ்லீமா நஸ்ரினுக்கும் எதிராக பத்வா கொடுப்பதை மத அடிப்படைவாதம் என்று கூறுமளவுக்கு யாரை திருப்திபடுத்த வேண்டிய தேவை இருந்தது என தெரியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈராக்கிய அட்டூழியங்களுக்கு கிறித்துவர்களோ, குஜராத்தில் மோடி நிகழ்த்திய படுகொலைகளுக்கு இந்துக்களோ, பர்மாவிலும் இலங்கையிலும் புத்த பிக்குகளே நடத்திய வெறியாட்டங்களுக்கு புத்தர்களோ எக்கண்டனத்தையும் பதிவு செய்யாத போதும் முஸ்லீம்களோ அனைத்திற்காகவும் கண்டனம் தெரிவித்து தங்கள் மனிதாபிமானத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காருண்ய நபி மாத்திரமல்ல
இஸ்லாத்தை முழுமையாக போதிக்க வேண்டிய தலைமைகளோ தமக்கு இலகுவானதை மாத்திரமே முஸ்லீம் பொது புத்தியில் திணிக்கின்றனர்.     சமாதானத்தை போதித்த காருண்ய நபி தான் வாளின் நபியாகவும் இருந்தார்கள் என்ற வரலாறு ஏனோ நம் உம்மாவுக்கு மறைக்கப்படுகிறது. நபி ஸல் அவர்கள் மீது ஒட்டக குடலை போட்டவனையே மன்னித்த காருண்ய நபியின் வாரிசுகள் இம்மாபாதக செயலை செய்யலாமா என்று தர்க்கம் நடக்கிறது செய்தது யார் என்று தெரியாமலே. குப்பையை தினந்தோறும் கொட்டிய கிழவியையே மன்னித்தவர் அல்லவா நபிகளார் என்று நாகூர் ஹனீபாவை ஆதாரம் காட்டி முஸ்லீமின் போராட்ட உணர்வு ‘உணர்ச்சிவசப்படுதல்’ எனும் ஒற்றை சொல்லாடலில் நசுக்கப்படுகிறது.

நபிகளாரை இழிவுபடுத்தியவர்களின் நிலை
நபிகளாரின் மீது ஒட்டகத்தின் குடலை போட்டு அவமானப்படுத்திய உக்பா பத்ர் போரில் பிடிபட்ட போது சிறப்பு பரிசாக சிரச்சேதம் செய்யப்பட்டான் என்ற உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. அபூசுப்யான், இக்ரிமா உள்ளிட்ட இஸ்லாத்தின் எதிரிகள் பலர் மன்னிக்கப்பட்டு இறைவனின் தோழர்கள் ஆயினர் என்பது உண்மை தான். ஆம், அவர்களின் முன் இஸ்லாம் அல்லது வாள் தேர்வுக்கு கொடுக்கப்பட்ட போது அவர்கள் இஸ்லாத்தை தேர்வு செய்ததால் அவர்களின் தலை தப்பியது.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது தன்னை விரட்டியடித்த மக்களை மன்னித்த அதே நமது தலைவர் தானே பனூ குரைளா போரில் யூதர்களை கொல்ல உத்தரவிட்டார்கள் என்பதை ஏன் மறைக்க பாடுபடுகிறோம். எப்படியாவது மறைத்து யாரையும் நாம் திருப்திபடுத்த முடியாது என்பதை நாம் உணர வேண்டும். மன்னிக்கும் அதே நபி தான் தேவைப்படும் போது தண்டிக்கவும் செய்தார்கள் என்பது நம் மக்களுக்கு தெளிவாக்கப்பட வேண்டும்.

பத்ர் தோல்விக்கு பின் குறைஷிகளை உசுப்பேற்றும் விதமாக கவிதைகளை இயற்றியதோடு நபிகளாரையும் முஸ்லீம் பெண்களையும் இழிவுபடுத்தி பாடல் இயற்றி பெருங்குழப்பத்தை விளைவித்த க அப் பின் அஷ்ரப்பை கொல்ல நபிகளார் உத்தரவிட்டது வரலாற்றில் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறது. இஸ்லாமிய ஆட்சி இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் ஒரு ஸஹாபியால் அக்கொடியவன் கொல்லப்படுவதற்கு நமது உயிரினும் மேலான உத்தம நபி அனுமதி அளித்ததை இன்றைய சம்பவங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும்.

நபியும் நாமும்
தனிப்பட்ட விரோதத்துக்காக அல்லது தன்னை எதிர்த்தவர்களை நபிகளார் மன்னித்ததே வரலாறு. எனினும் தன்னை இழிவுபடுத்தியவர்களை அல்லது சமூகத்தில் குழப்பம் விளைவதை தடுக்கும் பொருட்டு தண்டிக்கவும் செய்துள்ளார்கள் என்பதை நபிகளாரின் சீராவை ஆழ படிப்பதன் மூலம் உணரலாம். வாதத்திற்கு நபிகளார் மன்னித்தாலும் தன்னை  இழிவுபடுத்தியவர்களை மன்னிப்பதும், மன்னிக்காததும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அல்லாஹ்வின் தூதரின் மேல் மட்டற்ற பாசம் வைத்துள்ள உண்மை முஸ்லீம்கள் உயிரினும் மேலான இறை தூதர் இழிவுபடுத்துப்படுவதை சகிக்க மாட்டார்கள்.


கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை அறியா மூடர்கள் இத்தகைய நிகழ்வுக்கு பிறகும் படிப்பினை பெறாமல் நம் தூதரை இழிவுபடுத்த நினைக்கிறார்கள். முழு நிலவான எம் நாயகத்தின் பெருமையை எவராலும் நிச்சயம் அழித்து விட முடியாது. மாறாக இத்தகைய வாய்ப்பை நம் தஃவாவுக்கான களமாக எடுத்து கொண்டு நபிகளாரின் வரலாற்றை புவிக்கு எடுத்து சொல்லுவோம். நபிகளார் உருவாக்கிய மதீனத்து சமூகத்தை நாமும் இவ்வுலகில் சமைப்போம். ‘கலிமத்துல்லாஹி இயல் உள்யா” தீனை மேலோங்க நாம் அனைத்தையும் அர்ப்பணித்து இப்பணிக்கு தடையாய் உள்ளவற்றை தகர்த்தெறிவோம்.

Saturday, December 20, 2014

பெஷாவர் தாக்குதலும் அவசர குடுக்கை தலைமைகளும்

கடந்த வாரம் பெஷாவரில் ராணுவத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 130 க்கும் மேற்பட்ட பிஞ்சு பாலகர்கள் துடிதுடித்து இறந்ததை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இத்தாக்குதல் மூலம் பலரின் நடுநிலை (?) முகமூடிகள் வெளிப்படையாகவே கழன்று விழுந்தது.

முக நூலில் ஒரு பதிவர் பதிவிட்டதை போல் கோரிப்பாளையம் தர்காவில் தாயத்து கட்டுபவரை தவிர எல்லா முஸ்லீம்களும் அவசர கதியில் இத்தாக்குதலை கண்டித்தனர். மேலும் தங்கள் தேசப்பற்றை அவசர கதியில் நிரூபிக்க வேண்டிய நிலையில் கடுமையான வார்த்தைகளால் ஒட்டு மொத்த போராளிகளையும் அர்ச்சித்தனர். 
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடனே இந்தியன் முஜாஹிதீன் காரணம் என்று பாஜக சொல்வதை போல் நமது அவசர குடுக்கை தலைமைகளோ யார் குண்டு வைத்தது என்று தெரியாமலே தாலிபான்களை கண்டிப்பதாக போஸ்டர் அடித்தனர்.

இன்னொரு புறம் குஜராத்தில் கவுசர் பீவியின் வயிற்றில் இறந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் இட்ட கயவர்களும், முள்ளி வாய்க்காட்டில் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடியவர்களும், இஸ்ரேல் பாலஸ்தீன் பிஞ்சுகளை ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் வீசி சுட்டு கொன்ற போது ஆதரித்தவர்களும், இதே வசிரிஸ்தான் மக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்ற போது அமைதி காத்தவர்களும் கண்டித்தது தான் நகை முரண்.

இத்தாக்குதலை நடத்தியது தாலிபான்களே என்று முதல் பக்கத்தில் வாங்கிய காசுக்கு மேல் கூவின. ஊனமான ஊடகங்களோ ஆப்கானிஸ்தான் மண்ணில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் களப்போராளிகளான தாலிபான்கள் இத்தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் கூறியதை பூசி மெழுகின. தாலிபான்கள் மறுத்த போதிலும் எல்லா ஊடகங்களும் தாலிபான்களை இன்றளவும் பெஷாவர் தாக்குதலுக்காக கண்டிப்பதை கண்கூடாக காணலாம்.

வசீர்ஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் எனும் பெயரில் தங்கள் குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதற்காக தாங்கள் கொடுத்த பதிலடியே பெஷாவர் தாக்குதல் என்று நியாயம் பேசி தஹ்ரீக் இ தாலிபான் எனும் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.  பெயரில் தாலிபான் இருந்தாலும் ஆப்கான் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்ற விடயம் கவனத்திற்குரியது. 
 
தஹ்ரீக் இ தாலிபான் எனும் பெயரில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன என்பது பலருக்கு தெரியாத செய்தியாகவே இருக்கும். பஸலுல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும் அதன் போட்டியாளர் மசூத் தலைமையில் ஒரு குழுவும் இரண்டுக்கும் சம்பந்தமில்லாத ஒரு குழுவும் உள்ளது. இம்மூன்றாம் குழுவை அமெரிக்கா வழி நடத்துவதாக போராளிகள் தரப்பில் சொல்லப்படுவதை நம்மால் ஒதுக்கி தள்ள முடியாது. இந்திய உளவு துறையான ராவின் பங்களிப்பும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள படி கிலாபா மீள் உருவாக்கத்திற்கான காலம் கனியக் கூடிய நேரத்தில் அவ்வெழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஈராக் மற்றும் ஷாமில் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக போரிட முழு பலத்தையும் பிரயோகிக்க முடியா வண்ணம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கொடுக்கும் குடைச்சலை தடுக்க அமெரிக்கா போட்ட நாடகமே பெஷாவர் தாக்குதல்.

ஏனெனில் உலகில் உள்ள மிகச்சிறந்த ராணுவ பலம் கொண்டுள்ள முஸ்லீம் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்கள் அரசமைத்த போது ஆதரித்த மூன்றே நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களோடு நெருக்கமான உறவு வைத்திருந்த பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க நெருக்கடி காரணமாக தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலும் அதை முழு மனதோடு செய்யவில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்திலும் தாலிபான்கள் ஆதரவு பிரிவு மனோ நிலை இருக்கும் சூழல் அமெரிக்காவை உறுத்தி கொண்டு இருந்தது. தாலிபான்களோடு நல்லுறவை வைத்திருந்த நவாஸ் ஷெரீப்பிடம் தாலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவும் இத்தகு தாக்குதல் தேவைப்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி தாலிபானுக்கு எதிரான மன நிலையில் இருந்தது சாதகமாக இருந்தது சதி திட்டத்தை நிறைவேற்றியவர்களுக்கு.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் முஸ்லீம்களின் இரத்தத்தை அரசு பயங்கரவாதமாக குஜராத்தில் நிறைவேற்றியவர்கள், அஸ்ஸாமில் உள்ள நெல்லியில் முஸ்லீம்களை வெட்டி விளைநிலைங்களில் உரமாக உபோட செய்தவர்கள், பாபரி மஸ்ஜிதை இழந்த சோகத்தோடு முஸ்லீம்களை மும்பையில் கொன்றும் பசியாறிய வெறி நாய்களும் தாலிபான்களை கண்டிப்பது தான் வேதனையின் உச்சகட்டம்.

ஆனால் முஸ்லீம் சமூகத்துக்கு போராடுவதாக சொல்லி கொள்ளும் சில முஸ்லீம் அமைப்புகளும் உண்மை நிலை புரியாமல் அல்லது வேண்டுமென்றே தாலிபான்களை கொச்சைப்படுத்தும் செயல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஏற்கனவே தவழ்ந்து சென்றாவது பை அத் செய்வோம் என்றவர்கள் இன்று போலி இறையாண்மைக்கு கட்டுப்படுவதாக காட்டி கொள்ள போராளிகளை காட்டி கொடுக்கும் எட்டப்பர் வேலை என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

தீயவன் ஒருவன் செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் எனும் திருக்குரானின் கட்டளைக்கிணங்க ஊடகங்கள் அதிகாரத்துக்கு பயந்து எச்சில் காசுக்காக போடும் செய்திகளை அப்படியே பரப்பாமல் “ Reading between the lines” என்பதற்கேற்ப எல்லா தரப்பு செய்தியையும் உள் வாங்கி உண்மை செய்தியை உணர்வதும், அப்படி ஒரு நடுநிலை ஊடகம் உருவாக முன்முயற்சி எடுப்பதுமே முஸ்லீம்கள் முன்னுள்ள முக்கிய கடமை.

Monday, August 11, 2014

ஐ.எஸ் டி சர்ட் விவகாரம் : தவற விட்ட வாய்ப்பு


காஸா படுகொலைகள், வேட்டி விவகாரத்தையெல்லாம் ஓரங்கட்டி விட்டு முஸ்லீம் உம்மத்தின் பேசு பொருளாக மாறி போனது ஈகை திருநாள் அன்று தொண்டியில் சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்ததும் அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் அதன் எதிர்வினைகளும்.

ஈகை திருநாள் அன்று அர்ஹான் ஜுஜு என்று அழைக்கப்படும் அப்துர் ரஹ்மான், ரிள்வான் உள்ளிட்ட சில இளைஞர்கள் இஸ்லாமிய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட டி – ஷர்ட்டுகளை அணிந்து அதை போட்டோ எடுத்து முகநூலில் வெளியிட அச்செயலை ஆதரித்தும் எதிர்த்தும் முஸ்லீம் உம்மாவின் அனைத்து தமிழ் பேசும் அங்கத்தவர்களும் முகநூலை ரணகளப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்த விவகாரங்களும் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் கைது செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

வெற்று முக நூல் லைக்குக்காக அல்லது தங்களை தனித்தவர்களாக காட்டி கொள்ளும் விளம்பர ஆசைக்காக இப்போட்டோ பதிவேற்றப்பட்டிருந்தால் இதை விட பொறுப்பற்ற செயல் எதுவும் இருக்க முடியாது. முக நூலில் கனமான ஆழமான விமர்சன கட்டுரைகள் சீந்தப்படாமல் இருப்பதும் மொக்கைகளுக்கும் ஆதாரமற்ற பரபரப்பு செய்திகளுக்குமே லைக்குகள் விழும் என்பது யாவரும் அறிந்த உண்மை. முகநூலில் பரபரப்புக்குக்காக செய்தி வெளியிடுவதாக சொல்லப்படும் சங்கை ரிதுவான் என்பவரே இப்பதிவின் பிண்ணணியில் இருந்தவர் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நம்முடைய கவலையே இவ்விவகாரத்துக்கு எதிர்வினையாற்றியவர்கள் குறித்தே. இதை தவறு என உணர்ந்தவர்கள் அவர்களின் இன்பாக்ஸில் தொடர்பு கொண்டு இப்படத்தை நீக்க சொல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு டி சர்ட் அணிந்த சகோதரர்களை காவிகளை திட்டுவது போல் திட்ட ஆதரிப்பவர்கள் வேறு மாதிரி உசுப்பேற்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த பரிவாரங்கள் இதை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதோடு அதிகார வர்க்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்தனர்.

இக்கைதை பொறுத்த வரை முஸ்லீம் உம்மாவின் எதிர்வினையும் சமுதாய இயக்கங்களின் எதிர்வினைக்கும் பெருத்த வித்தியாசம் இருந்ததை தெளிவாக உணர முடிந்தது. முஸ்லீம் சமூகத்தை சார்ந்த சாதாரண மக்கள் இவ்விவகாரத்தில் இரண்டாக பிளவுபட ஒன்றிரண்டு இயக்கங்களை தவிர பெரும்பாலானவை இவ்விவகாரத்தில் காத்த கள்ள மெளனம் கண்டிக்கத்தக்கது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக டி - ஷர்ட் அணிந்த காரணத்திற்காக இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விழா எடுக்கும் தேசத்தில், பிந்தரன்வாலாக்கள் ஆராதிக்கப்படும் தேசத்தில், அமெரிக்க பார்வையில் தீவிரவாதியான சேகுவாராவின் பனியன்கள் அதிகார வர்க்கத்தால் கூட பொருள் தெரியாமல் அணியப்படும் தேசத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தேசத்தில் டி ஷர்ட்டுக்காக கைது செய்யப்பட்டதை எத்தலைவரும் சமுதாய இயக்கமும் கண்டித்ததாக தெரியவில்லை.

முஸ்லீம் எனும் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட காவல்துறையின் எதேச்சேதிகாரமான நடவடிக்கையை கண்டிக்காமல் நமது சகோதரர்கள் முக நூலில் அப்துர் ரஹ்மானை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் செய்தது தவறாகவே இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க்கையா அவர்கள் செய்தார்கள். இன்னும் சில சகோதரர்கள் அப்துர் ரஹ்மானும் ரிள்வானும் முதல் தடவை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போது இனி மேலும் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லையென்றால் காவல்துறை மர்ம உறுப்பில் சித்ரவதை செய்வர் என்று பயமுறுத்துகின்றனர். இது தான் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவமா அல்லது நம்முடைய உடன் பிறந்த தம்பி இச்செயலை செய்தால் இப்படி தான் சொல்வோமா?

தொண்டனை விட தொண்டர்களை வழி நடத்தும் இயக்கத் தலைமைகள் நிலைமை படு மோசமாக இருக்கிறது. இப்படி ஒரு விவகாரம் முக நூலில் தினந்தோறும் விவாதிக்கப்பட்டும் காட்சி ஊடகம் உள்ளிட்ட அனைத்து மீடியாக்களிலும் விவாதிக்கப்பட்டும் நமது இயக்கங்களின் இணையத்தளங்களில் சென்று பார்த்தால் ப்ளாஷ் நியூஸில் மந்திர தந்திரங்களும் சட்டமன்ற வீர உரைகளுமே காணக்கிடைக்கின்றன. ஊடகங்கள் பரவலாகும் முன்பே சர்வதேச இஸ்லாமிய அரசியல் குறித்து பாடம் எடுத்த தலைவர்கள் தொலைக்காட்சியில் கஸ்வ ஹிந்த் குறித்த ஹதீஸ்களை அப்படியே மறுத்து இந்திய இறையாண்மைக்கு வெண்சாமரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.

காஸாவில் நடக்கும் மிருகத்தனமான தாக்குதலை சுற்றியுள்ள அரபு தலைவர்களே மெளனமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் எங்கோ உட்கார்ந்து கொண்டு அவர்களுக்காக கோகா கோலாவையும் பெப்சியையும் துறக்கும் நம் சகோதரத்துவம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் உலகளாவிய சகோதரத்துவம் உள்ளூரில் ஏன் சுருங்கி போனது? 

''மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும்,தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது இவற்றை நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களா? “  என்று அல்லாஹ் சூரா மாயிதாவில் கேட்பது போல் இன்று இயக்கங்களால் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி கொண்டு சகோதரத்துவத்தை மாய்த்து கொண்டுள்ள நமக்கு நமது உயிரினும் மேலான உத்தம தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க சொன்ன அழகான வழியை நினைவூட்டுகிறேன் “எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!'' (ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ)

சாதாரண அரசியல் கட்சிகளில் இது போல் ஒரு தொண்டன் கைது செய்யப்பட்டிருந்தால் அடுத்த நாளே அக்கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் டி ஷர்ட் அணிந்து தலைமை செயலகத்தை முற்றுகை இட்டிருப்பர். ஆனால் நம்மில் பலர் அச்சம்பவத்துக்கு பிறகு முகநூலில் ப்ரொபைலை மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழனின் வேட்டிக்கு குரல் கொடுத்த சமுதாய பிரதிநிதிகள், இதே இஸ்லாமிய தேசத்தை முன் வைத்து இயக்கம் கட்டமைத்து விடியல் கண்டவர்கள், முஸ்லீம்களின் பிற பிரச்னைகளுக்கு குடந்தையை குலுங்க செய்பவர்கள் என பிரதான சமுதாய கட்சிகள் எல்லாம் இப்பிரச்னையில் காக்கும் மவுனத்தின் அர்த்தம் என்ன?. நாளை நம் வீட்டு கதவை காவல்துறை தட்ட கூடாது என்ற ஹிக்மத்தா ?

சினிமா படங்களுக்கு மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்தும் கூட்டமைப்புகள் காஸாவுக்கு ஆர்ப்பாட்டம் செய்தது வரவேற்கத்தகுந்ததே. ஆனால் காஸா பற்றி எரியும் போது போராடாமல் சரியாக காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இவ்விளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது காஸாவுக்கு பேரணி நடத்தியது விவகாரத்தை திசை திருப்பும் நடவடிக்கை போல் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. இத்துணை துரோகங்களுக்கு மத்தியில் அச்சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்த அமைப்புகள் உண்மையில் உம்மத்தின் நன்றிக்குரியவர்கள். சிறையில் இருந்தவர்களுக்கு தானே சிறையில் இருப்பவனின் வலி தெரியும்.

டி ஷர்ட் விவகாரத்தை கையாள தெரியாத சமுதாய தலைமைகள் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டுள்ளனர். ஆம் சூரா புரூஜில் அல்லாஹ் சொல்லுகின்ற படி தன்னை மாய்த்து ஏகத்துவத்தை எத்தி வைத்த சிறுவனை போல், நெருப்பு குண்டத்தில் வீசி எறியப்பட்ட இப்ராஹீம் நபியை போல் இஸ்லாமிய தேசம் என்றால் என்ன என்பதை பிரசாரம் செய்ய நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டோம்.

உண்மையில் இவ்விவகாரம் வெறும் பரபரப்புக்காக, முக நூல் லைக்குகளுக்காக பயன்படுத்தப்படாமல் இதை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய தேசம் என்றால் என்ன, ஏன் கிலாபா தேவை, இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே என்பது பொது புத்திக்கு புரியும் படி தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். முக நூலிலும் கேள்விக்கென்ன பதில்களிலும் விவாத மேடைகளிலும் ஆயுத எழுத்துக்களிலும் சமுதாய தலைவர்கள் இஸ்லாமிய தேசம் குறித்தும் எவ்வாறு கிலாபாவை நோக்கி இவ்வுலகம் விரைந்து கொண்டிருக்கிறது, மனிதன் கண்டுபிடித்த சித்தாந்தங்களால் தர முடியாத நிம்மதியை எப்படி இஸ்லாமிய தேசம் வழங்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால் நபிகளார் முன்னறிவிப்பு செய்த கஸ்வ ஹிந்துக்கு கட்டியம் கூறும் நிகழ்வாக இது அமையும் என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது.