Friday, December 28, 2018

திராவிட இயக்கங்களும் முஸ்லீம்களும் பகுதி - 2


தமிழகம் பெரியார் மண்ணா? பெரியாழ்வார் மண்ணா எனும் விவாதம் சமீப காலமாக நடைபெறுவதை அனைவரும் அறிவோம். ஆர்ய சமாஜ்யத்தில் தொடங்கி ஆர்.எஸ்.எஸ் வழியாக சூழலுக்கு தகுந்தார் போல் பாஜக, விஸ்வஹிந்துபரிசத், பஜ்ரங்தள் என பல்வேறு முகமூடிகள் மூலம் தங்கள் நச்சுக்கருத்தை ஆழமாக விதைத்து 19 மாநிலங்களில் தன் பாசிச ஆட்சியை நிலை நாட்டியுள்ளது இந்துத்துவா.

ஆனால், தமிழகத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் போன்ற பினாமி அரசுகள் மூலமும், ரஜினி, கமல் என சினிமா நட்சத்திரங்கள் மூலமும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடும் பிரயத்தனங்கள் செய்த போதும் தமிழகத்தில் குளத்தில் மட்டும் தான் தாமரையை மலர வைக்க முடிந்தது.  இத்தகைய சூழல் தமிழகத்தில் நிலவுவதற்கு பெரியாரின் தாக்கமும் ஓர் காரணம் என்பதை நம்மால் மறுக்க இயலாது. பெரியார் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என பல தளங்களில் பணியாற்றி இருந்தாலும் அவரை வெறுமனே கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் சுருக்குவது உள் நோக்கத்தோடு மடை மாற்றும் செயலாகும்.

பெரியார் தத்துவ ரீதியாக கடவுளை எதிர்த்தவரல்லமாறாக ஹிந்து மதத்தில் சாதியினால் மனிதனை மனிதன் அடிமை படுத்தும் நிலைமை கண்டு வருந்திய பெரியார் அதை ஒழிக்க முனைந்த போது அச்சாதிகள் எல்லாம் ஹிந்து மதத்தின் கடவுள்களாலும் அந்த மதத்தின் வேதங்களாலுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்தார். எனவே மனிதனை தலையிலிருந்து பிறந்தவன், காலிலிருந்து பிறந்தவன் என கூறு போட்டு, அதன் அடிப்படையில் அவன் செய்யும் வேலையை தீர்மானிக்கும் மனு தர்மத்தையும், அது சொல்லும் கடவுள்களையும் எதிர்த்தார்அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என முழங்கினார். மூடநம்பிக்கைகள் அற்ற, ஒரே இறைவனை வணங்க சொல்லும் ஏற்ற தாழ்வை ஒழித்த இஸ்லாத்தை திராவிடர்களின் மதமாகவே பெரியாரும் அண்ணாவும் கருதினார்கள்.

இந்திய பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவிலே தங்கி விட்ட முஸ்லீம்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார்கள். தேச பிரிவினைக்கும் முஸ்லிம்கள் தான் காரணம் என குற்றச்சாட்டப்பட்டதால் உருவான தாழ்வுநிலை ஒருபுறம், முஸ்லீம்கள் காங்கிரஸில் இருந்தே தங்கள் நலனை பாதுகாக்க வேண்டும் முஸ்லீம் லீக் என தனித்து இயங்கினால் அழித்து விடுவோம் என பரந்த சிந்தனை கொண்டவராக அறியப்பட்ட நேரு போன்றவர்களே கொக்கரித்த சூழல் இன்னொருபுறம் என எல்லா திசைகளிலும் நெருக்கடிகள் முஸ்லீம்களுக்கு இருந்தன.

அதனால் தான் பெரியாரும், திராவிட கழகமும் திராவிட நாடு, பின்னர் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்திய போது ஏற்கனவே தேசத்துரோக முத்திரை குத்தப்பட்ட முஸ்லீம்களால் அதில் முழுமையாக தங்களை இணைத்து கொள்ள இயலவில்லை. இந்தியாவை இரண்டாக பிரிப்போமா வேண்டாமா? என பரப்பரப்பாக பேசப்பட்ட சூழலில், பெரியாரோ திராவிடஸ்தான், ஹிந்துஸ்தான், பெங்காளிஸ்தான், பாகிஸ்தான் என நான்காக பிரிக்க கோரிக்கை விடுத்தார்இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய திராவிடஸ்தானில் 7% முஸ்லீம்களோடு திராவிடர்கள் தோளோடு தோள் இணைந்து நிற்பர் என்று ஜின்னாவிடம் பெரியார் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் இரண்டாவது திருமணம் (மணியம்மை) செய்ததை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் அண்ணா திராவிட கழக்த்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். ஆனல் திருமணத்திற்கு முன்பே 1945ல் திராவிட பாதுகாப்பு படையை பெரியார் தொடங்கி அனைவரும் கருப்பு சட்டை அணிய சொன்ன போது, அண்ணா அணிய மறுத்ததில் ஆரம்பித்தது மோதலுக்கான விதைஆரியர்கள் கைகளில் சுதந்திரம் கைமாறிய நாள் என்று இந்திய சுதந்திர தினத்தை கருப்பு நாளாக பெரியார் அறிவித்த போது அண்ணா அதனை மறுத்து சுதந்திர தினத்தை வரவேற்றதும், திமுக எனும் புதிய கட்சியின் உதயத்தை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலில் பெரியார் நம்பிக்கை இல்லாதவராக இருக்க, அண்ணாவோ அதிகாரத்தின் மூலம் பெரியாரின் கொள்கைகளை உயிர்ப்பிக்க முடியும் என்றார்.

தமிழக அரசியல் களத்திற்கு புதிய வரவான திமுக அப்போதைய ஜாம்பாவானாக திகழ்ந்த காங்கிரஸை எதிர்த்து களமாட வேண்டிய சூழலில் பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த உறவு பரிணாம வளர்ச்சி பெற்று திமுகவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான ஆழமான உறவாக பரிணமிக்க தொடங்கியதுபெரியாரை போல் வெளிப்படையான கடவுள் மறுப்பு நிலைப்பாட்டை எடுக்காமல்ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று இஸ்லாத்தின் இறையியலுக்கு நெருக்கமாக அண்ணா முழங்கியது உறவை மேலும் வலுவாக்கியதுதிராவிட கழகம் போல் முரட்டு அரசியல் செய்யாமல் திமுக அனைவரையும் அரவணைத்து செல்லும் என்பதை உணர்த்தும் விதமாக தன்னை விபூதி அணியாத இந்து, சிலுவை அணியாத கிறித்தவன், தொப்பி அணியாத முஸ்லிம் என அண்ணா அறிமுகப்படுத்தி கொண்டு முஸ்லீம் சமூகத்துடன் மேலும் ஐக்கியபடுத்தி கொண்டார்.

களத்திற்கு புதிய கட்சியான திமுக தனியே கூட்டங்கள் நடத்துவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்த சூழலில் திமுக தன் கொள்கைகளை எடுத்துச் செல்லும் மேடையாக மீலாது விழா மேடைகளை பயன்படுத்தி கொண்டதுகாயிதே மில்லத் தலைமையிலான முஸ்லீம் சமூகமும் பிற சமூகங்களுடனான உறவை வலுப்படுத்திடவும், மத நல்லிணக்க சூழல் நிலவவும் அரசியல் அரங்கில் முஸ்லீகளின் குரல் ஓங்கி ஒலிக்கவும் கிடைத்த வாய்ப்பாக மீலாது விழா மேடைகளை பயன்படுத்தி கொண்டதுதிமுக கூட்டணியின் வெற்றிக்கு காயிதேமில்லத்தின் பிரச்சாரமும் ஒரு முக்கிய காரணம் என்று அறுதியிட்டு கூற முடியும். அண்ணாவிற்கு பிறகு கலைஞரின் தலைமையில் முஸ்லீம்களுக்கும் திமுகவுக்கும் உள்ள உறவு புதிய பரிமாணம் எட்டியது

திராவிடத்தால் முஸ்லீம்கள் வீழ்ந்தார்களா? வாழ்ந்தார்களா? எம்ஜிஆருக்கு பின்பு திமுகவை நோக்கி முஸ்லீம்கள் நிலைப்பாடு என பரபரப்பான விடயங்களின் தொடர்ச்சியை அடுத்த இதழில் பார்போம் இன்ஷா அல்லாஹ்.

Saturday, December 15, 2018

திராவிட இயக்கங்களும் முஸ்லிம்களும் பகுதி - 1


(தோழன் மின்னிதழில் பொறியாளர் ஃபெரோஸ்கான் எழுதிய திராவிட இயக்கங்களும் முஸ்லீம்களும் தொடரை நன்றியுடன் பதிவு செய்கிறோம்)

 தமிழக அரசியலில் கடந்த ஐம்பது வருட காலமாக கலை, இலக்கியம், சமூகம்அரசியல் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இறந்தது  சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களை விட ஒப்பீட்டளவில் திமுக தலைவரின் மரணத்திற்கு அதீத உணர்வுவயப்பட்டது சமூகஊடகங்களை உற்று நோக்கும் அனைவருக்கும் புலப்படும் உண்மை. முஸ்லிம் சமூகத்தில் பிறந்து, செல்வாக்கு பெற்ற தலைவர்களின் மரணத்தை விட இறைமறுப்பை கொள்கையாக கொண்ட ஜனநாயக ஓட்டரசியலில் ஒரு கட்சியின் தலைவராக அதுவும் முஸ்லீம் சமூகத்தின் ஓட்டுகளை சார்ந்திருக்கின்ற கலைஞரின் மரணத்திற்கு முஸ்லிம்களின் எதிர்வினை இவ்வாறிருப்பதின் காரணத்தை அலசுவதே இக்கட்டுரை.

கலைஞர் மீதான முஸ்லிம்களின் அபரீத பாசத்திற்கான விடையை கண்டெடுக்க திராவிட இயக்கங்களின் வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்பது அவசியம்இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களை இந்திய முஸ்லிம்கள் எனும் அடையாளத்தில் ஒன்றிணைக்க முற்பட்டபோது தமிழக முஸ்லிம்கள் அதில் ஒரேடியாக ஒன்றி போகாமல் தங்கள் இஸ்லாமிய மத அடையாளத்தை ஒரு புறம் விட்டு கொடுக்காமல் தமிழ் எனும் கலாச்சார தன்மையையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்தது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் என அறுதியிட்டு சொல்லலாம்.  அதனால் தான் சுதந்திரத்திற்கு பிறகு இன்றளவும் விமானத்தில் கூட தாமரையால் மலர முடியா சூழல் தமிழகத்தில்இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

கிழக்கிந்திய நிறுவனம் மூலம் வர்த்தகம் செய்வதாக வந்த வெள்ளையர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்த போது வெள்ளையர்களுக்கு எதிராக போராடுவதில் முஸ்லீம்களே முண்ணனியில் இருந்தனர். வெள்ளையர்களை விரட்டியடிப்பதில் முனைப்பு கொண்ட முஸ்லீம்கள் ஆங்கிலம் கற்பதையே ஹராமாக்கி கொண்ட அதே நேரத்தில் பிராமணர்களோ முஸ்லீம்களின் மதரசா கல்வி முறையை ஒழித்து கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலம் கற்று வெள்ளையர்களின் உதவியாளர்களாக பணி புரிய தொடங்கினர்.

தமிழகத்தில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு பார்ப்பனர்களே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணி புரிந்ததோடு பார்ப்பணரல்லாதோர் அரசு பணிகள், சமூக வாழ்வு என அனைத்திலும்புறக்கணிக்கப்பட்டனர்பார்ப்பனரால் புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனரல்லாதோர் தங்களுக்குள் நடத்தி கொண்ட பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நவம்பர் 20 1916ல் டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டியாரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1920ல் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு மூன்று வருடங்கள் தவிர்த்து 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சியே ஆட்சி செய்ததுமருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை என்று சட்டம் கொண்டு வந்ததோடல்லாமல் பிராமணல்லாதோர் கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்றம் காண பல்வேறு நடவடிக்கைகளை நீதிக்கட்சி எடுத்தது. அது போல் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராக நீதிக்கட்சி களமாடி ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பின்பு,1937ல் தேர்தலில் தோல்வியுற்ற நீதிக்கட்சி அரசியல் களத்தில் நாளடைவில் காணாமல் போனது. பிராமணல்லாதோரின் சமூகவாழ்வை மேம்படுத்த நீதிக்கட்சி பாடுபட்டமை இடைநிலை சாதிகளுக்கு பயனளித்தாலும் விளிம்புநிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை என்ற விமர்சனம் புறந்தள்ள முடியா ஒன்று.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு பலர் பங்காற்றியிருந்தாலும் முஸ்லிம்கள் திராவிட இயக்கங்களின் மேல் ஈர்ப்பு கொள்வதற்கு தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வே. ராமசாமி ஓர் முக்கிய காரணியாக விளங்கியுள்ளார். இளமையில் தீவிர ஆத்திகராக இருந்த பெரியார் 1904க்கு பிறகு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் ஜாதிய அடுக்குமுறை கொடுமைகள் என வர்ணாசிரமத்திற்குஎதிராகபோராட முற்படுகின்றார்.

1919 முதல் 1925 வரை காங்கிரசில் இருந்த பெரியார் அங்கு நிலவிய பிராமண ஆதிக்கத்தினால் வெளியேறி 1925ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பின் நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகித்த தந்தைபெரியார் 1944ல் திராவிடகழகத்தைதொடங்கினார். இறைமறுப்பை அடிப்படையாக கொண்டு திராவிடகழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் பெரியார் சாதிய கொடுமை, பிறப்பின் அடிப்படையில் தீட்டு, சதி, பெண்களுக்கு சொத்துரிமை பறிப்பு போன்ற சமூக அநீதங்களை கொண்டிருந்த இந்து மதத்தையே அதிகம் விமர்சித்தார்.

பெரியாரிடத்தில் மதம், மற்றும் கடவுள் விஷயத்தில் மறுப்பு கொள்கை இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை. இன்னும் ஓர் படி மேலே சென்று தலித்துகளுக்கான சமூக அநீதத்திற்கான தீர்வாக இஸ்லாத்தை பரிந்துரைத்ததோடு தாமும் இஸ்லாத்தை ஏற்றிருக்க கூடும் என பெரியார்தாசன் (அப்துல்லாஹ்) போன்ற ஆய்வாளர்கள் சொல்வதை நாம் புறந்தள்ளவும் முடியாது

திராவிட இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவை பலப்படுத்தியதில் மீலாது விழாக்களின் பங்கு, அதனால் முஸ்லீம் சமூகம் பெற்ற பலன்கள், அது தன் சுயத்தை இழந்தது, திராவிட இயக்கங்கள் பெற்ற அனுகூலங்களை அடுத்த இதழில் அலசுவோம் இன்ஷாஅல்லாஹ் (தொடரும்).

Saturday, May 12, 2018

ஆசிஃபா - உடைபடும் கோவில்களின் புனிதங்கள்




மலரினும் மெல்லிய எட்டு வயதுடைய குழந்தை ஆஃசிபா எட்டு கயவர்களால் எட்டு நாட்கள் வன்புணர்வு செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டது அனைவரையும் உலுக்கிய நிகழ்வு என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. ஆனால் இச்சம்பவத்தை எங்கோ காஷ்மீரிலே ஒரு எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என்று ஒரு தனிப்பட்ட சம்பவமாக கருதி எதிர்ப்பு பேரணிகள் நடத்துவதோடு , மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்துவதோடு , முகநூலில் ஆவேசமாக பதிவிடுவதோடு கடந்து செல்லல் இதற்கான தீர்வல்ல. ஆசிஃபாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பது இந்தியாவில் பாசிசவாதிகளால் தினந்தோறும் நடத்தப்படும் அநீதிகளின் ஒரு மாதிரியே என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.மேலும் இச்சம்பவத்தின் மூலம்உடைபடும்புனிதங்கள் குறித்த தெளிவை பெறுவதும் நிகழ்வுகளின் அரசியலை புரிந்து கொள்ள உதவும்.

          ஜனவரி 10ம் தேதி காணாமல் போன ஆஃசிபா எட்டு நாட்கள் கயவர்களின் வெறித்தனத்தால் நார் நாராக கிழிக்கப்பட்டு பின் கிடைக்கப் பெற்றாள். ஆனால் மூன்று மாதங்களாக இச்சம்பவம் எந்த தேசிய ஊடகத்திலும் துணுக்கு செய்தியாக கூட வரவில்லை. ரஜினி இமயமலை போவதை எல்லாம் தலைப்பு செய்தியாக போடும் தமிழ் ஊடகங்களுக்கு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. அவ்வழக்கை விசாரித்த அரிதிலும் அரிதான சில நேர்மையான காவல் துறை அதிகாரிகள் உள்ளூர் நிர்வாகத்திலிருந்து பாஜக அமைச்சர்கள் வரை கொடுத்த அத்துனை அழுத்தங்களையும்  மீறி வழக்கு பதிவு செய்ததால் ஆஃசிபாவின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதிலும் ஒரு வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகள் மீது FIR பதிவதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொண்டது தான் ஆஃசிபா ஊடக வெளிச்சம் பெறுவதற்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று. இல்லையென்றால் காஷ்மீரில் தினந்தோறும் காணாமல் போகும் நூற்றுக்கணக்கான நபர்களில் ஒருவராக ஆஃசிபாவின் வழக்கும் காணாமல் போயிருக்கும்.



          காணாமல் போன மகளை கிராமமெங்கும் எட்டு நாட்களாக தேடிய ஆஃசிபாவின் தந்தை புனிதமான இடம் என்பதால் கோயிலில் மட்டும் தேடவில்லை என்று சொன்னது கோயில் என்பது புனிதமான இடம் , அங்கு எந்த ஒழுக்க மீறலும் நடைபெறாது என்ற பொதுபுத்தியின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகும். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பார்ப்பனர்கள் இந்தியாவில் நீண்ட கலாசார பெருமையுடன் வளமாய் வாழ்ந்து கொண்டிருந்த திராவிடர்களை அடிமைப்படுத்த கண்டு பிடித்தவை தான் கோவில்களும் வேதங்களும்.  கோவில்களின் கருவறைக்குள் சிலைகளை நிருவி புனிதத்தை ஏற்படுத்திய பிராமணர்கள் தாங்கள் மட்டுமே கருவறை செல்ல முடியும் என்று தங்களது ஆளுமையை நிலைப்படுத்தினார்கள். இவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்குண்ட அப்பாவி மக்களும் தங்கள் பொருளாதாரம் மற்றும் உழைப்பினால் உருவாக்கப்பட்ட கோவில்களில் தாங்களே உள்ளே நுழையவிடாமல் அவமதிப்பதை அறியாமல் கோவில்களை புனிதமாக கருதும் அவலம் தொடர்கிறது. மேலும் தெய்வம் நின்று கொல்வான் , அரசன் அன்று கொல்வான்என்று பழமொழிகளை உருவாக்கி ஆண்மிகத்திற்கும் அதிகாரத்திற்கும் கள்ள உறவை ஏற்படுத்தியதில் கோவில்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

       எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த காரணத்தால் , நேரடியாக ஆட்சி புரியாமல் சூத்திர மன்னர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களாக பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். தங்கள் ஆதிக்கம் வலுப்பெற மக்களிடமிருந்து வரியாக சுரண்டிய செல்வத்தினால் மிகப் பெரும் கோவில்களை கட்ட வைத்தனர். கோவில்களில் குறிப்பாக கருவறைகளில் பிராமணர்களை தவிர பிறர் உள் நுழையாதவாறு கட்டுப்பாடுகளை விதித்தனர். ஏனெனில் வரலாற்று குறிப்புகளின் படி கருவறை என்பது மன்னர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டக அறையாக இருந்தது. இச்சூழலை கருத்தில் கொண்டே காசி விஸ்வநாதர் ஆலயத்தை மாமன்னர் ஒளரங்கசீப் இடித்ததையும்  ஏன் சோமநாதர் ஆலயத்தை மஹ்மூது பின் கஜ்னவி இடித்ததையும் பார்க்க வேண்டியுள்ளது.

       பாபரி மஸ்ஜித் குறித்து பேசும் போதெல்லாம் ஹிந்துத்துவாக்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் மதுராவில்உள்ள கிருஷ்ணஜென்ம பூமியும் முஸ்லிம்களால் இடிக்கப்பட்டது என்றும் அவற்றை மீட்பதை தமது இலக்காக கூறுவர். காசி விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்பட்டது ஒளரங்கசீப்பால் என்பது உண்மையே . ஏன் இடித்தார் என்பதை ஆய்வு செய்தால் வெளிவரும் உண்மை இவர்களின் பக்தியை தோலுரித்து காட்டுகிறது. காந்தி தர்ஷன் சமிதி தலைவரும் , ஒரிசா முன்னாள் ஆளுநராகவும் பதவி வகித்த வரலாற்றாசிரியர் பி.என்.பாண்டே பின்வருமாறு தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.

        முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் ன் ஆளுகையின் கீழிருந்த ஹிந்து மன்னர்களோடு வங்காளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வாரணாசியை நெருங்கிய போது அங்கு அன்றிரவு தங்கினால் தங்கள் மனைவிமார்களான ராணிகள் கங்கையில் குளித்து காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்வர் என் ஹிந்து ராஜாக்களின் வேண்டுகோளை ஏற்று ஒளரங்கசீப் வாரணாசியில் தங்கினார். வாரணாசிக்கு வெளியே படைகள் தங்கி கொள்ள எல்லா ராணிகளும் கங்கையில் குளித்து பின் விஸ்வநாதர் ஆலயத்திற்குள் வழிபட்டு அனைவரும் திரும்பி வர , கட்ச் ராணியை மட்டும் காணாமல் வாரணாசி பரபரப்பானது.

           கோவில் உள்ளும் கோவிலை சுற்றியும் தேடியும் கட்ச் ராணியை காணாமல் கடும் கோபமடைந்த ஒளரங்கசீப் தீவிர பரிசோதனைக்கு உத்தரவிட்டார். கோவிலின் உள்ளே தேடிய போது சுவற்றில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்ட சாமி சிலை அசைய கூடியதாக இருந்ததை கண்ணுற்று அதிர்ச்சியுற்றனர். சிலையை நகர்த்தினால் அதனுள்ளே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் வழியாக கீழ் தாழ்வாரத்திற்குள் இருந்த பாதாள அறையை சென்றடைந்தது. சரியாக ஜெகன்னாதர் சாமி சிலை கீழே கட்ச் ராணி ஆபரணங்களின்றி , ஆடைகள் அலங்கோலமாக வன்புணர்வு செய்யப்பட்டு அழுது அரற்றி கொண்டிருந்தார். மிகப் பெரும் குற்றச்சம்பவம் நடைபெற்றதால் அத்தீட்டு அகற்றப்பட முடியாது என்பதால் அக்கோவிலை இடித்து வேறொரு இடத்தில் கட்டி தரவும் வன்புணர்வு செய்த தலைமை பூசாரியை தண்டிக்குமாரும் ஹிந்து ராஜாக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றே அக்கோவில் இடிக்கப்பட்டது.

     
எனவே காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஃசிபாவை வன்புணர்வு செய்த தலைமை பூசாரி சஞ்சி ராமுக்கும் , காஞ்சிபுரம் கோவிலின் கருவறைக்குள்ளே காம களியாட்டம் செய்த பூசாரி தேவநானுக்கும் முன்மாதிரிகள் வரலாற்று காலம் தொட்டு உள்ளது. கோவிலின் மீது சாதாரண மக்களுக்கிருந்த பக்தியை மூலதனமாக கொண்டே கொடியவர்களின் கூடாரமாக கோவிலை பயன்படுத்தியுள்ளனர். சுரண்டப்படும் ஏழைகளை கடவுளின் பெயரால் மேலும் சுரண்ட அந்தரத்தில் தனியே நின்ற சாமி சிலையை பயன்படுத்தியதால் சோமநாதர் கோவிலையே இடித்து மக்களை பொய் கடவுளர்களிடமிருந்தும் , மூட நம்பிக்கைகளிலிருந்தும் மஹ்மூது பின் கஜ்னவி காப்பாற்றியதில் நமக்கு படிப்பினை உள்ளது. இதற்கான தீர்வை  நேரடி ஆதாரம் இல்லை என்றாலும் முஸ்லிம் என்றால் தூக்கும் , தானே குற்றத்தை ஒத்து கொண்டாலும் அசீமானந்தாவையும் ,  மாயா  கோட்னியையும் விடுதலை செய்யும் உச்சி குடுமி மன்றங்களிடம் எதிர்ப்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

                 ஆஃசிபாவை இழந்தது தான் இறுதியாக இருக்க வேண்டுமெனில் பார்ப்பனியத்தின் அடிமடியில் கை வைப்பதாக நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஆம் இனி நம் குறிக்கோள் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேரான சிலை வணக்கத்திற்கு எதிராக , பொய் கடவுளர்களிடமிருந்தும் மக்களை காப்பதாக நம் போராட்டம் அமைவதே நாம் ஆஃசிபாவின் மரணத்திற்கு செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். இனி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆசிபாக்களும் நிர்பயாக்களும் பாதிக்கப்படா சமூகத்தை உருவாக்க முஸ்லீம்களால் மாத்திரமே இறையாட்சியால் மாத்திரமே முடியும். அதை நோக்கி நம் எல்லா முயற்சிகளும் தொடருமானால் இறுதி வெற்றி நமக்கே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(நன்றி -   பொறியாளர் ஃபெரோஸ்கான், தோழன் மாத இதழ் ஏப்ரல் 2018)