உலக முஸ்லீம்களின் ஓரே தலைமையான கிலாபா 1924ல் வீழ்த்தப்பட்ட பிறகு முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. 30,40 வருடங்களுக்கு முன் கிலாபாவை கொண்டு வர வேண்டும் என்று ஒரு சில சிந்தனையாளார்களால் விதைக்கப்பட்டது இன்று அல்ஹம்துலில்லாஹ் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை குலைக்கும் விதமாய் சில அறிஞர்கள் கிலாபாவின் சிந்தனையை இளைஞர்களில் உள்ளத்திலிருந்து அகற்றும் விதமாய் கிலாபத்துக்கான எதிரான வாதங்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்றனர். சமீபத்தில் ஒரு அறிஞரால் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முக புத்தகத்தில் (Face book) சில சகோதரர்களால் எடுத்து வைக்கப்பட்டு பரப்பப்படுகிறது. சத்தியத்தை அறிந்தவர்கள் அதை மக்களுக்கு எடுத்து சொல்வது கடமை எனும் அடிப்படையில் அப்பிராசாரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தருகிறோம்.
மஞ்சள் கலரால் ஹைலைட் செய்யப்பட்டிருப்பவை விமர்சனங்கள். அதற்கான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரியட்டும்
மஞ்சள் கலரால் ஹைலைட் செய்யப்பட்டிருப்பவை விமர்சனங்கள். அதற்கான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரியட்டும்
/// இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் – நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும். ///
எத்தீனை, வாழ்க்கை நெறியை நூஹூக்கு நாம் வழங்கினோமோ …………………………………………………… தீனை நிலை நிறுத்துங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள் (42 :13)
அவன் தான் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான், ஏனைய மார்க்கங்களை விட மேலோங்க செய்ய வேண்டும் என்பதற்காக (61 :9)
மேற்கண்ட வசனங்களை போல் ஏகப்பட்ட வசனங்கள் திருமறையில் உள்ளது.
இப்போது சொல்லுங்கள் நிலை நாட்டுதல், மேலோங்க செய்தால் என்ன என்று ? அதை எப்படி கிலாபா இல்லாமல் செய்வீர்கள்?
/// இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். ///
இதுவும் சரியான வாதமன்று. ஏனென்றால் முஸ்லீம்களுக்கு முழுமையான முன்மாதிரியாக அண்ணலாரை தான் பின்பற்ற இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். மூஸா (அலை) அவர்களின் தவ்ராத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கிறதே என்று உமர் (ரலி) சொன்ன போது அண்ணலார் தெளிவாக சொன்னார்கள் “மூஸா உயிரோடு இருந்தாலும் என்னை தான் பின்பற்ற வேண்டி இருக்கும்”
///நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.///
இதற்கான விளக்கம் நமது தளத்திலேயே “ யூசுப் (அலை) ஜாஹிலிய்யா அமைப்பில் பணியாற்றினாரா” எனும் கட்டுரையை பார்க்கவும்
//// நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை.
குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 3612, 3852////

இஸ்லாமிய ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து அண்ணலாருக்கு எவ்வித அக்கறையுமில்லை என்று நிறுவ முயல்வோர்க்கு அவர்கள் உதாரணத்திற்கு எடுத்து காட்டியுள்ள ஹதீதிலேயே அதற்கான சான்று உள்ளது. ///அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்./// இஸ்லாம் முழுமைப்படுத்தப்படும் என்றால் எப்போது இஸ்லாத்தின் சட்டங்கள் ஆட்சி செய்யும் போதா அல்லது இன்னொரு கொள்கையின் கீழ் ஒரு மதமாக இஸ்லாம் தன்னை தக்கவைத்து கொள்ள போராடும் போதா. மேலும் இந்த ஹதீதில் இஸ்லாமிய ஆட்சி வருவதற்கு முன் அவசரப்படாதீர்கள் என்றும் நபி (ஸல்) அறிவுறுத்துகிறார்கள்.
//// எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.
சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்? ///

இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஜனநாயகத்திற்கும் இஸ்லாத்திற்குமா சம்பந்தம் ? என்ன சொல்ல வருகிறார்கள் ? இஸ்லாத்துக்கு முரணாண கொள்கைகளான ஜனநாயகம், தேசியவாதம், மதசார்பின்மை போன்றவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்ல வருகிறீர்களா ?
இஸ்லாமிய ஆட்சியை எதிர்ப்போர்கள் அடிக்கடி கிலாபா ஏகத்துவத்துக்கு எதிர்ப்பானது என்று ஒரு பொய் பிரசாரம் செய்கின்றனர். இப்னு தைமிய்யா அவர்களின் கூற்றை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாய் இருக்கும் “ ஏகத்துவம் முழுமைப்படுத்த வேண்டுமானால் கிலாபா அவசியம் “. ஆம் விரலை ஆட்டுவதும் நெஞ்சில் கை வைப்பதும் 8 ரக் அத் தொழுவது மாத்திரம் தவ்ஹீத் அல்ல. முழுமையான தவ்ஹீதே இறை சட்டங்களை பின்பற்றுவதில் தான் உள்ளது. அதனால் தான் அதீ இப்னு ஹாதிம் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் கிறிஸ்துவர்கள் வேதத்திற்கு மாற்றமாக தங்கள் பாதிரிமார்களின் சட்டங்களுக்கு அடிபணிவதை பாதிரிமார்களை இலாஹ்வாக எடுத்து கொள்வதற்கு சமம் என்று சொன்னார்கள். குரான் சுன்னாவை மட்டும் அடிப்படையாக கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவது தான் கிலாபாவின் நோக்கம் என்பதை ஏன் மறந்து போகிறார்கள்.
//// இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.///
நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.///
முதலில் உலகில் எங்குமே இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை என்பதே நம்முடைய வாதமாகும். இந்தியாவில் விபசாரத்தையும் மதுவையும் ஹராமாக்க வேண்டுமானால் கிலாபா இல்லாமல் முடியாது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற போர்களில் கூட ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய ஆட்சியை மையமாய் வைத்து கொல்லப்பட்டதால் இஸ்லாமிய ஆட்சி கூடாது என்பதற்கு என்ன சான்று?
பைஅத் குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன் இக்குப்ர் நடைமுறையில் தேர்தலில் வென்று பின் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்கும் முன் பதவி பிரமாணம் எடுப்பதற்கும் இவர்கள் விமர்சிக்கும் பைஅத்க்கும் என்ன வித்தியாசம் விளக்க முடியுமா ?
இறுதியாக ஒரு கேள்வி – நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்கள். இவ்வுலகை எவன் படைத்தானோ அவ்வல்லோனின் வார்த்தைகளே இவ்வுலகை ஆள வேண்டும் என்றா அல்லது ஷிர்க்கான கொள்கைகள் இவ்வுலகை ஆள வேண்டும் என்றா, முந்தையது தான் விருப்பம் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு கொள்கையும் நிலைபெற அதிகாரம் வேண்டும். எக்கொள்கையும் இன்னொரு கொள்கையின் நிழலின் கீழ் வாழ விரும்பாது. எனவே முடிந்தால் இஸ்லாமிய ஆட்சி நிலைபெற உதவி செய்யுங்கள் அல்லது உபத்திரமாவது செய்யாமல் அமைதியாய் இருங்கள். குப்ர் கொள்கைகள் தான் இவ்வுலகை ஆள வேண்டும் என்று ஆசைப்படுவீர்களானால் நம்முடைய விவகாரத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவோம்.
No comments:
Post a Comment