Monday, February 6, 2012

இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் மேலதிக மசாலாக்கள்


(கருத்திடும் சகோதரகள் நாம் ஹஜ்ஜுல் அக்பரின் கட்டுரையை பிரசுரிப்பதால் நம்மை ஜமாத்தே இஸ்லாமி என்றும் அதனாலேயே பிற அமைப்புகளை சாடுவதாகவும் நினைக்கின்றனர். பார்வைக்கு படும் சில நல்ல கட்டுரைகள் சமூகத்தின் பார்வைக்கும் செல்ல வேண்டும் என்ற அவாவே அன்றி நாம் அவ்வமைப்பின் உறுப்பினரல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன் - நிர்வாகி)

மனைவி : என்னாங்க ஒற்றையா ஒரு பார்ஸலை மட்டும் வாங்கியிருக்கீறீங்க..... நூடில்ஸீக்கு கறி, புளி, மசாலா ஒன்டும் வாங்கலியா?                                                                                                                                                                                          
கணவன்: இன்னிக்கு ஒங்க கையால கறி, புளி, மசாலான்னு எதுவும் போட்ற வாணாம். எல்லாம் சேர்ந்ததா இப்போ ஓறே பார்ஸல்ல அடைச்சி விக்கிறாங்கல்ல... பார்ஸலைப் பிரிச்சி அப்படியே ஆக்கிடுங்க்.  எல்லாம் சரியாயிடும்.   
                                                                                                                                                                                                                  இதைப் போன்றுதான் உப்பு, உரைப்பு, மசாலா அனைத்தையும் மேலதிகமாகப் போட்டு மார்க்கத்துக்கு சுவையூட்ட பலர் எத்தனிக்கிறார்கள்- அல்லாஹ் தேவையான சுவைகள் அனைத்தையும் மார்க்கத்தினுள் அளவாக வைத்து ஓரே பொதியாகத் தந்திருக்கின்ற போது                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               அனைத்துச் சுவைகளும் பொருத்தமான அளவில் சேர்க்கப்பட்டமார்க்கம் இஸ்லாம்.  ஆனால், அந்த் சுவை சிலருக்குப் போதாமால் இருக்கிறது.  இஸ்லாத்தை இஸ்லாமாக முன்வைத்தால் உப்புச் சப்பில்லை என்கிறார்கள். உப்புச் சப்பில்லாத உணவை ருசித்து ரசித்து உட்கொள்ள முடியாதல்லவா? அதை நாவில் வைத்து சுவைக்க முடியாதுகையில் வைத்து பிசைத்து பிசைத்து இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சிலருக்கு இஸ்லாம் இஸ்லாமாக முன்வைக்கப்படும் போது அது பிசைத்து பிசைத்து இருப்பது போலத் தென்படுகிறது. எனவே, மேலதிகமாக உப்பு, மசாலா என்பவற்றைச் சேர்த்தே அவர்கள் சாப்பிடுகிறார்கள். பிறருக்கும் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
                                                                                                                                                                                                      அது என்ன மேலதிக மசாலா?    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              சூடு பறக்கும் விவாதம்..... கொடூரமான விமர்சனம், அநாமதேய பிரசுரம், அவதூறுகள், அபாண்டங்கள் நிறைந்த பொய்ப் பிரசாரம், பல கருத்துக்களூக்கு இடமுள்ள ஒரு மார்க்கப் பிரச்சினையில் ஒரு கருத்தை அளவு கடந்து போற்றி அதை மாத்திரமே சத்தியம் என்று ஏனைய கருத்துக்கள் அசத்தியம் என்றும் நிறுவ முயலும் தீவிரம், தனது கருத்து பிறர் ஏற்கும் வரை தனது உயிரே போனாலும் விட்டுக் கொடுக்காத பிடிவாதம், பிறரை டெலிபோனிலும் நேரடியாகவும் வம்புக்கழைத்து அவர்களது உணர்ச்சிகளைக் கொதிப்படைய வைத்து அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் வார்த்தைகளை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து தங்களது சகாக்களுக்கு மத்திப்ப்யில் அதனைப் பரிமாறி மகிழ்ச்சியும் கபடத்தனம், தங்களுடன் கருத்து முரண்படுபவர்கள் எங்காவது ஒரிடத்தில் எழுத்துலே வார்த்தையில் சறுக்கும் இடங்களை உன்னிப்பாகத் தேடி அலையும் மோப்பம், நரகத்திற்கும் அனுப்பப்பட  வேண்டியவர்களின் பட்டியலை உயிர் பிரிவதற்கு முன்னால் தயாரித்து விடாலாமா? முடியாமல் போகுமா? எனும் பதட்டம்.......   
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       இஸ்லாம் பரவிச் செல்லும் இடமெல்லாம் முந்திச் சென்று அதன் வருகையைத் தடுக்கும் ஷைத்தானிய வியூகம், பகிரங்கமாகவே அறிஞர்களையும் இமாம்களையும் இஸ்லாமிய இயக்ககங்களையும் கீறிக் கிழிக்கும் விமர்சனம், அல்லாஹ்வின் இயற்கை மார்க்கத்தை மாசற்ற மனதோடு அமர்ந்து கற்கிறார்களே அவர்களது உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி மனம் பேதலிக்க வைத்து இஸ்லாத்திலிருந்து அவர்களைத் திசைதிருப்ப முயலும் குரூரம், வாழ்க்கை முழுவதையும் மறுசீரமைக்க விரும்பும் இஸ்லாத்தின் விசாலத்தன்மையை வணக்க வழிபாடுகள் சிலவற்றின் உட்பிரிவுகளுக்குள் இழுத்து வந்து முடக்கி ஒரு போதும் அவற்றிலிருந்து சமுகத்தை வெளியேற விடாமல் தடுத்து வைத்துருக்கும் அழுங்குப் பிடி, ஆயிக்கணக்கான உயிர்கள் பலி கொள்ளப்படும் முஸ்லிம் உம்மத்தின் சர்வதேச அவலத்தையோ சீரிய தலைமையில்லாமல் சிதறுண்டு கிடக்கின்ற நம் தேச அவலத்தையோ எதிர்கொள்ளும் காத்திரமான முயற்சிகள், திட்டங்கள் எதுவுமின்றி பிரிவையும் பிளவையும் தூபமிட்டு வளர்க்கும் அக்கிரமம், உடன்படுவதற்கு நூற்றுக்கணக்கான அடிப்படை அம்சங்கள் இருக்கிக்கின்றபோது முரண்படுவதற்கென்றே கிளை அம்சங்களைத்  தூக்கிப் பிடிக்கும் வக்கிரம், எதிரியையும் நண்பனாக்கும் அன்பைத் தொலைத்து விட்டு நண்பனை எதிரியாக்கும் குரோதம்.........
       இவற்றையெல்லாம் கலந்து இஸ்லாத்தையும் அவற்றோடு குழைத்துக் கொடுத்தால் இஸ்லாம் உப்புப்புளியுடன் உறைப்பாக இருக்குமாம். இவை இல்லாமால் இஸ்லாம் முன்வைக்கப்பாட்டால் அதில் உப்புச்சப்பில்லையாம். பிசைந்து பிசைந்து இருக்க வேண்டியதுதானாம். இஸ்லாம் இஸ்லாமாக முன்வைக்கப்படுகின்ற போது இன்றைய சில அழைப்பாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தோடு அல்லாஹ் சேர்த்து வைத்துள்ள இயற்கையான, பொருத்தமான, பக்க விளைவுகளற்ற மனிதனது இயல்புக்குப் பொருத்துகின்ற சுவைகள் போதாதென்று மேற்கூறப்பட்ட மேலதிக மாசாக்களையும் இஸ்லாத்தோடு கலந்து கொடுக்கின்றனர்.                                                                                                                                    
                ஒரு சமையலுக்கு அளவாகச் சேர்க்கப்படுகின்ற மசாலாக்கள்தான் அந்த சமையலை சுவையூட்டுகின்றன. அதிகமானவர்கள் இத்தகைய சமையலை விரும்பி உட்கொள்வார்கள். காரணம் அவர்களது நாவிலோ, உடலிலோ கோளாறுகள் இருப்பதில்லை. எனினும் சிலருக்கு அளவாக சுவையூட்டப்பட்ட உணவுகள் இருப்பதில்லை. ஒன்றில் அவர்கள் போதையில் இருப்பார்கள், அல்லது காய்ச்சலில் இருப்பார்கள்; அல்லது நீரிழிவு நோயால் சுவை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மேலதிகமாகச் சேர்த்தால் சுவை தட்டும்.
            இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் இந்தக் கலவையை சுகதேகிகளுக்குக் கொடுத்தால் எப்படியிருக்கும்? ஒன்றில் அவர்கள் அதனைச் சாப்பிடமாட்டார்கள்.  தவறியேனும் சாப்பிட்டால் அவர்களும் இயல்பு நிலை பாதிக்கப்படுவார்கள்.                                                                                      
               இஸ்லாமும் இதுபோன்று மேலதிக மசாலாக்களின் கலவையோடு கொடுக்கப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை இன்று தோன்றியிருக்கிறது. இந்த மேலதிக மசாலாக்களில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இந்த மசாலாக்கள் அனைத்தும் ஷைத்தானியத் தயாரிப்புகள், இவற்றிக்கு உலகின் எந்த ஹலால் நிறுவனமும் ஹலால் சான்றிதழ் வழங்க மாட்டாது. இன்னும் சொன்னால் பன்றிக் கொழுப்பு அதன் இரத்தம், இறைச்சி போன்றவற்றின் ஹரமிய்யத் ஐ விட இந்த ஷைத்தானியத் தயாரிப்புகளின் ஹராம் தன்மை செறிவானது; கனதியானது. இத்தகைய ஹராம்களையெல்லாம் கலந்து தூய இஸ்லாத்தையும் அதன் சுவையையும் மாசுபடுத்தும் எம்மவர்களில் சிலர் வாய்கூசாமல் சொல்கிறார்கள். ‘நாங்கள்தான் குர்ஆன் சுன்னாவின் சொந்தக்காரார்கள். நாங்கள்தான் அவ்விரண்டையும் பின்பற்றுபவர்கள்; ஏனையோர் வழிகேடர்கள், நரகவாதிகள்’ என்று.................
            ஏன் இஸ்லாத்தை முன்வைப்பதற்கு இப்படியொரு கீழ்த்தரமான வழியை இவர்கள் தெரிவு செய்ய வேண்டும்? இஸ்லாத்தின் அழகை யும் அதன் ஆழ ,அகலத்தையும் அது தன்னகததே பொதிந்து வைத்துள்ள அற்புதமான அறிவுக் கருவூங்களையும் மனித வாழ்க்கையை உள்ளத்திலும் உலகத்திலும் மேலோங்கச் செய்வதற்கு அது கற்றுத் தரும் அற்புதமான வழிகாட்டல்களையும் வாழ்வின் ஒவ்வொரு சிறிய, பெரிய விடயத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு அது தரும் இனிமையான உபதேசங்களையும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் வேறு கலவைகள், அசுத்தங்கள் பட்டு விடாமால் தூய்மையாக முன்வைக்க ஏன் இவர்களால் முடியாமல் இருக்கிறது?  
                                                                                                                                                                                   காரணத்தை முன்னைய இதழ்களில் விளக்கியிருக்கிறேன்; அது ஒரு நோய் . அந்த நோயோடு மற்றொரு பிரச்சினையும் இந்தக் கீழ்த்தரமான வழிமுறையை அவர்கள் தெளிவு செய்வதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது . இவர்கள் மார்க்கத்தை ஒரு சிறிய எல்லைக்குள் சுருக்கிக்கொள்கின்றர். தொழுகை, நோன்பு, ஹஜ், திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றுடன் தொடர்பான நடைமுறைகளில் காணப்படும் கருத்து வேறுபாடு அவற்றின் நடைமுறைகளில் புகுந்துள்ள இஸ்லாத்துக்குப் புறம்பான நூதனங்கள் ஆகிய இரண்டு அம்சங்களுக்குள் இவர்கள் இஸ்லாத்தை இழுத்து வந்து சுருக்கி வைத்துள்ளார்கள். கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை மாத்திரம் முன்வைக்கிறார்கள். அதில் மித மிஞ்சிய தீவிரத்தைப் பிரயோகிக்கிறார்கள். நூதனங்களை எதிர்க்கும் விடயங்களில் இறுதித் தீர்ப்பையே வழங்கி நூதனவாதிகளை நரகத்திற்கே அனுப்பி விடுகிறார்கள். இவர்கள் அழைப்பாளர்களாக செயல்படவில்லை.மாறாக நீதிபதிகளாகவே செயல்படுகிறார்கள். இவர்களது பணியை “அழைப்பு”  என்று கூறுவதைவிட “தீர்ப்பு” என்று கூறுவதே பொருத்தமானது. 
                                                                                                                                                                                                        அதுமட்டுமன்றி தொழுகை, நோன்பு, ஹஜ், திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றின் நடைமுறைகளிலுள்ள கருத்து வேறுபாடுகளையும் அவற்றில் புகுந்துள்ள நூதனங்களையும் இவர்கள் வேறுபடுத்திக்கூடப் பார்ப்பதில்லை. கருத்து வேறுபாடுகளை சிலபோது இவர்கள் ‘பித்அத்” என்ற வட்டத்திற்குள் கொண்டுபோய் விடுகிறார்கள். ஓருவர் குத்பாப்  பிரசங்கம் செய்கிறார். “ஒரு மனிதர் விபசாரத்தில் ஈடுபாடுவதை விட குனூத் ஒதுவது பெரும் பாவமாகும்” என்று . இவ்வாறு இவர்களது பார்வையில் பட்ட சில கருத்து வேறுபாடுகளையும் நூதனங்களையும் மாத்திரம் தொகுத்தால் மொத்த இஸ்லாத்தில் அவற்றின் அளவு என்ன விகிதாசாரத்தில் இருக்கும்? 6600ற்கு மேற்பட்ட குர்ஆன் வசனங்களுக்கும் பல பத்தாயிரங்களுக்கு மேற்பட்ட நபிமொழிகளுக்கும் மத்தியில் இவர்கள் தேடித் தெரித்து கொண்ட இஸ்லாம் அந்த அளவுதான்.

            பரவாயில்லை, கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. எமக்கு இவ்வளவுதான் தெரியும் என்றாவது இவர்கள் நினைக்கிறார்களா? இல்லை. குர்ஆனும் ஸீன்னாவும் தங்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்; ஏனையோருக்கு பைபிளும் பகவத்கீதையும் தெரியும் என்ற ரீதியில்தான் இவர்களது பிரசாரம் நடைபெறுகிறது.                                                                                                                                                                                           இவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் புகுத்தப்பட்டுள்ள நூதனங்கள் பற்றித் தெரிந்த அளவு மக்களுடன் உறவாடுவதற்குத் தேவையான பண்பாடுகள் பற்றியோ நற்குண நல்லொழுக்கங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. அதுமட்டுமல்ல, சமூகத்தின் மீது அன்பு அனுதாபம் கொண்ட நிலையில் இவர்களுக்குப் பிரசாரம் செய்யவும் தெரியாது. இதன் விளைவாக சமூகத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள்.                                                                                    
             இவர்களை எதிர்க்கும் மக்களிடமும் தயவு தாட்சண்யம் இருப்பதில்லை. காரணம், அவர்களும் இவர்களைப் போன்று மற்றோர் அறியாமையில் இருக்கிறார்கள். எனவே , இரு தரப்பினரும் ஒருவருக்கெதிராக மற்றவர்  கடுமையாக விமர்சனத்திலும் மோதலிலும் இறங்கிவிடுகின்றனர். பாவங்கள் சங்கிலியாக தொடர்கின்றன. விளைவு என்ன தெரியுமா?                                                                                                                                                                                  
                 வணக்க வழிபாடுகளிலுள்ள நூதனங்களுக்குத் தீர்ப்பு வழங்கப் போனவர்கள் சமூகத்தில் உருவான எதிர்ப்புக் காரணமாக தமக்கென ஒரு வணக்க வழிபாட்டுத்தளத்தை அமைத்துக் கொண்டு ஒதுங்கிப் போகின்றனர். அத்தோடு இவர்களுக்கும் சமூகத்துக்குமிடையிலான உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. வணக்க வழிபாடுகள் மாத்திரமே இஸ்லாம் என்ற அவர்களது எண்ணம் இதனூடாக நிறைவேறுகிறது. உள்ளச்சமுள்ள வணக்க வழிபாடுகள், வாழ்க்கை முழுவதையும் சீராக்கும் வணக்க வழிபாடுகள், முஸ்லிம் சமூகத்தை ஒர் உம்மத்தாக ஒன்றிணைக்கும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் விட்டு விட்டு நூதனங்களற்ற வணக்க வழிபாடுகளை உருவாக்குவதோடு இவர்கள் தங்களது பணியை முடித்துக் கொள்கிறார்கள்.                                                                          

                       இஸ்லாத்தின் எல்லையை இவ்வாறு ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டுவந்து தாமும் சமூகத்தை விட்டொதுங்கி அந்த வட்டத்துக்குள் இருக்கின்ற ஒரு சில தலைப்புகளை மாத்திரம் எவ்வளவு காலம்தான் திரும்பபேசிக் கொண்டிருக்க முடியும்? அவ்வாறு பேசும்போது ஏற்கனவே எதிர்த்த சமூகம்கூட இப்போது அந்தப் பேச்சுக்களைப் பொருட்படுத்துவதில்லை. தங்களது சடங்கு, சம்பிரதாயங்களைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என அவர்களும் இவர்களை விட்டொதுங்கிறார்கள். 
                                                                                                                                                                                            இஸ்லாமியப் பணியின் அடைவு இவ்வளவுதானா? அல்லது இஸ்லாமியப் பணி துவங்கிய இடத்திலேயே இவ்வளவு முடிவடைந்து விடுகிறதா? இது இஸ்லாமியப் பணி செல்ல வேண்டிய சரியான திசையல்ல. இத்தகைய அடைவுகள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் வளர்ச்சியைத் தருவதுமல்ல. எனவே, இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனப் பலர் அறிவுரை கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.                                                                                                                                                                                                                                                       
                எனினும், அந்த அருளுரைகள் இவர்களை மாற்றவில்லை. மாறாக, தங்களது அணுகுமுறையை இவர்கள் மேலும் மோசமாக்கிக் கொள்கிறார்கள். அணுகுமுறையை மாற்றுமாறு அறிவுரை கூறியவர்களையும் வழிகேடர்கள் என இழித்துரைக்கிறார்கள். தங்களது அணுகுமுறையை தவறான திசை நோக்கி இன்னும் வேகமாக முன்னெடுக்கிறார்கள்.                                                                                                                                                                   
                திரும்பத திரும்ப பேசிக் கொண்டிருக்கும் ஒரே மாதிரியான விடயங்கள் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க மாட்டாதல்லவா? எனவே அந்த குறையை நிவர்த்தி செய்ய சமூகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்காக புதிய விடயங்களைத் தேடலானார்கள். அந்தோ பாவம் புதிய விடயங்கள் இஸ்லாத்தில் எவ்வளவோ இருக்கின்றன. உளத்துய்மை, பண்பாடுகள், நற்குணங்கள், முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக்கூறல், தலைமைத்துவத்தையும் கட்டுப்படும் சமூகமொன்றையும் உருவாக்குவதற்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுதல், பிளவுபட்டுத் தூரமாகி இருக்கின்ற சமூகத்தை நெருக்க்மாக்கிக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்தல்.......எனப் புதிய விடயங்கள் ஏராளம்                                                                                                                                                                                                                                    
                இஸ்லாத்தின் பரந்த இந்த சமூத்திரத்தினுள் மூழ்கி முத்தெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? நான் ஏற்கனவே கூறியது போல தாம் முன்வைத்த கண்டுபிடித்த இஸ்லாம் போதாதென அதற்கு மேலும் உறைப்பு, உப்பு, புளி மசாலா என்பவற்றை சேர்த்ததுதான். இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவராலும் உட்கொள்ள முடியாத ஒரு சமையலாக அவர்கள் இஸ்லாத்தை முன்வைக்கிறார்கள்.

                                            நரக நெருப்பிலிருந்து மனிதனைக் காக்கும் வியாபாரமல்லவா இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்கான உழைப்பு . அவ்வாறிருக்க, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வங்குரோத்து வியாபாரத்தை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்? நாளை இவர்களால் விமர்சிக்கப்பட்டவர்களும் மானம் பறிக்கப்பட்டவர்களும் மனம் புண்படுத்தப்பட்டவர்களும் இவர்களை வழிமறித்து அல்லாஹ்விடம் நீதி கேட்டால் இறுதித்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்த வங்குரோத்து நிலை தமக்கு ஏற்படாலம் என இவர்கள் அஞ்சவில்லையா?                                                                                        

அன்போடு உபதேசிக்கிறோம்.  இந்த அசிங்கமான அணுகுமுறையை விட்டு விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
(நன்றி - ஹஜ்ஜுல் அக்பர் , அல்ஹசனாத்)


Monday, December 5, 2011

டிசம்பர் 6 – மீண்டும் ஓர் பாபரியை அனுமதிக்க மாட்டோம்


19 வருடங்களாக இந்திய முஸ்லீம்கள் உள்ளிட்ட உலகளாவிய உம்மத்தின் நெஞ்சத்தில் ஆழமாய் குத்தப்பட்ட கத்தி இன்னும் எடுக்கப்பட முடியாமல் அப்படியே இருக்கிறது. முஸ்லீம்களின் பள்ளிவாயிலை இடித்த போது அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதியை நம்பினர் முஸ்லீம்கள். ஆம் பாபரி இருந்த இடத்திலேயே கட்டப்படும் என்று சொன்னார் அவர். வெறும் வாயில் உதிர்த்த வார்த்தைகள் அவை. உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் பாபரியே இடிக்கப்பட்டு இருக்காது.



பள்ளியை இடித்தவர்கள் தாங்கள் நீதிமன்றத்தை எதிர்பாக்கவில்லை, கோவிலை கட்டியே தீருவோம் என்றனர். பறி கொடுத்த முஸ்லீம்களோ நீதியை இஸ்லாத்துக்கு முரணான இஜ்ஜாலிஹிய்யாவிடம் எதிர்பார்த்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை. அல்லாஹ்வின் ஆலயம் ஷஹீதாக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்பப்படும் என்று சொல்லி உணர்வூட்ட வேண்டிய தலைவர்களே நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்று கொள்வோம் என்று சொல்லி இளைஞர்களின் வீரத்தை முடக்கி போட்டனர்.


இதே நீதிமன்றம் தானே செங்கல் பூஜைக்கு வழி வகுத்தது, பள்ளிவாயிலை இடிப்பார்கள் என்று தெரிந்தும் கல்யாண்சிங்கின் வெற்று வாக்குறுதியை நம்பி பள்ளியை இடிக்க விட்டவர்கள், பள்ளி இடித்த பின் கட்டப்பட்ட சட்டவிரோத கோவிலை அங்கீகரித்து பூஜை செய்ய விட்டவர்கள், நீதிமன்றம் தான் முஸ்லீம்களின் நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கை எதிர் தரப்புக்கு தாரை வார்த்தது.

 
இத்தனையையும் பார்த்தும் இறைவன் படைத்த வேதத்தின் மீது ஏற்படாத நம்பிக்கை நீதிமன்றத்தின் மேல் சமூக தலைவர்களுக்கு இருந்தது. பாபரியை மீட்க டிசம்பர் 6 ல் நடத்தப்படும் போராட்டங்களும் முனை மழுங்கி வெவ்வேறு இயக்கங்களில் ஒரே நோக்கத்திற்காக வெவ்வேறு மூலைகளில் நின்று கூக்குரல் எழுப்பும் வருடாந்திர பாத்திஹாவை போல் ஆகிவிட்டதாக சாமான்ய முஸ்லீம் நினைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. யாரை நம்பியும் எந்த அமைப்பையும் சார்ந்திருக்காமல் அனைவரும் ஓரணியில் அயோத்தியை நோக்கி பயணிப்பதே பாபரி மீண்டும் எழுப்பப்படவும் இனி ஒரு பாபரி ஏற்படாமல் தடுக்கவும் சிறந்த வழியாகும்.


பாபரியை நினைவு கூறும் பொருட்டு நம் தளத்தில் ஏற்கனவே வெளியான கட்டுரைகளின் லிங்குகளை இங்கு கொடுக்கிறோம்


பாபரியை விட்டு கொடுத்து விடலாமா ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_2288.html


பாபரிக்கு நம் பங்களிப்பு என்ன ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_6323.html


சத்தியமார்க்கம்.காம் மற்றும் பாபரி மஸ்ஜித்.காம் தளங்களில் வெளியான கவிதைகளை நன்றியுடன் பிரசுரிக்கிறோம்.


ஓ. இந்திய முஸ்லீமே! நான் பாபரி மஸ்ஜித்


ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!


என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..


வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.


அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்


சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.


என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,


நான் களங்கப் படுத்தபட்டேன்


என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!


நான் ஷஹீது ஆக்கபட்டேன்....


அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்


காவிகளின் களியாட்டம் நடக்குதே!






ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்


நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;


நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...


என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்


இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.


என்னை நீ மறந்து விட்டால் ...


நீயும் மறக்கடிக்கப்படுவாய்!


ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்


எதிரிகள் விழித்து கொள்வார்கள்


நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்


நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை


உண்மை ஆக்கிவிடுவார்கள்.


ஓ! இந்திய முஸ்லிமே!


என்னுடைய அழுகை சப்தம்


உன் செவிகளை எட்டவில்லையா?


அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து


என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?


oOo


ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்


எங்கள் காதுகளில் விழுகிறது


நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!


எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!


எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!


இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!

- திருவை அன்ஸர்




வீழ்த்தப்பட்ட நீதி


450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை


பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு


பூமி சுமந்த பாரத்தை விட


எங்கள் மனபாரம் அதிகரித்ததே!






வரலாற்றின் சின்னமாய்


வீறுகொண்டு பயணித்த - பள்ளி


பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி


ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?






விரைப்பான வெண் அங்கிக்குள்


சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்


வீழ்த்தப்பட்ட நீதிகண்டு


விறைப்பால பேசலியோ!...


விலைபோயிட்டு பேசலியோ!






கல்லடிப்பட்ட குளம்கூட


அலை எழுப்பும் எதிர்ப்பாய்!


கலையாக நின்ற பள்ளி கல்லானபோது


பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!






நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை


காட்டில் பெற்றதே முரண்பாடு!






பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்


நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!






வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்


வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி


ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது


துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!






சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...


பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...


அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'






நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"


ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு


மூன்று பங்கு எப்படி சாத்தியம்?






விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!


விழித்திரையை சாத்தியம் என்று!


நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!


நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!






தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்


ஒரு தட்டு இறங்கிவிட்டது!






நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?


நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?






சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!


"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்


"அக்கணப் பொழுது"






:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.


Friday, December 2, 2011

ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற

நாட்டின் எல்லா திசைகளிலும் ஊழல் சுனாமியாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதை காண்கின்றோம். ஆளுங்கட்சியானாலும் சரி, இப்போதுள்ள எதிர்கட்சி ஆளுங்கட்சியானாலும் சரி ஊழலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஊழலை கட்டுபடுத்துவது என்பதே சாத்தியமில்லை என்பதே யதார்த்தம். பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் ஊழல் ஒழிப்பு என்பது கனவாகவே உள்ளது. இதை ஊழல் என்பதை விட ஆன்மிக வீழ்ச்சி என்றும் சொல்லலாம்.


நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட சில நிறுவனங்கள் ஊழல் கறை படிந்திருந்தாலும் இன்று அதை விட மோசமாக லஞ்சம் கொடுக்காமல் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எதையும் வாங்க முடியா நிலை உள்ளது. சில சலுகைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த நிலை மாறி இன்று அது சர்வ சாதரணமான ஒன்றாய் மாறி உள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாங்கிய காலம் மறைந்து போய் லஞ்சம் வாங்காதவர்களை அற்ப ஜந்து போல் பார்க்கும் நிலை உள்ளது. கீழ் முதல் மேல் வரை எல்லா மட்டங்களிலும் காவல்துறை, நிர்வாகம், நீதித்துறை என எல்லா துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

சட்டங்களை உருவாக்குபவர்களை அதை உடைப்பவர்களாய் மாறி போன நிலையும் மாத கணக்கில் முடிய வேண்டிய சில்லறை வழக்குகள் எல்லாம் வருடக் கணக்கில் நீடிக்கும் அவல் நிலையும் நாட்டில் நிலவுவதை பார்க்கின்றோம். உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளே தங்கள் சக நீதிபதிகளை குறித்து ஊழல்வாதிகள் என விமர்சிப்பதை காண்கின்றோம். தீமைகள் நடைபெறுவதை தடுக்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் மட்டுமே சட்டத்தால் முடியும். ஒருவனை திருத்துவது என்பது சட்டத்தால் முடியாது. இன்று வழக்கறிஞர் தொழில் என்பதே சட்டத்தின் பெயரால் பொய் வாதிக்கும் பொய் பிரதிவாதிக்கும் நடக்கும் மோதலாகவும் திறமையாக பொய் சொல்பவர் வெல்வதாகவே இன்றைய சட்ட நடைமுறை இருப்பதை பார்க்கின்றோம்.

சட்டங்களை இயற்ற கூடிய பாராளுமன்றங்களோ, சட்டசபைகளோ சட்டங்களை மீறியவர்களை கொண்டவர்களால் நிரப்பப்பட்டு இருப்பதை காண்கிறோம். சட்டங்கள் சரியானவையாக இருந்தால் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்திருக்க தேவையில்லை. இவ்வளவும் செய்த பிறகும் நிலைமை சீர்திருந்தவில்லை எனில் அடிப்படையில் எங்கோ கோளாறு என்றல்லவா பொருள்?

ஆம். மனிதனுக்கு சட்டங்களை இயற்ற தேவையான அளவு தகுதி உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டது போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை குற்றமற்றவர்களாக நினைப்பது தான் அடிப்படை கோளாறாக இருக்கிறது. அதனால் தான் அவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.


எனவே பிரச்னை யார் சட்டங்களை அமுல்படுத்துகிறார்கள் என்பதில் அல்ல, யார் சட்டங்களை இயற்றுவது என்பதில் தான். இதில் தெளிவு வராத வரை ஆயிரம் ஹசாரேக்கள் வந்தாலும் ஊழலை ஒழிக்க இயலாது. எனவே இனியாவது சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட ஓரே இறைவனின் சட்டங்களை ஏற்பது தான் இந்தியா ஊழல் உள்ளிட்ட எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழி என்பதை உணர்வோம். அதை அடிப்படையாக ஏற்று கொண்ட ஒரு சமூகத்தை இந்திய மண்ணில் இருவாக்குவதே இன்றைய முஸ்லீம்களின் கடமை.