Saturday, November 12, 2011

சவூதி அரேபியா வரலாறு - முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த நம் தள வாசக / வாசகிகளே


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ

சவூதி அரேபியாவின் தோற்றமும் அதன் இன்றைய வரலாறும் எனும் கருப்பொருளில் ஜாஃபர் பங்காஷ் எழுதிய சுவூத் பரம்பரையின் ஜாஹிலிய்யத்தான் அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும் எனும் கட்டுரையும் இக்பால் சித்திகி எழுதிய சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய பராம்பரிய வரலாற்று தளங்கள் மற்றும் ஸைனப் சீமா எழுதிய எஃகு, இரும்பு மற்றும் காங்கீரிட்டை கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர் என்ற மூன்று கட்டுரைகளை ஆறு பாகங்களாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

பரவலான வரவேற்பை இத்தொடர்கள் பெற்ற அதே வேளையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக கப்ருகளை புனித தலங்களாக பெருமைப்படுத்துவதாகவும் தவ்ஹீதின் எழுச்சியை மட்டுப்படுத்துவதாகவும் சில சகோதரர்கள் விமர்சனம் செய்தனர். அதே சமயத்தில் தேசியவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாகவும் தவ்ஹீதின் பெயரை சொல்லி கொண்டு இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கும் செயலை படம் பிடித்து காட்டுவதாகவும் ஆதரித்து விமர்சனங்கள் எழுந்தன.

உண்மையில் தவ்ஹீதின் பெயரை சொல்லி ஷிர்க்கை ஒழிக்கும் பெயரில் வரலாற்று தடங்களை அப்புறப்படுத்தும் முயற்சியாகவும், கிலாபத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாருடன் சவூதிய அரசாங்கம் கைகோர்த்த நிகழ்வுகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் சவூதிய அரசாங்கத்துடன் உள்ள தொடர்பையும் வெளிச்சம் போட்டு காட்டியது. தவ்ஹீத் எனும் பெயரை சொல்வதாலேயே அதை செய்பவர்களின் செய்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட கூடாது எனும் மாயையையும் உடைந்தெரிந்தது. அவ்வகையில் அக்கட்டுரையின் ஆசிரியர்களுக்கு நம் நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் சரியாக சொன்னாலும் அதை புரிந்து கொள்பவர் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து விட கூடாது எனும் அடிப்படையிலும் இதில் இடம் பெற்றுள்ள ஒரு சில தகவல்களின் (கட்டுரையின் மையக்கருத்தில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை) ஆதாரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதால், 99% சதவிகித உண்மைகளுடன் 1% ஆதாரமற்றவை கலப்பதன் மூலம் வரலாறு பொய்மைப்பட்டு விடக் கூடாது எனும் நோக்கத்தில் சில நல்ல சகோதரர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இக்கட்டுரைகளை நீக்குகிறோம். மறைக்கப்பட்டுள்ள வரலாறுகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இக்கட்டுரை வெளியிடப்படுவதற்கும் அது போல் ஒரு சதவிகித ஆதாரமற்ற தகவல்களும் கலந்து விடகூடாது எனும் எச்சரிக்கை உணர்வுமே இக்கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான காரணம் என்பதையும் தெரிவித்து கொள்வதோடு இதே நிலைப்பாட்டில் உண்மையை உண்மையாய் சொல்ல கூடிய துணிச்சலை அது யாருடைய வெறுப்பை பெற்று தருமானாலும் தருமாறு இறைவனிடம் பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

6 comments:

Anonymous said...

உண்மையையும் பொய்யையும் பிரிந்தறிந்து உண்மையை தைரியமாய் சொல்லும் ஈமான் கொண்ட நெஞ்சுரம் அனைவருக்கும் தர வேண்டியும் 1 சதவீதம் மட்டுமே பொய் என்னும் பட்சத்தில் 99 சதவீதம் உண்மை என்பதால் நன்மையே மிகைத்து இருப்பதானாலும் கட்டுரையை பதிவிலிருந்து நீக்காமல் விட்டிருக்கலாம் என்பது நம் கருத்து.
தமிழக வாசகன். ரியாஸ்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கட்டூரையில் உள்ள ஒரு சதவிகித ஆதாரமற்ற தவறுகளை மட்டும் நீக்கிவிட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். அல்லது அந்த கட்டுரையை மையமாக கொண்டு நீங்கள் வேறு ஒன்றை எழுதி பதிந்தால் சிறப்பாக இருக்கும்.

மாஸ்ஸலாம்

உங்கள் அன்புத் தம்பி

nagoreismail said...

I agreed with you, but the article that you published was very useful for me.

If you trust me, please send to my mail:

dulfiqar@gmail.com

I swear that I dont publish anywhere anytime

Its purely for my reading knowledge and pleasure.

Best Regards,
A Mohamed Ismail
Nagore (Singapore)

Iraivanin Adimai said...

அன்பு சகோதரர்களே

தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் வருங்காலத்தில் இதை அடிப்படையாக கொண்டு புதிய கட்டுரைகள் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

Anonymous said...

மதிப்பிற்குரிய தள நிர்வாகிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ
தங்கள் வெளியிட்ட
சவூதி அரேபியாவின் கடந்த கால வரலாறும் அதன் உண்மை நிலையும்
என்ற பதிவில்
1.சவூத் பரம்பரையின் ஜாஹிலியத்தான அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும்
-ஜஃபர் பங்காஷ்-

2.சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமியப்பாரம்பரிய வரலாற்றுத்தலங்கள்
-இக்பால் சித்தீகி-

3. எஃகு இரும்பு மற்றும் காங்கிரீட்டைக் கொண்டு இன்று சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர்
-ஸைனப் சீமா-
வெளியிட்டு இருந்தீர்கள். இந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு விரைவில் ஒரு புத்தகமாகவும் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்து இருந்தீர்கள். மிக்க சந்தோஷம்.
அப்படி புத்தகமாக வெளிவந்தால் தமிழகத்தில் கிடைக்குமா? அல்லது அது கிடைக்கும் இடம் பற்றிய தகவலை எனக்கு தெரியப்படுத்துவீர்களா? கட்டுரையாளர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட மூல கட்டுரைகள் இமெயிலில் எமக்கு அனுப்ப முடியுமா என்பதையும் தயவு செய்து தெரிவிக்கவும்.
தமிழகத்தில் அதை புத்தகமாக வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் நமக்கு அனுமதி தருவார்களா? அல்லது தாங்கள் இணையத்தில் வெளியிட்டதையே தங்களின் அனுமதி பெற்று புத்தகமாக வெளியிடலாமா? அப்படி என்றால் தாங்கள் அந்த மொழிபெயர்பை இமெயிலில் அனுப்பி வைக்க முடியுமா? என்பதையும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
தங்களின் அலுவல்களுக்கிடையே தொந்தரவு தருவதற்கு மன்னிக்கவும்.
தமிழக வாசகன். ரியாஸ்
riyaz04362@gmail.com
riyaz04362@yahoo.com
9841739189

ashraf said...

assalamu alaikkum warahmathullahi wabarakathuhu... anbaana sagothararey.. neengal seitha intha muyarchi thavaraanathu entru koora mudiyavitaalum... etho sinthanaikku thadai poduvathu pol therigirathu... irunthaalum ungal mudivu siranthathaaga kooda irukalam.. ALLAH arivan... ennaku oru siru uthavi mattum seyyungal.. intha saudi arabia varalarai enathu mail ku anuppa mudiyuma? avaru mudinthaal ashraf_alihassan@yahoo.com entra mail ku anupi vaikkavum inshALLAH....